என் மலர்tooltip icon

    உலகம்

    • அகதிகளை ஏற்றிச் சென்ற படகு கடலில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் 12 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கெய்ரோ:

    பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரத்தை தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் அகதிகளாக கடல் வழியாக சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்குள் நுழையும் ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர்.

    இந்தப் பயணத்தின்போது விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது.

    இந்நிலையில், எகிப்தை சேர்ந்த 13 பேர் சட்டவிரோதமாக ஐரோப்பாவுக்குள் செல்ல திட்டமிட்டிருந்தனர். இதற்காக படகில் மத்திய தரைக்கடல் வழியாக நேற்று ஆபத்தான பயணம் மேற்கொண்டனர்.

    லிபியா அருகே 60 கிலோமீட்டர் தூரத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக படகு கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் படகில் பயணித்த 12 அகதிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    தகவலறிந்து அங்கு வந்த லிபியா கடற்படையினர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஒரு நபரை மீட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். உயிரிழந்த 12 அகதிகளின் உடல்களை மீட்டனர். இதுதொடர்பாக லிபியா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

    • குறுந்தகவல் அனுப்ப முடியவில்லை என்று பலர் புகார்.
    • இன்ஸ்டாகிராம் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது.

    இன்ஸ்டாகிராம் சேவை உலகின் பல்வேறு பகுதிகளில் முடங்கியுள்ளதாக பயனர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் காரணமாக செயலியில் வைத்து குறுந்தகவல் அனுப்ப முடியவில்லை என்று பலர் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து வலைதளங்கள் செயலிழப்பது குறித்து தகவல் வெளியிடும் டவுன்டிடெக்டர் இன்று மாலை 5.14 முதல் இன்ஸ்டாகிராம் சேவையில் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.

    இதுவரை சுமார் 2 ஆயிரம் பேர் மெட்டா நிர்வகித்து வரும் இன்ஸ்டா செயலி முடங்கியுள்ளதாக புகார் அளித்துள்ளனர். பலர் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

    இன்ஸ்டாகிராம் அல்லது அதன் தாய் நிறுவனமான மெட்டா சார்பில் இன்ஸ்டாகிராம் முடங்கியது தொடர்பாக இன்னும் அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் வெளியாகவில்லை. இந்த நிலையில், செயலிழப்பு நடந்து இருப்பதாக தெரிகிறது. 

    • உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் லாகூர் முதலிடத்தில் உள்ளது.
    • அங்கு காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளது.

    லாகூர்:

    பாகிஸ்தானின் லாகூர் உலகின் மிகவும் மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. லாகூரில் காற்றுத் தரக் குறியீடு ஆபத்தான நிலையாக 690 ஆக பதிவாகி உள்ளது.

    இதையடுத்து, மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    மோசமான காற்றின் தரம் காரணமாக இருமல், வைரஸ் காய்ச்சல் மற்றும் தொண்டை புண் உள்ளிட்ட சுவாசப் பிரச்சனைகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

    மக்கள் முகமூடிகள் மற்றும் கண்ணாடிகளை அணிய சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தி உள்ளனர். தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படியும் நிபுணர்கள் பரிந்துரைத்து உள்ளனர்.

    லாகூர் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அழுக்கு, வெளிப்புற காற்றை தவிர்க்க ஜன்னல்களை மூட வேண்டும்.

    வெளியே செல்லும்போது முகமூடி அணியவும், சுத்தமான காற்றிற்காக காற்று சுத்திகரிப்பு இயந்திரத்தை இயக்கவேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

    பயிர் எச்சங்கள், தொழிற்சாலைகள் மற்றும் நிலக்கரி, குப்பை, எண்ணெய் அல்லது டயர்களை எரிப்பதன் மூலம் உருவாகும் புகை வளிமண்டலத்தில் நுழைகிறது. இதன் தாக்கம் குளிர்காலத்தின் தொடக்கத்தில் தோன்றும் மற்றும் பருவத்தின் இறுதி வரை இருக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்

    • 15 ஆண்டுகால சட்ட போராட்டத்தில் இங்கிலாந்து தம்பதியினர் வெற்றி பெற்றனர்.
    • கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டது.

    லண்டன்:

    கூகுளின் ஷாப்பிங் ஒப்பீட்டு சேவை தொடர்பான சந்தை ஆதிக்க முறைகேடு பற்றிய குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்கு ஒன்று ஐரோப்பிய ஆணையத்தில் நடந்தது.

    இந்த வழக்கை விலை ஒப்பீட்டு இணையதளமான பவுண்டேமின் நிறுவனர்கள் ஷிவான் மற்றும் அவரது கணவர் ஆடம் ராப் ஆகியோர் தொடுத்திருந்தனர்.

    இங்கிலாந்தை சேர்ந்த சிவான்- ஆடம் ராப் தம்பதியினர் பவுண்டெம் என்ற விலை ஒப்பீட்டு இணைய தளத்தை 2006-ல் தொடங்கினர்.

    கூகுள் தேடல் அபராதத்தால் தங்கள் தளம் நியாயமற்ற முறையில் தண்டிக்கப்பட்டது என குற்றம் சாட்டிய அவர்கள், இந்த விலை ஒப்பீடு மற்றும் ஒப்பீடு ஷாப்பிங் போன்ற தொடர்புடைய கேள்விகளுக்கான தேடல் முடிவுகளில் அவர்களின் தளத்தை கீழே தள்ளிவிட்டதாகக் கூறினர்.

    இரு ஆண்டாக கூகுளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், தளத்தின் மீதான கட்டுப்பாடு ஒருபோதும் நீக்கப்படவில்லை. இந்த செயலற்ற தன்மை பவுண்டெம் நிறுவனத்துக்கு கடும் வீழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் மற்ற தேடுபொறிகள் அதை வழக்கமாக தரவரிசைப்படுத்தியது. இந்தச் சிக்கலால் பவுண்டேமை மூடிய அந்த தம்பதியினர், கூகுளுக்கு எதிராக நஷ்டஈடு கோரி வழக்கு தொடுத்தனர்.

    கடந்த 2010-ம் ஆண்டில் ஐரோப்பிய ஆணையத்தை அவர்கள் அணுகினர். பவுண்டெம் போன்ற போட்டியாளர்களை விட கூகுள் தனது சொந்த ஷாப்பிங் சேவையை நியாயமற்ற முறையில் விளம்பரப் படுத்தியதாக ஒரு விரிவான நம்பிக்கையற்ற விசாரணையில் கண்டறியப்பட்டது.

    கூகுள் நிறுவனம் தனது சந்தை ஆதிக்கத்தை தவறாகப் பயன்படுத்தியதாக ஆணையம் தீர்ப்பளித்ததுடன் 2.4 பில்லியன் பவுண்டுகள் இழப்பீடும் விதித்து 2017-ம் ஆண்டில் உத்தரவிட்டது.

    இதை எதிர்த்து கூகுள் நிறுவனம் மேல்முறையீடு செய்தது. கடந்த 7 ஆண்டாக நடந்த சட்டப்போராட்டத்தின் முடிவில் 2024-ல் கூகுள் மேல்முறையீட்டை ஐரோப்பிய நீதிமன்றம் நிராகரித்ததுடன், அபராதத்தையும் உறுதி செய்தது.

