என் மலர்

  நீங்கள் தேடியது "ஆயுள் தண்டனை"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முதியவரை கொன்ற கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விருத்தாசலம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.
  • தீர்ப்பு வெளியானதை அடுத்து கனகராஜ் மற்றும் செல்வியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

  கடலுார்:

  கடலுார் மாவட்டம், கருவேப்பிலங்குறிச்சி அருகே டி. பவழங்குடி கிராமத்தை சேர்ந்தவர் தாமரைச்செல்வன், (வயது60.) இவருக்கும் அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கனகராஜ், என்பவருக்கும்வீட்டின் அருகே உள்ள மினிடேங்க் தண்ணீர் விவகாரத்தில் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வந்துள்ளது.

  கடந்த 14.3.2020 அன்று வாக்குவாதம் முற்றிய நிலையில் கனகராஜ் மற்றும் அவரது மனைவியான செல்வி, ஆகியோர் தாமரைச்செல்வன் மற்றும் அவரது மனைவி ஞானமணி மீது தாக்குதல் நடத்தினர்.

  இதில் காயமடைந்து மயங்கி விழுந்த தாமரைச்செல்வனை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் மரணம் அடைந்ததை உறுதி செய்தனர்.இது குறித்து கருவேப்பிலங்குறிச்சி போலீசார் கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி மீது வழக்கு பதிவு செய்தனர்.

  கடந்த2 ஆண்டுகளாக விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றம் நிரூபிக்கப்பட்டதால் கனகராஜ் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 15,000 விதித்து நீதிபதி பிரபா சந்திரன் தீர்ப்பளித்தார்.

  இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் விஜயகுமார் ஆஜரானார். தீர்ப்பு வெளியானதை அடுத்து கனகராஜ் மற்றும் செல்வியை போலீசார் சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சேலம் இரும்பாலை அருகே தாய் தனது 2 வயது மகளை விஷம் கொடுத்து கொன்ற வழக்கில் சேலம் கோர்ட்டில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது.
  • இதில் அந்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

  சேலம்:

  சேலம் இரும்பாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். அவரது மனைவி கோமதி (வயது 28) இவர்களுக்கு மகாலட்சுமி (3), கவுசிகா ஸ்ரீ (2) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

  இந்த நிலையில் ஆண் குழந்தைகளே இல்லை என்று சந்திரசேகர் மனைவி கோமதியிடம் அடிக்கடி தகராறு ெசய்து வந்தார்.

  அதனால் கோபித்துக்கொண்டு கோமதி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். பின்னர் குழந்தைகளுக்கு குருணை மருந்தை கொடுத்து தானும் அதனை குடித்தார். இதில் இரண்டு வயதுக் குழந்தை கௌசிகா ஸ்ரீ உயிரிழந்தார். கோமதி மற்றும் மகாலட்சுமி ஆகிய 2 பேரும் உயிர் தப்பினர்.

  இதுகுறித்து சந்திரசேகர் கொடுத்த புகாரின் பேரில் இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து கோமதியை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு சேலம் கோர்ட்டில் நடந்து வந்தது.

  வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகநாதன், குழந்தையை விஷம் கொடுத்து கொன்ற கோமதிக்கு ஆயுள் தண்டனை விதித்து இன்று பரபரப்பு தீர்ப்பளித்தார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கணவர் நடராஜன் பலமுறை கண்டித்து அஞ்சலை கேட்கவில்லை. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன் மண்வெட்டியால் தாக்கி அஞ்சலையை கொலை செய்தார்.
  • வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ், மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தர விட்டார்.

  பெரம்பலூர்:

  பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, வேப்பூர் ஒன்றியம், அத்தியூர் கிராமம் பள்ளி கூடதெருவை சேர்ந்தவர் மலையன் மகன் நடராஜன் (வயது60). இவரது மனைவி அஞ்சலை. அஞ்சாலை வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார்.

  இது குறித்து அவரது கணவர் நடராஜன் பலமுறை கண்டித்து அஞ்சலை கேட்கவில்லை. இந்நிலையில் கணவன், மனைவிக்கிடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த நடராஜன் மண்வெட்டியால் தாக்கி அஞ்சலையை கொலை செய்தார்.

  இது குறித்த புகாரின்பேரில் மங்களமேடு போலீசார் வழக்குபதிந்து நடராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் நடராஜன் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்.

  இந்த கொலை வழக்கு பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு கோர்ட்டில் தொடரப்பட்டு நடந்தது வந்தது. அரசு தரப்பில் வக்கீல் செந்தில்நாதன் ஆஜரானார்.

  நேற்று வழக்கை விசாரித்த நீதிபதி பல்கீஸ், மனைவியை வெட்டி கொலை செய்த கணவன் நடராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனை அனுபவிக்கவேண்டும் என உத்தர விட்டார். இதையடுத்து போலீசார் குற்றவாளி நடராஜனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை மீது போக்சோ சட்டம் பாய்ந்த நிலையில், ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
  மதுரை ஒத்தக்கடை பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு தனது 12 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, அந்த சிறுமியின் தந்தை கணேச மூர்த்தி கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

  இந்த வழக்கு விசாரணை மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது, மதுரை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராதிகா கணேச மூர்த்திக்கு ஆயுள்தண்டனை வழங்கி உத்தரவிட்டார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னையில் குடும்ப தகராறில் இரண்டு குழந்தைகளை கொன்ற தாய்க்கு அமர்வு நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது.
  சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த பெண் மம்தா. தனது கணவன் மது அருந்தி விட்டு தகராறு செய்ததால் மனமுடைந்து தனது இரண்டு குழந்தைகளையும் கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலைக்கு முயன்றார். பின்னர் மம்தா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

  இரண்டு குழந்தைகளை கொலை செய்ததாக மம்தா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சென்னை அமர்வு நீதிமன்றம் மம்தாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மனைவியை கொன்ற வழக்கில் பிரபல டிவி தொகுப்பார் சுஹைப் இல்யாசிக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த ஆயுள் தண்டனையை டெல்லி ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. #SuhaibIlyasi
  டெல்லி:

  ‘இந்தியாவின் மோஸ்ட் வாண்டட்’ என்ற பெயரில் 1998-ம் ஆண்டுகளில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மிகுந்த பிரபலமடைந்த இந்த நிகழ்ச்சியை இயக்கி தயாரித்தவர் சுஹைப் இல்யாசி. 2000-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் கிழக்கு டெல்லியில் உள்ள சுஹைப் இல்யாசியின் வீட்டில் அவரது மனைவி அஞ்சு இல்யாசி கத்தி குத்து காயங்களுடன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

  தனக்கும் தன் மனைவிக்கு சண்டை ஏற்பட்டது, அதனால், அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று சுஹைப் போலீசில் கூறியிருந்தார். ஆனால், தனது மகளை சுஹைப்தான் கொன்று விட்டதாக அஞ்சுவின் தாயார் புகாரளித்தார். இதனையடுத்து, சுஹைப்பை கைது செய்த போலீசார் அவரை சிறையிலடைத்தனர்.

  17 ஆண்டுகளாக நடந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணை நீதிமன்றம் சுஹைப்புக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் டெல்லி ஐகோர்ட்டில் முறையிட்டிருந்தார். இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய டெல்லி ஐகோர்ட் கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து அவரை வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீகார் மாநிலத்தில் உள்ள புத்த கயாவில் கடந்த 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட 5 பயங்கரவாதிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  பாட்னா:

  உலகப் புகழ்பெற்ற புத்த கயா பகுதியில் கடந்த 2013-ஆம் ஆண்டு அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்றாலும், பலர் காயமடைந்தனர். புத்த மதத் துறவிகள், வெளிநாட்டுப் பயணிகள் என பலர் அவர்களில் அடங்குவர்.

  நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவத்தில் இந்தியன் முஜாஹிதீன் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்டது. அந்த அமைப்பின் 5 பேர் கைது செய்து விசாரிக்கப்பட்டனர். விசாரணையில் அவர்கள்தான் குண்டு வெடிப்பை நிகழ்த்தியவர்கள் என்பது உறுதியானது.

  இதுதொடர்பான வழக்கை விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) சிறப்பு நீதிமன்றம், பயங்கரவாதிகள் 5 பேரையும் குற்றவாளிகள் என கடந்த வாரம் அறிவித்தது. இதையடுத்து, அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நடிகை மீனாட்சி தபா கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மும்பை செசன்ஸ் கோர்ட்டு அதிரடி தீர்ப்பு கூறியது. #MeenakshiThapa
  மும்பை:

  உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனை சேர்ந்தவர் மீனாட்சி தபா(வயது27). இந்தி திரைப்படங்களில் நடித்தார். மேலும் மாடலிங் துறையிலும் பணியாற்றி வந்தார். மும்பையில் படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது இவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த அமித் குமார்(36) மற்றும் அவரது காதலி பிரீத்தி சுரின்(26) ஆகியோருடன் நட்பு ஏற்பட்டது.

  இவர்கள் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு மற்றொரு சினிமா படத்தில் நடிக்க வாய்ப்பு ஏற்படுத்தி தருவதாக கூறி மீனாட்சி தபாவை அலகாபாத்துக்கு கடத்திச்சென்றனர். இதைத்தொடர்ந்து அவரது பெற்றோரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். ஆனால் அவரது பெற்றோர் வெறும் ரூ.60 ஆயிரத்தை மட்டும் கடத்தல்காரர்கள் கூறிய வங்கிக்கணக்கில் செலுத்தியதாக கூறப்படுகிறது.

  இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் மீனாட்சி தபாவை கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு தப்பிச்சென்றனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

  பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை விசாரித்த மும்பை கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகிய இருவரையும் குற்றவாளிகள் என அறிவித்து கடந்த புதன்கிழமை தீர்ப்பளித்தது.

  இந்த நிலையில் தண்டனை மீதான வாதம் நடந்து வந்தது. இதையடுத்து நேற்று கூடுதல் செசன்ஸ் கோர்ட்டு நீதிபதி ஷெட்டே தண்டனை விவரத்தை அறிவித்தார். அப்போது மீனாட்சி தபா கொலை வழக்கு குற்றவாளிகள் அமித் குமார் மற்றும் பிரீத்தி சுரின் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார்.  #MeenakshiThapa
  ×