search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "4 பேர் பலி"

    • சாமிகண்ணு தெரு ஆட்டோ டிரைவர்கள் 2 பேர் குடிபோதையில் தாக்கினர்.
    • ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    செம்பட்டி:

    செம்பட்டி அருகே அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பால்ராஜ் (57). இதே ஊரைச் சேர்ந்த சாமிகண்ணு தெரு ஆட்டோ டிரைவர் குமரேசன் (28), மகுடீஸ்வரன் (19) ஆகிய 2 பேரும் குடிபோதையில் பால்ராஜை தாக்கினர்.

    இதுகுறித்து செம்படி போலீஸ் நிலையத்தில் பால்ராஜ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து குமரேசன் மற்றும் மகுடீஸ்வரனை கைது செய்தனர். அதேபோல் அழகர்நாயக்கன்பட்டியைச் சேர்ந்த ராமமூர்த்தி மனைவி போதும் பொண்ணு (48) என்பவரை மணிகண்டன் (33), பெரியசாமி (24) ஆகிய 2 பேரும் குடிபோதையில் தலையில் தாக்கி ரத்தக்காயம் ஏற்படுத்தினர்.

    இதுகுறித்து போதும்பொண்ணு செம்பட்டி போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் மற்றும் பெரியசாமியை கைது செய்தனர். குடிபோதையில் 2 வேறு சம்பவங்களில் ஈடுபட்ட 4 பேரையும் ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.

    • காரமடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
    • மாணவர்களிடமிருந்து இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கோவை,

    மேட்டுப்பாளையம் காரமடை அருகே பெரியபுத்தூரில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவல் அறிந்த காரமடை போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது காரமடை, பெரியபுத்தூர் பகுதியில் 2 வாலிபர்கள் சந்தேகத்திற்கி டமாக நின்றிருந்தனர். அவர்களை போலீசார் பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாலிபர்களை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கெம்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த பூபதி (வயது20), சந்தோஷ்குமார் (20) என்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதேபோல் பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒத்தகால் மண்டபம் மயிலேரிபாளையத்தை சேர்ந்த சூரியா (19) மற்றும் பெரியநாயக்கன்பாளையம் எல்.எம்.டபிள்யூ பிரிவு பகுதியை சேர்ந்த முத்துகுமார் (21) கல்லூரி மாணவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 400 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சதீஷ் அவர்களிடம் மெதுவாக செல்லவேண்டியது தானே என கேட்டுள்ளார்.
    • இதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே உள்ள் அகரம்முருகன் கோவில் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் சதீஷ் (வயது23). இவரும், கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த ராஜேஷ் (23),சபரி(19), வேல்முருகன்(19), அம்ப்ரீஷ் (26) ஆகிய 4 பேரும் கெலமங்கலம் மின்வாரியம் அலுவலகம் அருகே காரில் சென்றுள்ளனர். அப்போது சதீஷ் அவர்களிடம் மெதுவாக செல்லவேண்டியது தானே என கேட்டுள்ளார்.

    இதில் ஏற்பட்ட தகராறில் 4 பேரும் சேர்ந்து கையாலும், கட்டையாலும் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சதீஷ் உத்தனப்பள்ளி போலீசில் கொடுத்த புகார்படி போலீசார் வழக்கு பதிவு செய்து 4பேரையும் கைது செய்தனர்.

    • ஒரு பெட்டி கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வது தெரிய வந்தது.
    • மேலும் அவர்களிடமிருந்த கஞ்சா 600 கிராம் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் டவுன் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி பெங்களூர் சாலையில் ரோந்து பணியில் அமர்த்தப்பட்டு அங்குள்ள ஒரு பெட்டி கடையில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்வது தெரிய வந்தது.

    இந்த கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்ட ராம்நகர் சேர்ந்த கந்தன் (வயது 32), மத்திகிரி கணேஷ் மேத்தா(38), சுப்பிரமணி காலனி ஜமீர் (34), வாசவி நகர் சபரீசன்(36)ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்த கஞ்சா 600 கிராம் பறிமுதல் செய்தனர்.

    • தண்டராம்பட்டு வழியாக கரூர் வரை அமைகிறது
    • அதிகாரிகள் நேரில் ஆய்வு

    திருவண்ணாமலை:

    முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு நிதி திட்டம் மூலம் திருவண்ணாமலை அருகே செட்டிபட்டு ஊராட்சியில் இருந்து தண்டராம்பட்டு வழியாக அரூர் வரை ரூ.120 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது

    இந்த பணிகளை நேற்று திருவண்ணாமலை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் ஆய்வு செய்தார்.

