search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "14 பேர் பலி"

    உத்தரபிரதேசத்தில் 14 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு தந்தது தொடர்பாக ‘போக்சோ’ சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.
    முசாபர்நகர்:

    உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் சிலர் ஒரு குழுவாக இணைந்து உத்தரகாண்டின் ஹரித்வாருக்கு புனித யாத்திரை சென்றனர். பின்னர் அங்கிருந்து திரும்பியபோது அவர்களது கையில் இருந்த பணம் தீர்ந்தது.

    எனவே உத்தரபிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் பணத்துக்காக சிறுசிறு பணிகளை செய்து கொடுத்தனர். அப்போது அந்த குழுவில் இருந்த 14 வயது சிறுவன் ஒருவனுக்கு ஓட்டல் உரிமையாளர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. மேலும் சம்பவம் குறித்து வெளியே சொன்னால் கடும் விளைவுகள் ஏற்படும் என அவர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

    இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் போலீசில் புகார் செய்தான். அதன்படி ‘போக்சோ’ சட்டம் உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், ஓட்டல் உரிமையாளரை கைது செய்தனர்.

    முசாபர்நகரில் நடந்த மற்றொரு சம்பவத்தில் 16 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றதாக 22 வயது வாலிபர் ஒருவரை கைது செய்திருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். 
    உத்தரகாண்டில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்து விழுந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. #UttarakhandBusAccident
    டேராடூன்:  

    உத்தரகாண்ட் மாநிலத்தில் உத்தரகாசியில் இருந்து ஹரித்வார் நோக்கி அரசு பேருந்து இன்று காலை சென்று கொண்டிருந்தது. அதில் 25க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர்.

    அந்த பேருந்து திஹ்ரி மாவட்டத்தின் சூர்யதார் பகுதியில் ரிஷிகேஷ் - கங்கோத்ரி நெடுஞ்சாலையில் பேருந்து சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்து அருகிலிருந்த பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 10 பேர் பலியானதாக முதக் கட்ட தகவல்கள் வெளியாகின.

    திஹ்ரி மாவட்டம் மற்றும் சம்பா மாவட்ட பேரிடர் மீட்புக்குழுவினர் அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், பேருந்து விபத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 17 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    விபத்தில் பலியானவர்களுக்கு மாநில முதல் மந்திரி திரிவேந்திர சிங் ராவத் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

    ஏற்கனவே, மாநில அரசு சார்பில் விபத்தில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அளித்தும், படுகாயம் அடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் அளித்தும் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #UttarakhandBusAccident
    மாலி நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள கிராமம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் கொல்லப்பட்டனர். #MilitantsAttack
    பமாகோ:

    மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி நாட்டில் கவுமாகா கிராமத்தில் அல்-கொய்தா தொடர்புடைய பயங்கரவாதிகள் பலர் உள்ளனர். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து பாதுகாப்பு படைகள் மற்றும் ஐ.நா. அமைதி காப்பு இயக்கம் ஆகியவற்றின் மீது பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அங்குள்ள கிராமத்தில் நுழைந்த பயங்கரவாதிகள் அப்பகுதியில் எதிர்ப்பட்டவர்கள் மீது கண்மூடித்தனமாக சுட்டுத் தள்ளினர்.

    இந்த தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 14 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். மேலும், அங்கிருந்த ஒரு லாரி மற்றும் மூன்று வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன. தகவலறிந்து அங்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
    அமெரிக்காவில் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய அதே எண் கொண்ட லாட்டரி டிக்கெட்டுக்கு 14 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #Lotterytickets #jackpot
    நியூயார்க்:

    அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் 18 ஆண்டுகளுக்கு முன் வாங்கிய லாட்டரி டிக்கெட்டில் 300 டாலர் பரிசாக கிடைத்தது. அதன் பின் தற்போது அவர் ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கினார். அந்த லாட்டரி டிக்கெட் எண்ணை சரிபார்த்த போது அவருக்கு பரிசு விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும், அந்த எண் 18 ஆண்டுகளுக்கு முன் பரிசு விழுந்த அதே எண் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு 4 கோடி ரூபாய் ஜாக்பாட் அடித்தது. அந்த பரிசுத்தொகையில் பாதியை தனது வீட்டிற்கும், மீதி பணத்தை சேமித்து வைக்க போவதாகவும் தெரிவித்தார்.

    அதிர்ஷ்டம் ஒரு மனிதரின் வாழ்வில் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டம் இவருக்கு 18 ஆண்டுகளுக்கு பின் அதே எண்ணில் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. #Lotterytickets #jackpot

    வங்காளதேசத்தில் பலத்த மழை, நிலச்சரிவால் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #Bangladesh #Landslides #HeavyRain
    டாக்கா:

    வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையால் மியான்மர் எல்லையில் உள்ள காக்ஸ் பஜார், ரங்கமாதி மாவட்டங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.இந்த தொடர் மழையின் காரணமாக இஸ்லாம்பூர், புரிகாட், அம்டோலி, ஹத்திமாரா, போரோகுல்பாரா, சாரைபாரா பகுதிகளில் பெருத்த நிலச்சரிவுகளும் ஏற்பட்டு உள்ளன.



