search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "27 Percentage"

    வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் 3 ஆண்டுகளில் வெறும் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் தலித் பிரிவினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைகள் தொடர்பாக எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஆண்டுதோறும் இதுதொடர்பாக ஆயிரக்கணக்கான வழக்குகள் பதிவு செய்யப்பட்டாலும், தண்டனை வழங்கப்படுவது மிகவும் குறைவு என தெரியவந்துள்ளது.

    அந்தவகையில் கடந்த 2014 முதல் 2016 வரையிலான 3 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் மற்றும் அவற்றில் வழங்கப்பட்ட தண்டனை விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ளது. இதில் 2014-ம் ஆண்டில் நாடு முழுவதும் 40,208 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதில் 28.4 சதவீத வழக்குகளிலேயே தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

    2015-ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 38,510 வழக்குகளில் 27.2 சதவீத வழக்குகளிலும், 2016-ம் ஆண்டு பதிவான 40,718 வழக்குகளில் 25.8 சதவீத வழக்குகளிலும் தண்டனை வழங்கப்பட்டு இருக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த 3 ஆண்டுகளில் வெறும் 27 சதவீத வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டு இருப்பதாக உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    வழக்கு பதிவு செய்வதில் ஏற்படும் தாமதம், போதிய சாட்சியம் இல்லாமை, இருக்கும் சாட்சியங்களும் பல்டியடிப்பது போன்ற பல்வேறு காரணங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. 
    ×