search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாதி வாரி கணக்கெடுப்பு"

    • கருத்தரங்கில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    • நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்கம் சார்பில் பட்டியலின பாதுகாப்பு உரிமை கருத்தரங்கம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.முன்னாள் எம்.எல்.ஏ. கிருஷ்ணன் தலைமை தாங்கினார். தேவேந்திரகுல வேளாளர் சமுதாய கூட்டமைப்பு ஊர்க்காவலன், தியாகி இம்மானுவேல் பேரவை பொதுச் செயலாளர் வேல்முருகன், ஐந்திணை மக்கள் கட்சி ஒருங்கிணைப்பாளர் தேவதாஸ், தமிழக மக்கள் கட்சி மாநில செயலாளர் தனராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கருத்தரங்கில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி பட்டியலின மக்கள் தொகைக்கு ஏற்பட்ட இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. தங்கவேலு, முன்னாள் மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் துரை.ஜெயச்சந்திரன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச் செயலாளர் சாமுவேல் ராஜ், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சுகந்தி, அகில இந்திய செயலாளர் நெல்லை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்னாள் முதல்வர் ராமகுரு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தென்காசி மாவட்ட செயலர் கிருஷ்ணமூர்த்தி, பட்டியல் இன உரிமை பாதுகாப்பு இயக்கம் கண்ணன் ஆகியோர் பங்கேற்று இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி பேசினர். இதில் தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி, அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டியலின உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் அசோக்ராஜ் வரவேற்று பேசினார். நடராஜன் நன்றி கூறினார்.

    • வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்.
    • சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும்.

    சென்னை:

    இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்டி, வளர்ச்சியின் பலன்களை மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினருக்கு கொண்டு செல்வதற்கும், வலிமையான, அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும் ஏதுவாக, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்புடன், விரிவானதொரு சாதிவாரிக் கணக்கெடுப்பை இணைத்து நடத்துவதற்கான ஏற்பாடுகளை ஒன்றிய அரசு உடனடியாகத் தொடங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    2021-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறாத நிலையில், வரவிருக்கக்கூடிய தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பில், சாதிவாரியான கணக்கெடுப்பினை இணைத்து நடத்திட வேண்டும்.

    மாநில அளவில் இதற்கான நல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தாலும், இந்தியாவின் சட்டப்பூர்வ மக்கள்தொகை கணக்கெடுப்பு, முக்கியமான சாதி தொடர்பான தரவு உள்ளீடுகளுடன் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, சமூக நீதி, சமத்துவம் போன்றவற்றை நிலைநாட்டிட இயலும். சமமான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை உறுதி செய்திட இயலும்.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

    • சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால்தான் சரியான இட ஒதுக்கீடு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் பேட்டியளித்தார்.
    • பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இந்தியா கூட்டணியை பலவீனப் படுத்த நினைக்கிறார்.

    சிவகாசி

    விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறிய தாவது:-

    நாட்டில் அனைத்து மாநிலங்களிலும் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலில் குரல் கொடுத்தது காங்கிரஸ் கட்சி தான். சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் தான் சரியான இட ஒதுக்கீடு வழங்க முடியும். தமிழகத்தில் உள்ள கோவில் சொத்துக்களை அரசு கொள்ளையடித்து வருவதாக பிரதமர் மோடி பொய்யான தகவல்களை கூறி வருகிறார்.

    ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கோவில்கள் அரசின் கட்டுப் பாட்டில் தான் இருந்தன. இந்திய வரலாறு குறித்து மோடிக்கு சரியாக தெரியாது. தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    பிரதமர் மோடி தோல்வி பயத்தில் இந்தியா கூட்டணியை பலவீனப் படுத்த நினைக்கிறார். பட்டாசு பிரச்சினை தொடர்பாக விரைவில் முதல்-அமைச்சரை சந்தித்து பேச உள்ளேன். தமிழகம், பாண்டிச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தேர்தல் பணியை காங்கிரஸ் கட்சி தொடங்கி விட்டது. விருது நகர், கன்னியாகுமரி தொகு தியில் காங்கிரஸ் எம்.பி.க்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். எனவே மீண்டும் அந்த தொகுதி களை ஒதுக்குமாறு வலியு றுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பீகார் மாநிலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது.
    • மாநில மக்கள் தொகை மட்டுமல்லாது சாதிவாரி பொருளாதார நிலை குறித்தும் அறிந்து கொள்ள முடியும்.

    பீகார் மாநிலத்தில் சாதி வாரி மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. இந்த பணி முதல் கட்டமாக இன்று முதல் வருகிற 21-ந்தேதி வரையும். 2-ம் கட்ட பணி ஏப்ரல் 1-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையிலும் நடைபெற உள்ளது. இந்த பணியில் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இது குறித்து பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் கூறியதாவது:-

    இந்த கணக்கெடுப்பு மூலம் மாநில மக்கள் தொகை மட்டுமல்லாது சாதிவாரி பொருளாதார நிலை குறித்தும் அறிந்து கொள்ள முடியும். பிற்பட்டவர்களை அறிந்து அவர்களை மேம்படுத்த என்ன செய்ய வேண்டும் என்ற தெளிவு கிடைக்கும். அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றம் அடைய செய்யும் நோக்கத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே இறுதியில் இந்த பணி இறுதி கட்டத்தை அடையும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×