search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gangai Amaran"

    • இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார்.
    • நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா? மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார்.

    இசைஞானி இளையராஜா தனது பாடல்களை அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக்கூடாது என்று தொடர்ந்து கூறி வருகிறார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 'கூலி' பட அறிமுக டீசரில் தனது பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனையடுத்து இளையராஜாவைச் சுற்றி சர்ச்சைகள் உருவாகத் தொடங்கின.

    இதனையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் கவிஞர் வைரமுத்து, "இசை பெரிதா?  மொழி பெரிதா? இசைக்கு நிகரானது மொழி என்று கொள்ளாதவர்கள் அங்ஞானி" என்று பேசி இருந்தார். இதன்மூலம் இளையராஜாவை மறைமுகமாக அவர் சாடியுள்ளார் என்ற விவாதம் எழுந்தது.

    இந்த விவாதத்தை மேலும் வளர்க்கும் வகையில், இளையராஜாவின் சகோதரர் கங்கையமரன், அறிக்கை வெளியிட்டு வைரமுத்துவை சாடினார். இந்த சர்ச்சை சமூக வலைத்தளங்களில் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் இதுகுறித்து தற்போது இளையராஜா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், "என்னை பற்றி ஏதாவது ஒரு வகையில் தினமும் இது போன்ற வீடியோக்கள் வந்துகொண்டு இருக்கிறது என்று எனக்கு வேண்டியவர்கள் சொல்கிறார்கள். ஆனால் நான் இதில் கவனம் செலுத்துவதில்லை. மற்றவர்களை கவனிப்பது என் வேலை இல்லை.

     

     

    என் வேலைகளை கவனிப்பது தான் என் வேலை. நான் என் வழியில் ரொம்ப க்ளீனா சுத்தமா போய்கிட்டு இருக்கேன். நீங்கள் என்னை வாழ்த்திக்கொண்டிருக்கும் நேரத்தில் கடந்த ஒரு மாதத்தில், ஒரு சிம்பொனியை எழுதி முடித்துவிட்டேன் என்ற சந்தோஷமான செய்தியை நான் உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன்" என்று பேசியிருக்கிறார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம்
    • நிறைய படித்தவருக்கு கொஞ்சம் படித்தவர்கள் கூட அச்சாணியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் வண்டி ஓடாது

    மறைந்த நகைச்சுவை நடிகர் குமரிமுத்து அளித்த பேட்டியை தனது எக்ஸ் பக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பகிர்ந்துள்ளார்.

    அந்த வீடியோவில், "யாம் நிறைய கற்று விட்டோம் என தன்னைத்தானே பெருமையாக யாரும் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். அவ்வளவு பெரிய சூரியனை கையில் இருக்கும் குடை காத்து நிழல் கொடுக்கும். அது போல நிறைய படித்தவருக்கு கொஞ்சம் படித்தவர்கள் கூட அச்சாணியாக இருக்கிறார்கள். இல்லையென்றால் வண்டி ஓடாது" என்று மறைந்த நடிகர் குமரிமுத்து நாலடியார் பாடலை சுட்டிக்காட்டி விளக்கம் அளித்திருந்தார்

    ஏ.ஆர்.ரகுமானின் இந்த பதிவை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள், இளையராஜாவை ஏ.ஆர்.ரகுமான் மறைமுகமாக விமர்சித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இளையராஜா தொடர்பான கவிஞர் வைரமுத்துவின் பேச்சை, கங்கை அமரன் கண்டித்த நிலையில், ஏ.ஆர்.ரகுமானின் பதிவும் தற்போது பேசுபொருளாகி உள்ளது.

    • இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.
    • வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும்.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய கவிஞர் வைரமுத்து, ஒரு பாடலில் இசை பெரியதா, மொழி பெரியதா என்பது ஒரு பெரிய சிக்கலாகப் பேசப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், அதுகுறித்து விவரித்த வைரமுத்து, இதில் என்ன சந்தேகம்., இசை எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது மொழி. மொழி எவ்வளவு பெரியதோ, அவ்வளவு பெரியது இசை. இரண்டும் கூடினால்தான் பாட்டு என்று பொருள் என எடுத்துரைத்தார். சில நேரங்களில், இசையை விட மொழி சிறந்ததாகவும். சில நேரங்களில், இசை சிறந்ததாகவும் திகழ்கிற சந்தர்ப்பங்களும் உண்டு என்று கூறிய வைரமுத்து, இதைப் புரிந்து கொண்டவன் ஞானி. இதைப் புரிந்து கொள்ளாதவன் அஞ்ஞானி என்றார். மேலும், பாட்டுக்குப் பெயர் வைத்தது மொழிதான். அதற்கு அழகு செய்தது இசை, அபிநயம் செய்தது இசைதான். இசையும், மொழியும் பரஸ்பரம் செய்துகொள்ளும் போதுதான் கலை வெற்றி பெறுகிறது எனவும் வைரமுத்து கூறினார்.

    இதற்கு பதிலளித்துள்ள இளையராஜாவின் சகோதரரும், பாடலாசிரியர் மற்றும் இசையமைப்பாளருமான கங்கை அமரன்:

    எங்களால் மேலே வந்தவர், வந்த இடத்தையே காலில் போட்டு மிதிப்பது போன்று பேட்டி கொடுத்துள்ளார் வைரமுத்து என தெரிவித்துள்ளார். மனிதனுக்கு நன்றி வேண்டும். அவரது பாடலுக்கு அதிகமான புகழ் வந்ததால் வைரமுத்துவுக்கு கர்வம் தலைக்கேறிவிட்டது. அடக்கி வைக்க ஆள் இல்லாததால் துள்ளிக் கொண்டிருக்கிறார் வைரமுத்து. இளையராஜாவும், வைரமுத்துவும் நண்பர்களாக இருந்தவர்கள்., அப்படியே இருந்த நட்பை கொச்சைப்படுத்துகிறார் வைரமுத்து. வைரமுத்துவை வாழவைத்த இளையராஜாவின் போட்டோ வைத்து தினம் வணங்க வேண்டும். அவர் இல்லை என்றால் வைரமுத்துவின் பெயரே இருந்திருக்காது. நான் அவருக்குச் சவால் விடுகிறேன், இளையராஜா இசையில் நீங்கள் எழுதிய பாடல்களை வேறு ஒரு இசையமைப்பாளரிடம் கொடுத்துப் பாருங்கள், அது முடியாது. இசையில்லாமல் பாடல்கள் இல்லை. தன்னைத் தானே புகழ்ந்து பேசிக்கொண்டு இருக்கக்கூடிய கவிஞர்கள் யார் இருக்கிறார்கள்? இளையராஜா குறித்து குற்றமோ, குறைகளோ சொல்வதாக இருந்தால் அதற்குரிய விளைவுகளை வைரமுத்து சந்தித்தே ஆக வேண்டும். வைரமுத்து இனிமேல் வாயை மூடிக் கொண்டு வேலையை பார்த்தால் அவருக்கு நல்லது எனவும் எச்சரித்துள்ளார் கங்கை அமரன்.

    • பிறந்ததில் இருந்து நாங்கள் எந்த கட்சியிலும் இருந்தது இல்லை.
    • பா.ஜனதாவில் இணைந்த பிறகு உரிய மரியாதை கிடைக்கிறது.

    பிறந்ததில் இருந்து நாங்கள் எந்த கட்சியிலும் இருந்தது இல்லை. பா.ஜனதாவில் இணைந்த பிறகு உரிய மரியாதை கிடைக்கிறது. பிரதமர் மோடி அன்புடன் பேசுவது பற்றி என் அண்ணன் இளையராஜா அடிக்கடி சொல்வார். பா.ஜனதா மட்டுமே இந்து மத நம்பிக்கைகளை மதிக்கும் கட்சியாக இருக்கிறது.

    எனவே இந்த பிறவியில் பா.ஜனதாவில் தான் கடைசி வரை இருப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார் கங்கை அமரன்.

