search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அடையாளம்"

    • குழந்தையின் அழுகையை நிறுத்த பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர்.
    • அவரது பெற்றோர் இருந்ததை குழந்தை அடையாளம் காட்டியது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் காட்டு மன்னார்கோவில் பஸ் நிலையத்தில் சுமார் 3 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று அழுது கொண்டு இருந்தது. இதனை கண்ட பொதுமக்கள் அங்கிருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சென்று குழந்தையை மீட்ட னர். குழந்தையின் அழுகை யை நிறுத்த பிஸ்கட் போன்ற உணவு பொருட்களை வாங்கி கொடுத்தனர்.

    தொடர்ந்து குழந்தை யிடம் விசாரித்தபோது, காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள டீ.நெடுஞ்சேரி கிராமத்தை சேர்ந்த குழந்தை என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து குழந்தையை மோட்டார் சைக்கிளில் உட்கார வைத்துக் கொண்டு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில் காட்டுமன்னார்கோவில் கடை வீதியில் வலம் வந்தார். அங்கிருந்த பிள்ளையார் கோவில் தெருவில் ஒரு பாத்திர கடையில் அவரது பெற்றோர் இருந்ததை குழந்தை அடையாளம் காட்டியது. அங்கிருந்த பெற்றோரை அழைத்து அறிவுரை கூறிய சப்- இன்ஸ்பெக்டர், அவர்களி டம் குழந்தையை ஒப்படைத்தார்.

    • எல்லைமேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் விவசாய கிணற்றில் அடையாள தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • போலீசார் கிணற்றில் மிதந்த ஆண் உடலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள ஓலப்பாளையம், எல்லைமேடு பகுதியில் உள்ள சுப்பிரமணியன் என்பவரின் விவசாய கிணற்றில் அடையாள தெரியாத ஆண் பிணம் மிதப்பதாக பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கிணற்றில் மிதந்த ஆண் உடலை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இறந்தவருக்கு சுமார் 40 முதல் 50 வயது வரை இருக்கும். பச்சை நிற கை வைத்த பனியனும், நீல நிற வெள்ளை கோடு கட்டம் போட்ட லுங்கியும் அணிந்திருந்தார். இவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் பரமத்திவேலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர்.

    திருப்பூர்:

    திருப்பூர், தாராபுரம் ரோடு, கே.செட்டிபாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்நிலையில், அந்த பள்ளியில் புதியதாக கட்டிட கட்டுமான பணிகள் நடைபெற்று வந்தது. தற்சமயம் அந்த கட்டிட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிட பணி நடைபெற்ற போது பணியாளர்கள் தங்குவதற்காக அங்கு தகரத்தினால் ஆன செட் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பயன்பாடில்லாத அந்த தகர செட் பகுதியில் கடுமையான துர்நாற்றம் வீசியது. கடந்த 27 ந் தேதி அந்த தகர செட் உள்ள பகுதிக்கு சிலர் சென்று பார்த்துள்ளனர். அப்போது அங்கு 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நிர்வாணமாக அழுகிய நிலையில் இறந்து கிடந்தார்.

    இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் நல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லூர் போலீசார் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து நல்லூர் போலீசார் வழக்கு பதிவு விசாரணையை தொடங்கினர். இறந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். இறந்த பெண் நிர்வாணமாக இருந்ததால் கற்பழித்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. உடல் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்த பெண்ணை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறினர். மேலும் அந்த பெண்ணை கொன்ற கொலையாளிகள் யார் என்பதை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். மேலும் நுண்ணறிவு பிரிவு போலீசாரும் அந்த பெண் குறித்து ரகசிய விசாரணையில் ஈடுபட்டனர்.

    இந்தநிலையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் அடையாளம் தெரிந்தது. அவர் திருப்பூர் வீரபாண்டி பகுதியை சேர்ந்த கவிதா (வயது 46) என்பது தெரியவந்தது. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். முதல் கணவரை பிரிந்து 2-வது கணவருடன் வசித்து வந்துள்ளார். மேலும் கட்டிட வேலை, வீட்டு வேலை உள்ளிட்ட வேலைகளை செய்து வந்துள்ளார். அவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் ஆண் நண்பர்களுடன் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் கவிதா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

    • சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார்.
    • இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சேலம்:

    சேலம் கோட்டை மெயின்ரோடு அரசு ஆஸ்பத்திரி எதிரே உள்ள கடையின் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இது பற்றி கிராம நிர்வாக அலுவலருக்கும், செவ்வாய்ப்பேட்டை போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அங்கு வந்து இறந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவருடைய பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர் ? என தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தனியார் கல்லூரி அருகே ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதா பமாக உயிரிழந்தார்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே திருப்பூர் -தாராபுரம் சாலையில் குப்பிச்சிபாளையத்தை அடுத்த தனியார் கல்லூரி அருகே சம்பவத்தன்று ஒருவர் பலத்த காயங்களுடன் கிடப்பதாக அவிநாசி பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன் அடிப்படையில் அங்கு சென்று பார்த்தபோது 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் அடிபட்டு கிடந்தார். அவர் மீது எந்த வாகனம் மோதியது என்பது தெரியவில்லை. உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர்.

    அங்கு தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதா பமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • 3 நாட்கள் ஆன பிறகும் அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறல்
    • கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி முக்கட லும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரை பகுதியில் உள்ள காந்தி மண்டபத்தின் பின் பக்கம் உள்ள கடலில் கடந்த 2-ந்தேதி வாலிபர் ஒருவரின் பிணம் மிதந்து கொண்டி ருந்தது. இது குறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கடலில் மிதந்து கொண்டிருந்த அந்த வாலிபரின் பிணத்தை கடலோர பாதுகாப்பு குழும போலீசார் பொதுமக்களின் உதவியுடன் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இறந்தவர் யார்? எந்த ஊர்? பெயர் என்ன? என்ற விவரம் தெரியவில்லை. அவர் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கடலில் குளிக்கும் போது ராட்சத அலையில் சிக்கி முழ்கி இறந்தாரா? அல்லது வேறு எங்காவது வைத்து அவரை கொலை செய்துவிட்டு பிணத்தை கொண்டு வந்து கடலில் வீசினார்களா? அல்லது அவர் வேறு எங்காவது கடலில் மூழ்கி இறந்து அவரது உடல் அலையில் இழுத்து கொண்டுவரப்பட்டு கன்னியாகுமரி கடற்கரை யில் கரை ஒதுங்கியதா? என்பன போன்ற பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வடநாட்டு சுற்றுலா பயணியாக இருக்கலாமா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வாலிபர் யார்? என்பது குறித்து 3 நாட்கள் ஆன பிறகும் இன்னும் அடையாளம் கண்டு பிடிக்க முடியாமல் போலீ சார் திணறி வருகிறார் கள். கன்னியாகுமரி கடலில் பிணமாக மிதந்த வாலிபரின் சட்டை மற்றும் பேண்டில் எந்தவித அடையாள அட்டைகளும் இல்லாததால் இந்த நிலை போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

    • மதுரையின் புதிய அடையாளமாக கலைஞர் நூற்றாண்டு நினைவு நூலகம் திகழ்கிறது.
    • ஆங்கில நூல்கள், நூலக நிர்வாகப்பி–ரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவ–ருந்தும் அறைகள் கட்டப்பட்டுள்ளது.

    மதுரை

    மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணா–நிதி நினைவாக மதுரையில் கலைஞர் நினைவு நூலகம் கட்டப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து நூலகம் கட்டும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

    இதையடுத்து மு.க.ஸ்டா–லின் கடந்த ஆண்டு ஜனவரி 11-ந்தேதி மதுரை நத்தம் சாலையில் ரூ.120.75 கோடி மதிப்பில் கலைஞர் நினைவு நூலகம் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். தற் போது ரூ.134 கோடியில் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

    கலைஞர் நூலகம் கீழ் தளம், தரைத்தளத்துடன் 6 தளங்கள் கொண்ட கட்டி–டமாக 2 லட்சத்து 13 ஆயி–ரத்து 288 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. நூலகத் தின் கீழ்தளத்தில் வாகனங் கள் நிறுத்துமிடம், நாளிதழ் கள் சேமிப்பு அறை, நூல் கட்டும் பிரிவும், தரைத்த–ளத்தில் கலைக்கூடம், மாற்றுத்திறனாளிகள் பிரிவு, மாநாட்டு கூடம், முக்கிய பிரமுகர்கள் அறை, மின் கட்டுப்பாட்டு அறை, தபால் பிரிவு உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது.

    முதல் தளத்தில் கலைஞ–ரின் நினைவைப் போற்றும் வகையில் அவரது கவிதை–கள், கட்டுரைகள், அரசியல், இலக்கியம், வரலாறு புத்த–கங்கள், திரைப்படத்துறை தொடர்பான புத்தகங்கள் தனிப்பிரிவாக இடம் பெறு–கிறது.அத்துடன் குழந்தைகள் நிகழ்ச்சி அரங்கம், பருவ இதழ்கள் மற்றும் நாளிதழ் கள் பிரிவு உள்ளது.

