search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்பிங்"

    • கைதான பட்டதாரி வாலிபர் நாகர்.ஜெயிலில் அடைப்பு
    • ஆபாசமாக மார்பிங் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    நாகர்கோவில் :

    தக்கலை அருகே மண லிக்கரை புதூர் கோணம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்டான்லி பிரின்ஸ் (வயது 32), பி.ஏ.பி.எட் பட்டதாரி.

    இவர் நாகர்கோவிலில் உள்ள கவரிங் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். அந்த கடைக்கு தக்கலை பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் அடிக்கடி வந்து சென்றார். இதையடுத்து ஸ்டான்லி பிரின்சுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்ப ட்டது. இருவரும் காதலித்து வந்தனர்.

    பின்னர் ஸ்டாலின் பிரின்ஸ், இளம் பெண்ணை ஒரு கோவிலிலுக்கு அழைத்து சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி இருவரும் கருங்கல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். திருமணம் முடிந்த சில நாட்களில் ஸ்டான்லி பிரின்சின் நடவடிக்கை பிடிக்காததால் அந்த இளம் பெண் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்டான்லி பிரின்ஸ் அந்த பெண்ணின் புகைப்படங்களை ஆபாசமாக சித்த ரித்து அவரது செல்போன் எண்ணிற்கு அனுப்பினார். தன்னுடன் குடும்ப நடத்த வரவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடு வதாகவும் மிர ட்டினார்.

    இது குறித்து இளம்பெண் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் ஸ்டா ன்லி பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த 28 வயது கல்லூரி பேராசிரியர் ஒருவரும் கவரிங் கடையில் நகை ஆர்டர் கொடுத்துள்ளார். அந்த நகை தான் அணிந்தி ருக்கும் நகை மாடலை போன்று இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். தனது திருமண போட்டோவை ஸ்டான்லி பிரின்ஸ் வாட்ஸ் அப் எண்ணிற்கு பேராசி ரியர் அனுப்பி உள்ளார்.

    இந்த நிலையில் ஸ்டான்லி பிரின்ஸ் வாட்ஸ் அப் மூலம் பேராசிரியருக்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். இதை கண்டித்ததால் ஆத்தி ரம் அடைந்த ஸ்டான்லி பிரின்ஸ், பேராசிரியர் போட்டோவை மார்பிங் செய்து அவரது வாட்ஸ் அப்பிற்கு அனுப்பினார். என்னிடம் பேசாவிட்டால் ஆபாச போட்டோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டியுள்ளார். இது தொடர்பாக ஸ்டான்லி பிரின்ஸ் மீது பேராசிரியரும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் ஸ்டான்லி பிரின்ஸ் மீது வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று ஸ்டான்லி பிரின்சை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ஸ்டா ன்லி பிரின்சிடம் போலீசார் விசாரணை மேற்கொ ண்டனர். ஸ்டான்லிபிரின்ஸ் வேறு ஏதாவது பெண்க ளுக்கு ஆபாச படங்களை சித்தரித்து சமூக வலைதள ங்களில் அனுப்பி உள்ளா ரா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொ ண்டனர். இதற்கிடையில் போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர்.

    சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், புகைப்பட ங்களை மார்பிங் செய்து மிரட்டல் விடுத்தால் உடனடியாக போலீசில் புகார் செய்தால் நடவடி க்கை எடுக்கப்படும். பெண்கள் தங்களது புகை ப்பட ங்களை அறிமுகம் இல்லாத நபர்களுக்கு அனுப்பி வைப்பதை தவிர்க்க வேண்டும். புகைப்படங்களை வைத்து ஆபாசமாக மார்பிங் செய்யும் சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே பெண்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றனர்.

