என் மலர்tooltip icon

    T20 உலகக் கோப்பை திருவிழா 2024

    • கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது.
    • வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 29-ந் தேதி நடந்தது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது.

    இந்த நிலையில் அட் லாண்டிக் பெருங்கடலில் உருவான 'பெரில்' புயல் தீவிரமடைந்தது. 'பிரிவு-5' வகையை சேர்ந்த புயல் என்பதால், மணிக்கு 260 கி.மீ., வேகத்தில் சூறாவளி காற்று வீசுகிறது. உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் தீவிர புயல் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், பிரிட்ஜ்டவுன் சர்வதேச விமான நிலையம் மூடப்பட்டது.

     

    பலத்த மழை பெய்து வருவதால், சாலையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த புயலால் இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. வீரர்கள் பிரிட்ஜ்டவுனில் உள்ள ஹில்டன் ஓட்டலில் முடங்கி உள்ளனர். இந்திய வீரர்கள், அவரது குடும்பத்தினர், பயிற்சி குழுவினர், அதிகாரிகள் என 70 பேர் அங்கு சிக்கி தவித்தனர்  இந்திய வீரர்கள் ஹில்டன் ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டனர். பெரில் புயல் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு பார்படாஸ் கரையை கடந்தது.

     

     

    இதனால் கடந்த 2 நாட்களாக மூடப்பட்டிருந்த விமான நிலையம் இன்று மாலை மீண்டும் திறக்கப்பட உள்ளது. எனவே இன்று மாலை 6 மணிக்கு பார்படாஸிலிருந்து விமானம் மூலம் இந்திய அணி கிளம்ப உள்ளது.

    இன்று [ஜூன் 2] ஒரு இரவு பயணத்தின்பின் நாளை [ஜூன் 3] காலை 7.45 மணியளவில் இந்திய அணி டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்துக்கு வந்து இறங்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.

    வெற்றிக்கோப்பையுடன் நாடு திரும்பும் வீரர்களை வரவேற்க நாடே ஆவலாக உள்ளது. எனவே டெல்லி விமான நிலையத்தில் நாளை கொண்டாட்டத்துக்கு பஞ்சம் இருக்காது என்று தெரிகிறது. 

    • சச்சினின் தீவிர ரசிகரான சுதிர்குமார் உலகக் கோப்பையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
    • இது தொடர்பான புகைப்படம் வைரலாகி வருகிறது.

    உடல் முழுவதும் இந்திய அணியில் மூவர்ண கொடியின் பெயிண்டை அடித்து கொண்டு நெஞ்சில் சச்சின் டெண்டுல்கர் என்று எழுதி கொண்டு, தேசிய கொடியை எந்தி செல்லும் சச்சினின் அதி தீவிர ரசிகர் சுதிர் குமார்.

    இவர் தொடக்கத்தில் நண்பர்களிடம் கடனை வாங்கியாவது கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றுவிடுவார். சில சமயம், காசு இல்லை என்றால் நடந்தோ, இல்லை யாரிடமாவது லிப்ட் கேட்டோ, மைதானத்துக்கு சென்று விடுவார்.

    தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் ஒரே மாதிரி தோற்றத்துடன் வந்ததை அடுத்து கிரிக்கெட் வீரர்களிடமும், ரசிகர்களிடமும் பிரபலம் ஆனார். மைதானத்தில் இருக்கும் ரசிகர்கள், இவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்றால் காசு கொடுக்க வேண்டும். இப்படி தான் வாழ்க்கையை ஓட்டினார்.

