பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது

ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.
பணம் வைத்து சூதாடிய 4 பேர் கைது
Published on

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்துள்ள சவண்டப்பூர், ஆண்டிகாடு பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக கோபி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் அங்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த கும்பலை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் அதேபகுதியை சேர்ந்த ஆறுமுகம் (35), முருகன் (28), சி.ஆறுமுகம் (56), சண்முகம் (52) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து சூதாட பயன்படுத்தப்பட்ட சீட்டுகள் 52 மற்றும் பணம் ரூ. 570 ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com