search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஊட்டி"

    • ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது.
    • அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்களாக காட்சி அளிக்கிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடல் மட்டத்தில் இருந்து 2196 மீட்டர் உயரத்தில் பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது. இது உலகச் சிறப்புமிக்க நீலகிரி மலைத் தொடரில் அமைந்து உள்ளது.

    அங்கு உள்ள அடர்ந்த இயற்கைக் காடுகள், பலவிதமான காட்டுயிர்கள், பல வகைத் தாவரங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் கண்களுடன் மனதையும் மகிழ வைப்ப வை ஆகும். தூய்மையான காற்று, பனிபடர்ந்த மேகக் கூட்டத்துடன் இயற்கை எழில்கொஞ்சம் பகுதியாக உள்ளது.

    ஆங்கிலேயப் பொறி யாளர் பார்சன் ஹட்சன் என்பவர் கடந்த 1862-ம் ஆண்டு இந்த பகுதியில் அழகான இடத்தை தேர்வு செய்து பாதை வகுத்து வழி ஏற்படுத்தித் தந்தார். எனவே அந்த பகுதி இவரது பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

    குளிர் காலத்தில் மிகுந்த குளிர், மழைக்காலத்தில் மிகுந்த மழை, கோடை க்காலத்தில் குறைந்த வெப்பம் என்று அற்புத சூழலுடன் விளங்குகிறது. அதுவும் தவிர ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது.

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது 3வது குடிநீர் திட்டத்துக்கான பணிகளும் நடந்து வருகி ன்றன. இன்னொருபுறம் புனல் மின்உற்பத்தியும் நடந்து வருகிறது.

    பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும். இங்கு தற்போது 33.59 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பார்சன் வேலி க்கான நீர்பிடிப்புப்பகுதி, 202 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்து உள்ளது.

    இதேபோல பார்சன்ஸ் பள்ளத்தாக்கு பாதுகாக்க ப்பட்ட வனமாக உள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வ லர்களுக்கு முழுமையான இன்பம் தரும் சுற்றுலாத்தலம் ஆகும்.மரங்களின் தடையற்ற வளர்ச்சியும், படர்தாமரை களும், ஊர்ந்து செல்லும் பறவைகளின் சப்தமும், ஒருசில நேரங்க ளில் புலியின் உறுமல்களும் சுற்றுலா பயணிகளின் கற்ப னையை கவர்ந்திழுக்கும். பார்ச ன்ஸ்வேலி பள்ள த்தாக்கு பகுதிகளில் காட்டெரு மை களை அதிகம் பார்க்க முடியும். காட்டுப்பாதை செல்லும் வழியில் இருபக்கமும் செறிந்து நிற்கும் அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்கள் மற்றும் சிறு, சிறு நீரோடைகளை கடந்து செல்வது மனதிற்கு உற்சாகம் தரும் அனுபவமாக உள்ளது.

    ஊட்டியில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதி. இயற்கையை நேசிப்பவர்களுக்கு உகந்த இடம். பார்க்க பார்க்க பரவசம் தரும் பார்சன்ஸ்வேலி, ஊட்டி யின் தாகம் தீர்க்கும் அணையாக உள்ளது. இயற்கை அன்னையின் ஆட்சியின் கீழ் உள்ள அற்பு தமான இடம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். அங்கு உள்ள பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு மனநிறைவுடன் திரும்பி வருகின்றனர்.

    • 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் கலந்து கொண்டனர்.
    • விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    கோத்தகிரி அடுத்த சிறியூர் கிராமத்தில் பழங்குடியின பெண்களுக்கான மகப்பேறு மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதனை ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழுமம், புதுடெல்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தியது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் கலந்து கொண்டனர்.கல்லூரி பேராசிரியர்கள் வடிவேலன், கவுரம்மா, கோமதி சானீஸ், தீபாலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு மாதவிடாய் மற்றும் மகப்பேறு ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்பிறகு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனபால், நிர்வாக செயலாளர் கோமதி சுவாமிநாதன், மருந்தாக்கவியல் வேதியியல் துறை தலைவர் காளிராசன் மற்றும் ஊர் தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி நிர்வாக செயலாளர் பிரியங்கா நன்றி கூறினார்.

