search icon
என் மலர்tooltip icon
    • அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, மனைவி ஜெயாவிடம் தகராறு செய்வது வழக்கம்.
    • ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    கன்னியாகுமரி :

    இரணியல் அருகே உள்ள சுங்கான்கடை பனவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சாலமன் (வயது 56). மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, மனைவி ஜெயாவிடம் தகராறு செய்வது வழக்கம்.

    நேற்று இரவும் சாலமன் மது அருந்தி வந்து வீட்டில் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது 15 வயது மகன், கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த சாலமன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து அவரது மனைவி ஜெயா அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    • விவேகானந்தர் மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டார்
    • கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.

    கன்னியாகுமரி :

    மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி பிரித்தீவ் ராஜ் சிங் ரூபன் நேற்று கன்னியாகுமரி வந்தார். அவருக்கு குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அதன் பிறகு அவர் மாலை 6-20 மணிக்கு கன்னியாகுமரி சன்செட் பாய்ண்ட் கடற்கரை பகுதிக்கு சென்று கடலில் சூரியன் மறைந்த காட்சியை கண்டு களித்தார். இரவு கன்னியாகுமரியில் தங்கினார். 2-வது நாளாக இன்று அதிகாலை 6 மணிக்கு முக்கடல் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறை கடற்கரை பகுதிக்கு சென்றார். அங்கு நின்ற படி சூரியன் உதயமான காட்சியை பார்த்து ரசித்தார். அதன் பின்னர் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்றார். இங்கு வந்து அவரை நாகர்கோவில் தேவசம் தொகுதி கோவில்களின் கண்காணிப்பாளரும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் மேலாளரு மான ஆனந்த் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் வரவேற்புஅளித் தனர். அதன் பிறகு அவர் பகவதி அம்மன் கோவிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று பயபக்தியுடன் சாமி கும்பிட்டார். பின்னர் அவர் கார் மூலம் பூம்புகார் கப்பல் போக்குவரத்துகழக படகு துறைக்கு சென்றார். அங்கு வந்து அவரை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு அவர் கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்து உள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கு தனிபடகில் சென்றார். அங்கு வந்த அவரை விவேகானந்தர் பாறை நினைவாலய பொறுப்பாளர் ஆர்.சி.தாணு வரவேற்று விவேகானந்தர் நினைவு மண்டபத்தை அவருக்கு சுற்றி காண்பித்து விளக்கி கூறினார்.அதன் பிறகு அவர் படகு மூலம் அருகில் உள்ள திருவள்ளுவர் பாறைக்கு சென்றார். அங்கு திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு வியந்தார். மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட சென்றதையொட்டி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு நேற்று காலை 10 மணி வரை படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். 2மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு பிறகு விவேகா னந்தர் மண்டபத்துக்கு தொடங்கியது அதன் பிறகு சுற்றுலா பயணிகள் படகில் சென்று விவேகானந்தர் மண்டபத்தை ஆர்வத்துடன் பார்வையிட்டு வந்தனர். அவர் சென்ற பாதையான விவேகானந்தர் ராக் ரோடு மற்றும் சன்னதி தெரு பகுதியில் கடைகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டு இருந்தன. அந்த பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. அதேபோல அதிகாலையில் கன்னியாகுமரியில் முக்கடல் சங்கமிக்கும் திரி வேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் சுற்றுலா பயணிகள் சூரியன் உதயமாகும் காட்சியை பார்க்க செல்லவும் போலீசார் தடை விதித்தனர். இதனால் சூரியன் உதயமாகும் காட்சியை காண கடற்கரைக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மொரிசியஸ் நாட்டு ஜனாதிபதி வருகையையொட்டி கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஇருந்தது.

    • முகவரி கேட்பது போல் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் கைவரிசை
    • சி.சி..டி.வி. காமிரா பதிவுகளின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு

    கன்னியாகுமரி :

    களியக்காவிளை அருகே உள்ள கூட்டப்புளி பகுதியை சேர்ந்தவர் றெஸல்ராஜ். இவரதுமனைவி சைனி.

