தீபாவளியை முன்னிட்டு சுரண்டை நகராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள்

ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தீபாவளியை முன்னிட்டு சுரண்டை நகராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள்
Published on

சுரண்டை:

தீபாவளியை முன்னிட்டு சுரண்டை நகராட்சி பணி யாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் விழா நடைபெற்றது. சேர்மன் வள்ளி முருகன் தலைமை தாங்கினார். பொறியாளர் முகைதீன், மேலாளர் வெங்கட சுப்பிரமணியன், கணக்காளர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் தனது சொந்த செலவில் நகராட்சியில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் துப்புரவு பணியா ளர்களுக்கு புத்தாடைகள் வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் பரமசிவன், வைகை கணேசன், அமுதா சந்திரன்,ஜேம்ஸ்,செல்வி, கூட்டுறவு சங்க துணை தலைவர் கணேசன், சங்கரநயினார், சசிகுமார், கோமதிநாயகம், டான் கணேசன், முத்துக்குமார், ஜோதிடர் தங்க இசக்கி, மோகன், ராஜன், ரஹீம், பவுல், கஸ்பா செல்வம் மற்றும் ஏராளமான தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com