இரணியல் அருகே மது குடித்து தகராறு செய்த தந்தையை தாக்கிய மகன்

அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, மனைவி ஜெயாவிடம் தகராறு செய்வது வழக்கம்.ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.
இரணியல் அருகே மது குடித்து தகராறு செய்த தந்தையை தாக்கிய மகன்
Published on

கன்னியாகுமரி :

இரணியல் அருகே உள்ள சுங்கான்கடை பனவிளை என்ற இடத்தை சேர்ந்தவர் சாலமன் (வயது 56). மது பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி மது அருந்தி விட்டு வந்து, மனைவி ஜெயாவிடம் தகராறு செய்வது வழக்கம்.

நேற்று இரவும் சாலமன் மது அருந்தி வந்து வீட்டில் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவரது 15 வயது மகன், கீழே கிடந்த பீர் பாட்டிலை எடுத்து சரமாரியாக தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த சாலமன், ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது குறித்து அவரது மனைவி ஜெயா அளித்த புகாரின் பேரில் இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com