என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜெ.எஸ்.எஸ்.பார்மசி கல்லூரி சார்பில் ஊட்டியில் யோகா விழிப்புணர்வு பேரணி
- சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்சி ஊட்டி தாரவியல் பூங்காவில் நடந்தது.
- உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து செயல்பட யோகாசனம் உதவுகிறது.
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஜெ.எஸ்.எஸ் பார்மசி கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம், ஜெ.எஸ்.எஸ்.சர்வதேசபள்ளி, ஜெ.எஸ்.எஸ்.யோகா கல்லூரி சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா விழிப்புணர்வு நிகழ்சி ஊட்டி தாரவியல் பூங்காவில் நடந்தது.
அதனை தொடர்ந்து பேரணியும் நடைபெற்றது. இதில் ஜெ.எஸ்.எஸ்கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ்.பி.தனபால் தொடங்கி வைத்தார். தோட்டகலை துணை இயக்குநர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
பின்னர் ஜெ.எஸ்.எஸ்கல்லூரி முதல்வர் டாக்டர். எஸ்.பி.தனபால் ேபசுகையில், உடல் மற்றும் மனம் இரண்டுமே ஒருங்கிணைந்து, செயல்பட, உடல் ஆரோக்கியமாக இருக்க, நோய்களைத் தடுக்க, மூப்பைத் தடுக்க, என்று பல விதங்களில் யோகாசனம் உதவுகிறது.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்த யோகாவின் நன்மைகளும், யோகா பயிற்சிகள் செய்வதால் ஏற்படும் மாற்றங்களும் மீண்டும் மக்களிடையே பரவத் தொடங்கியுள்ளது என்றார். இதில் கல்லூரி பேராசிரியர் கவுதமராஜன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாபு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.