    இவர் வீட்டின் அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்த்து வருகிறார். இவர் வேலை செய்யும் ஆஸ்பத்திரி வீட்டின் அருகில் இருப்பதால் வேலைக்கு நடந்து செல்வது வழக்கம்.

    அது போல் மதியம் சாப்பிடுவதற்கும் வீட்டுக்கு நடந்து செல்வாராம். இந்த நிலையில் சைனி நேற்று மதியம் சாப்பிடுவதற்கு வீட்டிற்கு நடந்து சென்றுள் ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் சைனியிடம் முகவரி கேட்பது போல் அருகில் வந்துள்ளார்.

    அவர் கொடுத்த பேப்பரை வாங்கி பார்த்த போது, அந்த நபர் சைனியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் நகையை பறித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சைனி சத்தம் போடவே அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர்.

    அதற்குள் மர்மநபர் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் மோட் டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார். இது குறித்து களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் சைனி புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினார்கள். சைனியிடம் கொள்ளையன் குறித்த அடையாளங்களை கேட்டறிந்த போலீசார் அந்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    ஆனால் கொள்ளையர்கள் யாரும் சிக்கவில்லை. இதை தொடர்ந்து கொள்ளை நடந்த பகுதியில் உள்ள சி.சி..டி.வி. காமிரா பதிவுகளின் காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

    பட்டப்பகலில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

    • சுற்றுலா பயணிகளை கவரும்வகையில் அழகு படுத்தவும் நடவடிக்கை
    • 31 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 15 ஏக்கர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரியில் மெயின் ரோட்டில் தமிழக அரசின் தோட்டக்கலைத் துறைக்கு சொந்தமான அரசு பழத்தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்கா அமைந்துஉள்ளது.

    1923 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பழப்பண்ணை 31 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும். இதில் 15 ஏக்கர் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த அரசு பழத்தோட்டம் மற்றும் சுற்றுச்சூழல் பூங்காவை குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அவர் அரசு பழத்தோட்டத் தில் இயற்கை பொருட் களைக் கொண்டு சாக்லேட் தயாரிக்கப்படும் கூடத்தை சென்று பார்வை யிட்டார்.

    மேலும் அரசு பழத் தோட்டத்தில் உற்பத்தியாகும் பல்வேறு வகையான மாமரங்களையும் பார்வை யிட்டார். செடிகள் உற்பத்தி செய்யப்படும் இடத்தையும் நேரில் சென்று பார்வையிட்டார்.

    சுற்றுச்சூழல் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மேலும் பல்வேறு வசதிகள் ஏற்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். இந்த ஆய்வின் போது தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஷீலா ஜான், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கீதா, கன்னியாகுமரி அரசு தோட்டக்கலைப் பண்ணை மேலாளர் சக்திவேல், வேளாண்மை உதவி இயக்குனர் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்

    • ஆந்திராவில் இருந்து 42 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 2600 டன் ரேசன் அரிசி
    • ரேசன் அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள ரேசன் கடைகளில் சப்ளை செய்யப்படும் ரேசன் அரிசி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் கொண்டுவரப்படுகிறது. ஆந்திராவில் இருந்து 42 வேகன்களில் சரக்கு ரெயில் மூலமாக 2600 டன் ரேசன் அரிசி நாகர்கோவில் ெரயில் நிலையத்திற்கு இன்று கொண்டுவரப்பட்டது.

    ரெயில் நிலையத்திற்கு வந்த ரேசன் அரிசியை தொழிலாளர்கள் ரெயிலில் இருந்து லாரிகளில் ஏற்றி கிட்டங்கிகளுக்கு கொண்டு சென்றனர். கிட்டங்கிகளுக்கு கொண்டு செல்லப்பட்ட ரேசன் அரிசியை ரேசன் கடைகளுக்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 2-வது நாளாக இன்றும் கணக்கெடுப்பு பணி தீவிரம்
    • 3 நாட்களுக்கு பிறகு தான் எத்தனை யானைகள் நடமாட்டம் உள்ளது என்ற விவரம் தெரியவரும்

    நாகர்கோவில் :

    குமரி மாவட்டத்தில் உள்ள காடுகளில் புலி, யானை, சிறுத்தை, மான் உட்பட ஏராளமான விலங்கு கள் உள்ளன.

