என் மலர்
உலகம்
- பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு [UNRWA] நிவாரண பொருட்களை வழங்கி வருகிறது.
- வடக்கு காசாவுக்குள் செல்லும் உணவுப் பொருட்களைத் தடுத்து அவர்களை பட்டினி போட்டு அங்கிருந்து வெளிற்ற ஜெனரசல்ஸ் பிளான் ஒப்புதலுக்கு நிலுவையில் உள்ளது.
பாலஸ்தீனம் மீது கடந்த ஒரு வருடகாலமாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமே ஆவர். மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். வீடுகளையும் உறவுகளையும் இழந்து அகதி முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளவர்கள் மீதும் தாக்குதல் நடத்துகிறது இஸ்ரேல்.
உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இன்றி ஊட்டச்சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்குக் கிடைக்கும் சொற்ப நிவாரண பொருட்களையும் தடுக்க இஸ்ரேல் பாராளுமன்றம் மசோதா ஒன்றுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பாலஸ்தீனிய அகதிகளுக்கான ஐநா அமைப்பு [UNRWA] இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமிலும் செயல்படத் தடை விதிக்கும் மசோதாவுக்கு நேற்றைய தினம் இஸ்ரேல் பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மசோதா நடைப்முறைபடுத்தப்பட்ட பின்னர் காசாவுக்குள் செல்லும் சொற்ப நிவாரண உதவிகள் அனைத்தும் தடைப்படும் சூழல் உருவாகும் என்று ஐநா கவலை தெரியவிட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது முதலே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த அமெரிக்கா, தற்போது இஸ்ரேல் பாராளுமன்றம் இதற்கு ஒப்புதல் வழங்கியது குறித்து கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

முன்னதாக ஐநா பொதுச்செயலாளர் இஸ்ரேலுக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டது. லெபனான்- இஸ்ரேல் எல்லையைப் பிரிக்கும் நீலக் கோட்டில் அமைத்துள்ள ஐநா அமைதிப்படை தலைமையகம் மீது இஸ்ரேலிய படைகள் தாக்குதல் நடத்தின.

மேலும் வடக்கு காசாவுக்குள் செல்லும் உணவுப் பொருட்களைத் தடுத்து அவர்களை பட்டினி போட்டு அங்கிருந்து வெளிற்ற ஜெனரல்ஸ் பிளான் என்ற திட்டமும் இஸ்ரேல் பாராளுமன்றத்தில் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது. இவ்வாறு தொடர்ந்து இஸ்ரேல் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் அந்நாட்டை ஆதரிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளையும் முகம் சுளிக்க வைத்துள்ளன.

- ரஷியாவுக்கு வடகொரியா தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறது.
- வீரர்களில் சிலர் ஏற்கனவே உக்ரைனை நெருங்கி உள்ளனர்.
பிரசல்ஸ்:
ரஷியா-உக்ரைன் போர் 2022-ம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது. போரை நிறுத்த உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன. எனினும் ரஷியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருப்பதால் போர் நீடிக்கிறது. உக்ரைனுக்கு நேட்டோ நாடுகள் உதவி செய்கின்றன. ரஷியாவுக்கு வடகொரியா தொடர்ந்து ஆதரவை வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் ரஷிய படைகளுக்கு ஆதரவாக வட கொரிய படைகளும் சண்டையிட உள்ளன. இதற்காக 10 ஆயிரம் வீரர்களை ரஷியாவுக்கு அனுப்பி உள்ளதாக அமெரிக்கா கூறி உள்ளது.
இதுபற்றி அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறியதாவது:-
அடுத்த சில வாரங்களுக்குள் உக்ரைனில் போர்ப் பயிற்சி மற்றும் போரில் ஈடுபடுவதற்காக வட கொரியா சுமார் 10,000 துருப்புக்களை ரஷியாவிற்கு அனுப்பியுள்ளது. அந்த வீரர்களில் சிலர் ஏற்கனவே உக்ரைனை நெருங்கி உள்ளனர்.
ரஷியாவின் குர்ஸ்க் பகுதியில் உக்ரைன் படைகளுக்கு எதிரான போரில் இந்த வீரர்களை பயன்படுத்த ரஷியா உத்தேசித்திருப்பதாக நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம்.
வட கொரியாவின் வீரர்கள் போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்டால், அவர்களும் தாக்குதல் இலக்குகளாக கருதப்படுவார்கள். ஆனால் அவர்களை போரில் பயன்படுத்துவது இந்தோ-பசிபிக் பாதுகாப்பிலும் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும் என்று எங்கள் ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் ஏற்கனவே பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இவ்வாறு பென்டகன் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
உக்ரைன் வீரர்களின் ஊடுருவலை முறியடிக்க ரஷியா போராடி வரும் குர்ஸ்க் பகுதியில் வடகொரிய படை வீரர்களில் சிலர் ஏற்கனவே ரஷியாவில் முகாமிட்டுள்ளனர் என்று நேட்டோ கூறி உள்ளது.
- ராணுவ வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
- பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிமருந்து, துப்பாக்கி போன்றவை கைப்பற்றப்பட்டன.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்தநிலையில் அங்குள்ள வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.
அப்போது ராணுவ வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பயங்கரவாதிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிமருந்து, துப்பாக்கி போன்றவை கைப்பற்றப்பட்டன.
- திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதியது
- மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்தது
கனடாவில் நடத்த கார் விபத்தில் 4 இந்தியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள டொரன்டோ நகரில் கடந்த வியாழக்கிழமை அதிவேகமாக சென்றுகொண்டிருந்த கார், திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர இரும்பு தடுப்பில் மோதி பின்னர் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
மோதிய வேகத்தில் கார் தீப்பற்றி எரிந்த நிலையில் காரில் இருந்த 4 இந்தியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த ஒரு பெண்ணை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கார் விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததற்கு டொரன்டோவில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது. அவர்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படுவதாகவும் கூறி உள்ளது.
- அரசுக்கு எதிரான விமர்சனத்தைக் கலைக்க பொய் வழக்குகள் போடப்பட்டன
- நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது கடந்த வருடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போடப்பட்டு அதன் நிறுவனர் கைது செய்யப்பட்டார்.
அரசுகளுக்கு எதிரான கருத்துகளை வெளியிடும் பத்திரிகைகள் குறிவைக்கப்படுவதாக க உலக செய்தி வெளியீட்டாளர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், அரசுக்கு எதிரான விமர்சனத்தைக் கலைக்க பணமோசடி, வரி ஏய்ப்பு, பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல், சட்டவிரோத, நிதி மோசடி உள்ள பொய் வழக்குகள் போடப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்தியாவில் டெல்லியில் இயங்கி வரும் நியூஸ் கிளிக் நிறுவனத்தின் மீது கடந்த வருடம் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் போடப்பட்டு அதன் நிறுவனர் கைது செய்யப்பட்டதை இந்த சர்வதேச ஆய்வு சுட்டிக்காட்டி கவலை தெரிவித்துள்ளது.


இதுபோல உலகம் முழுவதும் உள்ள பல அரசாங்கங்கள் பத்திரிகை சுதந்திரத்தை ஒடுக்குவதாக அவ்வமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. மத்திய பாஜக அரசின் செயல்பாடுகளை நியூஸ் கிளிக் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கர்நாடகாவை சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்து அமைப்பினரால் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த வழக்கில் கைதான குற்றவாளிகள் அனைவரும் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
- சட்ட விரோத தொழிலாளியாக மாறினார்.
- சட்டத்தை மீறி உள்ளார் என்று ஜோபைடன் தெரிவித்து உள்ளார்.
வாஷிங்டன்:
உலகில் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ்,டெஸ்லா உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக இருந்து வருகிறார்.
அடுத்த மாதம் நடைபெற இருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் இவர் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பை ஆதரித்து உள்ளார். சட்டவிரோத குடியேற்றத்துக்கு எதிராக இருந்து வரும் எலான் மஸ்க் தற்போது அதே பிரச்சினையில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.
தொழில் அதிபர் எலான் மஸ்க் தனது வாழ்க்கையின் தொடக்கத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக பணியாற்றினார் என தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டு உள்ளது.
அதில் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த எலான் மஸ்க் 1995-ம் ஆண்டு ஸ்டான் போர்ட் பல்கலைக்கழக படிப்பை நிறுத்தி விட்டு ஜிப்-2 என்ற நிறுவனத்தில் 4 ஆண்டுகள் வேலை செய்தார். இது தான் அவரது முதல் வேலை. இந்த காலகட்டத்தில் அவர் முறையான அங்கீகாரம் இல்லாமல் பணிபுரிந்து உள்ளார்.
1997-ம் ஆண்டு அமெரிக்காவில் பணி செய்வதற்கான அங்கீகாரத்தை பெற்றார். மாணவர் விசாவில் அவர் அமெரிக்காவில் இருந்தது சட்டவிரோதமாகும் என அந்த செய்தியில் கூறப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறும் போது உலகில் மிகப்பெரிய பணக்காரர் இங்கு ஒரு சட்ட விரோத தொழிலாளியாக மாறினார்.
அவர் மாணவர் விசாவில் வந்த போது பள்ளியில் தான் இருக்க வேண்டும். ஆனால் அவர் பள்ளியில் இல்லை. அவர் சட்டத்தை மீறி உள்ளார் என்று தெரிவித்து உள்ளார்.
எலான் மஸ்க் விவகாரம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 90-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகள் ஹமாஸ் கைவசம் உள்ளனர்.
- அவர்களை மீட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்ற வருகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸ் அமைப்பினருக்கும் இடையில் போர் நடைபெற்று வருகிறது. ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலில் பாலஸ்தீன மக்கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
அதேவேளையில் ஹமாஸ் அமைப்பினர் பிணைக்கைதிகளாக பிடித்துச் சென்றவர்களை மீட்கும் வரை தாக்குதல் ஓயாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
எகிப்து இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் நிறுத்தம் ஏற்பட மத்தியஸ்தரகாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஒருவாரம் போர் நிறுத்தம் ஏற்பட்டது 100-க்கும் மேற்பட்ட பிணைக்கைதிகளை விடுவிக்கப்பட்டனர்.
அதன்பின் போர் நிறுத்தம் ஏற்படவில்லை. தற்போது வரை சுமார் 100 பிணைக்கைதிகள் ஹமாஸிடம் உள்ளனர். கடந்த வாரம் இஸ்ரேல்-காசா இடையே போர் நிறுத்தம் ஏற்பட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் நான்கு பிணைக்கைதிகைள திரும்பப் பெறுவதற்கான போர் நிறுத்தத்தை எகிப்து பரிந்துரை செய்துள்ளது. நான்கு பிணைக்கைதிகளை திரும்பப் பெற இரண்டு நாட்கள் போர் நிறத்தத்திற்கு பரிந்துரை செய்துள்ளது. இந்த தகவலை எகிப்பு அதிபர் அப்தெல்-ஃபத்தா-எல்-சிசி தெரிவித்துள்ளார்.
நான்கு பிணைக்கைதிகளுக்காக இஸ்ரேல் சிறையில் பாலஸ்தீனர்களை இஸ்ரேல் விடுவிக்க வேண்டும். இரு தரப்பிலும் இந்த பரிந்துரை ஏற்கப்பட்டால் நான்கு பிணைக்கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
- பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22-ந்தேதி ஒரு கடைக்கு சென்றார்.
- வெற்றியாளருக்கு பரிசுத் தொகையைப் பெற இரண்டு விருப்பங்கள் இருந்தன.
அமெரிக்காவின் வட கரோலினாவை சேர்ந்த ஒருவர் ஒரு கடைக்கு வெளியே தரையில் கிடந்த $20 வைத்து வாங்கிய டிக்கெட்டுக்கு $1 மில்லியன் லாட்டரி அடித்துள்ளது.
பேனர் எல்க்சின் தலைசிறந்த தச்சரான ஜெர்ரி ஹிக்ஸ் கடந்த 22-ந்தேதி ஒரு கடைக்கு சென்றார். ஸ்பீட்வேக்கு வெளியே வாகன நிறுத்துமிடத்தில் $20 கிடப்பதைக் கண்டார்.
அவர் அதை எடுத்துக்கொண்டு, பூனில் உள்ள NC 105 இல் ஸ்பீட்வேயில் நடந்து, ஒரு எக்ஸ்ட்ரீம் கேஷ் ஸ்கிராட்ச்-ஆஃப் வாங்கினார்.
ஜெர்ரி ஹிக்ஸ் தேடிய டிக்கெட் அவர்களிடம் உண்மையில் இல்லை, அதற்கு பதிலாக அவர் இதை வாங்கி உள்ளார். அந்த டிக்கெட்டுக்கு $1 மில்லியன் லாட்டரி மூலம் ஜாக்பாட் அடித்துள்ளது.
வெற்றியாளருக்கு பரிசுத் தொகையைப் பெற இரண்டு விருப்பங்கள் இருந்தன.
20 ஆண்டுகளில் $50,000 அல்லது மொத்த தொகையாக $600,000 பரிசைப் பெறுங்கள். அவர் பிந்தையதை தேர்ந்தெடுத்தார் மற்றும் தேவையான மாநில மற்றும் வரி பிடித்தம் செய்த பிறகு $429,007 கிடைத்துள்ளது.
ஹிக்ஸ் குடும்பத்திற்கான திட்டங்களை வைத்துள்ளார். அவர் வெற்றி பெறும் தொகையை தனது குழந்தைகளுக்கு உதவவும், 56 ஆண்டுகள் தச்சராக பணியாற்றி ஓய்வு பெறவும் விரும்புகிறார்.
- சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 20 வயது மாடல் அழகியான ரேச்சல் குப்தா போட்டியிட்டார்.
- வெற்றி பெற்ற ரேச்சல் குப்தாவுக்கு முன்னாள் அழகி மகுடம் சூட்டினார்.
பாங்காங்:
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் சர்வதேச அழகி போட்டியான 'மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2024' போட்டிகள் நடந்தது. முன்னதாக அந்தந்த நாடுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிப்பெற்று மகுடம் சூடிய 70 அழகிகள் இந்த போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பஞ்சாபை சேர்ந்த 20 வயது மாடல் அழகியான ரேச்சல் குப்தா போட்டியிட்டார். பாரம்பரிய உடை, நவநாகரிக உடை உள்ளிட்ட தகுதி சுற்றுக்களுக்கான போட்டிகள் நடந்து முடிந்தன. அனைத்து சுற்றுக்களிலும் அதிக புள்ளிகள் பெற்று ரேச்சல் குப்தா முதலிடம் பிடித்தார்.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த சிஜே ஒபைசா என்பவர் 2-ம் இடம் பிடித்தார். இதனால் 'மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல்-2024' வெற்றியாளராக ரேச்சல் குப்தா அறிவிக்கப்பட்டார்.
வெற்றி பெற்ற ரேச்சல் குப்தாவுக்கு முன்னாள் அழகி மகுடம் சூட்டினார். 12 ஆண்டுகளாக நடைபெறும் இந்த 'மிஸ் கிராண்ட் இண்டர்நேஷனல்' போட்டியில் இந்திய அழகி வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும்.
- சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
- எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
ஜகார்த்தா:
பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் அமைந்திருப்பதால் இந்தோனேசியாவில் செயல்படும் பல எரிமலைகள் காணப்படுகின்றன. அவற்றில் சுமத்ரா மாகாணத்தில் உள்ள மராபி எரிமலை குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இங்கு மலையேற்ற வீரர்கள் சாகசத்தில் ஈடுபடுவதால் சிறந்த சுற்றுலா தலமாகவும் திகழ்கிறது.
இந்தநிலையில் மராபி எரிமலை நேற்று பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. அப்போது சுமார் 6 ஆயிரத்து 500 அடி உயரத்துக்கு கரும்புகை வெளியேறியது. எனவே அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் எரிமலையை சுற்றியுள்ள பகுதியில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
- சுற்றுலா சென்ற பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
- இதனால் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது.
மெக்சிகோ சிட்டி:
வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு சுற்றுலா பஸ் ஒன்று நேற்று புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சில் 30-க்கும் அதிகமானோர் பயணித்தனர்.
ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த விபத்தில் 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி 24 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார்.
- நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை அதிகாரி விஜய காதே உட்பட முக்கிய பிரமுகர்களை நீக்கினார்
எலான் மஸ்க் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல சமூக ஊடகமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலைக்கு வாங்கினார். அதோடு பணிநீக்கம் செய்வது என அந்நிறுவனத்தில் பல மாற்றங்களை கொண்டுவந்தார். ட்விட்டருக்கு எக்ஸ் என்ற பெயர் மாற்றம் செய்யப்பட்டதும் அதில் அடக்கம்.
இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் இதே நாளில் கையில் தண்ணீர் சிங்க் உடன் தான் ட்விட்டர் அலுவலகத்திற்குள் முதன்முறையாக நுழைந்த புகைடபத்தை பதிவிட்டு "Let that sink in!". இதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பொருள்படும்படி தற்போது பதிவிட்டுள்ளார்.
நிறுவனத்தின் சிஇஓ பராக் அகர்வால், தலைமை அதிகாரி விஜய காதே உட்பட முக்கிய பிரமுகர்களை டிவிட்டரில் இருந்து நீக்கம் செய்ததை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும் என்று பொருள்படும்படி அவர் அப்போது சிங்க் உடன் வந்தது குறிப்பிடத்தக்கது.