    • பெண்கள் பதிவெட்டில் கையெழுத்திடும் போது அவர்களுக்கு தெரியாமல் செல் போனில் போட்டோ எடுத்துள்ளார்.
    • வசந்த குமார் தனது செல்போனை நண்பர் தினேசிடம் அடமானம் வைத்து பணம் பெற்று ள்ளார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்துள்ள வீரசோழபுரம் ஊராட்சியில் தற்காலிக பணிதள பொறுப்பாளராக பணிபுரிந்தவர் வசந்தகுமார் (வயது27).இவர் ஊரக வேைல திட்ட பணிக்கு வரும் பயனாளிகள் குறித்த பதிவேடுகளை பராமரிக்கும் வேலையை செய்த வந்தார். வேலை செய்த பெண்கள் பதிவெட்டில் கையெழுத்திடும் போது அவர்களுக்கு தெரியாமல் செல் போனில் போட்டோ எடுத்துள்ளார்.அவர்களின் முகத்தை ஆபாச படத்துடன் இணை த்து மார்பிங் செய்து ரசித்துள்ளார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் வசந்த குமார் தனது செல்போனை நண்பர் தினேசிடம் அடமா னம் வைத்து பணம் பெற்று ள்ளார்.

    அப்போது செல்போ னில் வைத்திருந்த ஆபாசப டங்களை அழித்து விட்டு கொடுத்துள்ளார். ஆனால் தினேஷ் அழிக்கப்பட்ட படங்களை மீட்டெடுத்து பார்த்து அதிர்ச்சி அடை ந்தார். ஆபாச படங்களை வார்டு உறுப்பினரான தங்கராஜ் மகன் ரவியிடம், தினேஷ் காண்பித்துள்ளார் . அப் படங்களை ரவி ேவறு சிலருக்கு பகிர்ந்துள்ளார். அந்த படங்களை பெண்களின் உறவினர் சிலர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். வசந்த குமாரை கைது செய்யக் கோரி சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 100 நாள் வேலையில் பணியாற்றும் பெண்கள், பெண்களை ஆபாசமாக போட்டோ மற்றும் வீடியோ மார்பிங் செய்த நபரை கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து வசந்த குமாரை போலீ சார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை வீரசோ ழபுரம் பொதுமக்கள் நேற்று முற்றுகையிட்டு குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடு க்க வேண்டும் என கலெ க்டர் ஷ்ரவன் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் தினேஷ் மற்றும் ரவியை போலீசார் நேற்று கைது செய்தனர். கிராம மக்கள் மறியல் குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெயலட்சுமி தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சட்ட விரோதமாக ஒன்றுகூடி, சாலையை மறித்து, அரசு அனுமதியின்றி அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடப்பட்டதாக அதே பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், கோவி ந்தராஜ், ஆனஸ்ட்ராஜ், சதீஷ், ராஜா, மணிகண்டன் உள்ளிட்ட 20 பேர் மீது புகார் மனு அளித்துள்ளார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • தொடர்ந்து மிரட்டிய புகாரில் போலீசார் கைது செய்தனர்
    • மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    நாகர்கோவில் :

    முகநூலில் பெண்கள் படத்தை பதிவிட்டால், சிலர் தவறாக சித்தரிக்கின்றனர். எனவே படத்தை பதிவிடாதீர்கள் என பலமுறை போலீசார் எச்சரித்தாலும் அதனை கேட்காத சிலர் முகநூலில் படத்தை வெளியிட்டு வம்பில் சிக்குவது தொடர் கதையாகவே உள்ளது.

    மேலும் அவர்கள் பணத்தையும் இழந்து வருவது தான் வேதனையான விஷயம். இளம்பெண்கள் மட்டுமல்லாமல் 60 வயதான மூதாட்டி ஒருவரும் இந்தப் பிரச்சினையில் சிக்கி பணத்தை இழந்துள்ளார். அவரிடம் குமரி மாவட்ட வாலிபர் பணத்தை பறித்த நிலையில், தற்போது போலீசார் அவரை கைது செய்து உள்ளனர். இது பற்றிய விவரம் வருமாறு:-

    கன்னியாகுமரி மாவட்டம் நெய்யூர் பட்டரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் அருள் (வயது 30), மெக்கானிக்கல் என்ஜினீயர். இவருக்கு முகநூல் மூலம் கர்நாடக மாநிலம் பெங்களூரூ அருகே உள்ள கொடிப்பாடி புத்தூரைச் சேர்ந்த 60 வயது மூதாட்டி ஒருவர் பழக்கமானார். நாளடைவில் அருள் பேச்சை நம்பி, தனது போட்டோக்களை அந்த மூதாட்டி பகிர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் மூதாட்டியிடம் போனில் பேசிய அருள், உங்கள் புகைப்படங்களை மார்பிங் செய்து வெளியிடப் போகி றேன் என்று கூறி உள்ளார். இதனை கேட்டு மூதாட்டி அதிர்ச்சி அடைந்தார். அப்படி செய்ய வேண்டாம் என்று அருளிடம் கூறி உள்ளார்,

    இதனை அருள், தனக்கு சாதகமாக பயன்படுத்தி மூதாட்டியிடம் இருந்து பணம் பறித்துள்ளார். கூகுள் பே மூலம் ரூ.12 ஆயிரம் பெற்ற அவர், கூடுதலாக ரூ.50 ஆயிரம் தருமாறு கேட்டுள்ளார். பணம் தராவிட்டால், மார்பிங் படத்தை உங்கள் கணவருக்கு அனுப்பி விடுவேன் என மிரட்டி உள்ளார்.

    இதனால் மனமுடைந்த மூதாட்டி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரூ புத்தூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து பெண்மைக்கு களங்கம் விளைவித்தது, பெண்ணை மிரட்டி பணம் பறித்தது உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர்ந்து கர்நாடக போலீசார் நேற்று கன்னியாகுமரி மாவட்டம் வந்தனர். அவர்கள், இரணியல் போலீசார் உதவியுடன் நெய்யூர் சென்று என்ஜினீயர் அருளை கைது செய்தனர். பின்னர் அவரை விசாரணைக்காக பெங்களூரூ அழைத்துச் சென்றனர்.

    • பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது.
    • சில நாட்கள் கழித்து எனது போட்டோவை மார்பிங் செய்து எனது மொபைலுக்கு அனுப்பி குறுந்தகவல் வந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை சேர்ந்த ஒரு தனியார் வங்கி உதவி மேலாளர். இவர் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது :-

    எனது பேஸ்புக் பக்கத்தில் ஆன்லைன் கிரடிட் மூலம் லோன் தருகிறோம் என ஒரு விளம்பரம் வந்தது. மேலும் கிரடிட் லோன் என்ற செயலியை பதிவிறக்கம் செய்யுமாறு கூறப்பட்டது.

    அதன்படி நானும் மொபைலில் பதிவிறக்கம் செய்தேன்.

    இதை எடுத்து எனது மொபைலில் கேலரி, தொடர்பு எண்கள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல்வேறு செயலிக்கு நான் அந்த செயலில் கூறப்பட்டுள்ள மாதிரி அக்சஸ் செய்து கொண்டேன்.

    பின்னர் உங்களுக்கு லோன் தருகிறோம். அதற்காக நீங்கள் கட்டணமாக ரூ.5000 செலுத்த வேண்டும் என கூறப்பட்டது. இதனால் நான் அந்த கட்டணத்தை செலுத்தாமல் வெளியேறி விட்டேன்‌‌.

    சில நாட்கள் கழித்து எனது வங்கி கணக்குக்கு ரூ.9000 வரவு வைக்கப்பட்டது.

    இந்த பணம் அந்த செயலி மூலம் வரவு வைக்கப்பட்டது என்பதை அறிந்தேன்.

    இருந்தாலும் நான் அதனை கண்டுக்கொள்ளாமல் விட்டுவிட்டேன்.

    சில நாட்கள் கழித்து எனது போட்டோவை மார்பிங் செய்து எனது மொபைலுக்கு அனுப்பி இதனை வெளியிடாமல் இருப்பதற்காக ரூ.14700 தர வேண்டும் என குறுந்தகவல் வந்தது.

    மேலும் மார்பிங் செய்யப்பட்ட எனது போட்டோவை எனது உறவினர்களுக்கும் அந்த மர்ம நபர்கள் அனுப்பி வைத்துள்ளனர் இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தேன்.

    ஏமாற்றப்பட்டோம் என்பதையும் உணர்ந்தேன். எனவே மர்ம நபர்களை கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    புகாரின் பேரில் தஞ்சை சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப் -இன்ஸ்பெக்டர் கார்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×