    • தமிழ்நாட்டுக்கு அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று ஜூலை 18ந்தேதி பெயர் சூட்டினார்.
    • பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் வெளியி ட்டு உள்ள செய்திக்கு றிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டுக்கு அறிஞர் அண்ணா தமிழ்நாடு என்று ஜூலை 18ந்தேதி பெயர் சூட்டினார். அன்றுமுதல் தமிழ்நாடு நாள் விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் பேரணி நாளை நடக்க உள்ளது.

    ஊட்டி ரெயில் நிலையத்தில் இருந்து தொடங்கும் பேரணி, கமர்ஷியல் சாலை வழியாக பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் முடிகிறது.

    இந்த பேரணியில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொள்கிறார்கள்.

    இதனை தொடர்ந்து சேரிங்கிராஸ் பகுதியில் செய்தி மக்கள் தொடர்புத்து றை சார்பில் தமிழ்நாடு நாள் உருவான வரலாறு மற்றும் அரசின் திட்டங்கள் ஆகியவை குறித்த புகைப்பட கண்காட்சி தொடங்கப்பட உள்ளது.

    இது நாளை முதல் வருகிற 23ந்தேதிவரை 5 நாட்கள் நடக்கும். இதனை பொதுமக்கள் கண்டுகளித்து பயன்பெறலாம் என்று கூறப்பட்டு உள்ளது.

    • ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜூலை 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ெரயில்வே அறிவி த்துள்ளது.
    • ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    ஊட்டி,

    ஊட்டி சிறப்பு மலை ரெயில் சேவை சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக ஜூலை 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெற்கு ெரயில்வே அறிவி த்துள்ளது.

    இதுகுறித்து தெற்கு ெரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:-

    உலக புகழ்பெற்ற ஊட்டி மலை ரெயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணிக்கு புறப்பட்டு பகல் 12.30 மணிக்கு ஊட்டி சென்ற டையும். ஊட்டி கோடை சீசனையொட்டி சுற்றுலா ப்பயணிகளின் வசதிக்காக தெற்கு ரயில்வே சார்பில் கடந்த ஒரு மாதமாக சிறப்பு மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் சேவை ஜூன் 30-ந் தேதியுடன் முடிவடையும் நிலையில், கோடை சீசன் முடிவடைந்த நிலையிலும், சுற்றுலா ப்பயணிகள் தொடர்ந்து மலை ரெயிலில் பயணி ப்பதால் அவர்களின் வசதி க்காக சிறப்பு மலை ரெயில் சேவை ஜூலை 30-ந் தேதி வரை சனி மற்றும் ஞாயிற்றுக்கி ழமைகளில் இயக்கப்பட உள்ளது.

    இதன்படி, ஜூலை 1-ந் தேதி முதல் சனிக்கிழமை களில் மேட்டுப்பாளை யத்தில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்படும் மலை ரெயில் பகல் 2.45 மணிக்கு ஊட்டி சென்றடையும். இதேபோல் ஜூலை 2-ந் தேதி முதல் ஞாயிற்றுக்கி ழமைகளில் ஊட்டியில் இருந்து முற்பகல் 11.25 மணிக்குப் புறப்படும் மலை ரெயில் மாலை 4.20 மணிக்கு மேட்டுப்பாளையம் சென்றடையும்.

    தினசரி இயக்கப்படும் ஊட்டி மலை ரெயிலுக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்வதுபோல, இந்த சிறப்பு ரெயிலுக்கும் (வண்டி எண். 06171, 06172) ஆன்லைனில் முன்பதிவு செய்து பதிவு செய்து பயணம் செய்யலாம்.

    இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

    • சுற்றுலா பயணி களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
    • தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    ஊட்டி,

    குன்னூர் தேசிய நெடுஞ்சாலையில் ஊட்டி நகரின் நுழைவு வாயில் சேரிங்கிராஸ் அமைந்துள்ளது. இப்பகுதியில் ஒரு மாத காலமாக கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு சாலை முழுவதும் கழிவுநீர் வழிந்து ஓடுகின்றது. இதன் அருகில் கண் ஆஸ்பத்திரியும் செயல்பட்டு வருகிறது. வயதானவர்களும் சிகிச்சைக்காக வருபவ ர்களும் மிகவும் சிரமப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆஸ்பத்திரி பின்புறம் கழிவு நீர் தேங்கி செடிகளுக்கு உரமாக நிற்கின்றது.

    இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. மேலும் போக்குவரத்து போலீஸ் துறையினர் அதற்கான தடுப்பை வைத்து போக்குவரத்தை சீர் செய்து வருகின்றனர்.

    ஆனால் பாதசாரிகள் மீதும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் மீதும் வாகனங்கள் செல்லும் பொழுது கழிவுநீர் தெளித்து வருகிறது. இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகின்றது. இதன் கார ணமாக பொது மக்க ளும், சுற்றுலா பயணி களும் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு ள்ளது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    உடனடியாக நகராட்சி நிர்வாகம் இப்பகுதியில் துரிதமாக செயல்பட்டு கழிவுநீர் கால்வாயில் அடைப்பை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கூடலூா் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் மக்கள் பெரிதும் பயன் அடைந்து உள்ளனா்.

    ஊட்டி,

    கூடலூா் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் அ.தி.மு.க. சட்டப்பேரவை கொறடா வும், முன்னாள் அமைச்ச ருமான எஸ்.பி.வேலுமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அதன்பிறகு எஸ்.பி.வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களால் மக்கள் பெரிதும் பயன் அடைந்து உள்ளனா். எனவே வருகிற பாராளுமன்ற தோ்தலில் தமிழகம், புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும். அதைத் தொடா்ந்து சட்டப்பேரவைத் தோ்தலிலும் 200 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும். தமிழகத்தில் தி.மு.க. அரசு மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களையும் தரவில்லை. ஆனால் 2 ஆண்டு சாதனைகள் என்ற பெயரில் தற்போது பொதுக்கூட்டங்களை நடத்தி வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு செயல்படாத நிலையில் உள்ளது. இதை பொதுமக்கள் நன்கு உணா்ந்து உள்ளனா்.

    இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளா் கப்பச்சி வினோத், கூடலூா் எம்.எல்.ஏ பொன்.ஜெயசீலன், மாநில வா்த்தக அணித் தலைவா் சஜீவன், முன்னாள் குன்னூா் எம்.எல்.ஏ. சாந்தி ராமு, முன்னாள் மாவட்டச் செயலாளா் அா்ச்சுனன் உள்பட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

    • .சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
    • ஜான்சல்லீவனின் ஊட்டி 200 ஓராண்டு நிகழ்ச்சி தொடர்பான புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தினை வெளியிட்டனர்

    ஊட்டி, ஜூன்.19-

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஊட்டி 200 நிறைவு விழா மற்றும் முதல்-அமைச்சர் கோப்பை க்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளி ப்பு விழா சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    விழாவில் நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் 61 அரசு துறை அலுவலர்களுக்கும், ஊட்டி 200 நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்த ஒருங்கிணைப்பா ளர்கள் 27 பேருக்கும், 2 நன்கொடையாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை யும், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியான கால்பந்து, கிரிக்கெட், கையுந்து பந்து, வளைகோல் பந்து, கபடி, மாற்றுத்தி றனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

    விழாவில் அவர்கள் ஜான்சல்லீவனின் ஊட்டி 200 ஓராண்டு நிகழ்ச்சி தொடர்பான புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தினை வெளி யிட்டார்கள். முன்னதாக ஜானசல்லீன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சில் ஊட்டி எம்.எல்.ஏ. ஆர். கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்
    • சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் நெல்லியாலம் நகராட்சியில் உள்ள வாழவயல் குடோன் பகுதியில் இருந்து ஆஷிக் அய்யா வீடு வரை செல்லும் சாலை கடந்த சில ஆண்டுகளாக போடப்படாமல் குண்டும் குழியுமாக காணப்பட்டது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களின் அவசர கால தேவைகளுக்காக ஆஸ்பத்திரிக்கு செல்ல மிகவும் சிரமப்பட்டு வந்தனர். நெல்லியாலம் நகராட்சியில் தொடர்ந்து சாலையை சீரமைக்க மனு அளித்தும் இதுவரை சாலையை சீரமை க்காமல் காலம் தாழ்த்தி வருவதாக மக்கள் குற்றம்சாட்டினர்.

