search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பார்சன்ஸ்வேலி அணையில் குவியும் சுற்றுலாபயணிகள்
    X

    பார்சன்ஸ்வேலி அணையில் குவியும் சுற்றுலாபயணிகள்

    • ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது.
    • அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்களாக காட்சி அளிக்கிறது.

    ஊட்டி

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடல் மட்டத்தில் இருந்து 2196 மீட்டர் உயரத்தில் பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது. இது உலகச் சிறப்புமிக்க நீலகிரி மலைத் தொடரில் அமைந்து உள்ளது.

    அங்கு உள்ள அடர்ந்த இயற்கைக் காடுகள், பலவிதமான காட்டுயிர்கள், பல வகைத் தாவரங்கள் ஆகியவை சுற்றுலா பயணிகளின் கண்களுடன் மனதையும் மகிழ வைப்ப வை ஆகும். தூய்மையான காற்று, பனிபடர்ந்த மேகக் கூட்டத்துடன் இயற்கை எழில்கொஞ்சம் பகுதியாக உள்ளது.

    ஆங்கிலேயப் பொறி யாளர் பார்சன் ஹட்சன் என்பவர் கடந்த 1862-ம் ஆண்டு இந்த பகுதியில் அழகான இடத்தை தேர்வு செய்து பாதை வகுத்து வழி ஏற்படுத்தித் தந்தார். எனவே அந்த பகுதி இவரது பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

    குளிர் காலத்தில் மிகுந்த குளிர், மழைக்காலத்தில் மிகுந்த மழை, கோடை க்காலத்தில் குறைந்த வெப்பம் என்று அற்புத சூழலுடன் விளங்குகிறது. அதுவும் தவிர ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பார்சன்ஸ்வேலி அணைக்கட்டு உள்ளது.

    ஊட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் சுமார் 1 லட்சம் பொதுமக்கள் வசிக்கின்றனர். அவர்களின் குடிநீர் தேவைக்காக பார்சன்ஸ் வேலி அணையில் இருந்து 2 குடிநீர் திட்டங்கள் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு தற்போது 3வது குடிநீர் திட்டத்துக்கான பணிகளும் நடந்து வருகி ன்றன. இன்னொருபுறம் புனல் மின்உற்பத்தியும் நடந்து வருகிறது.

    பார்சன்ஸ்வேலி அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி ஆகும். இங்கு தற்போது 33.59 அடிக்கு நீர் இருப்பு உள்ளது. பார்சன் வேலி க்கான நீர்பிடிப்புப்பகுதி, 202 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்து உள்ளது.

    இதேபோல பார்சன்ஸ் பள்ளத்தாக்கு பாதுகாக்க ப்பட்ட வனமாக உள்ளது. இது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வ லர்களுக்கு முழுமையான இன்பம் தரும் சுற்றுலாத்தலம் ஆகும்.மரங்களின் தடையற்ற வளர்ச்சியும், படர்தாமரை களும், ஊர்ந்து செல்லும் பறவைகளின் சப்தமும், ஒருசில நேரங்க ளில் புலியின் உறுமல்களும் சுற்றுலா பயணிகளின் கற்ப னையை கவர்ந்திழுக்கும். பார்ச ன்ஸ்வேலி பள்ள த்தாக்கு பகுதிகளில் காட்டெரு மை களை அதிகம் பார்க்க முடியும். காட்டுப்பாதை செல்லும் வழியில் இருபக்கமும் செறிந்து நிற்கும் அடர்ந்த காடுகள், பச்சைப்பசேல் மரங்கள், பனி படர்ந்த மேகக்கூட்டங்கள் மற்றும் சிறு, சிறு நீரோடைகளை கடந்து செல்வது மனதிற்கு உற்சாகம் தரும் அனுபவமாக உள்ளது.

    ஊட்டியில் இருந்து சுமார் 18 கி.மீ தொலைவில் அமைந்து உள்ளது. இயற்கை காட்சிகள் நிறைந்த பகுதி. இயற்கையை நேசிப்பவர்களுக்கு உகந்த இடம். பார்க்க பார்க்க பரவசம் தரும் பார்சன்ஸ்வேலி, ஊட்டி யின் தாகம் தீர்க்கும் அணையாக உள்ளது. இயற்கை அன்னையின் ஆட்சியின் கீழ் உள்ள அற்பு தமான இடம் என்பதால் இங்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வருகின்றனர். அங்கு உள்ள பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு மனநிறைவுடன் திரும்பி வருகின்றனர்.

    Next Story
    ×