    இந்த மழையாலும், நிலச்சரிவாலும் மியான்மரில் இருந்து அகதிகளாக வந்து உள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். அவர்கள் மூங்கிலாலும், பிளாஸ்டிக் பலகைகளாலும் கொண்டு அமைக்கப்பட்டு உள்ள தற்காலிக குடியிருப்புகளில்தான் வசித்து வருகின்றனர். அதில் 1,500 தங்குமிடங்கள் பெருத்த சேதம் அடைந்து உள்ளன.

    கோக்ஸ் பஜாரில் ஒரு மண் சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு ரோஹிங்யா முஸ்லிம் பெண்ணும், அவரது 2½ வயதான ஆண் குழந்தையும் சிக்கிக்கொண்டனர். இதில் குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதே போன்று பலத்த காற்று வீசியதில் ஒரு மரம் வேரோடு சாய்ந்து முகமது அலி என்ற ரோஹிங்யா முஸ்லிம் வாலிபர் பலி ஆனார். மழை, நிலச்சரிவுகளில் மொத்தம் 14 பேர் பலியாகி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இதை ரங்கமாதி அரசு மருத்துவ அதிகாரி டாக்டர் ஷாகித்த தாலுக்தர் உறுதி செய்தார். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அவர் தெரிவித்தார்.

    ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் ஒரு லட்சம் பேர் அவதியுற்று வருகிற நிலையில் அவர்களை வேறு இடங்களில் குடி அமர்த்துவதற்கு சர்வதேச தொண்டு நிறுவனங்களின் உதவியை நாடி உள்ளதாக தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண அமைப்பை சேர்ந்த முகமது ஷா கமால் தெரிவித்தார்.மழையை எதிர்பார்த்து ஏற்கனவே 28 ஆயிரம் அகதிகள், பாதுகாப்பான இடங்களுக்கு இட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

    ஐ.நா. சபையின் அகதிகள் அமைப்பு, ரோஹிங்யா அகதிகள் நிலவரம் குறித்து கூறுகையில், “அகதிகளை இட மாற்றம் செய்வதற்கு காலி மனைகள் இல்லை. இதனால் அவர்களை இடமாற்றம் செய்வது சவால் ஆக உள்ளது. ஆபத்தான நிலையில் இருப்பதாக 2 லட்சம் பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். செப்டம்பர் மாதத்துக்குள் அவர்களை பசான்கார் தீவு பகுதிக்குத்தான் மாற்ற வேண்டியது இருக்கிறது” என்று கூறியது.

    இதற்கு இடையே அடுத்த 24 மணி நேரத்துக்கு அங்கு மிதமான மழை முதல் பலத்த மழை வரை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை ஆராய்ச்சி துறை கூறுகிறது.   #Bangladesh #Landslides #HeavyRain
    ஆலங்குடி அருகே பாப்பான் விடுதியில் நடந்த ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 14 பேர் காயமடைந்தனர்.
    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியில் பிரசித்தி பெற்ற முத்து முனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் தேர்த் திருவிழாவையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கோவில் அருகே வாடிவாசல் அமைக்கப்பட்டு அதற்கான முன்னேற்பாடு பணிகள் நடந்தது. பின்னர் மாவட்ட நிர்வாகிகள் வாடிவாசலை பார்வையிட்டு ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கினர். அதனை தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. முன்னதாக அங்கு கொண்டு வரப்பட்ட காளைகளை கால்நடை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்தனர். பின்னர் மாடுபிடி வீரர்களை மருத்துவக்குழுவினர் பரிசோதனை செய்து களத்தில் செல்ல அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து மாடுபிடி வீரர்கள், காளைகளின் உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டை மாவட்ட உதவி கலெக்டர் கே.எம்.சரயு, மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருச்சி, கரூர், தேனி, மதுரை, தஞ்சாவூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து அழைத்து வரப்பட்ட 1018 காளைகளும், வாடிவாசலில் இருந்து ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டது. சீறிப்பாய்ந்து வந்த காளைகளை 241 மாடுபிடி வீரர்களும் அடக்க போட்டி, போட்டனர். இதில் சில காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். சில காளைகள் மாடுபிடி வீரர்களை தூக்கி வீசி பந்தாடின. மேலும் சில காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக் கட்டினர். அதனை பார்த்த பொதுமக்கள், இளைஞர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

    ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 9 மாடுபிடி வீரர்கள், ஜல்லிக்கட்டை காண வந்த பார்வையாளர்கள் 4 பேர் மற்றும் ஜல்லிக்கட்டு காளையின் உரிமையாளர் ஒருவர் என 14 பேர் காயமடைந்தனர். இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு அங்கிருந்த மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் 5 பேர் மட்டும் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    தொடர்ந்து ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும், பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் மோட்டார் சைக்கிள், தங்கம், வெள்ளி நாணயங்கள், மின்விசிறி, சில்வர் பாத்திரங்கள், கட்டில், சைக்கிள், மிக்சி, குக்கர் உள்பட பல்வேறு பரிசு வழங்கப்பட்டது.

    ஜல்லிக்கட்டை ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன், தாசில்தார் ரெத்தினாவதி, வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியசேவியர், அரசு அதிகாரிகள் மற்றும் ஆலங்குடி, பாப்பான்விடுதி சுற்றுவட்டார கிராமபொதுமக்கள், இளைஞர்கள் கண்டுகளித்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அப்துல் முத்தலிபு தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் வைத்தியநாதன் உள்பட ஏராளமான போலீசார் செய்திருந்தனர். 
    ×