    ராமராஜன், கனகா நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பது குறித்து இயக்குநர் கங்கை அமரன் ஆலோசித்து வருகிறார்.
    கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா உள்ளிட்ட பலரது நடிப்பில் 1989-ல் வெளியான கரகாட்டக்காரன் படம் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. 

    படத்தில் இடம்பெற்ற கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகிய 3 பேரின் நகைச்சுவை காட்சிகள் அனைத்து தரப்பு ரசிகர்களாலும் ரசித்து பார்க்கப்பட்டது. அதிலும் வாழைப்பழ காமெடி, அந்த கேள்விய ஏன்டா என்கிட்ட கேட்ட உள்ளிட்ட காமெடிகள் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தது. பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.



    இந்த நிலையில், படம் வெளியாகி 30 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இதன் இரண்டாம் பாகம் எடுப்பது குறித்த பேச்சுவார்த்தை தொடங்கியிருக்கிறது.

    இதுகுறித்து கங்கை அமரன் கூறும்போது, “கரகாட்டக்காரன் 2-ம் பாகம் எடுப்பது குறித்து ராமராஜன் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடம் பேசி வருகிறோம். இப்போதைய நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.

    வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தில் அரசியல்வாதி கதபாத்திரத்தில் இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் நடிப்பதாக வெளியான தகவலை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.
    `சென்னை 600028' இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட் பிரபு `பார்ட்டி' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

    இந்த நிலையில், வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு `மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், முக்கிய கதபாத்திரத்தில் அர்ஜூனும் நடிக்கிறார்கள்.



    அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபுவின் அப்பாவும், இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த தகவலில் உண்மையில்லை என்று வெங்கட் பிரபு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இசையமைப்பாளர் இளையராஜா தனது 75வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரை கிண்டல் அடித்து கங்கை அமரன் பதிவு செய்துள்ளார். #Ilayaraja
    இசை அமைப்பாளர் இளையராஜாவின் 75-வது பிறந்தநாள் விழாவை கல்லூரிகள் கொண்டாடி வருகின்றன. தமிழகம் முழுவதும் உள்ள பல கல்லூரிகள் அவருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றன. அவரும் விழாக்களில் கலந்து கொண்டு, மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடியும், பாடி, இசையமைத்தும், தன் அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்.

    சென்னை ராணி மேரி கல்லூரியில் இளையராஜா 75 விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு தன் அனுபவங்களைச் சொல்லிக் கொண்டு வந்த இளையராஜா, இன்றைய சூழலில் இசையமைப்பாளர்களே இல்லை. படத்தின் சூழலுக்கு ஏற்ப எனக்கு இசை வரும், வேறு யாருக்கும் இவ்வாறு வராது என்று தெரிவித்ததாக செய்தி பரவியது. இது சர்ச்சையானது.



    இதற்கு இயக்குனரும் இசையமைப்பாளரும், இளையராஜாவின் சகோதரருமான கங்கைஅமரன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலை பதிவிட்டார்.

    இளையராஜா தெரிவித்ததை அப்படியே பதிவிட்டுள்ள அவர் தன்னுடைய பதிவாக, ’மன்னிக்கவும், நானெல்லாம் மறுபடியும் இசையமைக்க வர முடியாது’ என்று குறிப்பிட்டு இருந்தார்.



    இளையராஜா பேசியதன் முழு வீடியோ வெளியாகி அவர் அந்த பொருளில் சொல்லவில்லை என்பது தெரிய வந்தது. இதை சுட்டிக்காட்டிய ரசிகர்கள் கங்கை அமரனின் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடும் விமர்சனங்களை பதிவிட தொடங்கினார்கள். இந்த விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையில் ‘நானாவது அண்ணனை மிஞ்சுவதாவது. நானும் அண்ணனும் இப்படி அடிக்கடி கிண்டல் செய்து பேசிக்கொள்வோம். அவர் எனக்கு அண்ணன் மட்டும் இல்லை. அம்மா’ என்று கூறி இருக்கிறார். #Ilayaraja
    ×