search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewel robbery"

    • நகைக்கடைக்குள் காரில் வந்த 4 மர்ம நபர்கள் நுழைந்தனர்.
    • மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.

    திருவள்ளூர்:

    ஆவடி அருகே முத்தாபுதுபேட்டையில் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான நகைக்கடை உள்ளது. இந்த நகைக்கடைக்குள் இன்று காரில் வந்த 4 மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் கடைக்குள் இருந்த பிரகாஷை மிரட்டி, அவரது கை, கால்களை கட்டி போட்டனர்.

    இதையடுத்து துப்பாக்கிமுனையில் அவரை மிரட்டி நகைகளை கொள்ளையடித்து சென்றனர்.

    மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற நகைகளின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்தாபுதுபேட்டை போலீசார் கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விஜய் இருக்கும் இடத்தை குறித்து அவரது தந்தை முனிரத்தினத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
    • கொள்ளையன் விஜயின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள தேவரெட்டியூரைச் சேர்ந்தவர் முனிரத்தினம். இவரது மனைவி மாரம்மாள். இவர்களுக்கு விஜய் (வயது 28) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர்.

    கோவையில் உள்ள பிரபலமான நகை கடையில் 100 பவுன் நகை மற்றும் வைர நகைகளை விஜய் கொள்ளையடித்து சென்றுள்ளார்.

    இதுகுறித்து கோவை போலீசார் விசாரணை நடத்தி ஆனைமலையில் உள்ள விஜயின் மனைவி நர்மதா என்பவரையும், தருமபுரி மாவட்ட அரூரை அடுத்த தும்பலஅள்ளியில் உள்ள மாமியார் யோகராணியையும் கைது செய்து விசாரித்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து கோவை மற்றும் தருமபுரி மாவட்ட தனிப்படை போலீசார் தலைமறைவாக இருந்த விஜயை தேடிவந்தனர். இந்த நிலையில் விஜய் இருக்கும் இடத்தை குறித்து அவரது தந்தை முனிரத்தினத்திடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது முனிரத்தினம் வீட்டில் இருந்த 38 கிராம் நகைகளையும், 2 செல்போன்களையும் தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    அப்போது பொம்பட்டி மலை கிராமத்தில் மர்ம நபர் உலாவருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அந்த நபர் விஜயாக இருக்கக்கூடும் என்று எண்ணி முனிரத்தினத்தையும் உடன் அழைத்து சென்று தேடிவந்தனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று இரவு தனிப்படை போலீசார் முனிரத்தினத்தை அவரது வீட்டில் விட்டு சென்றனர்.

    வீட்டில் மாரம்மாளும், அவரது மருமகன்களும், மகள்களும் இருந்தனர். பின்னர் அவர்கள் உறவினர் ஒருவரது வீட்டில் சாப்பிடுவதற்காக சென்றனர். அப்போது வீட்டில் தனியாக இருந்த முனிரத்தினம் திடீரென்று தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

    இதுகுறித்து மாரம்மாள் கம்பைநல்லூர் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் முனிரத்தினத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கொள்ளையன் விஜயின் தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தினேஷ் (வயது 27). இவர் ஐ.டி கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார்.
    • வீடு திறந்து கிடப்பதை பார்த்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த ஜெயராணி முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர் எரிச்சலில் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் மிட்டா புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தினேஷ் (வயது 27). இவர் ஐ.டி கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து தினேஷ் தனது நண்பர் அருண் என்பவருடன் வெளியில் டீ குடிக்க சென்றார். வீட்டில் அவரது சித்தி, பாட்டி, தம்பி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீடு திறந்து கிடப்பதை பார்த்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த ஜெயராணி முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர் எரிச்சலில் சத்தம் போட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியே ஓடினர்.

    உடனே ஜெயராணி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் ெகாடுக்கப்பட்டது. அப்போது ஜெயராணி தன் மீது மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடி தூவி பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்று விட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வீட்டின் பூட்டை உடைத்து துணிகரம்
    • மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கம் உதயம் நகர் பகுதியை சேர்ந்தவர் அருண்பிரசாத் (வயது 36). இவர் சென்னை அருகே உள்ள ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த மாதம் தனது குடும்பத்தினருடன் உறவினர் வீட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் காலை அருண்பிரசாத்தின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதை பார்த்த அவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர், அருண்பிரசாத்திற்கு இது குறித்து தகவல் தெரிவித்தார்.

