search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டி ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரியில்  பல் மருத்துவ முகாம்
    X

    ஊட்டி ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரியில் பல் மருத்துவ முகாம்

    • 106 பயனாளிகளுக்கு சிறு நடைமுறைகளை செய்தனர்.
    • ரத்த அழுத்தத்தை பரிசோதித்து, தேவையான சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    ரோட்டரி கிளப் ஆப் நீலகிரி வெஸ்ட், ரோட்டராக்ட் கிளப் மற்றும் ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரி என்.எஸ்.எஸ் சார்பில் மேக்கேரி கிராமத்தில் பல் மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் ஜே.எஸ்.எஸ் பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை சேர்ந்த 4 மருத்துவர்களைக் கொண்ட குழு, கிராமங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள சுமார் 106 பயனாளிகளுக்கு சிறு நடைமுறைகளை செய்தனர். முகாமில் பங்கேற்ற பொதுமக்களுக்கு வாய் சுகாதாரம் குறித்தும், வாய் சுகாதாரத்தில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரியின் மருந்தாளுநர்கள் கிராம மக்களின் இரத்த சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தத்தை பரிசோதித்து, தேவையான சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டது. நோர்வேயின் லில்லெஸ்ட்ரோம் ரோட்டரி கிளப்பின் உறுப்பினரும், ஆர்.என்.டி நோர்வேயின் ஒஸ்லோமெட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான டாக்டர் ஜான் சம்சேத் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டார். முகாம் ஏற்பாடுகளை ஆர்.என்.டி தலைவர் நிர்மலா சொக்கன், வெஸ்ட் ரோட்டரி சங்கத்தின் செயலாளர் ஆனந்தி சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் செய்திருந்தார். ஊட்டியில் உள்ள ஜே.எஸ்.எஸ் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் டாக்டர் எஸ்.பி.தனபால், கிராமத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, கிராமத் தலைவர் ஜோகி கவுடர் ஆகியோர் கிராம மக்களுக்கு உதவிய அமைப்பாளர்களுக்கு நன்றி தெரிவித்தனர். ஊட்டியில் உள்ள ஜேஎஸ்எஸ் மருந்தியல் கல்லூரியைச் சேர்ந்த சுமார் 20 ரோட்ராக்டர்கள்,என்.எஸ்.எஸ் தன்னார்வத் தொண்டர்கள் மற்றும் ஆசிரிய உறுப்பினர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×