என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தி திணிப்பு"

    • பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
    • தமிழக மக்கள் எல்லா மொழிகளும் அறிய வேண்டும்.

    திருப்பத்தூர் மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர்," பாஜக என்றுமே இந்தியைத் திணித்தது இல்லை. தமிழக மக்கள் எல்லா மொழிகளும் அறிய வேண்டும் என்பது பாஜகவின் விருப்பம்" என்றார்.

    • நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது.
    • தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொழில் நகரமாகும். பட்டாசு, தீப்பெட்டி, அச்சு தொழில்கள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது. எனவே ஏராளமானோர் தினமும் சிவகாசிக்கு வந்து செல்கின்றனர்.

    இந்தியா முழுவதும் இருந்து வர்த்தகர்களும், தொழிலாளர்களும் சிவகாசிக்கு வந்து செல்லும் நிலையில் இங்குள்ள ரெயில் நிலையம் போதிய வசதிகள் இன்றி இருக்கிறது.

    ரெயில் நிலையத்தை தரம் உயர்த்த மாணிக்கம்தாகூர் எம்.பி. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வருகிறார். சில வாரங்களாக ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது.

    இதில் நடைமேடையில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் தமிழை விட இந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டு இருந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தமிழுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    இதற்கு, தி.மு.க. துணை பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நோய்த்தொற்றைப் போல ஊரெங்கும் பரவிடும் இந்த இந்தித் திணிப்புக் கிருமியைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.

    சென்னை பூங்கா ரெயில் நிலையத்தைத் தொடர்ந்து தற்போது சிவகாசியிலும் இந்தியை முதன்மைப்படுத்தி பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார். 

    • நம் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் 'மொழிப்போர் தியாகிகள் நாள்' இன்று.
    • மொழி திணிப்பு எந்தவகையில் வந்தாலும் அதனை சமரசமின்றி எதிர்த்து போராடுவோம்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசார மேலாண்மைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதவது:-

    இந்தி மொழி திணிப்பை எதிர்த்து, இறுதி மூச்சு வரை போராடி உயிர்நீத்த நம் மொழிப்போர் தியாகிகளை நினைவு கூறும் 'மொழிப்போர் தியாகிகள் நாள்' இன்று. தமிழ் மொழியின் சிறப்பையும் தமிழ்நாட்டின் தனித்துவ இருமொழிக் கொள்கையையும் ஒருபோதும் கைவிட மாட்டோம். மொழி திணிப்பு எந்தவகையில் வந்தாலும் அதனை சமரசமின்றி எதிர்த்து போராடுவோம் என்று இந்நாளில் உறுதியேற்போம்.

    மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்! வீரவணக்கம்!!

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி.
    • ஜெய் மராட்டியத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

    30 ஆண்டுகளாக மும்பை மாநகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி வந்த தாக்கரே குடும்பத்திடம் இருந்து பாஜக அந்த மாநகராட்சியை கைப்பற்றியுள்ளது.

    நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 227 வார்டுகளில் பாஜக-89, சிவசேனா(ஏக்நாத் ஷிண்டே)-29 இடங்களில் வெற்றி பெற்றன. உத்தவ் தாக்கரே சிவசேனாவுக்கு 65 இடங்களும், அதன் கூட்டணியில் உள்ள ராஜ் தாக்கரே வுக்கு 3 இடங்களும் கிடைத்தன.

    இந்த நிலையில் சிவ சேனாவை பாஜகவால் அழிக்க முடியாது என்று உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    பால் தாக்கரே நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடந்த நிகழ்ச்சியில் அவர் இது தொடர்பாக பேசியதாவது:-

    சிவசேனா (உத்தவ் தாக்கரே) கட்சி மட்டுமல்ல. அது ஒரு சித்தாந்தம் நிறைந்தது. அதை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று பாஜக. நினைத்தால் அது தவறு. எங்களை பாஜகவால் அழிக்க முடியாது. சிவசேனா இல்லை என்றால் பாஜக ஒருபோதும் மும்பை மாநகராட்சிையயோ அல்லது மாநிலத்தையோ கைப்பற்றி இருக்க முடியாது.

    உள்ளாட்சி தேர்தலில் முதல் முறையாக பணபலம் பயன்படுத்தப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் குறைபாடு உள்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர்க்கட்சிகள் சந்தித்தன. மும்பை மாநகராட்சி தேர்தல் முடிவுகள் நாங்கள் விரும்பியபடி இல்லாவிட்டாலும் வலுவான எதிர்க்கட்சியாக உள்ளோம்.

