search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "27 ராணுவ வீரர்கள் பலி"

    ஆப்கானிஸ்தானில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 27 ராணுவ வீரர்கள் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர். #Afghanistan #MosqueBombAttack
    காபுல்:

    ஆப்கானிஸ்தானில் உள்ள கிழக்கு கோஸ்ட் மாகாணத்தில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. இன்று அந்த ராணுவ முகாமில் உள்ள மசூதியை குறிவைத்து பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.

    இந்த தாக்குதலில் மசூதியில் இருந்த 27 படைவீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர். 

    தகவலறிந்து மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்றனர்.  படுகாயம் அடைந்தவர்களை மீட்டுஅருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. #Afghanistan #MosqueBombAttack
    ஈரானில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27 பேர் பரிதாபமாக இறந்தனர். #Iran #AlcoholPoision
    டெஹ்ரான்:

    ஈரானில் 1979-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதனை மீறி மது குடிப்பவர்களுக்கு கசையடி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    இருந்த போதிலும் அந்நாட்டு மக்கள் கள்ளச்சந்தையில் கிடைக்கும் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ஹோர்மோஸ்கான், வடக்கு கோர்சன், அல்போர்ஸ், கோஹிலயா மற்றும் போயர் அஹ்மத் ஆகிய மாகாணங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக மதுபானங்களை தயார் செய்து, விற்பனை செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை ஈரான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Iran #AlcoholPoision
    நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் இடையூறாக அமைந்து உள்ள 27 ஓட்டல்களுக்கு உடனே ‘சீல்’ வைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. #SupremeCourt #ElephantCorridors
    புதுடெல்லி:

    நீலகிரி மாவட்டம், முதுமலை சரணாலயத்தை ஒட்டியுள்ள கிராமத்தில் யானைகளின் வழித்தடங்களை ஆக்கிரமித்து விடுதி மற்றும் ஓட்டல்கள் கட்டுவதற்கு சென்னை ஐகோர்ட்டு கடந்த 2011-ம் ஆண்டு தடை விதித்தது.

    மேலும் யானை வழித்தடம் என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து விவசாய நில உரிமையாளர்கள், விடுதி உரிமையாளர்கள் தங்கள் குடியிருப்புகளை காலி செய்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

    இந்த உத்தரவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட விடுதி உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் என 50-க்கும் மேற்பட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தனர்.

    இந்த மேல்முறையீடு வழக்கு ஏற்கனவே நீதிபதிகள் மதன் பி.லோகுர், தீபக் குப்தா ஆகியோரை கொண்ட அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

    அப்போது ஆஜரான வக்கீல் யானை ராஜேந்திரன், “நீலகிரி மாவட்டத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளது” என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், நீலகிரி மாவட்டத்தில் யானை வழித்தடத்தில் சட்ட விரோதமாக ஆக்கிரமித்து எத்தனை கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன, அவற்றால் யானைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பது குறித்து மாவட்ட கலெக்டர் 4 வாரங்களுக்குள் எழுத்துப்பூர்வமாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

    அதே நேரத்தில் யானை வழித்தடத்தை ஆக்கிரமித்து ஏதேனும் கட்டிடங்கள் கட்டப்பட்டிருந்தால் அவை இடிக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

    இந்த நிலையில் அந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதி மதன் பி.லோகுர் அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

    அப்போது இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “ யானைகள் மிகுந்த பெருமை வாய்ந்த விலங்குகள். அவை நம் நாட்டின் சொத்துக்கள், அவற்றை நாம் அழித்து கொண்டிருக்கிறோம்” என்று வேதனை தெரிவித்தனர்.

    யானைகள் வழித்தடத்தில் விதிமுறை மீறி 39 வணிக நிறுவனங்கள் இருப்பதாக கலெக்டர் கூறி இருக்கிறார். இவற்றில் 27 விடுதிகள் சார்பாக யாரும் ஆஜர் ஆகவில்லை. எனவே அவர்கள் கலெக்டரின் அறிக்கையை ஒத்துக்கொள்வதாக ஆகிறது. அந்த 27 விடுதிகளும் 48 மணி நேரத்தில் மூடி ‘சீல்’ வைக்கப்பட வேண்டும். மீதம் உள்ள 12 விடுதிகளும் தங்களுக்கு அனுமதி உள்ளதா என்பதை 48 மணி நேரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.  #SupremeCourt #ElephantCorridors
    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 3 ஆண்டுகளில் வெறும் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தலித் பிரிவினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இதுதொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், தண்டனை வழங்கப்படுவது மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது.

