search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "JSS College"

    • 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் கலந்து கொண்டனர்.
    • விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    ஊட்டி,

    கோத்தகிரி அடுத்த சிறியூர் கிராமத்தில் பழங்குடியின பெண்களுக்கான மகப்பேறு மற்றும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது. இதனை ஜெ.எஸ்.எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்குழுமம், புதுடெல்லி அறிவியல் தொழில்நுட்பத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து நடத்தியது. இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பழங்குடி பெண்கள் கலந்து கொண்டனர்.கல்லூரி பேராசிரியர்கள் வடிவேலன், கவுரம்மா, கோமதி சானீஸ், தீபாலெட்சுமி ஆகியோர் கலந்துகொண்டு மாதவிடாய் மற்றும் மகப்பேறு ஆகியவை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதன்பிறகு விழாவில் பங்கேற்ற பெண்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர் தனபால், நிர்வாக செயலாளர் கோமதி சுவாமிநாதன், மருந்தாக்கவியல் வேதியியல் துறை தலைவர் காளிராசன் மற்றும் ஊர் தலைவர் சந்திரமோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கல்லூரி நிர்வாக செயலாளர் பிரியங்கா நன்றி கூறினார்.

    • 106 பயனாளிகளுக்கு சிறு நடைமுறைகளை செய்தனர்.
    • ரத்த அழுத்தத்தை பரிசோதித்து, தேவையான சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    ரோட்டரி கிளப் ஆப் நீலகிரி வெஸ்ட், ரோட்டராக்ட் கிளப் மற்றும் ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் மேக்கேரி கிராமத்தில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஜே.எஸ்.எஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த 4 மருத்துவர்களைக் கொண்ட குழு, கிராமங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 106 பயனாளிகளுக்கு சிறு நடைமுறைகளை செய்தனர். முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு வாய் சுகாதாரம் குறித்தும், வாய் சுகாதாரத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரியின் மருந்தாளுநர்கள் கிராம மக்களின் இரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து, தேவையான சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நோர்வேயின் லில்லெஸ்ட்ரோம் ரோட்டரி கிளப்பின் உறுப்பினரும், ஆர்.என்.டி நோர்வேயின் ஒஸ்லோமெட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் ஜான் சம்சேத் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். முகாம் ஏற்பாடுகளை ஆர்.என்.டி தலைவர் நிர்மலா சொக்கன், வெஸ்ட் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் ஆனந்தி சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தார். ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி.தனபால், கிராமத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கிராமத் தலைவர் ஜோகி கவுடர் ஆகியோர் கிராம மக்களுக்கு உதவிய அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஊட்டியில் உள்ள ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 20 ரோட்ராக்டர்கள்,என்.எஸ்.எஸ் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.
    • கல்லூரியின்ஆண்டு மலரான பார்ம சாகா 30-வது தொகுப்பை பற்றி விளக்கினார்.

    ஊட்டி,

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியில் ஆண்டு விழா, பரிசளிப்பு விழா மற்றும் முன்னாள் மாணவர்களின் சந்திப்பு என முப்பெரும் விழா நடைபெற்றது.

    விழாவில் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.பி. தனபால் அனைவரையும் வரவேற்றார். முனைவர்கள் கே.பி. அருண் மற்றும் சத்திய நாராயணா ஆகியோர் கல்லூரி ஆண்டறிக்கையை வழங்கினர். மருந்தியல் துறை தலைவர் டாக்டர் கே.கவுதமராஜன் கல்லூரியின்ஆண்டு மலரான பார்ம சாகா 30-வது தொகுப்பை பற்றி விளக்கினார்.

    இதில் சிறப்பு விருந்தினராக கேரளா மாநிலம் செருத்துத்தியில் அமைந்துள்ள பஞ்சகர்மா தேசிய ஆயுர்வேத ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் சுதாகர் கலந்து கொண்டார்.

    கவுரவ விருந்தினராக பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் டி.பிருந்தா, ராயல் கேர் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மருத்துவ இயக்குநரும், டாக்டருமான பரந்தாமன், அபெக்ஸ் மருத்துவ நிறுவன உதவி பொது மேலாளர் ராஜ்குமார், மைசூர் எஸ்.எஸ்.மஹாவித்யாபீட மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர்.ஆர்.மகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மருந்து வேதியியல் துறை தலைவர் டாக்டர் காளிராஜன் நன்றி கூறினார். விழாவில் சிறந்த மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.

