4 முறை தற்கொலைக்கு முயன்றவர் மதுவில் விஷம் கலந்து குடித்து சாவு

4 முறை தற்கொலைக்கு முயன்றவர் மதுவில் விஷம் கலந்து குடித்து பலியானார்.அம்ரூஸ் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி நிலையில் இருந்தார்.
4 முறை தற்கொலைக்கு முயன்றவர் மதுவில் விஷம் கலந்து குடித்து சாவு
Published on

கடலூர்:

கடலூர் அருகே வடக்கு வழதலம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அம்ரூஸ் (வயது 51). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று அம்ரூஸ் மதுவில் பூச்சி மருந்து கலந்து குடித்து மயங்கி நிலையில் இருந்தவரை, அவர்களது உறவினர்கள் மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆம் ரூஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இவர் ஏற்கனவே நான்கு முறை தற்கொலைக்கு முயற்சி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விஷம் குடித்து இறந்த தற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com