    அந்தவகையில் கடந்த 2014 முதல் 2016 வரையிலான 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அவற்றில் வழங்கப்பட்ட தண்டனை விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் 2014-ம் ஆண்டில் நாடு முழுவதும் 40,208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 28.4 சதவீத வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

    2015-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 38,510 வழக்குகளில் 27.2 சதவீத வழக்குகளிலும், 2016-ம் ஆண்டு பதிவான 40,718 வழக்குகளில் 25.8 சதவீத வழக்குகளிலும் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த 3 ஆண்டுகளில் வெறும் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    வழக்கு பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், போதிய சாட்சியம் இல்லாமை, இருக்கும் சாட்சியங்களும் பல்டியடிப்பது போன்ற பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
    27 நட்சத்திரங்களுக்கும் விருட்சங்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரத்தை வழிபாடு செய்து வந்தால், நினைத்த பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.
    இயற்கையையே இறைவனாக நினைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள். அந்த இயற்கை வழிபாட்டில் முக்கியமான ஒன்றுதான் ‘விருட்ச வழிபாடு’ என்னும் மர வழிபாடு. இதற்கு ஆதாரம் தரும் விதமாக ஆலயம் தோறும் ஒவ்வொரு தல விருட்சம் இருப்பதை இப்போதும் காண முடியும். அது மட்டுமின்றி 27 நட்சத்திரங்களுக்கும் விருட்சங்கள் இருக்கின்றன. அந்தந்த நட்சத்திரத்திற்கு உரிய மரத்தை வழிபாடு செய்து வந்தால், நினைத்த பலன்களைப் பெறலாம் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

    ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரும் மரம் என்றுதான் சில கோவில்களில் வைத்திருப்பார்கள். அதைத் தான் பக்தர்கள் பலரும் வழிபட்டு வருவார்கள். ஆனால் ஒரு நட்சத்திரத்திற்கு நான்கு பாதங்கள் உண்டு. அவற்றில் ஒவ்வொரு பாதத்திற்கும் உரிய விருட்சம் முன்னோர்களால் சொல்லப்பட்டுள்ளது. ஒரு நட்சத்திரத்திற்கான பொதுவான மரத்தை வழிபடுவதை விட, அந்த நட்சத்திரத்தில் தாங்கள் பிறந்த பாதத்திற்கான விருட்சத்தை தேர்வு செய்து வழிபட்டால் கூடுதல் பலனைத் தரும்.

    இங்கு ஒவ்வொரு நட்சத்திரத்திற்கு உள்ள நான்கு பாதத்திற்கான விருட்சங்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.

    அஸ்வினி

    1-ம் பாதம் - காஞ்சிதை

    (எட்டி)

    2-ம் பாதம் - மகிழம்
    3-ம் பாதம் - பாதாம்
    4-ம் பாதம் - நண்டாஞ்சு

    பரணி

    1-ம் பாதம் - அத்தி
    2-ம் பாதம் - மஞ்சக்கடம்பு
    3-ம் பாதம் - விளா
    4-ம் பாதம் - நந்தியா வட்டை

    கார்த்திகை

    1-ம் பாதம் - நெல்லி
    2-ம் பாதம் - மணிபுங்கம்
    3-ம் பாதம் - வெண் தேக்கு
    4-ம் பாதம் - நிரிவேங்கை

    ரோகிணி

    1-ம் பாதம் - நாவல்
    2-ம் பாதம் - சிவப்பு

    மந்தாரை

    3-ம் பாதம் - மந்தாரை
    4-ம் பாதம் - நாகலிங்கம்

    மிருகசீரிஷம்

    1-ம் பாதம் - கருங்காலி
    2-ம் பாதம் - ஆச்சா
    3-ம் பாதம் - வேம்பு
    4-ம் பாதம் - நீர்க்கடம்பு

    திருவாதிரை

    1-ம் பாதம் - செங்கருங்காலி
    2-ம் பாதம் - வெள்ளை
    3-ம் பாதம் - வெள்ளெருக்கு
    4-ம் பாதம் - வெள்ளெருக்கு

    புனர்பூசம்

    1-ம் பாதம் - மூங்கில்
    2-ம் பாதம் - மலைவேம்பு
    3-ம் பாதம் - அடப்பமரம்
    4-ம் பாதம் - நெல்லி

