என் மலர்
சினிமா

மாநாடு படத்திற்காக சிம்பு எடுக்கும் புதிய முயற்சி
சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக இருக்கும் `மாநாடு' படத்திற்காக புதிய முயற்சி ஒன்றை சிம்பு எடுக்க இருக்கிறார். #STRinMaanaadu #VP9
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன், மகத், கேத்தரின் தெரசா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் ஜனவரி இறுதி வெளியீடாக திரைக்கு வரும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் ‘மாநாடு’ படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். அவரது பிறந்த நாளான பிப்ரவரி 3-ம் தேதி பூஜையுடன் படம் தொடங்கப்பட உள்ளது.

‘மாநாடு’ கதையைக் கேட்டுவிட்டு, இதற்காக என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் என்று உறுதி அளித்துள்ளார் சிம்பு. உடலைக் குறைத்து, தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள ஜனவரி முதல் வாரத்தில் வெளிநாடு செல்ல உள்ளார். பிப்ரவரி 3-ம் தேதி பட பூஜைக்குத்தான் சிம்பு சென்னை திரும்புவார் என்று அவருக்கு நெருங்கிய நண்பர்கள் தெரிவித்தனர்.
சிம்புவுடன் நடிப்பவர்கள் தேர்வு மும்முரமாகத் தொடங்கப்பட்டுள்ளது. #STR #STRinMaanaadu #VP9
Next Story






