search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alcohol poisoning"

    • விழுப்புரம் அருகே குடிப்பதற்கு பணம் தராததால் விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    • ஒருவரிடம் ரூ. 200 வாங்கி க்கொண்டு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி மதுவில் கலந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே ராமையாம் பாளையம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 60) விவசாயி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களையும் அதே பகுதியில் திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் கார்த்திகேயன் சரிவர வேலைக்கு செல்வதில்லை. கடந்த மூன்றாம் தேதி வீட்டில் 2 மகள்கள் மனைவியிடம் குடிப்பதற்கு பணம் கேட்டுள்ளார். அவர்கள் தர மறுத்துவிட்டனர். இதனால் அதே பகுதி சேர்ந்த நபர் ஒருவரிடம் ரூ. 200 வாங்கி க்கொண்டு வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை வாங்கி மதுவில் கலந்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.

    இந்த விசயம் மனைவி மற்றும் மகளுக்கு தெரிய வரவே அதிர்ச்சி அடைந்து அவரை முண்டியமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு இன்று காலை சிகிச்சை பலனளிக்காமல் கார்த்திகேயன் இறந்தார். இது குறித்து வளவனூர் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • 4 முறை தற்கொலைக்கு முயன்றவர் மதுவில் விஷம் கலந்து குடித்து பலியானார்.
    • அம்ரூஸ் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி நிலையில் இருந்தார்.

    கடலூர்:

    கடலூர் அருகே வடக்கு வழதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்ரூஸ் (வயது 51). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று அம்ரூஸ் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி நிலையில் இருந்தவரை, அவர்களது உறவினர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம் ரூஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இவர் ஏற்கனவே நான்கு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷம் குடித்து இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரானில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27 பேர் பரிதாபமாக இறந்தனர். #Iran #AlcoholPoision
    டெஹ்ரான்:

    ஈரானில் 1979-ம் ஆண்டு முதல் மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதனை மீறி மது குடிப்பவர்களுக்கு கசையடி மற்றும் அபராதம் விதிக்கப்படும்.

    இருந்த போதிலும் அந்நாட்டு மக்கள் கள்ளச்சந்தையில் கிடைக்கும் வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட மற்றும் வீட்டிலேயே தயார் செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளனர்.

    இந்த நிலையில் ஹோர்மோஸ்கான், வடக்கு கோர்சன், அல்போர்ஸ், கோஹிலயா மற்றும் போயர் அஹ்மத் ஆகிய மாகாணங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட மதுபானங்களை வாங்கி குடித்த 27 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் 300-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக மதுபானங்களை தயார் செய்து, விற்பனை செய்ததாக கணவன்-மனைவி உள்பட 3 பேரை ஈரான் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #Iran #AlcoholPoision
    ×