என் மலர்

  நீங்கள் தேடியது "VP9"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு - கல்யாணி பிரியதர்ஷன் நடிப்பில் உருவாகும் மாநாடு படத்தில் அரசியல்வாதி கதபாத்திரத்தில் இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் நடிப்பதாக வெளியான தகவலை வெங்கட் பிரபு மறுத்துள்ளார்.
  `சென்னை 600028' இரண்டாம் பாகத்திற்கு பிறகு வெங்கட் பிரபு `பார்ட்டி' என்ற படத்தை இயக்கி முடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. 

  இந்த நிலையில், வெங்கட் பிரபு அடுத்ததாக இயக்கவிருக்கும் படத்தில் சிம்பு நடிக்க இருப்பதாகவும், அந்த படத்திற்கு `மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷனும், முக்கிய கதபாத்திரத்தில் அர்ஜூனும் நடிக்கிறார்கள்.  அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இதில் அரசியல்வாதி கதாபாத்திரத்தில் நடிக்க வெங்கட் பிரபுவின் அப்பாவும், இயக்குநரும், நடிகருமான கங்கை அமரன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அந்த தகவலில் உண்மையில்லை என்று வெங்கட் பிரபு மறுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், இந்த படத்தில் நடிப்பதற்காக சிம்பு தனது உடல் எடையை குறைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் `மாநாடு' படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STRinMaanaadu #VP9 #RaashiKhanna
  சுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடிக்கும் சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார்.

  சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு பிப்ரவரி 3-ஆம் தேதி துவங்கவிருக்கிறது. படத்தில் நடிக்கவிருக்கும் நடிகர், நடிககைகள் தேர்வு தீவிரமாக நடந்து வரும் நிலையில், சிம்பு ஜோடியாக நடிக்க ராஷி கண்ணா ஒப்பந்தமாகி இருக்கிறார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் பேச்சுவாரத்தை நடக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கவிருப்பதாக கூறப்படும் நிலையில், பிரேம்ஜி இந்த படத்தில் நடிப்பதும் உறுதியாகி இருக்கிறது. #STR #Maanadu #STRinMaanaadu #VP9 #RaashiKhanna

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் `மாநாடு' படத்திற்காக புதிய முயற்சி ஒன்றை சிம்பு எடுக்க இருக்கிறார். #STRinMaanaadu #VP9
  சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மகத், கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

  இப்படம் ஜனவரி இறுதி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். அவரது பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி பூஜையுடன் படம் தொடங்கப்பட உள்ளது.  ‘மாநாடு’ கதையைக் கேட்டுவிட்டு, இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார் சிம்பு. உடலைக் குறைத்து, தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள ஜனவரி முதல் வாரத்தில் வெளிநாடு செல்ல உள்ளார். பிப்ரவரி 3-ம் தேதி பட பூஜைக்குத்தான் சிம்பு சென்னை திரும்புவார் என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.

  சிம்புவுடன் நடிப்பவர்கள் தேர்வு மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. #STR #STRinMaanaadu #VP9
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் `மாநாடு' படத்திற்காக மங்காத்தா கூட்டணி இணையவிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #STRinMaanaadu #VP9
  சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் `வந்தா ராஜாவாதான் வருவேன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் `மாநாடு' படத்தில் நடிக்க இருக்கிறார்.

  சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி  துவங்கவிருக்கிறது. இதற்கிடையே படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற கதாபாத்திரங்கள் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஆக்‌ஷன் கிங் அர்ஜூனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.  மேலும் அர்ஜூன் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அர்ஜூன் ஏற்கனவே வெங்கட் பிரபு இயக்கத்தில் மங்காத்தா படத்தில் போலீசாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் அர்ஜூன் இணையும் பட்சத்தில் மங்காத்தா கூட்டணி இணைவது உறுதியாகும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #STRinMaanaadu #VP9 #STR #Maanadu #Arjun

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் மாநாடு படத்தின் கதையை கேட்ட சுரேஷ் காமாட்சி, சிம்பு ரசிகர்களுக்கு மாநாடு சிறப்பு விருந்தாக இருக்கும், அடுத்த வருடம் நம்முடையது என்று குறிப்பிட்டுள்ளார். #STRinMaanaadu #VP9
  செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடிக்க இருக்கிறார்.

  சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி  துவங்கவிருக்கிறது. இந்த நிலையில், படத்தின் முழு கதையையும் தயார் செய்துவிட்ட இயக்குநர் வெங்கட் பிரபு அதனை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியிடம் கூறியுள்ளார்.


  கதையை கேட்ட சுரேஷ் காமாட்சி அவரது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த வருடம் சிம்பு ரசிகர்களுக்கு செமயான விருந்து இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது,

  மாநாடு படத்தின் கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எடுத்துரைத்தார். கதை கேட்க ரோலர் கோஸ்டர் போல் இருந்தது. ஏற்ற இறக்கமான திரைக்கதை. கண்டிப்பாக சிம்பு ரசிகர்களுக்கு இது ஒரு சிறப்பு விருந்தாக அமையும். அதுமட்டுமின்றி சிம்புவின் திரைப்பயணத்தில் மாநாடு ஒரு முக்கிய படமாக இருக்கும். அடுத்த வருடம் நம்முடையது தான். புத்தாண்டு வாழ்த்துக்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். #STRinMaanaadu #VP9 #STR #Maanadu

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் `மாநாடு' படத்தின் கதையை கேட்டு தலையே சுற்றிவிட்டதாக எடிட்டர் பிரவீன் கே.எல் தெரிவித்துள்ளார். #Maanadu #STR
  செக்கச்சிவந்த வானம் படத்தை தொடர்ந்து சிம்பு தற்போது சுந்தர்.சி. இயக்கத்தில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

  சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தின் கதையை இயக்குநர் வெங்கட் பிரபு எடிட்டர் பிரவீன் கே.எல்லிடம் கூறியுள்ளார்.

  கதையை கேட்ட பிரவீன் கே.எல், அவரது ட்விட்டர் பக்கத்தில் வெங்கட் பிரபுவை பாராட்டியுள்ளார். அதில் ரூபன் கூறியிருப்பதாவது,


  உறையவைக்கும் மாநாடு படத்தின் முழுக் கதையை தற்போது தான் கேட்டேன். எனது தலை சுற்றிக் கொண்டே இருக்கிறது. அற்புதம் மற்றும் அசாதாரணமானது என்று குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் படத்தின் படத்தொகுப்பு பணிகளை பிரவீன் கே.எல் கவனிக்க இருப்பது உறுதியாகி இருக்கிறது.

  படத்தில் சிம்பு வில்லன் போன்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. #Maanadu #STR #VenkatPrabhu #VP9

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிம்பு நடிப்பில் ‘செக்கச்சிவந்த வானம்’ வருகிற செப்டம்பர் 28-ல் ரிலீசாக இருக்கும் நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் மாநாடு படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. #Maanaadu #STR #Simbu
  மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார். சிம்பு நடிக்கும் முதல் அரசியல் படம் இது. இதில் சிம்புவுக்கு நெகட்டிவ் கேரக்டர் எனத் தகவல் கிடைத்துள்ளது.
  கிட்டத்தட்ட ‘சொர்ணமுகி’ பார்த்திபன் போன்ற கேரக்டராம். சிம்புவின் நடிப்புக்கு இந்தப் படம் தீனியாக இருக்கும் என்கிறார்கள். 

  முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய `மங்காத்தா' படத்தில் அஜித் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  சிம்பு நடிப்பில் ‘செக்கச்சிவந்த வானம்’ செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாக இருக்கிறது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்விக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் படம் என்பதால், சிம்புவின் ரசிகர்கள் இந்தப் படத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.  அதனைத் தொடர்ந்து அடுத்த 2 வருடங்களுக்கு சிம்பு பிசியாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பு ஒரு படத்தை இயக்கவும் செய்கிறார். #Maandu #STR #Simbu

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். #strmaanaadu #maanaadu #vp9
  ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படத்திற்கு `மாநாடு' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

  அரசியலை மையப்படுத்தி இந்த படம் உருவாக இருப்பதாக வெங்கட் பிரபு அறிவித்துள்ளார். இது எஸ்.டி.ஆரின் மாநாடு என்றும், வெங்கட் பிரபுவின் அரசியல் என்றும் வெங்கட் பிரபு அவரது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளாது. அந்த போஸ்டரில் தனியாக நின்றாலும், நியாயத்தின் பக்கம் துணையாக நிற்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.   முன்னதாக இந்த படத்திற்கு ‘அதிரடி’ என்று தலைப்பு வைத்திருப்பதாக செய்திகள் வெளியானது. படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜான்வி கபூருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படும் நிலையில், படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. 

  விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #strmaanaadu #maanaadu #vp9 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். #STR #VP9 #strvp
  ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு.

  இதுகுறித்து ட்விட்டரில் அவர் கூறியிருப்பதாவது, `வருகிற செவ்வாய்க் கிழமை காலை 11 மணிக்கு சிம்பு - வெங்கட்பிரபு இணையும் படத்தின் தலைப்பு வெளியாக இருக்கிறது' என்று தெரிவித்துள்ளார். 
  முன்னதாக இந்த படத்திற்கு ‘அதிரடி’ என்று தலைப்பு வைத்திருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் மற்றும் ஜான்வி கபூரின் பெயர்கள் அடிபட்டி வரும் நிலையில், படக்குழு அதனை உறுதிப்படுத்தவில்லை. 

  விரைவில் மற்ற கலைஞர்கள் குறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #STR #Simbu #VP9
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்திற்கு அதிரடியான தலைப்பை வைத்திருக்கிறார்கள். #STR #VP
  தமிழ் சினிமாவில் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்துடன் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் அடுத்ததாக, `செக்கச் சிவந்த வானம்' படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது. 

  இந்த படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறித்தார். இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருக்கிறார். 2019ம் ஆண்டு வெளியாக இருக்கும் இப்படத்தின் நடிகைகள், பின்னணி கலைஞர்கள் ஆகியோரின் தேர்வு நடைபெற்று வருகிறது.  இந்நிலையில், இப்படத்திற்கு சிம்புவின் ‘அதிரடி’ வெங்கட்பிரபுவின் ஆக்‌ஷன் என்று தலைப்பு வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #STR #Simbu #VP9

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிம்புவின் அடுத்த படத்தை தான் இயக்கவிருப்பதாக வெங்கட் பிரபு அறிவித்த நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்ப்படம் 2 பட இயக்குநர் ஒரு பர்ஸ்ட் லுக் விட்டா வசதியா இருக்கும் என்று கலாய்த்துள்ளார். #STR #VP9
  நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை தான் இயக்குவதாக இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று அறிவித்தார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படம் 2019-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  சிம்புவுடன் - வெங்கட் பிரபுவுக்கு டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், தமிழ்ப்படம் 2 இயக்குநர் சி.எஸ்.அமுதனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அமுதன் தெரிவித்ததாவது, 

  `இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்! ஒரு பர்ஸ்ட் லுக் விட்டீங்கனா வசதியா இருக்கும்' என்று வெங்கட் பிரபுவின் டுவிட்டை குறிப்பிட்டு அமுதன் கோரிக்கை வைத்தார். 
  அவருக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, `எப்படியும் உங்க பட ரிலீசுக்கு அப்பறம் தான் சார்! நன்றி'. என்று பதில் அளித்தார்.

  தமிழ்ப்படம் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே அரசியல் கட்சியினர், புதுப்படங்கள் என தொடர்ந்து பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர், வீடியோ வெளியிட்டு வரும் தமிழ்ப்படம் 2 படக்குழு, சமீபத்தில் டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை கலாய்த்து சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. #STR #VP9 #ThamizhPadam2

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin