என் மலர்
சினிமா

வில்லனாக களமிறங்கும் சிம்பு
சிம்பு நடிப்பில் ‘செக்கச்சிவந்த வானம்’ வருகிற செப்டம்பர் 28-ல் ரிலீசாக இருக்கும் நிலையில், வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் மாநாடு படத்தில் சிம்பு வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. #Maanaadu #STR #Simbu
மணிரத்தினம் இயக்கத்தில் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடித்துள்ள சிம்பு, அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற படத்தில் நடிக்கிறார். சிம்பு நடிக்கும் முதல் அரசியல் படம் இது. இதில் சிம்புவுக்கு நெகட்டிவ் கேரக்டர் எனத் தகவல் கிடைத்துள்ளது.
கிட்டத்தட்ட ‘சொர்ணமுகி’ பார்த்திபன் போன்ற கேரக்டராம். சிம்புவின் நடிப்புக்கு இந்தப் படம் தீனியாக இருக்கும் என்கிறார்கள்.
முன்னதாக வெங்கட் பிரபு இயக்கிய `மங்காத்தா' படத்தில் அஜித் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிம்பு நடிப்பில் ‘செக்கச்சிவந்த வானம்’ செப்டம்பர் 28-ம் தேதி ரிலீசாக இருக்கிறது. ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ தோல்விக்குப் பிறகு ரிலீஸ் ஆகும் படம் என்பதால், சிம்புவின் ரசிகர்கள் இந்தப் படத்துக்காக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து அடுத்த 2 வருடங்களுக்கு சிம்பு பிசியாகவிருப்பதாக கூறப்படுகிறது. இதில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு சிம்பு ஒரு படத்தை இயக்கவும் செய்கிறார். #Maandu #STR #Simbu
Next Story






