பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ராணுவ வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிமருந்து, துப்பாக்கி போன்றவை கைப்பற்றப்பட்டன.
பாகிஸ்தானில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
Published on

இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணத்தில் சமீப காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து உள்ளன. இதனை கட்டுப்படுத்த ஆப்கானிஸ்தான் எல்லையில் ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இந்தநிலையில் அங்குள்ள வஜிரிஸ்தான் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

அப்போது ராணுவ வீரர்களை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக ராணுவம் நடத்திய தாக்குதலில் 4 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 பயங்கரவாதிகளுக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிமருந்து, துப்பாக்கி போன்றவை கைப்பற்றப்பட்டன.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com