    இரண்டாம் தளத்தில் தமிழ் நூல்கள் பிரிவும், 3-ம் தளத்தில் ஆங்கில நூல்கள், ஆராய்ச்சி இதழ்கள் பிரிவும் உள்ளது. 4-வது தளத்தில் போட்டித் தேர்வுகள் தொடர்பான நூல்கள் இடம் பெறுகின்றன. 5-ம் தளத்தில் அரிய நூல்கள், மின் நூல–கம், ஒளி, ஒலி தொகுப்பு–கள் காட்சியகப்பிரிவு, பார்வை–யற்றோருக்கான மின் நூல் ஒலி நூல் ஸ்டுடியோ உள் ளது.

    6-ம் தளத்தில் ஆங்கில நூல்கள், நூலக நிர்வாகப்பி–ரிவு, நூல்கள் கொள்முதல் பிரிவு, பணியாளர் உணவ–ருந்தும் அறைகள் கட்டப்பட் டுள்ளது. தற்போது அனைத்து தளங்களிலும் பணிகள் நிறைவடைந்து நூலகத்துறையிடம் ஒப்ப–டைக்கப்பட்டு உள்ளது.

    மின் விளக்குகள், குளி–ரூட்டப்பட்ட அறைகள், 6 மாடிகளுக்கு செல்ல நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகளும் முடிவடைந்துள் ளன. கட்டிடத்தின் நடுப்பகு–தியில் சூரியவெளிச்சம் கிடைக்கும் வகையில், கண்ணாடி பேழையிலான கூடாரம் அமைக்கப்பட்டுள் ளது. அலங்கார வடிவமைப் புடன், இண்டீரியர் டெகரே–ஷன் எனும் உள் அரங்குகள் வடிவமைப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளது.

    வெளிப்புற அலங்கார கட்டுமான பணிகளும் கலை–ஞரின் உருவச்சிலை அமைக் கும் பணி, மாடித் தோட்டத் துடன் நூல்களை படிப்பதற் கான வசதியும், கலைக்கூ–டமும் அமைக்கப்பட்டுள் ளது. நூலகத்தில் சுமார் 5 லட்சம் புத்தகங்கள் இடம் பெறும் வகையில் அமைக் கப்பட்டுள்ளது. தற்போது 3.50 லட்சம் புத்தகங்கள் அடுக்கும் பணிகளும்ந நிறைவடைந்துள்ளது. சுமார் 17 மாதங்களாக நடைபெற்று வந்த கட்டுமான பணிகள் 100 சதவீதம் முடிந்து விட் டது.

    இந்த கலைஞர் நூற் றாண்டு நினைவு நூலகம் திறப்பு விழா வருகிற 15-ந் தேதி மாலை 5 மணிய–ளவில் பிரமாண்டாக நடைபெற உள்ளது. விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு நூலகத்தை திறந்துவைக்கிறார்.

    மதுரை என்றாலே மீனாட்சி அம்மன் கோவில், மல்லிகை பூ, அழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி, திருப்ப–ரங் குன்றம், பழமுதிர்ச் சோலை முருகன் கோவில் கள், காந்தி மியூசியம், தெப் பக்குளம், திருமலை நாயக் கர் மகால் உள்ளிட்ட பல் வேறு சிறப்பு அம்சங்கள் மதுரைக்கு பெருமைமிக்க அடையாளங்களாக விளங் குகிறது.

    இதற்கெல்லாம் முத் தாய்ப்பாக தமிழகத்தில் சென்னை அண்ணா நூல–கத்திற்கு பிறகு இரண்டாவது பெரிய நூலகமாக மது–ரைக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் அடையாளங்க–ளில் ஒன்றாக மதுரையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நூற்றாண்டு நினைவு நூல–கம் அமையும் என்பதில் ஐயமில்லை.

    • கருங்கல் பகுதியைச் சேர்ந்தவர்
    • நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் பிரதீஷ் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் பார்வதி புரம் மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் ஒருவர் பார்சல் வாகனம் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே பலி யானார்.

    அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து நாகர்கோவில் போக்கு வரத்து பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்ட னர். விசாரணையில் பலியா னவர் கருங்கல் மங்கலகுன்று பகுதியைச் சேர்ந்த பிரதீஷ் (வயது 18) என்பது தெரிய வந்துள்ளது. பலியான பிரதீஸ் கருங்கலில் இருந்து நாகர்கோவிலுக்கு வந்து விட்டு வீட்டிற்கு திருப்பும் போது விபத்தில் சிக்கி பலியாகி உள்ளார்.

    பலியான பிரதீஸ் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்தி ரியில் வைக்கப் பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை இன்று நடக்கிறது. இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் பிரதீஷ் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர்.

    • இரட்டை கொலையில் குற்றவாளிகள் அடையாளம் தெரிந்ததாக டி.ஐ.ஜி தெரிவித்துள்ளார்.
    • தங்க நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த ஜனவரி மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய் மகளை கொலை செய்து 60 தங்க நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். பேரன் மூவரசனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    டி.ஐ.ஜி. துரை சம்பவம் நடந்த நாளிலிருந்து தேவகோட்டை பகுதிகளில் முகாமிட்டு அவரது மேற்பார்வையில் 10 தனி படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இதில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யாததை கண்டித்து சட்ட ஒழுங்கு குழு தலைவர் கேஆர். ராமசாமி, சிவகங்கை எம்.எல்.ஏ. செந்தில்நாதன் தலைமையில் தியாகிகள் பூங்கா அருகே சுமார் 5000க்கும் மேற்பட்டோர் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.

    மாவட்ட கண்காணிப்பாளர் செல்வராஜ், காரைக்குடி உதவி கண்காணிப்பாளர் ஸ்டாலின் தலைமையிலான தனி படை பிரிவினர் பல்வேறு கட்ட விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று டி.ஐ.ஜி. துரை சிவகங்கையில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கண்ணங்கோட்டையில் இரட்டை கொலை சம்பவம் குறித்து கூறும்போது, குற்றவாளிகளை அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும் குற்றவாளிகளை கைது செய்து. தங்க நகைகளையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

    • யார் அவர்? என்று போலீசார் விசாரணை
    • பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் கிடந்தார்

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி போலீஸ் நிலையம் அருகே உள்ள பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பில் இருந்து கோவளம் செல்லும் சாலையில் உள்ள ஒரு ஓட்டல் பார் முன்பு சுமார் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.

    இது குறித்து அந்த வழியாக சென்றவர்கள் கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பிணமாக கிடந்த முதியவர் குறித்து எந்த விவரமும் தெரியவில்லை. இதையடுத்து பிணமாக கிடந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? இவரது பெயர் என்ன? எப்படி இறந்தார்? என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார்.
    • இவர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    சேலம்:

    நாமக்கல் ரெயில் நிலையத்திற்கும், மோகனூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் நேற்று இறந்து கிடந்தார். அவர் உடல் முழுவதும் சிராய்ப்பு காயங்கள் ஏற்பட்டு இருந்தது. அவர் வெள்ளை, காபி கலரில் கோடு ேபாட்ட ரெடிமேட அரைகை சட்டை, பச்சை, கருப்பு நிற பாக்கெட் வைத்த டிரவுசர் அணிந்திருந்தார். இவர் பெயர் மற்றும் எந்த ஊரை சேர்ந்தவர்? என தெரியவில்லை.

    இது குறித்து மோகனூர் ரெயில் நிலையத்தின் அதிகாரி சேலம் ரெயில்வே போலீ சாருக்கு த கவல் தெரிவி த்தார். அதன்பேரில் போலீசார், அங்கு சென்று தண்டவாளத்தில் கிடந்த முதியவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த முதியவர் உடல் ஆஸ்பத்திரி பிண வறையில் வைக்கப்பட்டுள்ளது. இவரை பற்றி ஏேதனும் தகவல் கிடைத்தால் பொது மக்கள் போலீஸ் நிலையத்தில் தெரிவிக்கும்படி ரெயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    தாரமங்கலம் சந்தைபேட்டையில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் மீட்கப்பட்டனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் சந்தை பேட்டை பகுதியில் சுமார் 50 வயது மதிக்கதக்க ஆண் சடலம் ஒன்று கிடப்பதை கண்டு பொதுமக்கள் தாரமங்கலம் கிராம நிர்வாக அலுவலர் சுசீலாவிற்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்படி சடலத்தை பார்வையிட்ட கிராம நிர்வாக அலுவலர் சுசீலா தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இறந்தவர் யார் .எந்த ஊரை சேர்ந்தவர் என்பது பற்றி தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ×