search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தி.மு.க."

    • அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கி பேசினார்.
    • நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் ரெயில்வே பீடர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் 2-ம் கட்டமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி எம்.பி. தனுஷ்குமார், சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா, வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. சதன் திருமலை குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சங்கரன்கோவில் ஆர்.டி.ஓ. சுப்புலட்சுமி வரவேற்று பேசினார். வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் புதிய பயனாளிகளுக்கு உரிமைத் தொகை வழங்கி பேசினார்.

    இதில் தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் செல்வி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர்கள் தங்கவேலு, யூ.எஸ்.டி. சீனிவாசன், பரமகுரு, மாநில மருத்துவ அணி துணை செயலாளர் செண்பக விநாயகம், மாவட்ட அவைத்தலைவர் பத்மநாதன், மாவட்ட துணை செயலாளர்கள் மனோகரன், ராஜதுரை, புனிதா, பொதுக்குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி பாண்டியன், தேவதாஸ், சாகுல் ஹமீது, மாரிசாமி, பராசக்தி, மகேஸ்வரி, ஒன்றிய செயலாளர்கள் பொன் முத்தையா பாண்டி யன், கடற்கரை, பூசைப் பாண்டியன், சேர்மத்துரை, கிறிஸ்டோபர், வெற்றி விஜயன், பெரியதுரை, ராமச்சந்திரன் மதிமாரி முத்து,

    நகரசெயலாளர்கள் பிரகாஷ், அந்தோணிசாமி, பேரூர் செயலாளர் குருசாமி, ரூபி பாலசுப்ரமணியன், மாரிமுத்து மற்றும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், வருவாய் துறையினர், நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சங்கரன்கோ வில் தாசில்தார் பாபு நன்றி கூறினார்.

    • சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
    • கட்டளை குடியிருப்பு-பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவின் ஆய்வுக்கூட்டம் குழுவின் தலைவரும், அரசு கொறடாவுமான கோவி செழியன் தலைமையில் நடந்தது.

    சட்டமன்ற உறுப்பி னர்கள், கடலூர் அய்யப்பன், சூலூர் கந்தசாமி, சேந்தமங்கலம் பொன்னுசாமி, விருத்தாச்சலம் ராதாகிருஷ்ணன், வாசு தேவநல்லூர் சதன்திரு மலைக்குமார், தென்காசி பழனிநாடார் மற்றும் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தொடர்ந்து சட்டமன்ற பேரவை மனுக்கள் குழுவினர், கோரிக்கை மனுக்கள் குறித்து கட்டளை குடியிருப்பு, பூலாங்குடியிருப்பு சாலை, இலத்தூர், நயினாரகரம் அப்துல்கலாம் தெரு, சங்குபுரம் பகுதி, சாம்பவர் வடகரை பேரூராட்சி வித்தன்கோட்டை கிராமம், தென்காசி நகரத்தின் மையப்பகுதியிலுள்ள சீவலப்பேரி குளம் உள்ளிட்ட இடங்களில் கள ஆய்வு மேற்கொண்டனர்.

    மேலும், செங்கோட்டை என்.எச். சாலையில் இருந்து கட்டளை குடியிருப்பு-பூலாங்குடியிருப்பு சாலையை சீரமைக்கும் பணிகள் குறித்து நேரடியாக ஆய்வு செய்தனர்.

    அப்போது செங்கோட்டை நகராட்சி மூலம் சாலை அமைப்ப தற்கான நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும் என குழுவினர் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் டி.ஆர்.ஓ. பத்மாவதி, மாவட்ட வன அலுவலர் முருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொறுப்பு) ஷேக், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் அழகர்சாமி, இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) பிரேமலதா, தென்காசி நகர்மன்ற தலைவர் சாதிர் , துணைத் தலைவர் சுப்பையா, சாம்பவர்வடகரை பேரூராட்சி தலைவர் சீதாலட்சுமி முத்து, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
    • நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    தீபாவளியை முன்னிட்டு சுரண்டை நகராட்சி பணி யாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். பொறியாளர் முகைதீன், மேலாளர் வெங்கட சுப்பிரமணியன், கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியா ளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன், வைகை கணேசன், அமுதா சந்திரன்,ஜேம்ஸ்,செல்வி, கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சங்கரநயினார், சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், முத்துக்குமார், ஜோதிடர் தங்க இசக்கி, மோகன், ராஜன், ரஹீம், பவுல், கஸ்பா செல்வம் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
    • நிகழ்ச்சியில ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரி புதிய கட்டிட பணிகள் முடிவுற்று தற்போது திறக்கப்படும் சூழ்நிலையில் உள்ளது.

    மின்மாற்றி

    இந்நிலையில் புதிய கட்டிடத்திற்கு தேவைப்படும் மின்சாரத்திற்கான மின்மாற்றி உடனடியாக அமைக்க வேண்டும் என கல்லூரி நிர்வாகம் சார்பில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்த ராஜா எம்.எல்.ஏ. புதிய மின்மாற்றி அமைக்க ஏற்பாடு செய்தார். இந்நிலையில் இந்த மின் மாற்றி கல்லூரியின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    சங்கரன்கோவில் மின்சார வாரிய செயற் பொறியாளர் பாலசுப்பிர மணியன் தலைமை தாங்கினார்.. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் விக்டோரியா தங்கம், சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலா சங்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் வடக்கு தி.மு.க. மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு இந்த மின் மாற்றியை கல்லூரி பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    இதில் மின்வாரிய இளநிலை செயற்பொறி யாளர் கணேஷ் ராம கிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ரவி ராமதாஸ், முஜ்பின் ரகுமான், கல்லூரி பேராசிரியர்கள் வேணு கோபால், பாலமுருகன், தி.மு.க. மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் உதய குமார், மின்வாரிய தொ.மு.ச. திட்டச் செய லாளர் மகாராஜன், அரசு ஒப்பந்ததாரர் ஜலால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • நேர்காணலுக்கு 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொண்டனர்.
    • நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    திருவட்டார் :

    கன்னியாகுமரி மேற்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர், துணை அமைப்பாளர்க ளுக்கான நேர்காணல் சுவாமியார்மடத்தில் நடைபெற்றது. குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை அமைப்பாளர்கள் லிஜிஷ் ஜீவன், ஜெயசந்திர பூபதி, ஜெபர்சன், பைஜூ, ஆல்பின் பினோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நேர்காணலுக்கு 400-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை சீருடையில் கலந்துகொண்டனர். இவர்களிடம் இளைஞரணி மாநில துணை செயலாளர்கள் இன்பா ரகு, ஈரோடு பிரகாஷ், அப்துல் மாலிக், கஜேந்திரபிரபு, சீனிவாசன், பிரதீப்ராஜா, ஆனந்தகுமார், அடங்கிய குழுவினர் நேர்காணல் நடத்தினர். நிகழ்ச்சியை அமைச்சர் மனோதங்கராஜ் தொடங்கி வைத்தார்.

    • சிவகிரியில் 24 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல் முகாம் நடைபெற்றது.
    • ராஜா எம்.எல்.ஏ., சீனிவாசன், டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் முகாமினை பார்வையிட்டனர்.

    சிவகிரி:

    சிவகிரியில் 24 வாக்குச் சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், இரட்டை பதிவுகள் நீக்குதல், பெயர் திருத்தம் முகாம் நடைபெற்றது. தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன், சிவகிரி பேரூர் தி.மு.க. செயலாளர் டாக்டர் செண்பகவிநாயகம் ஆகியோர் பார்வையிட்டனர். அப்போது முனியாண்டி, கார்த்திக், நல்லசிவம், 24 பூத் முகவர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • திருப்புவனத்தில் அ.தி.மு.க. பொதுக்கூட்டம் நடந்தது.
    • தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது என செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் சோணை ரவி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ., கொள்ளை பரப்பு துணை செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். செந்தில்நாதன் எம்.எல்.ஏ. பேசுகையில், அ.தி.மு.க. என்ற பேரியக்கம் யாரையும் நம்பி இல்லை. தொண்டர்களை நம்பி தான் உள்ளது. உங்கள் விருப்பப்படி தான் எடப்பாடி பழனிசாமி முடிவெடுத்து வருகிறார். இன்றைய தி.மு.க. ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. வெளி மாநில தொழிலா ளர்கள் போலீசாரை தாக்கு கின்றனர். சட்டம், ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என்றார்.

    கூட்டத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகராஜன், குணசேகரன், மாநில எம்.ஜி.ஆர். இளைஞரணி துணை செயலாளர் கருணாகரன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், கோபி, சிவசிவஸிதர், ஜெகதீஸ்வரன், நகர செயலாளர்கள் நாகரத்தினம், நாகூர்மீரா, கூட்டுறவு சங்க தலைவர் புவனேந்திரன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைரணி துணை செயலாளர் மணிமாறன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராஜாங்கம், ஒன்றிய மாணவரணி செயலாளர் சேதுபதி, தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் மருது பாண்டியன், வழக்கறிஞர் மதிவாணன், மாவட்ட இலக்கிய அணி துணைச் செய லாளர், பாலசுப்பிர மணியன் ராமச்சந்திரன், தயாளன், நகர, ஒன்றிய, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கலந்து கொண்ட பெண்க ளுக்கு சேலை வழங்கப் பட்டது.

    • தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    சிவகிரி அருகே தென்மலையில் முதல்-அமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.43.98 லட்சம் மதிப்பீட்டில் ஏ.சுப்ரமணியாபுரம் முதல் தென்மலை காலனி வரை புதிய தார்சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை மற்றும் திட்ட தொடக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு வாசுதேவநல்லூர் யூனியன் சேர்மனும், வாசு வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன் முத்தையாபாண்டியன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் மனோகரன், தென்மலை ஊராட்சி மன்ற தலைவர் மீனலதா முத்தரசு பாண்டியன், ஒன்றிய துணைச்செயலாளர் குமார், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் தேவராணி, ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளை செயலாளர்கள் குருசாமி, ராஜகோபால், கிரகதுரை, குருசாமி, கருப்பையா, உதவி பொறியாளர் மார்கோனி, அரசு ஒப்பந்ததாரர் கதிர், மல்லீஸ்வரன், உள்ளார் மணிகண்டன், விக்கி மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது
    • ஒன்றிய செயலாளர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    மார்த்தாண்டம், நவ.4-

    கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கருங்கல் பாலூரில் உள்ள அமைச்சர் மனோ தங்கராஜ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் பாலூர் தேவா தலைமை தாங்கினார். துணை செயலாளர் துரைராஜ், பொருளாளர் தங்கதுரை, மத்திக்கோடு ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் ஜெனோ, வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ஜெப ஜான், பேரூர் செயலாளர்கள் சத்யராஜ், எஸ்.எம்.கான், மனோஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கோபால் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

    கூட்டத்தில் கட்சி வளர்ச்சி குறித்தும் நடைபெற இருக்கின்ற முகாம்கள், வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. அனைத்து பூத் முகவர்களும் தங்களுடைய பூத்களில் சென்று பணி செய்வதென்றும், நலிவடைந்த முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கிய உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

    • மருத்துவமனையில் மின்சாரம் தடை பட்டால் இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் இருந்தது.
    • மருத்துவமனைக்கு இதற்கு முன்பு ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    மார்த்தாண்டம் :

    கீழ்குளம் பேரூராட்சிக்கு உட்பட்ட செந்தரை பகுதியில் கீழ்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினசரி ஏராளமானோர் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். புற நோயாளிகளாக பலரும் மருத்துவம் பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் மின்சாரம் தடை பட்டால் இன்வெர்ட்டர் வசதி இல்லாமல் இருந்தது.

    இதனால் மருத்துவரின் வேண்டுகோளை ஏற்று தன்னார்வலர்கள் மூலமாக கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு இன்வெர்ட்டர் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கோபால், பேரூர் செயலாளர் எஸ்.எம்.கான், கவுன்சிலர்கள் கிருஷ்ணன், அல்போன்சாள், மருத்துவர் ஆனி ஜனட் மேரி, சுகாதார ஆய்வாளர் ஜோஸ், செல்வராஜ், சுரேஷ்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த மருத்துவமனைக்கு இதற்கு முன்பு ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. கிள்ளியூர் தெற்கு ஒன்றிய தி.மு.க. இது போன்ற காரியங்களை செய்து வருவதை மக்கள் மிகவும் பாராட்டினார்கள்.

    • தேவர் சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்தனர்.

    சிவகிரி:

    சிவகிரி மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைகளுக்கு அனைத்து கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமையில், தி.மு.க.வினர் தேவர் உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சிவகிரி பேரூர் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், வாசுதேவநல்லூர் பேரூராட்சி தலைவர் லாவண்யா ராமேஸ்வரன், புளியங்குடி நகர செயலாளர் அந்தோணி சாமி, மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட வக்கீல் அணி செயலாளர் மருதப்பன், மாவட்ட மருத்துவர் அணி மணிகண்டன், நல்லசிவம், கார்த்திக், வீரமணி, தங்கராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவர் மருது பாண்டியன், துணை செயலாளர் முனியாண்டி, முத்தையா, வீரமணி, வார்டு கவுன்சிலர்கள் ரத்தினராஜ், முத்துலட்சுமி உள்பட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பட்டியலின பாதுகாப்பு உரிமை கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கூட்டமைப்பு ஊர்க்காவலன், தியாகி இம்மானுவேல் பேரவை பொதுச் செயலாளர் வேல்முருகன், ஐந்திணை மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், தமிழக மக்கள் கட்சி மாநில செயலாளர் தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி பட்டியலின மக்கள் தொகைக்கு ஏற்பட்ட இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு, முன்னாள் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் துரை.ஜெயச்சந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுகந்தி, அகில இந்திய செயலாளர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் ராமகுரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்காசி மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, பட்டியல் இன உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்ணன் ஆகியோர் பங்கேற்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேசினர். இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அசோக்ராஜ் வரவேற்று பேசினார். நடராஜன் நன்றி கூறினார்.

    ×