    கடந்த 2017-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுக்கப் பட்டது. அப்போது 20 யானைகள் வசித்து வந்தது தெரிய வந்தது. இந்த நிலையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்களில் ஒருங்கிணைந்து யானைகள் கணக்கெடுக்கும் பணியை நேற்று தொடங்கியது.

    குமரி மாவட்டத்திலும் வன அதிகாரி இளையராஜா மேற்பார்வையில் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. 30 குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 3 வன ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடம் பெற்றுள்ளனர். கோதையார், மாறாமலை, சாமிகுச்சி, ரோஸ்மியாபுரம், தாடகைமலை, அசம்பு, களியல் போன்ற பகுதிகளில் இந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டனர்.

    அப்போது களியல் பகுதியில் 3 யானைகள் சுற்றி திரிந்தது தெரியவந்தது. மேலும் ஒரு சில பகுதிகளிலும் யானைகள் நடமாட்டம் இருந்தது. காலை தொடங்கிய கணக்கெடுக்கும் பணி மாலை வரை நடைபெற்றது. கணக்கெடுப்பு குழுவினர் இரவு காட்டுப்பகுதியிலேயே கொட்டகை அமைத்து தாங்கினார்கள்.

    இன்று 2-வது நாளாக இந்த குழுவினர் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டு உள்ளனர். யானைகள் சாணத்தை வைத்து கணக்கெடுக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. நாளை காடுகளில் உள்ள நீர்நிலை பகுதிகளில் இந்த குழுவினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். யானைகள் நீர்நிலைகளில் தண்ணீர் குடிக்க வருவதை வைத்து கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    இது குறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில், குமரி மாவட்டத்தில் யானைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஒரு சில இடங்களில் யானைகள் தென்பட்டதாக கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    கணக்கெடுக்க சென்ற ஒரு சிலரை தொடர்பு கொள்ள முடியாததால் முதல் நாளில் எத்தனை யானைகள் தென்பட்டது என்ற விவரம் தெரிய வில்லை. இன்றும் அந்த குழுவினர் கணக்கெடுக்கும் பணியில் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை நீர் நிலைகளுக்கு வரும் யானைகளை கணக்கெடுக்க உள்ளனர். 3 நாட்களுக்கு பிறகு தான் குமரி மாவட்டத்தில் எத்தனை யானைகள் நடமாட்டம் உள்ளது என்ற விவரம் தெரியவரும் என்றார்.

    • 4 மாதம் கேட் மூடப்படும்
    • இந்த ரெயில்வே கேட் தினசரி 24 மணி நேரத்தில் 13 மணி நேரம் பூட்டியே இருக்கும்

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்கத் தலைவரும், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினருமான ஸ்ரீராம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் பின்புறம் ஊட் டுவாழ்மடம், கருப்புக்கோட்டை, இலுப்பையடி போன்ற 5 சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 500 வீடுகளுக்கு மேல் உள்ளது. ரெயில்வே பாதைகள் அமைத்தமையால் வடி வீஸ்வரத்திலிருந்து ஊட்டுவாழ்மடத்திற்கு ரெயில் தண்டவாளத்தை கடந்து செல்லவேண்டிய வகை யில் சாலை அமைக்கப் பட்டு இருந்தது. அதில் ரெயில்வே கேட்டும் அமைக் கப்பட்டு இருந்தது.

    இந்த ரெயில்வே கேட் தினசரி 24 மணி நேரத்தில் 13 மணி நேரம் பூட்டியே இருக்கும். இதனால் 5 கிராம மக்கள் நகரினுள் வர இயலாமல் தவித்தனர். தங்களுக்கு அந்த கேட்டில் சுரங்கப்பாதை அமைக்க ரயில்வேயை வலியுறுத்தி வந்தனர். மக்கள் தில் செல்ல ரூ.4.5 கோடி எளி செலவில் சுரங்க பாதை அமைக்க திட்டமிட்டனர். இந்த பணிகள் டெண்டர் தற்பொழுது விடப்பட்டு சுரங்கபாதை வேலைகள் உடன் துவங்க உள்ளது. இந்த சுரங்கபாதை வேலை முடிவடைய 4 மாதங்கள் ஆகும் என்பதால் அது வரை தற்பொழுதுள்ள ரெயில்வே கேட்டை நிரந்தரமாக மூட ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்வதாக ரெயில்வே அதிகாரிகள் அந்த பகுதியில் போர்டு வைத்துள்ளனர்.

