search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "20 constituency"

    பாராளுமன்ற தேர்தலுடன் 20 தொகுதி இடைத்தேர்தலையும் நடத்த தயாராக உள்ளோம் என்று தமிழக தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். #SatyabrataSahoo

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள ஒப்புகை சீட்டுடன் மின்னணு வாக்குபதிவு எந்திரத்தை செயல்படுத்த தேர்தல் கமி‌ஷன் திட்டமிட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குசாவடிகளிலும் மின்னணு எந்திரத்துடன் ஒப்புகைச்சீட்டு முறையை செயல்படுத்த பொதுமக்களுக்கு செயல் விளக்கம் இன்று தொடங்கியது.

    சென்னையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திர செயல் விளக்கம் அளிக்க 32 வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த வாகனங்கள் அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் செல்லும். அங்கு பொது மக்கள் ஓட்டுப்பதிவு செய்து யாருக்கு வாக்களிக்கிறோம் என்கிற தகவலை உறுதி செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சென்னையில் அண்ணாநகர் மத்திய வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்புகைச்சீட்டு செயல் விளக்க திட்டத்தினை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு, சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    பின்னர் சத்யபிரத சாகு நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலுடன் காலியாக உள்ள 20 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த தமிழக தேர்தல் ஆணையம் தயாராக இருக்கிறது. ஓசூர் சட்டசபை தொகுதி இன்னும் காலியானதாக அறிவிக்கப்படவில்லை.

    காலியானதாக அறிவித்தால் அதற்கான ஆயத்த பணிகளையும் செய்ய தயாராக இருக்கிறோம்.

    மின்னணு வாக்குப்பதிவு ஒப்புகை சீட்டு செயல்விளக்கம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுமக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் நடத்தப்படும். 10 நாட்களுக்குள் இதனை முடிக்க திட்டமிட்டிருக்கிறோம். தேவைப்பட்டால் கூடுதலாக நாட்கள் ஒதுக்கப்படும்.

    இந்த ஒப்புகை சீட்டு முறையின் மூலம் கள்ள ஓட்டினை தடுக்க முடியும். யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்வதோடு, ஓட்டு எண்ணிக்கையின் போது ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் இந்த பெட்டியினை திறந்து அதில் உள்ள சீட்டினை எண்ண முடியும். வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு தருவதில்லை. 7 வினாடிகள் மட்டுமே பார்க்க முடியும்.

    ஒருவாகனம் தினமும் 5 வாக்குச்சாவடிகளுக்கு சென்று செயல் விளக்கம் அளிக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    செயல்விளக்க நிகழ்ச்சியில் பொதுமக்கள் ஆர்வமாக கலந்து கொண்டு ஓட்டுப்பதிவு செய்தனர். துணை தேர்தல் அதிகாரி லலிதா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #SatyabrataSahoo

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்த உள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார். #Seeman #NaamTamilarKatchi
    கும்பகோணம்:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கும்பகோணத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மத்திய அரசு தவறான அணுகுமுறையை பின்பற்றுகிறது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.), நீட் தேர்வு உள்ளிட்ட அனைத்திலும் மத்திய அரசு பெரும் தோல்வியை சந்தித்தது.

    பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டதாக பா.ஜனதாவை சேர்ந்த முன்னாள் மத்திய மந்திரி யஷ்வந்த் சின்கா, ரிசர்வ் வங்கி ஆளுனர் ரகுராம்ராஜன் ஆகியோர் கூறி உள்ளனர். இதற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

    மத்திய அரசு தற்போது தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் உள்ள சலுகைகளை கடந்த 4 ஆண்டுகளாக ஏன் தாக்கல் செய்யவில்லை? விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் தருவதாக கூறி உள்ளனர். இந்த அறிவிப்பு எப்போது செயலாக்கம் பெறும்? மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைப்பதாக கூறி உள்ளனர். அதை எப்போது அமைப்பார்கள்? இந்த அறிவிப்புகள் அடுத்த தேர்தலில் பா.ஜனதா வென்றால்தான் செயல் வடிவம் பெறும்.