    பூசம்

    1-ம் பாதம் - அரசு
    2-ம் பாதம் - ஆச்சா
    3-ம் பாதம் - இருள்
    4-ம் பாதம் - நொச்சி

    ஆயில்யம்

    1-ம் பாதம் - புன்னை
    2-ம் பாதம் - முசுக்கட்டை
    3-ம் பாதம் - இலந்தை
    4-ம் பாதம் - பலா

    மகம்

    1-ம் பாதம் - ஆலமரம்
    2-ம் பாதம் - முத்திலா மரம்
    3-ம் பாதம் - இலுப்பை
    4-ம் பாதம் - பவளமல்லி

    பூரம்

    1-ம் பாதம் - பலா
    2-ம் பாதம் - வாகை
    3-ம் பாதம் - ருத்திராட்சம்
    4-ம் பாதம் - பலா

    உத்திரம்

    1-ம் பாதம் - ஆலசி
    2-ம் பாதம் - வாதநாராயணன்
    3-ம் பாதம் - எட்டி
    4-ம் பாதம் - புங்கமரம்

    ஹஸ்தம்

    1-ம் பாதம் - ஆத்தி
    2-ம் பாதம் - தென்னை
    3-ம் பாதம் - ஓதியன்
    4-ம் பாதம் - புத்திரசீவி

    சித்திரை

    1-ம் பாதம் - வில்வம்
    2-ம் பாதம் - புரசு
    3-ம் பாதம் - கொடுக்காபுளி
    4-ம் பாதம் - தங்க அரளி

    சுவாதி

    1-ம் பாதம் - மருது
    2-ம் பாதம் - புளி
    3-ம் பாதம் - மஞ்சள் கொன்றை
    4-ம் பாதம் - கொழுக்கட்டை

    மந்தாரை

    விசாகம்

    1-ம் பாதம் - விளா
    2-ம் பாதம் - சிம்சுபா
    3-ம் பாதம் - பூவன்
    4-ம் பாதம் - தூங்குமூஞ்சி

    அனுஷம்

    1-ம் பாதம் - மகிழம்
    2-ம் பாதம் - பூமருது
    3-ம் பாதம் - கொங்கு
    4-ம் பாதம் - தேக்கு

    கேட்டை

    1-ம் பாதம் - பலா
    2-ம் பாதம் - பூவரசு
    3-ம் பாதம் - அரசு
    4-ம் பாதம் - வேம்பு

    மூலம்

    1-ம் பாதம் - மராமரம்
    2-ம் பாதம் - பெரு
    3-ம் பாதம் - செண்பக மரம்
    4-ம் பாதம் - ஆச்சா

    பூராடம்

    1-ம் பாதம் - வஞ்சி
    2-ம் பாதம் - கடற்கொஞ்சி
    3-ம் பாதம் - சந்தானம்
    4-ம் பாதம் - எலுமிச்சை

    உத்திராடம்

    1-ம் பாதம் - பலா
    2-ம் பாதம் - கடுக்காய்
    3-ம் பாதம் - சாரப்பருப்பு
    4-ம் பாதம் - தாளை

    திருவோணம்

    1-ம் பாதம் - வெள்ளெருக்கு
    2-ம் பாதம் - கருங்காலி
    3-ம் பாதம் - சிறுநாகப்பூ
    4-ம் பாதம் - பாக்கு

    அவிட்டம்

    1-ம் பாதம் - வன்னி
    2-ம் பாதம் - கருவேல்
    3-ம் பாதம் - சீத்தா
    4-ம் பாதம் - ஜாதிக்காய்

    சதயம்

    1-ம் பாதம் - கடம்பு
    2-ம் பாதம் - பரம்பை
    3-ம் பாதம் - ராம்சீதா
    4-ம் பாதம் - திலகமரம்

    பூரட்டாதி

    1-ம் பாதம் - தேமா
    2-ம் பாதம் - குங்கிலியம்
    3-ம் பாதம் - சுந்தரவேம்பு
    4-ம் பாதம் - கன்னிமந்தாரை

    உத்திரட்டாதி

    1-ம் பாதம் - வேம்பு
    2-ம் பாதம் - குல்மோகர்
    3-ம் பாதம் - சேராங்

    கொட்டை

    4-ம் பாதம் - செம்மரம்

    ரேவதி

    1-ம் பாதம் - பனை
    2-ம் பாதம் - தங்க அரளி
    3-ம் பாதம் - செஞ்சந்தனம்
    4-ம் பாதம் - மஞ்சபலா