    இதனால் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் நாகர்கோவில் வர சுசீந்திரம், ரெயில்வே மேம்பாலம் அடுத்துள்ள சோழன்திட்டை அணைக் கட்டு வரை வந்துதான் நாகர்கோவில் வர 4 கி.மீ தூரம். சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை போக்க சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் அடுத்து. வடக்கு பகுதியில் தற்போதைய ரெயில்வே பாதையும் கேட்டும் உள்ளது. இதன் அடுத்து வடக்குப் பகுதியிலுள்ள இடத்தில் தற்போ தைய ரெயில்வே கேட்டை மாற்றியமைக்க நல்ல வச தியும் வாய்ப்பும் உள்ளது.

    புதிய சுரங்கப் பாதை வேலைகள் முடியும் வரை தொடர்ந்து மேற்படி புதிய ரெயில்வே கேட் வழியாக பயணிகளும், கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் தொடர்ந்து செல்ல அனுமதிக்க வேண்டும்.

    இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • தொடர்ந்து மிரட்டிய புகாரில் போலீசார் கைது செய்தனர்
    • மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    நாகர்கோவில் :

    முகநூலில் பெண்கள் படத்தை பதிவிட்டால், சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். எனவே படத்தை பதிவிடாதீர்கள் என பலமுறை போலீசார் எச்சரித்தாலும் அதனை கேட்காத சிலர் முகநூலில் படத்தை வெளியிட்டு வம்பில் சிக்குவது தொடர் கதையாகவே உள்ளது.

    மேலும் அவர்கள் பணத்தையும் இழந்து வருவது தான் வேதனையான விஷயம். இளம்பெண்கள் மட்டுமல்லாமல் 60 வயதான மூதாட்டி ஒருவரும் இந்தப் பிரச்சினையில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். அவரிடம் குமரி மாவட்ட வாலிபர் பணத்தை பறித்த நிலையில், தற்போது போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 30), மெக்கானிக்கல் என்ஜினீயர். இவருக்கு முகநூல் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே உள்ள கொடிப்பாடி புத்தூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் பழக்கமானார். நாளடைவில் அருள் பேச்சை நம்பி, தனது போட்டோக்களை அந்த மூதாட்டி பகிர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் மூதாட்டியிடம் போனில் பேசிய அருள், உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடப் போகி றேன் என்று கூறி உள்ளார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். அப்படி செய்ய வேண்டாம் என்று அருளிடம் கூறி உள்ளார்,

    இதனை அருள், தனக்கு சாதகமாக பயன்படுத்தி மூதாட்டியிடம் இருந்து பணம் பறித்துள்ளார். கூகுள் பே மூலம் ரூ.12 ஆயிரம் பெற்ற அவர், கூடுதலாக ரூ.50 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். பணம் தராவிட்டால், மார்பிங் படத்தை உங்கள் கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனால் மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரூ புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்மைக்கு களங்கம் விளைவித்தது, பெண்ணை மிரட்டி பணம் பறித்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து கர்நாடக போலீசார் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். அவர்கள், இரணியல் போலீசார் உதவியுடன் நெய்யூர் சென்று என்ஜினீயர் அருளை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக பெங்களூரூ அழைத்துச் சென்றனர்.

    • தீயணைக்கும் படையினர் உயிருடன் மீட்டனர்
    • கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி

    கன்னியாகுமரி நாச்சி யார்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (55).இவர் நேற்று கன்னியா குமரி கடற்கரைச் சாலை அருகேயுள்ள வியூ டவர் பாறையில் நின்று கொண்டி ருந்தார்.

    அப்போது அவர் திடீ ரென கடலில் தவறி விழுந்து தத்தளித்துக் கொண்டிருந்தார். இதை கண்ட சுற்றுலா பயணிகள் மற்றும் வியாபாரிகள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து கடலோர பாதுகாப்பு குழும உதவி ஆய்வாளர் ராமச்சந்திரன், தலைமை காவலர் சுபாஷ், நுண்ணறிவு பிரிவு தலைமை காவலர் துரைசிங் ஆகி யோர் அடங்கிய போலீஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

    அதேபோல் தீயணைப்பு நிலைய போலீசாரும் பாது காப்பு கருதி வரவழைக்கப்ப ட்டனர்.தொடர்ந்து கடலில் தவறி விழுந்து தத்தளித்து கொண்டிருந்த ஜெயக்குமார் சுமார் ஒன்றரை மணி நேர போராட்டத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டார்.

    அவரை போலீசார் ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றி கன்னியாகுமரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து ஜெயக்குமா ரின் உறவினர்க ளுக்கு போலீசார் தகவல் தெரி வித்தனர்.சிகிச்சைக்கு பின் அவர் பாதுகாப்பாக வீடு திரும்பினார்.

    ஜெயக்குமாரை மீட்ட கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு சுற்றுலா பயணிகள், வியாபாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

    • குறைபாடுகளை சரிசெய்ய கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
    • வாகனத்துக்குள் சென்சார் பொருத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன

    நாகர்கோவில், மே.17-

    தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் ஆண்டுக்கு ஒரு முறை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலமாக ஆய்வு செய்யப்படுவது வழக்கம். இதே போல இந்த ஆண்டுக்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது.

    குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் ஆய்வு நாகர்கோவில் கண்கார்டியா பள்ளியில் இன்று நடந்தது. வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, ஆய்வாளர்கள் எஸ்.சக்திவேல், கே.சக்திவேல் ஆகியோர் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

    ஒவ்வொரு வாகனத்திலும் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு பொருட்கள் பொருத்தப்பட்டு உள்ளதா? என்பது குறித்து இந்த ஆய்வு நடந்தது. ஆய்வு பணியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் பள்ளி வாகனங்கள் ஆய்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. பள்ளி வாகனங்களில் தீயணைப்பு பெட்டி, அவசர கால வெளியேறும் வசதி உள்ளிட்ட 16 விதமான பொருட்கள் இருக்க வேண்டும். அது வாகனங்களில் உள்ளதா? என்று ஒவ்வொரு வாகனங்களாக ஆய்வு நடத்தப்படும்.

    வாகன ஓட்டுனர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கும் போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒரு வினாடி கவன குறைவால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஒவ்வொரு வாகனத்தின் முன்பும், பின்பும் கேமரா பொறுத்த வேண்டும்.

    ஆனால் கேமரா மற்றும் சென்சார் பொறுத்தப்படாமல் உள்ளது.

    இதுபோன்ற விஷயங்கள் சரி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    வாகனத்தில் குழந்தைகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே வழி இடது புறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். படிகள் தரையில் இருந்து 300 மீட்டருக்கு மிகாமல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கதவுகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அவசர வழி வலது பக்கத்தில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    மாணவ- மாணவிகள் புத்தகப் பைகளை வைப்பதற்கு தனியாக அடுக்கு பலகை இருக்க வேண்டும். முதலுதவி பெட்டி உரிய மருந்துகளுடன் பராமரிக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தீயணைப்பு கருவிகள் வாக னத்தின் உட்புறம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குறைகளை சரி செய்யவேண்டும்

    இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 78 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில் 396 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

    பள்ளி வாகனங்களில் ஒரு சில குறைபாடுகள் இருந்ததை உடனே நிவர்த்தி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த பணிகள் முடிந்ததும் மார்த்தாண்டத்தில் ஆய்வு பணி நடத்தப்படும். ஆட்டோக்களில் அதிக அளவு மாணவ-மாணவிகளை ஏற்றி செல்லக்கூடாது. தனியார் வாகனங்களில் மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.