    சுதிர் குமார் சௌத்ரியின் அன்பை பார்த்த சச்சின் டெண்டுல்கரே, அவருக்கான டிக்கெட் செலவு மற்றும் போக்குவரத்து செலவை ஏற்று கொண்டார். பின்னர் அவரின் குடும்பத்துக்கும் உதவித் தொகையும் சச்சின் வழங்குகிறார். சச்சின் ஓய்வு பெற்ற பிறகும் அணி நிர்வாகமே இவருக்கான டிக்கெட்டை வழங்கி வருகிறது. வீரர்கள் உடை மாற்றும் அறைக்கு சென்று அங்குள்ள வீரர்களிடம் பேசும் அளவுக்கு இந்திய அணியில் செல்லப் பிள்ளையாக மாறினார் சுதிர்குமார் சௌத்ரி.

     

    இந்த நிலையில் சுதிர்குமார் நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியை பார்க்க சென்றார். இந்திய அணி வெற்றி பெற்ற பிறகு ரோகித் சர்மா அங்குள்ள கடற்கரையில் போட்டோஷீட் நடத்தினார். அப்போது உலகக் கோப்பையுடன் சுதிர்குமார் புகைப்படம் எடுத்துக் கொண்டார். அவருடன் ரோகித் சர்மாவும் இருந்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் தோல்வியால் மனமுடைந்து வெளியேறினர்
    • தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்தியர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

    டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி நேற்று பார்படாசில் நடைபெற்றது. இதில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா மோதின. இறுதிப்போட்டிவரை எந்த மேட்சிலும் இரண்டு அணிகளும் தோல்வியடையாமல் முன்னேறி வந்த நிலையில் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா டி20 உலக சாம்பியன் ஆனது.

    இந்தியர்கள் என்ற அடிப்படையில் இந்த வெற்றியை ஒரு பக்கத்தில் இருந்தே பெரும்பாலானோர் பார்க்கும் நிலையில் வெற்றிக்காக கடுமையாக போராடிய தென் ஆப்பிரிக்க அணி தோல்வியால் மனமுடைந்துள்ளதை பற்றி சிலர் மட்டுமே எண்ணியிருக்கக் கூடும்.

     

    ஆனால் தற்போது வெளியாகியுள்ள வீடியோ ஒன்று இந்தியர்களின் நல்லுள்ளத்தை எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. தென் ஆப்பிரிக்க வீரர்களும், அணியின் பணியாளர்களும் மைதானத்தைவிட்டு  மிகவும் வருத்தத்துடன் வெளியேறியபோது அங்கிருந்த இந்திய ரசிகர்கள் தென் ஆபிரிக்க வீரர்களை நோக்கி, நாங்கள் உங்களை நேசிக்கிறோம் [We love you] என்று கோரஸ் செய்து  கைத்தட்டி அவர்களை உற்சாகப்படுத்துவது வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை அதிக அளவில் பகிர்ந்து வரும் நெட்டிஸன்கள், இந்தியர்களின் நல்லியல்பை எண்ணி பெருமைப்பட்டு வருகின்றனர். 

    • நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை.
    • தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 17 வருடங்களுக்கு பிறகு ஐசிசி உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியுடன் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ரோகித் சர்மா அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ரோகித் சர்மா செய்யும் ஒவ்வொரு செயல்களும் வைரலாகத் தொடங்கியுள்ளது.

    பிரபல கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் ரோகித் சர்மா உலகக் கோப்பையை வாஙகியது, மைதானத்தில் உள்ள மண்ணை எடுத்து சாப்பிட்டது என உற்சாகத்தில் ரோகித் செய்து வரும் செயல்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

     

    அந்த வகையில் தனது எக்ஸ் பக்கத்தில் மைதானத்தில் கோப்பையுடன் படுத்திருக்கும் தனது புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள ரோகித் சர்மா, தற்போது நான் உள்ள மனநிலையை சிறந்த முறையில் இந்த புகைப்படம் எடுத்துக்காட்டுகிறது. நிறைய வார்த்தைகள் இருக்கின்றன, ஆனால் நேற்றைய தருணத்தை விளக்கும் சரியான வார்த்தைகளை என்னால் தேர்வு செய்ய முடியவில்லை. விரைவில் உங்களுடன் அதை பகிர்வேன்.

    ஆனால் இப்போதைக்கு என்னுடையதும் பில்லியன் கணக்கான மக்களுடையதுமான கனவு நினைவான இன்ப அதிர்ச்சியை கிரகிக்க முயற்சித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும் இன்று அதிகாலை தனது அறையில் உலகக்கோப்பைக்கு பக்கத்தில் தூங்கி கண்விழிக்கும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். 

     

    • மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று சர்ச்சை எழுந்துள்ளது
    • டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகிறது

    டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றியை பதிவு செய்தது. டி20 தொடர் அறிமுகமான 2007 ஆம் ஆண்டு முதல் தொடரில் டோனி தலைமையில் இந்திய அணி அதன்பின் நடந்த தொடர்களில் வெற்றிபெறவில்லை. தற்போது 17 வருடங்கள் களைத்து 2 வது முறையாக இந்தியா உலகக்கோப்பையை வென்றுள்ளதை நாடே கொண்டாடி வருகிறது.

    இந்த வெற்றிக்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரதமர் மோடி, இந்திய வீரர்களுக்கு வீடியோ மூலம் வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்த மோடி, தனது எக்ஸ் தளத்தில் டி20 ஓய்வை அறிவித்த விராட் கோலி, ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு தனியாக வாழ்த்து பதிவுகளை வெளியிட்டிருந்தார்.

     

    இந்நிலையில் ஜடேஜாவுக்கு மோடி வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட பதிவு தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது. அதாவது மோடி , CHAT GPT உருவாக்கிய வாக்கியங்களை தனது எக்ஸ் பக்கத்தில் அப்படியே காப்பி பேஸ்ட் செய்துள்ளார் என்று இணையவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.

    மோடி ஜடேஜாவுக்கு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், 'நீங்கள் ஆல் ரவுண்டராக தனித்துவமான முறையில் செயப்பட்டீர்கள். கிரிக்கெட் ரசிகர்கள் உங்களது ஸ்டிரோக் பிளே ஸ்டைலையும்,, அற்புதமான ஃபீல்டிங்கையும் விரும்புகிறார்கள். தற்போதும் கடந்த டி20 போட்டிகளிலும் உங்களின் வசீகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்கு நன்றி. உங்களின் பயணம் தொடர எனது வாழ்த்துகள் என்று எழுதியிருந்தார்.

    இந்நிலையில் 'டி20 கிரிக்கெட்டிலிருந்து ஜடேஜா ஓய்வு பெற்று விட்டார், அவரை பாராட்டி ஒரு டிவீட் எழுது' என CHAT GPT யிடம் கூறியதற்கு அச்சு அசலாக மோடியின் பதிவு போலவே வாக்கியம் பிசகாமல் CHAT GPT எழுதியுள்ளதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து இணையவாசிகள் பகிர்ந்து வருகின்றனர். இதற்கிடையில் இந்தியாவின் டி20 வெற்றியை மோடி அரசியல் ஆதாயங்களுக்காக மார்க்கெட்டிங் செய்து வருகிறார் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

     

    • இந்திய அணி 17 ஆண்டுக்குப் பிறகு 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசு அளிக்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

    17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதற்கிடையே, உலகக் கோப்பை வென்ற இந்திய அணிக்கு 125 கோடி ரூபாய் பரிசுத்தொகை அறிவித்தார் பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய் ஷா.

    இந்நிலையில், உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் பாய்ந்து பிடித்த கேட்சை முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் பாராட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக இர்பான் பதான் கூறுகையில், என் கடைசி மூச்சு உள்ள வரை சூர்யகுமார் யாதவின் கேட்சை மறக்கமாட்டேன்.

    இந்த கண்ணீர் நான் சோகமாக இருப்பதாலோ அல்லது என் வாழ்க்கையில் நடந்த விஷயங்களினாலோ அல்ல. இவை மகிழ்ச்சியான கண்ணீர் என தெரிவித்தார்.

    • டி20 போட்டியில் இரண்டாவது உலகப் பட்டத்தை வென்றது இந்திய அணி.
    • ஐசிசி டி20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வென்றுள்ளது.

    டி20 உலகக் கோப்பையில் 17 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி வெற்றப்பெற்றதற்கு பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.

    இந்திய அணியின் விதிவிலக்கான செயல்பாட்டின் மூலம் "தங்கள் விமர்சகர்களை வாயடைத்து உள்ளனர்" என்று கூறினார்.

    பார்படாஸில் உள்ள பிரிட்ஜ்டவுனில் நடந்த பரபரப்பான இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை ஏழு ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்து டி20 போட்டியில் இரண்டாவது உலகப் பட்டத்தை வென்றது.

    இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கூறியிருப்பதாவது:-

    ரோஹித் சர்மாவின் விதிவிலக்கான தலைமையின் கீழ், இந்திய அணி குறிப்பிடத்தக்க உறுதியையும் பின்னடைவையும் வெளிப்படுத்தியுள்ளது.

    ஐசிசி டி 20 உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் வென்ற முதல் அணியாக மாறியுள்ளது.

    அவர்கள் தங்கள் விமர்சகர்களை மீண்டும் மீண்டும் நட்சத்திர நிகழ்ச்சிகளால் எதிர்கொண்டு அமைதிப்படுத்தியுள்ளனர்.

    அவர்களின் பயணம் உத்வேகம் தருவதற்கு ஒன்றும் இல்லை, இன்று அவர்கள் முன்னணி வரிசையில் இணைகிறார்கள்.

    இந்த குழு அவர்களின் அர்ப்பணிப்பு, கடின உழைப்பு மற்றும் தளராத மனப்பான்மை ஆகியவற்றால் நம் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளது.

    ரோஹித் ஷர்மாவின் தலைமையில், விராட் கோலி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் பிறரின் உதவியால் 1.4 பில்லியன் இந்தியர்களின் கனவுகளை நிறைவேற்றியுள்ளனர்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
    • பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள்.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,

    ஐசிசி ஆண்கள் டி20 உலகக் கோப்பை 2024 ஐ வென்றதற்காக இந்திய அணிக்கு ரூ. 125 கோடி பரிசுத் தொகையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். போட்டி முழுவதும் அணி சிறப்பான திறமை, உறுதிப்பாடு மற்றும் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தியுள்ளது. இந்த சிறந்த சாதனைக்காக அனைத்து வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் துணை ஊழியர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.

    • இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது.
    • காட்சிகளை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்தனர்.

    டி-20 உலககோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி தென்ஆப்ரிக்காவை வீழ்த்தி வெற்றி பெற்று சாம்பியன் கோப்பையை தட்டி சென்றது. இந்திய அணியின் வெற்றியை நாடு முழுவதும் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

    முன்னதாக இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்காக ரசிகர்கள் செய்த பிரார்த்தனை தொடர்பான சில வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அந்த வகையில் பாட்னாவில் உள்ள வேதா வித்யாலயா மாணவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் புகைப்படங்களை கையில் வைத்துக்கொண்டு, இந்திய அணி வெற்றி பெற வேண்டி அனுமன் பாடல் பாடிய காட்சிகள் உள்ளது.

    அந்த வீடியோவில், மாணவர்கள் தங்கள் கைகளில் ரோகித் சர்மா, விராட் கோலி, குல்திப் யாதவ், பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்களின் புகைப்படங்களை கையில் வைத்து கொண்டு அனுமன் மந்திரம் பாடும் காட்சிகளை பார்த்த பயனர்கள் வீடியோவை லைக் செய்தனர்.

    • பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது.
    • அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை.

    இந்திய அணி வெற்றி பெற்றதும் வீரர்கள் மைதானத்தில் ஆனந்த கண்ணீர் வடித்தனர். பல முறை இறுதிப் போட்டிக்கு வந்தும் ஐ.சி.சி. கோப்பையை வெல்ல முடியாத ஏக்கம் இருந்தது. அந்த கனவு நீண்ட இடைவெளிக்கு பிறகு நனவானது. வீரர்களால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. 

    இந்த மகிழ்ச்சியான தருணத்தில் கேப்டன் ரோகித் சர்மா, ஹர்திக் பாண்ட்யா, விராட்கோலி உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர் விட்டு அழுதனர்.

     

    ரோகித்சர்மா மைதானத்தில் குப்புற படுத்து கையால் தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அதோடு தேசிய கொடியை தனது கைகளால் நிலை நிறுத்தினார். கோலியும், பாண்ட்யாவும் தனது குடும்பத்தினருடன் செல்போனில் வீடியோகால் மூலம் பேசி சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டனர்.

    இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வீழ்த்தியது.
    • இதன் மூலம் 2-வது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அறிமுகமான 2007-ல் இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. அதன்பின் இந்தியா டி20 உலகக் கோப்பையை வெல்ல முடியாமல் இருந்தது. இந்த நிலையில் 17 வருடத்திற்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இந்நிலையில் பிரபலமான கால்பந்து வீரரான மெஸ்ஸி ஸ்டைலில் உலகக் கோப்பையை ரோகித் சர்மா வாங்குவார். இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. ஆனால் அந்த மாதிரி வந்து கோப்பை வாங்குங்கள் என கூறியது சக வீரரான குல்தீப் யாதவ். இந்திய வீரர்கள் அனைவரும் வரிசையாக நின்று பதக்கங்களை வாங்கி கொண்டிருந்தார். அப்போது ரோகித் சர்மாவிடம் குல்தீப், மெஸ்ஸி ஸ்டைலில் கோப்பையை பெறுங்கள் என கூறியதும் அதற்கு ரோகித் சரி என்பது போல தலையை அசைப்பது அந்த வீடியோவில் பதிவாகி இருந்தது.

    • டிராவிட்டுக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது.
    • ரோகித் சர்மா விராட் கோலியிடன் ராகுல் டிராவிட்டை இப்படி செய்யலாம் என கூறினார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இருந்து வருகிறார். அவரது பதவி காலம் இந்த 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியுடன் முடிவுக்கு வருகிறது.

    அவர் பயிற்சியாளராக தனது கடைசி உலகக் கோப்பை போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் டி20 உலகக் கோப்பையில் கைப்பற்றும் முதல் டிராபி இது தான். வீரராகவோ, கேப்டனாகவோ உலகக் கோப்பையை கையில் ஏந்தி சாதிக்க முடியாத ராகுல் டிராவிட் ஒரு பயிற்சியாளராக தனது உலகக் கோப்பை ஏக்கத்தை தணித்து இருக்கிறார்.

    இந்நிலையில் அவருக்கு பிரியா விடை கொடுக்கும் விதமாக இந்திய வீரர்கள் செய்த செயல் வைரலாகி வருகிறது. அந்த வகையில் ராகுல் டிராவிட்டை இந்திய வீரர்கள் தலைக்கு மேலாக தூக்கி போட்டு கொண்டாடி மகிழ்ந்தனர். இதனை ரோகித் சர்மா விராட் கோலியிடம் கூறி இதனை செய்தனர். அவர்களது செயலை ராகுல் டிராவிட்டும் ஏற்றுக் கொண்டு அவர்களுடன் சந்தோசத்தை வெளிப்படுத்தினார்.

    டிராவிட்டின் பயிற்சியில் கீழ் இந்திய அணி 2023-ம் ஆண்டு நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், 50 ஓவர் உலகக் கோப்பை ஆகியவற்றில் இறுதிப்போட்டியில் தோல்வி கண்டிருந்தது. 

    ×