    அப்போது பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆய்வின்போது கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர்கள் தியாகு, இன்பநாதன், உதவி பொறியாளர்கள் சசிகுமார், பிரீத்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்தக்–குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.
    • 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதி–மன்ற நீதி–பதி கண்–ணன் முன்பு ஆஜர்–ப–டுத்தினர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகருகம் அருகே கூத்தக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ஜெய்சங்கர். இவருடைய மனைவி செந்தமிழ் செல்வி. இவர் ஊராட்சி மன்ற துணைத் தலைவராக உள்ளார். இவர்களுடைய மகன் ஜெகன் ஸ்ரீ (வயது 19)  இவர் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூரில் உள்ள தனியார் பாலிடெ க்னிக் கல்லூரியில் மெ க்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 25-ந்தே தி கூத்கக்குடி காப்புக்காட்டில் ஜெகன்ஸ்ரீ கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு கிடந்தார்.    இதையடுத்து துணை போலீஸ் சூப்ரண்டு ரமேஷ் மற்றும் தாசில்தார் சத்தியநா ராயணன்ஆகியோர் முன்னிலையில் ஜெகன்ஸ்ரீ உடல் தோண்டி எடுக்கப்ட்டு பிரேத பரிசோதக்காக கள்ளக் குறிச்சி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், முன்விரோதம் காரணமாக ஜெகன் ஸ்ரீயை அதே ஊரை சேர்ந்த அங்கமுத்து மகன் அய்யப்பன் (32), மணிகண்டன் மகன் ஆகாஷ் (20), ரவிச்ந்திரன் மகன் அபிலரசன் (27), 17 வயது சிறுவன் ஆகியோர் மது பாட்டிலால் தாக்கியும், கத்தியால் கழுத்தை அறுத்–தும் கொலை செய்தது தெரியவந்தது.

    இதையத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து கள்ளக்குறிச்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கண்ணன் முன்பு ஆஜர்படுத்தினர். அய்யப்பன், ஆகாஷ், அபிலரசன் ஆகிய 3 பேரையும் 15 நாள் கடலூர் மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் அய்–யப்பன் உள்பட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்

    மேலும் 17 வயது சிறுவன், கடலூர் சாவடி பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டான். 

    • ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.
    • திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

    ஈரோடு,

    ஈரோடு சூரம்பட்டி போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது சூரம்பட்டி வலசு, நேதாஜி ரோடு பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர்.அப்போது அவர்களிடம் 1.200 கிலோ கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது.

    விசாரணை யில் அவர்கள் வீரப்பன் சத்திரம் பகுதி யைச் சேர்ந்த ரவிச்சந்திரன் (27), சூரம்பட்டி வலசு, அண்ணா வீதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (37) என்பது தெரியவந்தது.

    மேலும் சட்டவிரோதமாக கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

    இதையடுத்து, போலீசார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.மேலும், அவர்களிடமிருந்து ரூ. 24 ஆயிரம் மதிப்பிலான 1.200 கிலோ கிராம் கஞ்சா மற்றும் பணம் ரூ. 700 ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    இதேபோல, கடத்தூர் போலீசார், கோபியை அடுத்துள்ள சிங்கிரி பாளையம், மாதேஸ்வரன் தோட்டம் முன்பாக சந்தேகத்துக்கிடமாக இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தனர்.

    அதில் அவர்கள் இருவரும் திருவண்ணாமலையில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து இங்கு விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

    மேலும் விசாரணையில் அவர்கள் இருவரும் நம்பியூர் மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்த ரமேஷ்குமார் (35), கோபி, ஒடையகவுண்ட ன்பாளையம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (32) என்பதும் தெரியவந்தது.இதையடுத்து, போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து ரூ. 3,000 மதிப்பிலான 100 கிராம் கஞ்சா, பணம் ரூ. 1,500 மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர்.

    • கடந்த 23-ந் தேதி இரவு ஆகாஷ் டேவிட் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டார்.
    • காயம் அடைந்த ஆகாஷ் டேவிட், கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே உள்ள கேத்தி சாந்தூரைச் சேர்ந்தவர் ஆகாஷ் டேவிட் (வயது 26). இவர் ஊர்க்காவல் படையில் காவலராக பணியாற்றி வருகிறார்.

    கடந்த 23-ந் தேதி இரவு இவர் போலீசாருடன் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது கேத்தி பாலாடா திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த செல்வகுமார் (31) என்பவர் வீட்டு முன்பு சிலர் கூட்டமாக நின்று கொண்டு இருந்தனர். அவர்களை போலீசார் எச்சரித்து கலைந்து போகச் செய்தனர்.

    அதன்பின்னர் ஊர்க்காவல் படை காவலரான ஆகாஷ் டேவிட், தனது நண்பர் வீட்டுக்கு சென்றார். அப்போது செல்வகுமார் மற்றும் அவரது நண்பர்களான ஜிசாந்த் (26), ஆரோக்கியசாமி (36), சத்தியசீலன் ஆகியோர் தகராறு செய்தனர். மேலும் ஆகாஷ் டேவிட்டையும் அவர்கள் அடித்து உதைத்து தாக்கினர்.

    இதில் காயம் அடைந்த ஆகாஷ் டேவிட், கேத்தி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்வகுமார் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    • தேர்வு முடிந்து 8 மாதம் ஆகியும் முடிவுகள் வெளியாகாததால் சர்ச்சை எழுந்தது.
    • கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலானது.

    சென்னை:

    தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 7301 பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஆண்டு ஜூலை மாதம் குரூப்-4 தேர்வு நடத்தப்பட்டது. இதில் சுமார் 19 லட்சம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுதினர். வழக்கமாக 2 அல்லது 3 மாதங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகிவிடும். ஆனால் இந்த முறை 8 மாதமாகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் சர்ச்சை எழுந்தது.

    சமூக வலைத்தளங்களில் பலரும் அதிருப்தி தெரிவித்தனர். கடந்த சில தினங்களுக்கு முன் இதுகுறித்த ஹேஷ்டேக் ட்விட்டரில் வைரலானது. இதையடுத்து, இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

    அதன்படி இன்று பிற்பகல் குரூப்-4 தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் பலரும் இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தேடுவதால் டிஎன்பிஎஸ்சி இணையதளம் முடங்கியது. நேரம் செல்லச் செல்ல இணையதளத்தின் வேகம் சீரடைந்து தேர்வு முடிவுகளை எளிதாக பார்க்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

     தேர்வு முடிவுகளை அறிய கிளிக் செய்க: https://apply.tnpscexams.in/result-groupIV/S8NHJQ0fh7EUzbQK

    • அந்தியூர் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தினர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அந்தியூர் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் உத்தரவின் பேரில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    இதை தொடர்ந்து அந்தியூர் அடுத்த கெட்டி சமுத்திரம் ஏரி அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 4 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

    அவர்களை போலீசார் நிறுத்தி மோட்டார் சைக்கிளில் சோதனை நடத்தினர். அப்போது அதில் கர்நாடக மது பாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர்.

    இதில் அவர்கள் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள கொட்டக்காடு பகுதியை சேர்ந்த முகமது முஸ்தபா, பள்ளிபாளையம் அருகே உள்ள வெடியரசம்பாளையத்தை சேர்ந்த கார்த்தி, பிரபு, பள்ளிபாளையம் அடுத்த தெற்குப்பள்ளம் பகுதியை சேர்ந்த சந்துரு என்பது தெரிய வந்தது.

    மேலும் அவர்கள் மோட்டார் சைக்கிளில் கர்நாடக மதுபாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்களிடமிருந்து 44 கர்நாடக பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து அந்தியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர்கள் 4 பேரையும் பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர்.
    • சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு:

    ஈரோடு அடுத்த லட்சுமி நகர் பகுதியில் சித்தோடு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடி கொண்டிருப்பதாக தகவல் வந்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று சூதாட்டம் விளையாடி வந்த 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் கே.ஆர்.பாளையம் முத்து கவுண்டர் வீதியை சேர்ந்த கந்தசாமி(47), அதேபகுதியை சேர்ந்த செல்லதுரை (45), மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சக்திவேல் (49), பள்ளிபாளையம் எக்கட்டூர் செந்தில்குமார் (43) ஆகிய 4 பேர் என்பது தெரியவந்தது.

    இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த சீட்டு கட்டு மற்றும் ரூ.3,100 ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.

    • ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள சவண்டப்பூர், ஆண்டிகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35), முருகன் (28), சி.ஆறுமுகம் (56), சண்முகம் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் 52 மற்றும் பணம் ரூ. 570 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ×