search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 arrest"

    கோவையில் கூட்டுறவு சங்க செயலாளரை கடத்தி ரூ.50 லட்சம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கோவை:

    கோவை ரத்தினபுரியை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 51).

    இவர் வேலாண்டிபாளையத்தில் உள்ள நகர கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலாளராக பணியாற்றி வருகிறார். வீரகேரளத்தை சேர்ந்த பத்மநாபன்(42) என்பவர் அடிக்கடி கூட்டுறவு சங்கத்தில் நகை வைத்து கடன் பெற்ற வகையில் சரவணகுமார் மற்றும் கூட்டுறவு சங்க ஊழியர் நாகராஜ்(43) ஆகியோருடன் நெருங்கி பழகினார்.

    இதனடிப்படையில் பத்மநாபனுக்கு சரவணகுமார் கடனுதவி செய்தார். ஆனால் பத்மநாபன் ஒழுங்காக பணத்தை திருப்பி கொடுக்காததால் உதவி செய்வதை சரவணகுமார் நிறுத்தினார். எனவே அவர் மீது பத்மநாபனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் சரவணகுமாரிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதாகவும், அவரை கடத்தி மிரட்டினால் எளிதில் பணம் கொடுத்து விடுவார் என்றும் பத்மநாபனிடம் நாகராஜ் ஆசைகாட்டினார். அதன்படி சரவணகுமாரை கடத்தி பணம் பறிக்க திட்டம் தீட்டிய பத்மநாபன் தனது நண்பரான ஜி.என்.மில்ஸ் பகுதியை சேர்ந்த பைனான்ஸ் தொழில் செய்து வரும் விஷ்ணுகுமாரின் உதவியை நாடினார். அவர் தனது கூட்டாளிகளான பாலன், கணபதியை சேர்ந்த அய்யப்பன், போத்தனூரை சேர்ந்த கார்த்திகேயன் ஆகியோரையும் இந்த திட்டத்துக்கு சேர்த்துக் கொண்டார்.

    அதன்படி கடந்த 27.07.2016 அன்று சாய்பாபாகாலனியில் நடந்து சென்ற சரவணகுமாரை பத்மநாபன் உள்பட 6 பேரும் சேர்ந்து காரில் கடத்திக் கொண்டு ஆனைக்கட்டிக்கு சென்றனர். அங்கு ஒரு அறையில் தங்க வைத்து சரவணகுமாரை ஒரு பெண்ணுடன் சேர்த்து படம் எடுத்துள்ளனர். அந்த படத்தை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் ரூ.50 லட்சம் தர வேண்டும் என மிரட்டினர். பயந்து போன சரவணகுமார் என்னிடம் ரூ.25 லட்சம் தான் உள்ளது எனக் கூறி அந்த பணத்தை கொடுத்துள்ளார். இதனால் அவரை விடுவித்தனர்.

    அதன்பின்னரும் பத்மநாபன் அடிக்கடி சரவணகுமாரிடம் பணம் கேட்டார். தரமறுத்தால் பெண்ணுடன் சேர்த்து எடுக்கப்பட்ட உனது ஆபாச படத்தை வெளியிட்டு விடுவேன் என மிரட்டினார். இதனால் சரவணகுமார் ரூ.2 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை என கடந்த 2 ஆண்டுகளில் பல்வேறு தவணைகளாக ரூ.25 லட்சம் கொடுத்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 18-ந் தேதி இரவு 7 மணி அளவில் கருணாநிதி நகர் பகுதியில் சரவணகுமார் சென்ற போது அவரை பத்மநாபன் வழி மறித்து மீண்டும் பணம் கேட்டு மிரட்டினார். இதனால் மனமுடைந்த சரவணகுமார் சாய்பாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன் பேரில் பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுகுமார், கார்த்திகேயன், அய்யப்பன், பாலா ஆகிய 6 பேர் மீதும் கடத்தல், கொலை மிரட்டல் விடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில் பாலா என்பவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவால் இறந்து விட்டது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பத்மநாபன், நாகராஜ், விஷ்ணுராஜ் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கார்த்திகேயன், அய்யப்பன் ஆகிய இருவரை போலீசார் தேடி வருகின்றனர். #tamilnews
    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விற்பவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மது விற்பவர்களை போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஞானசிகாமணி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் குருந்தன்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வரும்போது அங்கு சந்தேகப்படும்படியாக மூதாட்டி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.

    போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த கஸ்தூரி (வயது 63) என்பதும், அந்த பகுதியில் அனுமதியின்றி மது விற்றதும், அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதேபோல் ஈத்தாமொழி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர். அவர்கள் சம்பக்குளம் அருகே வரும்போது அங்கு அனுமதியின்றி மதுவிற்றதாக சுரேந்திரன் (39) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 3 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். புதுக்கடை பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரன் மற்றும் போலீசார் ரோந்து வந்தனர். அவர்கள் காப்பிக்காடு சந்திப்பில் வரும்போது வாலிபர் ஒருவர் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்தார். போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர், அதே பகுதியைச் சேர்ந்த ஜோஸ் (40) என்பதும், அவர் அனுமதியின்றி மது விற்றதும் தெரிய வந்தது.

    இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். #tamilnews
    செய்துங்கநல்லூர் அருகே தொழிலாளி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அண்ணன்- தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    செய்துங்கநல்லூர்:

    தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள கீழநட்டார்குளம் கிராமத்தை சேர்ந்தவர் குரு (வயது 35), கூலித்தொழிலாளி. இவர் தினமும் காலையில் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டிற்கு வருவார்.

    இந்த நிலையில் நேற்று வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு குரு வீட்டிற்கு வந்தார். இரவு 10 மணி அளவில் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்ல வீட்டின் வாசலில் வந்து நின்றார்.

    அப்போது, மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென்று குருவை சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

    இதில் குருவின் தலை, கை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெட்டு விழுந்தது. பலத்த காயம் அடைந்த குரு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

    உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது. இதுகுறித்து செய்துங்கநல்லூர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குருவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    குரு எதற்காக கொலை செய்யப்பட்டார்? குருவை கொலை செய்த கும்பல் யார்? என்பது பற்றி தீவிர விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த முத்தையாவின் மகன்கள் துரை, மாசிலாமணி மற்றும் உறவினர் செல்லத்துரை உள்ளிட்ட 4 பேர் இந்த கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.

    கொலை செய்யப்பட்ட குருவுக்கும், துரை உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் செல்லத்துரையை குரு கத்தியால் குத்தியுள்ளார். இதனால் காயமடைந்த செல்லத்துரை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவத்திற்கு பின்னர் அவர்களுக்கிடையே தொடர்ந்து விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் குருவின் மனைவி துரை உள்ளிட்ட 3 பேர் மீதும் மீண்டும் போலீசில் புகார் செய்துள்ளார். இதனால் அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அடுத்தடுத்து பிரச்சினை காரணமாக 3 பேரும் குரு மீது ஆத்திரத்தில் இருந்தனர். இதனால் குருவை கொலை செய்ய திட்டமிட்டனர். இதையறிந்த குரு தனது மாமனார் ஊரான நொச்சிகுளத்தில் வசித்து வந்தார். இந்தநிலையில் நேற்று அவர் ஊருக்கு வந்தபோது துரை உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து அவரை கொலை செய்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி துரை, அவரது தம்பி மாசிலாமணி, செல்லத்துரை ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் செல்லத்துரையை கத்தியால் குத்தியதோடு, தொடர்ந்து எங்கள்மீது போலீஸ் நிலையத்தில் புகார் செய்ததால் வெட்டிகொலை செய்தோம் என தெரிவித்துள்ளனர்.

    இந்த வழக்கில் மேலும் ஒருவரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் செய்துங்கநல்லூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கொலை செய்யப்பட்ட குருவுக்கு, உஷா என்ற மனைவியும், 3 மகன்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews
    வளசரவாக்கம் சுரேஷ் நகர் பகுதியில் வாகன சோதனையில் போது போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    வளசரவாக்கம் சுரேஷ் நகர் பகுதியில் தலைமை காவலர் திலகர்பாபு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த சின்ன போரூர் பகுதியைச் சேர்ந்த பீட்டரை நிறுத்தி விசாரித்தனர். குடிபோதையில் இருந்த பீட்டர் போலீசாரிடம் தகாத வார்த்தைகளால் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    மேலும் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தனது நண்பர்களான ஆலப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பிரபாகரன், தேவராஜ் ஆகியேரை அங்கு வரவழைத்தார். அவர்கள் மூன்று பேரும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து பீட்டர், பிரபாகரன், தேவராஜ் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். #tamilnews
    சென்னை டி.பி. சத்திரம் அருகே ஆட்டோவில் கஞ்சா விற்ற 3 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சைவை பறிமுதல் செய்தனர்.
    போரூர்:

    சென்னை டி.பி. சத்திரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன இந்நிலையில் நேற்று இரவு பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள பெட்ரோல் பங்க் அருகில் சப்-இன்ஸ்பெக்டர் சுபாஷ், ஏட்டு மதியழகன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அப்பகுதியில் சந்தேகத்திற்கிடமாக நின்ற ஆட்டோவை சோதனை செய்தனர். அதில்கஞ்சா மறைத்து வைத்து விற்றது தெரிந்தது.

    இதையடுத்து ஆட்டோவில் இருந்த ஐசிஎப் பகுதியைச் சேர்ந்த பாலு, டிபி சத்திரம் சேட்டு என்கிற மனோகர், ஷெனாய் நகர் பகுதியைச் சேர்ந்த கருப்பா என்கிற ஞானசேகர் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 1கிலோ 100கிராம் கஞ்சா மற்றும் ஆட்டோவை போலிசார் பறிமுதல் செய்தனர். #tamilnews
    திருநின்றவூரில் போலி ஆவணம் மூலம் ரூ.50 லட்சம் மோசடி செய்த கணவன், மனைவி மற்றும் அவரது கூட்டாளி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது54). வெல்டிங் ஷாப் வைத்துள்ளார். இவர் சொந்தமாக நிலம் வாங்க குழந்தைவேலு என்பவரை அணுகியுள்ளார்.குழந்தை வேலு மூலம் திருநின்றவூர்,பிரகாஷ் நகரில் ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் மோகன் என்பவரிடம் நிலம் வாங்க சென்றுள்ளனர். அப்போது மோகன் பிரகாஷ்நகர் 7 வது தெருவில் உள்ள ஒரு கிரவுண்ட் நிலத்தை ராஜேந்திரனுக்கு காட்டியுள்ளார்.

    இது கோயம்பத்தூரை சேர்ந்த லோகிதாஸ் என்பவருக்கு சொந்தமானது என்று 52 லட்சம் ரூபாய் விலை பேசியுள்ளார். பின்னர் ராஜேந்திரன் ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் விலைக்கு வாங்க ஒப்பு கொண்டு முன் தொகை ரூ.10 ஆயிரம் வழங்கியுள்ளார்.அதன் பின்பு லோகிதாசையும் மோகன் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.

    இதனை நம்பி அனைத்து ஆவணங்களையும் பார்த்துவிட்டு ஆவடி பத்திர பதிவு அலுவலத்தில் ராஜேந்திரன் மனைவி பெயரில் 1200 சதுர அடியும், மற்றொரு பாதி ராஜேந்திரன் பெயரிலும் ரூ.50 லட்சத்து 60 ஆயிரம் கொடுத்து பத்திரப்பதிவு செய்துள்ளனர்.வாங்கிய இடத்தில் வீடுகட்டுவதற்காக சுத்தம் செய்தபோது அங்கு வந்த ஒருவர் இடம் தன்னுடையது என்றும் தனது பெயர்தான் லோகிதாஸ் என்று கூறியுள்ளார்.

    இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணை மேற்கொண்டதில் வளசரவாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் லோகிதாஸ் போல் ஆள்மாறட்டம் செய்து நிலத்தை விற்க கோயம்பத்தூரில் இருப்பது போல் ரே‌ஷன் கார்டு,ஆதார் கார்டு,பான் கார்டு,வாக்காளர் அட்டை முதல் வங்கி கணக்கு வரை லோகிதாஸ் பெயரில் வாங்கியுள்ளார்.மேலும் போலி பத்திரத்தை ஏற்பாடு செய்திருப்பதும் தெரிய வந்தது.

    இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் லோகிதாசாக ஆள் மாறாட்டம் செய்த ரவி அவரது மனைவி தேவிபிரியா மற்றும் அவரது கூட்டாளி ஹரி ஆகிய 3 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான மோகன், சங்கர் என்கின்ற ராம சுப்ரமணியம் ஆகிய இருவரை தேடிவருகின்றனர். #tamilnews
    பாகூர் அருகே தென்பெண்ணையாற்றில் மணல் கடத்திய 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்துள்ளனர்.
    பாகூர்:

    பாகூர் அருகே சோரியாங்குப்பம் தென் பெண்ணை ஆற்றில் மணல் அள்ள புதுவை அரசு தடை விதித்துள்ளது. அதே வேளையில் நெல்லிக்குப்பம் அருகே வான்பாக்கத்தில் தமிழக அரசு சார்பில் மணல் குவாரி செயல்படுகிறது.

    இந்த மணல் குவாரியில் புதுவையை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு மணல் அள்ள அனுமதிப்பது இல்லை.

    இதனால் தென் பெண்ணை ஆற்றில் மணல் குவாரி அமைக்க வேண்டும் என்று பாகூர் மற்றும் அதனை சுற்றியுள்ள புதுவையை சேர்ந்த மாட்டு வண்டி தொழிலாளர்கள் அரசை வலியுறுத்தி வருகிறார்கள். இதையடுத்து மணமேடு பகுதியில் மணல் குவாரி திறக்க புதுவை மாவட்ட துணை கலெக்டர் ஆய்வு செய்தார்.

    இந்த நிலையில் தடை விதிக் கப்பட்ட சோரியாங்குப்பம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து ஆராய்ச்சிகுப்பம் வழியாக 6 மாட்டு வண்டி கள் மூலம் மணல் கடத்தப்படு வதாக பாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது.

    இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவகுரு நாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது போலீ சாரை பார்த்ததும் மாட்டு வண்டிகளை ஓட்டி வந்த 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். 3 பேர் சிக்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பிடிபட்ட 3 பேர் சோரியாங்குப்பத்தை சேர்ந்த ராஜி (28), சின்ன ஆராய்ச்சிகுப்பத்தை சேர்ந்த சாம்ராஜ் (40) மற்றும் பொன்னுதுரை (48) என்பதும் தப்பி ஓடியவர்கள் சின்ன ஆராய்ச்சிகுப்பத்தை சேர்ந்த ராமதாஸ், பாலு என்ற பாலுமகேந்திரன், மணி ஆகியோர் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் தேடிவருகிறார் கள்.

    மேலும் 6 மாட்டு வண்டி களையும் பறிமுதல் செய்து வருவாய் துறையினரிடம் ஒப்படைத்தனர். #tamilnews
    ×