    இந்நிலையில் கிராம மக்கள் முடிவு எடுத்து குண்டும் குழியுமாக உள்ள 100 மீட்டர் சாலையை ஒவ்வொரு வீடாக பணம் வசூல் செய்து கான்கிரீட் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். தற்போது பள்ளிகள் தொடங்க உள்ளது. மேலும் பருவமழை தொடங்க உள்ளதால் சாலை மிகவும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும் எனவே கிராமத்தினரே சொந்த பணத்தை வைத்து கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சாலையை அமைக்கும் பணியில் ஈடுபட்டனர். நெல்லியாளம் நகராட்சியிடம் சாலை போடுவதற்கு தொடர்ந்து கோரிக்கை வைத்தும் இதுவரை அதற்கான நடவடிக்கையை எடுக்கவில்லை. அதனால் தங்கள் சொந்த பணத்தை வைத்து சாலையை புதிதாக அமைத்துள்ளோம் என கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • பிளாஸ்டிக் உள்ளிட்ட கழிவுகள் அகற்றப்பட்டன.
    • பொதுமக்கள், ஊழியர்கள் பிளாஸ்டிக்கை ஒழிக்க உறுதிமொழி ஏற்றனர்

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு ஜெகதளா பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி திட்டத்தில் குடியிருப்பு பகுதி, சிறு குடியிருப்பு பகுதி, தொழிற்சாலை, நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் மருத்துவக் கழிவுகள் கட்டிடக்கழிவுகள் போன்றவற்றை பேரூராட்சியில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் பொதுமக்களுடன் இணைந்து தூய்மை செய்தனர்.

    மேலும் தூய்மை மக்கள் இயக்கத்தின் முதலாம் ஆண்டு நிறைவடைந்ததை ஒட்டி அருவங்காடு பஸ் நிலையத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஜெகதளா பேரூராட்சி தலைவர் பங்கஜம், துணை தலைவர் ஜெய்சங்கர், மற்றும் செயல் அலுவலர் சதாசிவம், 7-வது வார்டு உறுப்பினர் யசோதா, 9-வது மரியராஜன், 12-வது வார்டு உறுப்பினர் மோசஸ், 4-வது வார்டு உறுப்பினர் ஆஞ்சலின், 14-வது வார்டு உறுப்பினர் ராஜலட்சுமி, மற்றும் அலுவலக அதிகாரிகள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள், ஆகியோர் என் நகரத்தை நாங்கள் தூய்மையாக வைத்துக் கொள்வோம் என உறுதிமொழி ஏற்றனர். மீண்டும் மஞ்சப்பை, பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிப்போம் போன்ற உறுதி மொழி எடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது.
    • கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    ஊட்டி:

    மலைகளின் அரசியான நீலகிரி மாவட்டம் இயற்கை எழில்கள் நிறைந்தும், சுற்றுலா தலங்கள் நிறைந்தும் காணப்படும் பகுதியாகும்.

    இங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்கவும், சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவும் நாள்தோறும் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் இருப்பர்.

    குறிப்பாக ஏப்ரல், மே உள்ளிட்ட கோடை மாதங்களில் அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வருவார்கள். இதனையொட்டி ஆண்டுதோறும் கோடை விழாவும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கோடைவிழா கடந்த மாதம் 6-ந் தேதி தொடங்கி பழ கண்காட்சியுடன் முடிவடைந்து விட்டது.

    கோடைவிடுமுறை முடிந்த பின்னரும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. நேற்று கூட விடுமுறையை கழிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வந்திருந்தனர்.

