ஐ.டி.ஊழியர் வீட்டில் மிளகாய்பொடி தூவி நகை கொள்ளை

தினேஷ் (வயது 27). இவர் ஐ.டி கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார்.வீடு திறந்து கிடப்பதை பார்த்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த ஜெயராணி முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர் எரிச்சலில் சத்தம் போட்டு கொண்டிருந்தார்.
ஐ.டி.ஊழியர் வீட்டில் மிளகாய்பொடி தூவி நகை கொள்ளை
Published on

சேலம்:

சேலம் அழகாபுரம் மிட்டா புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் தினேஷ் (வயது 27). இவர் ஐ.டி கம்பெனியின் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து தினேஷ் தனது நண்பர் அருண் என்பவருடன் வெளியில் டீ குடிக்க சென்றார். வீட்டில் அவரது சித்தி, பாட்டி, தம்பி ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீடு திறந்து கிடப்பதை பார்த்த மர்ம நபர்கள் உள்ளே புகுந்து தூங்கி கொண்டிருந்த ஜெயராணி முகத்தில் மிளகாய் பொடி தூவினர். இதனால் அவர் எரிச்சலில் சத்தம் போட்டு கொண்டிருந்தார். அந்த சமயத்தில் மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியே ஓடினர்.

உடனே ஜெயராணி வீட்டில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்து அழகாபுரம் போலீசில் புகார் ெகாடுக்கப்பட்டது. அப்போது ஜெயராணி தன் மீது மர்ம நபர் ஒருவர் மிளகாய் பொடி தூவி பீரோவில் இருந்த 5 பவுன் நகையை திருடி சென்று விட்டதாக கூறினார். இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com