கண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மார்க்சிஸ்ட் கம்யூ. தொண்டர்கள் படுகாயம்

நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் வினீஷ், ஷெரின் இருவரும் படுகாயமடைந்தனர்.நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
கண்ணூரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து மார்க்சிஸ்ட் கம்யூ. தொண்டர்கள் படுகாயம்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் கண்ணூர் பானூர் புளியந்தோடு பகுதியை சேர்ந்தவர் வினீஷ்(வயது25), புத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஷெரின்(25). இவர்கள் இருவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொண்டர்கள் ஆவர்.

இந்நிலையில் இவர்களின் ஒருவரது வீட்டின் மாடியில் இன்று அதிகாலை நாட்டு வெடிகுண்டு வெடித்தது. இதில் வினீஷ், ஷெரின் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். ஒருவரின் கைகள் துண்டிக்கப்பட்டன. மற்றொருவருக்கு முகத்தில் படுகாயம் ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று படுகாயமடைந்து கிடந்த இருவரையும் மீட்டு கண்ணூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்பு அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். அங்கு இருவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டு வெடிகுண்டு தயாரித்தபோது வெடி விபத்து நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பாக தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். நாட்டு வெடிகுண்டு வெடித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தொண்டர்கள் இருவர் படுகாயமடைந்த சம்பவம் கண்ணூர் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com