    அதன்படி அவர் விரைந்து வந்து பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 7 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அருண்பிரசாத் காவேரிப்பாக்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்த போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • கண்காணிப்பு கேமராக்களை திருப்பி விட்ட மர்மகும்பல்
    • கதவை உடைத்து துணிகரம்

    ஜோலார்பேட்டை:

    பெங்களூரை சேர்ந்தவர் சந்திரன் (வயது 44). கட்டிட ஒப்பந்ததாரர். இவரது மனைவி கனிமொழி. மகள், மகன் உள்ளனர்.

    இவர்களுக்கு சொந்தமான வீடு திருப்பத்தூர் அடுத்த முத்தம்பட்டியில் உள்ளது. இந்த வீட்டை மாமியார் (துளசி 50) என்பவர் பராமரித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு துளசி, சந்திரன் வீட்டின் மின் விளக்கை போட்டு விட்டு அவரது வீட்டுக்கு தூங்க சென்றார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    வீட்டில் இருந்த 28 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இன்று காலை துளசி சந்திரன் வீட்டிற்கு வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்த போது நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது. இதுகுறித்து திருப்பத்தூர் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் வீட்டில் பொருத்தி இருந்த கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    வழக்கு பதிவு

    அப்போது அந்த கேமராக்கள் திரும்பிய நிலையில் இருந்தது. கொள்ளையர்கள் தங்கள் முகங்கள் பதிவு ஆகிவிட கூடாது என்பதற்காக கேமராக்களை திருப்பி வைத்தது தெரியவந்தது.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.
    • கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் இன்று காலை 6-வது நடைமேடையில் இருந்து திருமால்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற்கரைக்கு செல்லும் மின்சார ரெயில் புறப்பட தயாராக இருந்தது.

    அப்போது பெண்கள் பெட்டியில் ஈரோடு தாராபுரம் பகுதியை சேர்ந்த லட்சுமி (வயது 69) அமர்ந்திருந்தார். அதிகாலை என்பதால் அந்தப் பெட்டியில் யாரும் இல்லை.

    அப்போது அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் பெட்டியில் ஏறினார். லட்சுமியிடம் எங்கு செல்ல வேண்டும் என கேட்டார்.

    அவர் காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

    பேசிய சில நிமிடங்களில் கையில் எவ்வளவு பணம் வைத்திருக்கிறாய்? என கேட்டு வாலிபர் மிரட்டினார்.

    மேலும் லட்சுமியிடம் இருந்த ரூ.1000 பிடுங்கினார்.

    இதனை கண்டு கதறிய லட்சுமியிடம் காதில் அணிந்திருந்த தங்க கம்மலை கழட்டி தர கூறினார்.

    மூதாட்டி கழட்ட தயங்கிய போது கத்தியால் கையை வெட்டினார். இதனால் கம்மலை கழட்டி கொடுத்தார். இதற்குள் ரெயில் அரக்கோணம் 6-வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. உடனே அந்த வாலிபர் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கி ஓடிவிட்டார்.

    இந்நிலையில் அந்த மூதாட்டி மயங்கி விழுந்தார்.

    காலை நேரம் என்பதால் பயணிகள் இல்லாத நிலையில் திருமால்பூர் ரெயில் நிலையம் வந்தபோது 2 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர். ரத்த வெள்ளத்தில் மூதாட்டி மயங்கி கிடப்பதை கண்டு திடுக்கிட்டனர்.

    இது குறித்து காஞ்சிபுரம் ரெயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ரெயில் காஞ்சிபுரம் சென்றவுடன் லட்சுமியை ரெயில்வே போலீசார் மீட்டனர். அவரை காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    தற்போது அங்கு லட்சுமி சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து அரக்கோணம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே ஓடும் ரெயிலில் பெண்களிடம் கொள்ளை, கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்தது.

    இது போன்ற கொள்ளை சம்பவங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    • அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.
    • போலீசார் கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் அடுத்த மேல்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பத்மாவதி (வயது75). இவர் இன்று காலை தனது வீட்டில் இருந்த குப்பைகளை வெளியே கொட்ட வந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் மர்ம நபர்கள் பத்மாவதியின் முதுகில் தாக்கினர். இதில் நிலைகுலைந்த மூதாட்டி சுதாரிப்பதற்குள் அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் நகையை பறித்தனர். இதில் நிலைதடுமாறிய மூதாட்டி பத்மாவதி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் திரண்டதும் கொள்ளையர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுவிட்டனர்.

    இது குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்து. போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து கொள்ளையர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
    • கைரேகை தடயங்களை சேகரித்தனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட் டம் ஆரணி அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் (வயது 65), சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அவரது மனைவி மரகதம்.

    நேற்று காலை 10.30 மணி அளவில் கணவன்-மனைவி இருவரும் வீட்டின் அருகே உள்ள கிறிஸ்தவ தேவாலயத் திற்கு வீட்டை பூட்டிவிட்டு சென்றி ருந்தனர். அந்த நேரத்தில் வீடுபுகுந்த கும்பல் 23 பவுன் நகைகளை திருடி சென்று விட்டது.

    இது குறித்து சண்முகம் ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பே ரில் துணை போலீஸ் சூப்பி ரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ் பெக்டர் (பொறுப்பு) சுப்பிர மணி, சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் மற்றும் போலீசார் அங்குவந்து விசாரணை நடத் தினர்.

    மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்துக்கு சென்று கைரேகை தடயங்களை சேகரித்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகைகளை திருடிச் சென்ற மர்ம கும்பலை இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் தலைமையில் தனி படை அமைத்து தேடி வருகின்றனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பாதாம், பிஸ்தாவை திருடி சாப்பிட்டனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன் மகன் ராகுல் (வயது 27). இவர் ஓசூரில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மேனகா (25).

    மேனகா நிறைமாத கர்ப்பிணியாக உள்ள நிலையில், இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரசவத்திற்காக தனது தாய் வீட்டிற்கு சென்றார். அப்போது மாமனார் பரந்தாமன் மற்றும் மாமியார் செல்வராணி ஆகியோரும் வீட்டை பூட்டி விட்டு மருமகளுடன் சென்றனர்.

    ஊருக்கு சென்ற பரந்தாமன் மற்றும் செல்வராணி வீட்டுக்கு வந்தனர். வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சடைந்து உள்ளே சென்று பார்த்தனர்.

    பீரோ உடைத்து அதன் வைத்து இருந்த 5 பவுன் தங்க நகை மற்றும் 4 கிராம் வெள்ளி பொருட்களை மரம் நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    மேலும் கொள்ளையர்கள் வீட்டில் வைக்கப்பட்டிருந்த பாதாம், பிஸ்தா உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து சோபாவில் அமர்ந்து ஆர அமர சாப்பிட்டுவிட்டு, தோலை வீடு முழுவதும் வீசிவிட்டு சென்றுள்ளனர்.

    இது குறித்து போரின் பேரில் நாட்டறம்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.1.50 லட்சம் கைவரிசை
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நேரு நகரை சேர்ந்தவர் தினேஷ் (33). இவரது மனைவி கலைவாணி. தம்பதியினருக்கு 3 பிள்ளைகள் உள்ளனர்.

    தினேஷ் மேல்மருவத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று இரவு தினேஷ், தாய் நிர்மலா மற்றும் மனைவி, குழந்தைகளுடன் வீட்டை பூட்டி விட்டு மாடியில் படுத்து தூங்கினார்.

    பின்னர் இன்று காலை எழுந்து வீட்டின் உள்ளே செல்ல வந்து பார்த்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது பூஜை அறை மற்றும் பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்து இருந்த 55 பவுன் நகை, ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் ரூ.1.50 லட்சம் பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இது குறித்து தினேஷ் செய்யாறு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் செய்யாறு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    தினேஷ் வீட்டின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் மர்ம நபர்கள் 3 பேர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து திருடும் காட்சி பதிவாகியிருந்தது.

    மேலும் கொள்ளையர்கள் தாங்கள் மாட்டிக் கொள்ளக் கூடாது என கண்காணிப்பு கேமராக்களுக்கு செல்லும் வயர்களையும் அறுத்து வீசி உள்ளனர். இந்த பதிவுகளும் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அந்தப் பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்றுவிட்டார்.
    • போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தை சேர்ந்தவர் ஸ்ரவந்தி. இவர் அந்த மாநில அரசு சமூக நலத்துறையில் பணியாற்றி வருகிறார். நேற்று செகந்திராபாத்திலிருந்து திருப்பதி செல்வதற்கு புறப்பட்டு வந்தார்.

    செகந்திராபாத் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரம் 1-ல் அவர் திருப்பதி செல்லும் வந்தே பாரத் ரெயிலுக்காக காத்திருந்தார்.

    வந்தே பாரத் ரெயில் வந்து நின்றதும் அதில் இருந்து ஏராளமான பயணிகள் இறங்கி கொண்டிருந்தனர்.

    ஸ்ரவந்தி கூட்டத்திற்கு நடுவே ரெயிலில் ஏற முயன்றார். அப்போது மர்ம நபர் ஒருவர் அவர் வைத்திருந்த பையை பறித்துக் கொண்டு ஓடினார்.

    இதனால் அதிர்ச்சடைந்த ஸ்ரவந்தி அலறி கூச்சலிட்டார்.

    அதற்குள் மர்ம நபர் 4-வது நுழைவுவாயில் வழியாக தப்பி சென்று விட்டார்.

    ஸ்ரவந்தி வைத்திருந்த பையில் ரூ.60 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை போனது.

    இதுகுறித்த செகந்திராபாத் ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

    அதில் தனது பையில் வைத்திருந்த வைர நெக்லஸ் உட்பட ரூ.60 லட்சம் மதிப்புள்ள நகைகள் கொள்ளை போனதாக தெரிவித்துள்ளார்.

    போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ரெயில்களில் ஏறும்போது பயணிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

    • முருகனும், ஜமுனாவும் நேற்று இரவு உறவினர் வீட்டிற்கு சென்றனர்.
    • 15 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50000 கொள்ளையடிக்கப்பட்டது .

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருணகிரியார் தெருவில் வசிப்பவர் முருகன் (வயது 45). இவர் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஜமுனா (40). உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு 2 ஆண் மகன்கள் உள்ளனர். இந்நிலையில் திருநெ ல்வேலி மாவட்டத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு முருகனும், ஜமுனாவும் நேற்று இரவு சென்றனர். இவர்களது மகன்களை அருகில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு, வீட்டை பூட்டிக் கொண்டு சென்றனர்.

    இன்று அதிகாலை அவ்வழியே சென்றவர்கள், முருகன், ஜமுனா தம்பதியரின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்ததை பார்த்தனர். உறவினர் வீட்டில் இருந்த முருகன், ஜமுனாவின் 2 மகன்களிடம் இதனை தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டின் பீரோ உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து பெற்றோருக்கு போன் செய்தனர். அவர்களின் வழிகாட்டுதல் படி பீரோவில் இருந்த பொருட்கள் உள்ளனவா என்று பார்த்தனர். இதில் பீரோவின் பாதுகாப்பு அறை உடைக்கப்பட்டு, அதிலிருந்த 15 பவுன் தங்க நகை, அரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.

    அக்கம் பக்கத்தினர் உதவியுடன் இது குறித்து உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனை மேற்கொண்ட னர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. சம்பவம் நடந்த வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடிய மோப்ப நாய் யாரையும் கவ்விப்பி டிக்கவில்லை. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீ சார் பூட்டிய வீட்டின் கதவு, பீரோவை உடைத்து தங்க நகை, பணத்தை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகி ன்றனர். உளுந்தூர்பே ட்டை நகரின் மையப்பகுதியில் எப்போ தும் ஆள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதியில் கொள்ளை நடந்தது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×