    • கல்லூரி முதல்வர் பாராட்டுகளை தெரிவித்தார்.
    • நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

    ஊட்டி,

    தமிழக அரசின் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நீலகிரி மாவட்ட பிரிவு சார்பில் ஊட்டியில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற பூபந்து ஒற்றையர் போட்டியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி மாணவர் பாரத்கண்ணன் 2-வது இடமும், சுஜித் 3-வது இடமும் பிடித்தனர்.இரட்டையர் பூபந்து போட்டில் பாரத்கண்ணன், சுஜித் ஜோடி முதல் இடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரி விளையாட்டு அலுவலர் ஆகியோருக்கு கல்லூரி முதல்வர் எஸ்.பி.தனபால் பாராட்டுகளை தெரிவித்தார்.

    • உயர் கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தரவரிசை 2022 நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெற்றது.
    • ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி நாட்டின் சிறந்த 10 பார்மசி கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது.

    ஊட்டி:

    உயர் கல்வி நிறுவனங்களுக்கான இந்திய தரவரிசை 2022 நிகழ்ச்சி புது டெல்லியில் நடைபெற்றது. இதில் மத்திய அரசின் கல்வித் துறை, திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு துறைகளின் மந்திரி ஸ்ரீ தர்மேந்திர பிரதான் வெளியிட்டார்.

    இதில் ஜெ.எஸ் எஸ் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி கழகம் (நிகர்நிலை பல்கலைக் கழகம்), மைசூரு 34-வது இடம்பெற்று இந்தியாவின் சிறந்த 50 பல்கலைக்கழகங்களின் தரவரிசையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டுள்ளது.

    ஊட்டி ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரி தேசிய அளவில் 6-வது இடத்தை பெற்றுள்ளது. இதன் மூலம் உதகை ஜெ எஸ் எஸ் பார்மசி கல்லூரி நாட்டின் சிறந்த 10 பார்மசி கல்லூரிகளின் தர வரிசைப் பட்டியலில் தொடர்ந்து 4-ஆவது ஆண்டாக இடம்பெற்றுள்ளது.

    மேலும், நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளான மைசூரு ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரி, மைசூரு ஜெ.எஸ்.எஸ். பல் மருத்துவ கல்லூரி, மைசூரு ஜெ.எஸ்.எஸ்.மருத்துவ கல்லூரி ஆகியவை முறையே 8-வது, 12-வது மற்றும் 34-வது இடங்களை தத்தமது பிரிவுகளில் பெற்றுள்ளன.

    இந்த நிகழ்ச்சியில் ஜெ.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பி. தனபால் மற்றும் கல்லூரியின் தேசிய தரவரிசை அலுவலக அதிகாரி முனைவர் கே.பி.அருண் ஆகியோர் கலந்து கொண்டு விருதினை பெற்றனர்.

    இந்த விருதினை பெற உறுதுணையாக இருந்த நிகர் நிலை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெகத்குரு சிவராத்ரி தேசிகேந்திர சுவாமிகள், இணை வேந்தர் முனைவர் பி.சுரேஷ், துணை வேந்தர் மருத்துவர் சுரீந்தர் சிங், பதிவாளர் மருத்துவர் பி.மஞ்சுநாத், மற்றும் அனைத்து அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் கல்லூரி முதல்வர் முனைவர் எஸ்.பி.தனபால் நன்றி தெரிவித்தார்.

    • சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்சி ஊட்டி தாரவியல் பூங்காவில் நடந்தது.
    • உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து செயல்பட யோகாசனம் உதவுகிறது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், ஜெ.எஸ்.எஸ்.சர்வதேசபள்ளி, ஜெ.எஸ்.எஸ்.யோகா கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்சி ஊட்டி தாரவியல் பூங்காவில் நடந்தது.

    அதனை தொடர்ந்து பேரணியும் நடைபெற்றது. இதில் ஜெ.எஸ்.எஸ்கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ்.பி.தனபால் தொடங்கி வைத்தார். தோட்டகலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

    பின்னர் ஜெ.எஸ்.எஸ்கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ்.பி.தனபால் ேபசுகையில், உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது.

    பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது என்றார். இதில் கல்லூரி பேராசிரியர் கவுதமராஜன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாபு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    ×