    பள்ளி வாகனங்களில் முன்புறமும், பின்புறமும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்றும், வாகனத்துக்குள் சென்சார் பொருத்த வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன. ஆனால் ஆய்வுக்கு வந்த பெரும்பாலான வாகனங்களில் கண்காணிப்பு கேமரா நிறுவப்படாமல் இருந்தது. இதைத் தொடர்ந்து அந்த வாகனங்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். கண்காணிப்பு கேமரா மற்றும் சென்சார் பொருத்தி விட்டு வரும்படி அறிவுறுத்தினர்.

    இதே போல ஒரு சில வாக னங்களில் அரசின் விதிமுறைகள் படி படிக்கட்டுகள் இல்லாதது தெரிய வந்தது. அந்த வாகனங்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சரி செய்து வருமாறு திருப்பி அனுப்பி வைத்தனர். அரசின் விதிமுறைக்கு உட்பட்டு இருந்த வாகனங்களுக்கு மட்டும் அனுமதிக்கான ஸ்டிக்கரை ஒட்டினார்கள்.

    • கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர்
    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் பிரதீஷ் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பார்வதி புரம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பார்சல் வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி யானார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் பலியா னவர் கருங்கல் மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்த பிரதீஷ் (வயது 18) என்பது தெரிய வந்துள்ளது. பலியான பிரதீஸ் கருங்கலில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து விட்டு வீட்டிற்கு திருப்பும் போது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

    பலியான பிரதீஸ் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்தி ரியில் வைக்கப் பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் பிரதீஷ் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • 30 குழுவினர் ஈடுபட்டுள்ளனர்
    • களியல், மாறாமலை, கோதையாறு, ரோஸ்மியாபுரம், அசம்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம்

    நாகர்கோவில் :

    தமிழ்நாடு கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு இன்று (17-ந்தேதி) தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.

    குமரி மாவட்டத்தில் வன அதிகாரி இளையராஜா தலைமையில் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கியது. யானைகள் கணக்கெடுக்கும் பணியில் 30 குழுக்கள் தனியாக பிரிந்து சென்று கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.ஒவ்வொரு குழுவிலும் மூன்று வனஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் இடம்பெற்றுள்ளனர்.

    இன்று காலை 7 மணிக்கு கணக்கெடுக்கும் பணி தொடங்கியது.களியல், மாறாமலை, கோதையாறு, ரோஸ்மியாபுரம்,அசம்பு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் இருந்தது தெரியவந்துள்ளது.

    தாடகை மலை, மருதம்பாறை, சாமிகுச்சி பகுதிகள் உட்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து வன பகுதிகளிலும் கணக்கெடுக்கும் பணியில் வன ஊழியர்கள் ஈடுபட்டனர். ரோஸ்மியாபுரம் அழகிய பாண்டியபுரம் பகுதியில் நடைபெற்ற கணக்கெடுக்கும் பணியை வன அதிகாரி இளையராஜா நேரில் சென்று பார்வையிட்டார்.காலை தொடங்கிய கணக்கெடுப்பு பணி மாலை 5 மணி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று யானைகளை நேரில் பார்ப்பதை வைத்து கணக்கெடுக்கப்பட்டது. நாளையும், நாளைமறுநாளும் கணக்கெடுக்கும் பணி நடக்கிறது.

    இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறுகையில் யானைகள் கணக்கெடுக்கும் பணி ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுவது வழக்கம். தற்பொழுது கணக்கெடுப்பு நடக்கிறது.குமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது. களியல் மாறாமலை அசம்பு கோதையாறு பகுதிகளில் யானைகள் நடமாட்டம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

    மற்ற இடங்களிலும் வன ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.இன்று யானைகளை நேரில் பார்ப்பதை வைத்து கணக்கெடுக்கும் பணி நடைபெறும்.இதைத் தொடர்ந்து சாணங்கள் மூலமாகவும் நீர்நிலை பகுதிகளிலும் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். மூன்று நாட்கள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்த பிறகே குமரி மாவட்டத்தில் எத்தனை யானைகள் வனப் பகுதியில் உள்ளது என்பது போன்ற விவரங்கள் தெரியவரும் என்றார்.

    ×