search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Prizes for winners"

    • .சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.
    • ஜான்சல்லீவனின் ஊட்டி 200 ஓராண்டு நிகழ்ச்சி தொடர்பான புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தினை வெளியிட்டனர்

    ஊட்டி, ஜூன்.19-

    நீலகிரி மாவட்டம் ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் ஊட்டி 200 நிறைவு விழா மற்றும் முதல்-அமைச்சர் கோப்பை க்கான மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளி ப்பு விழா சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.

    விழாவில் நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா, மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் ஆ.ராசா எம்.பி. ஆகியோர் 61 அரசு துறை அலுவலர்களுக்கும், ஊட்டி 200 நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்த ஒருங்கிணைப்பா ளர்கள் 27 பேருக்கும், 2 நன்கொடையாளர்களுக்கும் பாராட்டு சான்றிதழ்களை யும், முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியான கால்பந்து, கிரிக்கெட், கையுந்து பந்து, வளைகோல் பந்து, கபடி, மாற்றுத்தி றனாளிகளுக்கான 100 மீட்டர் ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களையும் வழங்கினார்கள்.

    விழாவில் அவர்கள் ஜான்சல்லீவனின் ஊட்டி 200 ஓராண்டு நிகழ்ச்சி தொடர்பான புத்தகங்கள் மற்றும் குறிப்புகள் அடங்கிய புத்தகத்தினை வெளி யிட்டார்கள். முன்னதாக ஜானசல்லீன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சில் ஊட்டி எம்.எல்.ஏ. ஆர். கணேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கம், தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
    • புதுவை யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கம், தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டியை, சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி தொடங்கி வைத்தார்.

    சங்கச் செயலாளர் தயாநிதி, துணை செயலாளர் பாலாஜி வரவேற்றனர். ஆரம்ப நிலை, சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் மாணவ-மாணவிகள் யோகாசனப் போட்டியில் பங்கேற்றனர்.

    சிறப்பு விருந்தினராக பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், இந்திய விளையாட்டு பள்ளி பொறுப்பாளர் விட்டல் குமார், புதுவை ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் தனசேகர், டாக்டர் மதன்மோகன், ஞானதேவ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.

    யோகா வல்லுனர்களுக்கு விருது, நடுவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. துணைத் தலைவர் தேவசேனா பவனானி, மூத்த துணைத் தலைவர் கஜேந்திரன், உறுப்பினர் செந்தில்குமார், அன்பழகன், லலிதா, சண்முகம் வாழ்த்தி பேசினார். பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.

    ×