    தனியார் முதலாளிகள் வாங்கிய ரூ.3 லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்கிறார்கள். ஆனால் மாணவர்களின் கல்வி கடன் ரூ.65 ஆயிரம் கோடி தான் உள்ளது. அதை தள்ளுபடி செய்ய மறுக்கிறார்கள். மத்திய அரசு, முதலாளிகளின் முகவர்போல செயல்படுகிறது. மக்களுக்கான நலன் பேணுகிற அரசாக இல்லை.



    மத்திய அரசிடம், தமிழக அரசு தனது உரிமைகள் அனைத்தையும் கொடுத்துவிட்டது. தமிழகத்தில் முதல்-அமைச்சர் என்பவர் பெயரளவுக்கு மட்டுமே உள்ளார். மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை போன்ற துணிச்சல் நமது மாநில முதல்-அமைச்சருக்கு இல்லையே என்ற வருத்தம் தான் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது உறுதி. 20 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களையும், 20 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களையும் நிறுத்த உள்ளோம்.

    மணியரசனின் தலைமையில் இயங்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகள் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். மற்றவர்களின் ஆதரவு நாம் தமிழர் கட்சிக்கு எப்போதும் உண்டு.

    இவ்வாறு அவர் கூறினார். #Seeman #NaamTamilarKatchi

    தமிழகத்தில் 20 தொகுதி இடைத்தேர்தலுக்கு பிறகு தி.மு.க. ஆட்சிக்கு வரும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார். #Vaiko #DMK
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் ம.தி.மு.க. இல்ல நிர்வாகியின் திருமண விழா நடந்தது. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க. படுதோல்வியடைந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் இருந்த ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க. அதனை இழந்துள்ளது. காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றியை பெற்றுள்ளது.



    தமிழகத்தில் தி.மு.க. - காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழகத்தில் 20 சட்டமன்ற தொகுதிகள் இடைத்தேர்தலுக்கு பிறகு தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்.

    இதனால் பொது தேர்தலுக்கு முன்பாகவே இடைத்தேர்தலில் மகத்தான வெற்றி பெற்று தி.மு.க. ஆட்சிக்கு வரும். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியை பிடிக்கும். 2019-ம் ஆண்டு மத்திய மற்றும் மாநில அரசியலில் பல திருப்பங்கள் ஏற்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதாக திருமண மேடையில் வைகோ பேசுகையில்:-

    முல்லைப் பெரியாறு, நியூட்ரினோ ஆய்வு திட்ட போராட்டங்களுக்காக தேனி மாவட்டத்துக்கு பல முறை வந்துள்ளேன். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 22 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறேன். என்னுடைய போராட்டத்தால்தான் மத்திய அரசால் இங்கு நியூட்ரினோ ஆய்வு திட்டத்தை கொண்டு வர முடியவில்லை. இனி எந்த காலத்திலும் நரேந்திர மோடி பிரதமராக வர முடியாது என்றார். #Vaiko #DMK

    தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ByElection
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் நேற்று மாலை நடந்த தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கமல்ஹாசன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-



    இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ராஜபக்சேவை நான் வரவேற்கவில்லை. இருந்தாலும் முன்பு போல அவர் செயல்படமாட்டார் என நம்புகிறேன். மற்ற நாட்டு அரசியல் விவகாரத்தில் நாம் குறுக்கீடு செய்ய கூடாது. இருந்தாலும் முன்பு செய்ததை தற்போதும் செய்வார்கள் என எண்ண வேண்டாம். தமிழர்களுக்கு நல்லது பண்ணமாட்டார் என நாம் நினைக்கவேண்டாம். தமிழகத்தில் 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வந்தால் நிச்சயம் போட்டியிடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #ByElection #MakkalNeedhiMaiam

    ×