என் மலர்

  சினிமா

  ஒரு பர்ஸ்ட் லுக் விட்டா வசதியா இருக்கும் - வெங்கட் பிரபுவிடம் கேட்ட தமிழ்ப்படம் 2 இயக்குநர்
  X

  ஒரு பர்ஸ்ட் லுக் விட்டா வசதியா இருக்கும் - வெங்கட் பிரபுவிடம் கேட்ட தமிழ்ப்படம் 2 இயக்குநர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிம்புவின் அடுத்த படத்தை தான் இயக்கவிருப்பதாக வெங்கட் பிரபு அறிவித்த நிலையில், அவருக்கு வாழ்த்து தெரிவித்த தமிழ்ப்படம் 2 பட இயக்குநர் ஒரு பர்ஸ்ட் லுக் விட்டா வசதியா இருக்கும் என்று கலாய்த்துள்ளார். #STR #VP9
  நடிகர் சிம்புவின் அடுத்த படத்தை தான் இயக்குவதாக இயக்குநர் வெங்கட் பிரபு நேற்று அறிவித்தார். சுரேஷ் காமாட்சி தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கும் நிலையில், படம் 2019-ல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

  சிம்புவுடன் - வெங்கட் பிரபுவுக்கு டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், தமிழ்ப்படம் 2 இயக்குநர் சி.எஸ்.அமுதனும் அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து அமுதன் தெரிவித்ததாவது, 

  `இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் சார்! ஒரு பர்ஸ்ட் லுக் விட்டீங்கனா வசதியா இருக்கும்' என்று வெங்கட் பிரபுவின் டுவிட்டை குறிப்பிட்டு அமுதன் கோரிக்கை வைத்தார். 
  அவருக்கு பதில் அளித்த வெங்கட் பிரபு, `எப்படியும் உங்க பட ரிலீசுக்கு அப்பறம் தான் சார்! நன்றி'. என்று பதில் அளித்தார்.

  தமிழ்ப்படம் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே அரசியல் கட்சியினர், புதுப்படங்கள் என தொடர்ந்து பல்வேறு அட்ராசிட்டிகளையும் கலாய்த்து போஸ்டர், வீடியோ வெளியிட்டு வரும் தமிழ்ப்படம் 2 படக்குழு, சமீபத்தில் டிக் டிக் டிக் படத்தின் போஸ்டரை கலாய்த்து சிங்கிள் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகியது என்பது குறிப்பிடத்தக்கது. #STR #VP9 #ThamizhPadam2

  Next Story
  ×