    சிவசேனா அதிகாரம் பெறுவதற்காக தொடங்கப் படவில்லை. மராட்டிய மக்களின் உரிமைக்காக போராடுவதற்காகவே தொடங்கப்பட்டது.

    மராட்டிய மாநிலத்தில் மராத்தி அல்லாத கலாச்சாரத்தை திணிக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. 1-ம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கும் முடிவு (பின்னர் திரும்ப பெறப்பட்டது) இந்த சதியின் ஒரு பகுதி.

    சிவசேனா தொண்டர்களால் பொதுவாக பயன்படுத்தப்படும் ஜெய் மராட்டியம் என்ற முழக்கத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அனைவரும் அதை ஒரு வாழ்த்தாக பயன்படுத்த வேண்டும். இவ்வாறு உத்தவ் தாக்கரே பேசினார். 

    • மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் கதை முடிந்தது
    • மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்.

    மும்பை மாநகராட்சித் தேர்தல் ஜன.15ஆம் தேதி நடைபெற உள்ளநிலையில், உத்தவ் தாக்கரேவின் சிவ சேனா மற்றும் ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனா கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    பல ஆண்டுகளாகப் பிரிந்திருந்த தாக்கரே சகோதரர்கள் மீண்டும் கூட்டணியில் இணைந்துள்ளது மகாராஷ்டிரா அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, "மகாராஷ்டிர மாநிலத்தில் இந்தியை யாரேனும் திணிக்க முயன்றால், அவர்களுக்கு உதை விழும். மொழியும், நிலமும் பறிபோய்விட்டால் மராட்டியர்களின் கதை முடிந்தது. மொழிக்காக மராட்டியர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இது மராத்தியர்களுக்கான கடைசி தேர்தல். இன்று இந்த வாய்ப்பை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் முடித்துவிடுவீர்கள். மராத்தி மற்றும் மகாராஷ்டிராவுக்காக ஒன்றுபடுங்கள் இந்தி உங்களின் சொந்த மொழி அல்ல என்பதை, உ.பி, பீகார் மாநில மக்கள் உணர வேண்டும்" என்று தெரிவித்தார்.

    • ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட வேண்டும்.
    • ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

    அகில இந்திய அளவில் நடைபெறும் ஏகலைவா பள்ளிகளில், ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணிகளுக்கான தேர்வு எழுதுவதில், தமிழ்ப் புறக்கணிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அந்த அறிக்கையில், "ஏகலைவா பள்ளிகள் என்ற பெயரில் இந்தியா முழுவதும் உள்ள மலைவாழ் மாணவர்களுக்கென ஒன்றிய அரசு நடத்தும் ஏகலைவா மாடல் ரெசிடென்சியல் ஸ்கூல் (EMRS) – பள்ளிகள் தமிழ்நாட்டில் விழுப்புரம், சேலம், ஊட்டி, திருவண்ணாமலை, வேலூர், நாமக்கல், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் சி.பி.எஸ்.இ பாடத் திட்டத்தில் செயல்படுகின்றன.

    தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளி...

    தமிழுக்கு இடமில்லை!

    கடந்த 19.09.2025 இல் மேல்நிலைப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளி ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத பணிகளுக்கான அறிவிப்பு வெளியான நிலையில், அதற்கான தேர்வுகள் 13.12.2025,14.12.2025 ஆகிய தேதிகளில் நடைபெற்றன. தேர்வில் பகுதி-6 இல் மொழிகளுக்கான பகுதியில் ஆங்கிலம், அசாமி, வங்காளம், போடோ, டோகிரி, கரோ, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், காஷ்மீரி, காசி, மலையாளம், மணிப்பூரி, மராத்தி, மிசோ, நேபாளி, ஒடிசா, சந்தலி, தெலுங்கு, உருது உள்ளிட்ட மொழிகள் இடம்பெற்றன.

    உள்ளூர் மொழிகள் காலிப் பணியிடங்களின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு, தமிழ்நாட்டு மாணவர்கள் அனைவரும் மொழிப் பட்டியலில், தமிழ் இல்லாத காரணத்தால் பகுதி-6 இல் ஆங்கிலத்தையே தேர்ந்தெடுத்து எழுத வேண்டிய இக்கட்டான சூழல் அமைந்தது. பகுதி 6-இன் 30 மதிப்பெண்களுக்கு 12 தகுதி மதிப்பெண்கள் எடுக்க வேண்டிய சூழலில், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஹிந்தியிலும், 10 கேள்விகளுக்குக் கட்டாயம் ஆங்கிலத்திலும் பதில் அளிக்க வேண்டும். அடுத்து உள்ள உள்ளூர் மொழி என்னும் பிரிவுக்கான 10 மதிப்பெண்களுக்கு என குறிக்கப்பட்டுள்ள மொழிகளில் தமிழ் இல்லாத காரணத்தால், அப் பிரிவிற்கும் ஆங்கிலத்தையே தேர்வு செய்து எழுத வேண்டிய கடுமையான நிலை தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மட்டும் நேர்ந்துள்ளது.

    40% மதிப்பெண்கள் கட்டாயமாம்!

    அனைத்திந்தியத் தேர்வுகள் எதிலும், இந்தியக் குடிமக்களாகப் பங்கேற்றுப் பணியில் தேர்வடைய எல்லோருக்கும் உரிமை உண்டு - தமிழர்களுக்கும் உண்டு. ஆனால், கட்டாயம் 40% மதிப்பெண்கள் எடுத்தால் தான், பிற கேள்விகளே திருத்தப்படும் என்று சொல்லப்படக் கூடிய கட்டாயமான மொழிப் பிரிவில் தமிழ் ஏன் இடம்பெறவில்லை?

    தமிழ்நாட்டில் ஏகலைவா பள்ளிகள் இருக்கின்றன. அதில் பணியாற்ற மாட்டார்களா? அது குறித்த விவரம் என்ன? கடந்த சில ஆண்டுகளாகத் தமிழுக்கான ஆசிரியர்களே ஒன்றிய அரசின் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் நிரப்பப்படவில்லை என்பது ஒன்றிய அரசின் வாயிலாகவே வெளிப்பட்டதே! அதே போல, ஏகலைவா பள்ளிகளில் உள்ள நிலைமை என்ன? எத்தனை இடங்கள் உள்ளன? அவற்றில் இட ஒதுக்கீட்டின் நிலை எவ்வாறு இருக்கிறது? தமிழ்நாட்டுப் பள்ளிகளில் நிரப்பப்படாத பணியிடங்கள் எவ்வளவு? போன்ற கேள்விகள் எழுகின்றன.

    இவற்றுக்கு உரிய பதில்களை ஒன்றிய அரசு தரவேண்டாமா?

    தேர்வில் உள்ளூர் மொழிகளில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதன் மூலம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளதே! இது அநீதி அல்லவா?

    ஒரே ஆண்டில் இரு காசி தமிழ்ச் சங்கமத்தின் பின்னணி!

    தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி தங்கள் பிரச்சாரத்திற்காக, காசித் தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் "சங்கிமத்"தைத் ஒரே ஆண்டில் இரண்டு முறை நடத்திய ஒன்றிய அரசு, தமிழைப் போற்றுவதாக வேடம் போடும் ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசு, தமிழுக்குத் தர வேண்டிய உரிமையை மறுப்பதேன்?

    ''தமிழுக்காகப் பேசுகிறோம், தமிழுக்காக உருகுகிறோம்'' என்றெல்லாம் நாடகமாடும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. அரசின் இரட்டை வேடத்திற்கு இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?

    தமிழுக்கு உரிய நிதியையும் ஒதுக்காமல், தமிழர்களுக்கு உரிய வேலை வாய்ப்பையும் பறிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டு, ஆர்.எஸ்.எஸ். போடும் இந்த இரட்டை வேடத்தை தமிழர்கள் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

    ஏகலைவா பள்ளிப் பணிகளுக்கான தேர்வுகளில் தமிழ் இணைக்கப்பட்டு, மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும். இந்த அநீதிக்குரிய பரிகாரம் வழங்கப்படவேண்டும். இல்லையேல், தமிழ்நாடெங்கும் கிளர்ச்சியைத் தொடங்க வேண்டி இருக்கும். நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து குரல் எழுப்பிட வேண்டும்.

    தமிழ் புறக்கணிப்பை, ஹிந்தித் திணிப்பை எந்த நிலையிலும் தமிழ்நாடு பொறுத்துக் கொள்ளாது. நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல் களத்திலும் இப்பிரச்சினை நிச்சயம் எதிரொலிக்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    • பராசக்தி டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.
    • பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி. சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 5 வெளியானது. இதுவரை இந்த டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

    ஜனவரி 10 ஆம் தேதி பராசக்தி படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

    கேரளாவில் உள்ள ஒரு கலைக்கல்லூரியில் ப்ரோமோஷன் பணிகளில் பராசக்தி படக்குழு ஈடுபட்டது. அப்போது மாணவர்களிடம் பேசிய நடிகை ஸ்ரீலீலா இங்கு எத்தனை டாக்டர் உள்ளனர் என்று கேட்டுள்ளார். கலைக்கல்லூரியில் எத்தனை டாக்டர் உள்ளனர் என்று ஸ்ரீலீலா கேட்டதால் அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது. சிவகார்த்திகேயனும் அதர்வாவும் இதனை கேட்டு விழுந்து விழுந்து சிரித்தனர்.

    • இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் பராசக்தி.

    சிவகார்த்திகேயனின் 25வது படமான இதில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இந்தி திணிப்புக்கு எதிரான மொழிப்போரை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

    இப்படத்தின் டிரெய்லர் ஜனவரி 5 வெளியானது. இதுவரை இந்த டிரெய்லர் 53 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது.

    இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா குரலில் பராசக்தியின் இடம்பெற்ற சேனைக் கூட்டம் பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    • மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி.
    • நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு.

    கோவை - மதுரை மெட்ரோ ரெயில் திட்டங்களை முடக்கி தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக்கூட்டணிக் கட்சிகளின் சார்பில் கோவையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கோவையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நடத்திய ஆர்ப்பாட்டத்தின் புகைப்படங்களை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    தமிழ்நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் தீய எண்ணமே உருவான ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகக் கோவையில் திரண்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி!

    * கோவை, மதுரை மாநகரங்களுக்கான மெட்ரோ திட்டம் நிராகரிப்பு,

    * #SIR மூலம் வாக்குரிமை பறிப்பு, #Delimitation மூலம் தமிழ்நாட்டின் தொகுதி குறைப்பு,

    * மக்களாட்சி மாண்பை மதிக்காத ஆளுநரின் அடாவடி,

    * நிதி ஒதுக்கீட்டு ஓரவஞ்சனை, உழவர்களுக்கு உதவி மறுப்பு,

    * தமிழ்மொழி மீதான தாக்குதல் & இந்தித் திணிப்பு

    * என அனைத்துக்கும் எதிராகத் #தமிழ்நாடுபோராடும்_தமிழ்நாடுவெல்லும்!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் பதிவு.
    • அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என தகவல்.

    சட்டமன்றக் கூட்டத்தொடரில் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா தாக்கல் செய்ய உள்ளதாக வதந்தி பரவுவதாக தகவல் சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    வதந்தியை பரப்பாதீர் என தமிழ்நாடு அரசின் தகவல் சரிபார்ப்பகம் எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளது.

    இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதாவை முதலமைச்சர் தாக்கல் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியானது. இது முற்றிலும் வதந்தியே.

    அப்படி எந்த ஒரு மசோதாவுக்கான முன்மொழிவும் பெறப்படவில்லை என சட்டப்பேரவை செயலர் தெரிவித்துள்ளார் என உண்மை சரிபார்ப்பகம் தெரிவித்துள்ளது.

    • நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்...
    • இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் அவர்களே இந்தியை ஏற்றுக் கொண்டால்தான் கல்வி நிதி என்று எக்காலத்திலும் மத்திய அரசு சொல்லவில்லை. புதிய கல்விக் கொள்கை என்பது தாய் மொழியை ஊக்குவிப்பது தானே தவிர இந்தி மொழியை ஊக்குவிப்பது அல்ல... நீங்கள் இந்தி மொழியை எதிர்த்து போராடுகிறேன் என்றால் இந்தி மொழியை தமிழகத்தில் திணித்த காங்கிரசோடு தான் நீங்கள் போராட வேண்டும்.

    அரசு பள்ளி மாணவர்களுக்கு இரண்டு மொழி.. ஆனால் தனியார் பள்ளிக்கு மூன்று மொழி என்று உங்களது பாரபட்சமான கல்வித் திட்டத்திற்கு எதிராக போராடுங்கள்.

    நீட்டை எதிர்த்து போராட வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை எதிர்த்து தான் போராட வேண்டும்... நீட்டை எதிர்த்து போராடுவேன் கையெழுத்து போடுவேன் என்று பொய் சொன்னது யார் என்பது மக்களுக்கு நன்றாக தெரியும்.

    இன்று இல்லாத ஒன்றை எதிர்த்து போராடுகிறேன் என்பது உங்களது திராவிட மாடல் என்கின்ற பொய் மாடல்.

    உலகத்திற்கே பொதுவான வள்ளுவர் ஆரம்ப காலத்தில் காவி உடையில் தான் இருந்தார் இறைவணக்கத்தோடு இறை உணர்வோடு இருந்த வள்ளுவரை வெள்ளுடை உடுக்க வைத்த பாவம் செய்பவர்கள் நீங்கள்... ஆக உங்களையே எதிர்த்து போராடப் போகிறீர்களா..?..

    மனித கழிவுகளை மனிதனே அள்ளும் அவலம் நாடு முழுவதும் மறைந்திருக்கின்ற நேரத்தில் உங்கள் சொந்த தொகுதியிலேயே துப்புரவு தொழிலாளர்கள் மரணித்திருக்கிறார்களே அதை எதிர்த்து போராடுங்கள்.

    வேங்கை வயலில் நலமுடன் தண்ணீர் இல்லாமல் மலமுடன் தண்ணீர் குடித்த மக்களுக்கு இன்றும் நியாயம் கிடைக்காமல் இருப்பதற்கு எதிராக உங்களுக்கு எதிராக நீங்களே போராடுங்கள்.

    கள்ளச்சாராயத்தினால் 67 உயிர்களை பலிவாங்கி.. அங்கு ஆறுதல் கூட செல்ல முடியாத உங்களது மனிதாபிமானமற்ற செயலை எதிர்த்து போராடுங்கள்.

    இன்றும் ஆணவக் கொலைகளை தடுக்க முடியாத உங்கள் அரசை எதிர்த்துப் போராடுங்கள்...

    பல்கலைக்கழகமாக இருக்கட்டும், காவலர்களிடம் இருந்து இருக்கட்டும்... பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத உங்கள் அவல நிலையை எதிர்த்து போராடுங்கள்.. திராவிட மாடல் ஆட்சியில் இன்று பள்ளி குழந்தைகளுக்கிடையே தலைவிரித்தாடும் சாதிய வேற்றுமையை எதிர்த்து போராடுங்கள்.

    ஒரு விமான சாகசத்தில் கூட பாதுகாப்பு கொடுக்க முடியாமல் ஐந்து பேரின் உயிரை காவு வாங்கிய உங்களது காவல்துறைக்கு எதிராக போராடுங்கள். ஒரு அரசியல் கட்சிக்கு சரியான பாதுகாப்பு கொடுக்காமல் 41 உயிர் பலியாக காரணமாக இருந்த உங்களது பாதுகாப்பு நடவடிக்கைக்கு எதிராக போராடுங்கள். இன்று தமிழகத்தில் வாழ்க்கையே போராட்டமாக இருக்கும் பொழுது... அதை எதிர்த்து நீங்கள் போராடினால் தான் சரியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மற்ற மொழியும் இந்தியும் இணைந்து செழிப்படையும் என்பதற்கு குஜராத்தி சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது
    • தயாநந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல் ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை உயர்த்தினர்.

    இந்தி மற்ற இந்திய மொழிகளின் எதிரி அல்ல நண்பன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

    குஜராத்தில் இந்தி திவாஸ் நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய அமித் ஷா, இந்தி மற்ற இந்திய மொழிகளில் எதிரி கிடையாது என்று நான் எப்போதும் கூறுவேன்.

    இந்தி மற்ற மொழிகளில் உற்ற நண்பன், அவற்றுக்கு இடையில் எந்த பிரச்சனையும் இருக்க இல்லை. இந்தி தேசிய ஒற்றுமையை மேம்படுத்துகிறது.

    குஜராத்தை எடுத்துக்கொண்டால் இங்கு மாநில மொழி குஜராத்தி. ஆனால் தொடக்கம் முதல் தயாநந்த சரஸ்வதி, மகாத்மா காந்தி, வல்லபாய் படேல், கேஎம் முன்ஷி ஆகியோர் இந்தியை ஏற்றுக்கொண்டு அதை ஊக்குவித்தனர். இந்தி மற்றும் குஜராத்தி இணைந்திருக்கும் குஜராத், இரு மொழிகளின் வளர்ச்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆகும்.

    இந்தி வெறும் பேச்சு மொழி அல்ல. அது அறிவியல், தொழில்நுட்பம், நீதித்துறை மற்றும் காவல்துறை தொடர்பு மொழியாகவும் இருக்க வேண்டும். இவை அனைத்தும் இந்திய மொழிகளில் செய்யப்படும்போது, பொதுமக்களுடனான தொடர்பு தானாகவே வளரும்" என்றார்." என்று தெரிவித்தார்.   

    ×