    ஊட்டி தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து இருந்தது. அங்கு மலர் மாடத்தில் காட்சி வைக்கப்பட்டு இருந்த பல வண்ண மலர்களை கண்டு ரசித்தனர். கண்ணாடி மாளிகையில் பூத்து குலுங்கிய மலர்களை பார்வையிட்டனர். அதன் பின்னணியில் புகைப்படம், செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

    இதுதவிர சுற்றுலா பயணிகள் பெரணி இல்லம் கண்ணாடி மாளிகைக்குள் சென்று பல்வேறு வகையான பெரணி செடிகளை அருகில் சென்று பார்த்து கண்டு ரசித்து செல்கின்றனர். இதே போன்று ஊட்டி ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைச்சிகரம், பைன் பாரஸ்ட், சூட்டிங் மட்டம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் தலையாகவே காணப்பட்டது.

    சுற்றுலா பயணிகள் வருகை காரணமாக நேற்று ஊட்டி சாலை, குன்னூர் சாலை, கோத்தகிரி சாலை, தொட்டபெட்டா மலைசிகரம் செல்லும் சாலை, தாவரவியல் பூங்கா சாலை உள்பட முக்கிய சாலைகள் அனைத்திலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    இதனால் வாகன ஓட்டிகள் மெல்ல மெல்லவே அடியெடுத்து வாகனத்தை ஓட்ட முடிந்தது.

    கோடை சீசன் முடிந்த பின்னரும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர்.

    • இந்த கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வருவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பக வன எல்லையோரம் உள்ள போஸ்பாறா, சீனக்கொல்லி முதல் தொரப்பள்ளி வரையில் உள்ள கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் நுழைந்து பல்வேறு சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.

    இந்நிலையில் இந்த கிராமங்களில் காட்டு யானைகள் நுழைவதை தடுக்க வருவதை தடுக்க வனத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனா்.

    இதையடுத்து வன எல்லையோர கிராம பகுதியில் உள்ள அகழிகளை ஆழப்படுத்தியதுடன் யானைகள் நுழையும் குறிப்பிட்ட இடங்களில் மரக்கட்டைகளை வைத்து தீ மூட்டி யானைகள் நுழைவதை தடுக்கும் பணியை வனத் துறையினா் துவங்கி உள்ளனா். ஊருக்கு மிக அருகாமையில் கும்கி யானைகளையும் பாதுகாப்பு பணிக்கு நிறுத்தி வைத்துள்ளனா்.

    கொடைக்கானல் போன்று ஏலகிரியை மேம்படுத்த வேண்டும் என மலைகிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்களின் முன்மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ் ஏலகிரி மலை ஊராட்சி தேர்வு செய்யப்பட்டு பொது மக்கள் கருத்துகேட்பு மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்திற்கு கலெக்டர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கினார். 

    கருத்து கேட்பு கூட்டத்தில் மலைவாழ் மக்கள் கூறுயதாவது:-

    பொன்னேரியில் இருந்து ஏலகிரி மலைக்கு 14 கிலோமீட்டர் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளைக் கொண்ட ஏலகிரி மலை 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கியுள்ளது சிறப்புக்குரியது. 

    இந்த மலை சாலை ஆனது குறுகிய சாலையாக உள்ளதால் 3 மீட்டர் சாலையை அகலப்படுத்த வேண்டும். ஏலகிரி மலைக்கு வரும் பஸ்கள் தரமானதாக இயக்க வேண்டும். 

    அனைத்துக் காலங்களிலும் நிரந்தர குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும். ஏலகிரி மலையில் உள்ள அனைத்து ஏரிகளையும் தூர்வார வேண்டும். ஏலகிரி மலை சுற்றுலா தலத்தை நவீனப்படுத்தி ஊட்டி, கொடைக்கானல் போன்று சுற்றுலா தளத்தை மேம்படுத்த வேண்டும். 

    மலைவாழ் மக்களுக்கு சாதி சான்றிதழ் பெற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். மேலும் இது சார்ந்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 
    ×