    இவற்றில் உங்கள் நட்சத்திரத்தின் பாதங்களுக்குரிய மரத்தை அறிந்து வழிபடுவது உங்கள் வாழ்வை சிறப்பாக்கும். மேலும் அந்த மரத்தின் செடியை ஏதாவது ஒரு ஆலயத்தில் நீங்களே உங்கள் கையால் நட்டு வைப்பதும் நன்மை பயக்கும். அந்த மரம் வளர, வளர உங்கள் வாழ்வும் வளர்ச்சி பெறும். உங்கள் நட்சத்திரங்களுக்குரிய மரமானது, உங்களின் பாவக் கதிர்களை கிரகித்து, உங்களுக்கு அற்புதமான ஒரு ஆன்ம தொடர்பை ஏற்படுத்தித் தரும்.

    கடகம் ராமசாமி
    27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் அலுவலகங்கள் வெறிச்சோடின.
    ஊட்டி:

    தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில், தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்பது உள்பட 27 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, நீலகிரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் நேற்று பணிக்கு வராமல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஊராட்சி செயலர்களுக்கு அரசு ஏற்றுக்கொண்ட பதிவுறு எழுத்தருக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர், குந்தா ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்க வேண்டும், ஒன்றிய பணி மேற்பார்வையாளருக்கு அளவீடு மற்றும் மதிப்பீடு ரூ.5 லட்சமாக உயர்த்த வேண்டும், கணினி உதவியாளர்களுக்கும், முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளருக்கும் பாரபட்சமற்ற முறையில் ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், இளநிலை பொறியாளர்களுக்கும் முறையான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும், ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடந்தது.

    ஊட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு அலுவலர்கள் பணிக்கு வராததால், அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கிராம ஊராட்சி பிரிவு, வளர்ச்சி பிரிவு உள்ளிட்ட பிரிவு அலுவலகங்கள் மூடப்பட்டு இருந்தன. நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ஊரக வளர்ச்சி முகமை, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் வெறிச்சோடின.

    ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. 
    ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 27 ஆண்டுகள் ஆகியும் வழக்கு விசாரணை முடிவடையாமல் உள்ளது. #RajivGandhi #DeathAnniversary
    புதுடெல்லி:

    முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே மாதம் 21-ந் தேதி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்துக்காக வந்தபோது ஸ்ரீபெரும்புதூரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரின் பெண் மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார். இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் அனைவரும் தற்போது தண்டனை அனுபவித்து வருகின்றனர். எனினும் இந்த சதியின் பின்னணி குறித்து எந்த தகவலும் இதுவரை முழுமையாக கண்டறியப்படவில்லை.

    இதற்கிடையே, ராஜீவ்காந்தி படுகொலையின் சதி குறித்து சி.பி.ஐ. தலைமையில் 1998-ம் ஆண்டு அமைக்கப்பட்ட பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு முகமை விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த முகமை அளிக்கும் தகவல்கள் சுப்ரீம் கோர்ட்டிடம் பகிர்ந்தும் கொள்ளப்படுகிறது. இந்த விசாரணை நீண்டுகொண்டே போவதால் விரைவில் முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடந்த மார்ச் மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இந்த விசாரணையின்போது நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்விடம், பல்நோக்கு ஒழுங்குமுறை கண்காணிப்பு முகமை கூறுகையில், ‘இது தொடர்பாக இலங்கை உள்பட பல்வேறு நாடுகளில் விசாரணை நடத்தவேண்டி உள்ளது. தற்போது கொழும்பு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிக்சன் என்கிற சுரென் என்பவரிடமும் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டி இருக்கிறது’ என்று தெரிவித்தது.

    அதற்கு நீதிபதிகள் அமர்வு வெளிநாட்டவர்களிடம் விசாரணை நடத்த இந்திய தூதரகங்கள் வழியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இதுபற்றி 4 வாரங்களுக்குள் விசாரணையின் தகுதிநிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறியது.

    ஆனாலும் ராஜீவ்காந்தி படுகொலையின் சதி பின்னணி குறித்த விசாரணை மந்த கதியில்தான் நடந்து வருகிறது. 27 ஆண்டுகளாகியும் இது தொடர்பான விசாரணை முடிவடையாமல் நீண்டுகொண்டே செல்வது விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

    நேற்று ராஜீவ்காந்தியின் 27-வது நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.  #RajivGandhi #DeathAnniversary

    ×