என் மலர்
புதுச்சேரி

யோகா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்கள்.
யோகா போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசு
- சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கம், தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.
- புதுவை யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கம், தேசிய யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு சார்பில், மாநில அளவிலான யோகாசன விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சங்கர வித்யாலயா பள்ளியில் நடந்த போட்டியை, சித்தர் பூமி புதுவை யோகாசன விளையாட்டு சங்கத் தலைவர் டாக்டர் ஆனந்த பாலயோகி பவனானி தொடங்கி வைத்தார்.
சங்கச் செயலாளர் தயாநிதி, துணை செயலாளர் பாலாஜி வரவேற்றனர். ஆரம்ப நிலை, சப்ஜூனியர், ஜூனியர், சீனியர் பிரிவுகளில் மாணவ-மாணவிகள் யோகாசனப் போட்டியில் பங்கேற்றனர்.
சிறப்பு விருந்தினராக பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன், இந்திய விளையாட்டு பள்ளி பொறுப்பாளர் விட்டல் குமார், புதுவை ஒலிம்பிக் சங்க பொது செயலாளர் தனசேகர், டாக்டர் மதன்மோகன், ஞானதேவ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கினர்.
யோகா வல்லுனர்களுக்கு விருது, நடுவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. துணைத் தலைவர் தேவசேனா பவனானி, மூத்த துணைத் தலைவர் கஜேந்திரன், உறுப்பினர் செந்தில்குமார், அன்பழகன், லலிதா, சண்முகம் வாழ்த்தி பேசினார். பொருளாளர் சண்முகம் நன்றி கூறினார்.