    இதன்படி கூகுள் நிறுவனம் இங்கிலாந்து தம்பதிக்கு 26,000 கோடி ரூபாய் இழப்பீடாக கொடுக்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஹமாசுக்கு ஆதரவான ஹிஸ்புல்லா இயக்கம் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
    • ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக நயீம் காசிம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பெய்ரூட்:

    இஸ்ரேல்-காசாவின் ஹமாஸ் அமைப்பு இடையேயான போரில் லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா இயக்கம் ஹமாசுக்கு ஆதரவாக உள்ளது. அந்த இயக்கம் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதையடுத்து லெபனான் மீதும் இஸ்ரேல் தீவிரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் ஹிஸ்புல்லா இயக்கத்தின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார். மேலும் அந்த இயக்கத்தின் முக்கிய தளபதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், நஸ்ரல்லா கொல்லப்பட்டதை அடுத்து ஹிஸ்புல்லா அமைப்பின் துணை பொதுச் செயலாளரான ஷேக் நயீம் காசிம் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என தெரிவித்துள்ளது.

    இதற்கிடையே லெபனானில் கடந்த செப்டம்பர் 23-ந்தேதி இஸ்ரேல் தொடங்கிய தாக்குதலில் இதுவரை பலியானோர் எண்ணிக்கை 1500-ஐ கடந்துள்ளது.

    • நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
    • பங்களா மாணவர்களால் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.

    இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.


    இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லமான அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்படுவதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் கூறும்போது, ஷேக் ஹசீனாவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் அவரை ஆட்சியில் இருந்து அகற்றியபோது ஏற்பட்ட கோபத்தின் நினைவுகள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் என்றார்.


    போராட்டத்தின்போது ஷேக் ஹசீனாவின் பங்களா மாணவர்களால் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.

    அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடக்கிறது. இதில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபரும், இந்திய வம்சாவளியை சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கமலா ஹாரிசுக்கு இந்திய வம்சாவளியினர் 62 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக புதிய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோவ்மென்ட் நிறுவனம், யூகோவ் நிறுவனத்துடன் இணைந்து 2024 இந்திய-அமெரிக்க மனப்பாங்குகள் என்ற தலைப்பில் புதிய கருத்துக்கணிப்பை நடத்தியது.

    இந்த கருத்துக்கணிப்பில் பதிவு செய்யப்பட்ட இந்திய-அமெரிக்க வாக்காளர்களில் 62 சதவீதம் பேர் கமலா ஹாரிசுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர், டிரம்பிற்கு 32 சதவீதம் பேர் வாக்களிக்க உள்ளனர். இந்திய-அமெரிக்கர்களில் அதிகளவில் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு அளிப்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் குடியரசுக் கட்சிக்கான ஆதரவில் ஒரு சிறிய முன்னேற்றம் உள்ளது.

    இந்திய-அமெரிக்க பெண்களிடம் கமலா ஹாரிசுக்கு 67 சதவீதம் பேரும், டிரம்பிற்கு 22 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்திய-அமெரிக்க ஆண்களில் கமலா ஹாரிசுக்கு 53 சதவீதமும், டிரம்பிற்கு 39 சதவீதமும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்காவில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் வசிக்கின்றனர்.

    • வட கொரியா தங்களது வீரர்கள் 10 ஆயிரம் பேர் வரை போருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஜெலின்ஸ்கி கூறியுள்ளார்
    • எந்த ஒரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

    உக்ரைன் நேட்டோ நாடுகளுடன் சேர்வது தங்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கூறி கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஷியா அந்நாட்டின் மீது போர் தொடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரில் இரு நாடுகளும் அதிக இழப்புகளைச் சந்தித்துள்ளன.

    போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாகத் தோல்வி அடைந்து வரும் நிலையில் போதாக்குறைக்கு ரஷியாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் தங்களது வீரர்கள் 10 ஆயிரம் பேர் வரை போருக்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    ரஷியா- உக்ரைன் தங்களது போரை நிறுத்த வேண்டும் என பல்வேறு நாடுகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பிரதமர் மோடியால் ரஷிய போரை நிறுத்த உதவ முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி மீண்டும் தெரிவித்துள்ளார்.

    கடந்த மாதங்களில் ரஷியா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுக்கும் சென்ற பிரதமர் மோடி போர் நிறுத்தம் குறித்து வலியுறுத்தினார். சமீபத்தில் ரஷியாவில் நடந்த பிரிக்ஸ் மாநாட்டுக்கும் மோடி சென்று வந்தார். இந்த யுகம் போருக்கானது அல்ல என்றும் எந்த ஒரு பிரச்சினைக்கும் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்வு வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

     

     

     

    எனவே தற்போது பேசியுள்ள ஜெலன்ஸ்கி, " உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, 5-வது மிகப்பெரிய பொருளாதார நாடு என பல்வேறு சிறப்புகளை இந்தியா பெற்றிருக்கிறது. சர்வதேச அரசியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

     

    இந்திய பிரதமர் நரேந்திர மோடி உலகின் செல்வாக்குமிக்க தலைவராக மாறி உள்ளார். உக்ரைன் போரை நிறுத்த அவரால் உதவ முடியும். இதுதொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

    • போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள 2 வாக்குப் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது
    • இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்துள்ளன

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டோன்லடு டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன. அதன்படி அதிபர் ஜோ பைடனும் தனது வாக்கினை செலுத்தினார்.

    இந்நிலையில் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள 2 வாக்குப் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தலைநகர் வாஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

    இரு சம்பவங்களிலும் தீயணைத்துப்புத்துறை துரிதமாக செயல்பட்டு தீயை அனைத்தது. இருப்பினும் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான வாக்குச்சீட்டுகள் தீயில் புகைந்து சேதமடைந்தன. இதனால் சொற்ப வாக்குச்சீட்டுகளை மட்டுமே சேதமின்றி மீட்க முடிந்ததது.

    இதனையடுத்து இந்த சம்பவங்கள் குறித்து எப்.பி.ஐ. விசாரித்து வருகிறது. இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்துள்ளதால் இதை செய்தது ஒரே கும்பலா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது. இதற்கிடையே செலுத்தப்பட்ட வாக்குகளை மீண்டும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் நேர வன்முறை கண்டிக்கத்தக்கது என்றும் அரசு சார்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.
    • சக்கர நாற்காலியிலிருந்த பெண் முன்னாள் செல்ல உதவி செய்தார்.

    அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் தேதி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின்படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன.

    அந்த வகையில்  தற்போதைய அதிபர் ஜோ பைடன் தனது சொந்த ஊரான டெலாவேரின் வில்மிங்டன் பகுதியில் தனது வீட்டுக்கு சற்று தொலைவில் உள்ள வாக்குச்சாவடியில் நேற்று தனது வாக்கை பதிவு செய்தார்.

    வாக்களிக்கக் காத்திருந்தவர்களுடன் சேர்ந்து வரிசையில் நின்ற ஜோ பைடன் அவர்களுடன் சகஜமாகப் பேசினார். மேலும் அங்கு சக்கர நாற்காலியிலிருந்த பெண் முன்னாள் செல்ல உதவி செய்தார்.

    தொடர்ந்து 40 நிமிட காத்திருப்புக்கு பின்னர் இறுதியில் தனது வாக்கினை செலுத்தினார். 81 வயதாகும் ஜோ பைடன் வயது மூப்பு காரணமாக  அதிபர் தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.

    • பூமியில் இருந்து 260 மெயில் தொலைவில் விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி கொண்டாடுகிறேன்.
    • எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட இந்திய பண்டிகைகளைப் பற்றி கூறுவார்

    இந்துக்களின் முக்கிய பண்டிகையான தீபாவளி வரும் அக்டோபர் 31 ஆம் தேதி [வியாழக்கிழமை] வர உள்ள நிலையில் நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் கலை கட்டி வருகின்றன. அமெரிக்க அதிபர் மாளிகை உட்பட உலகம் முழுவதிலும் தீபாவளி பண்டிகை மனநிலை அனைவரையும் குதூகலப்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் உலகம் மட்டும் அள்ளாது தற்போது விண்வெளியிலிருந்தும் தீபாவளி வாழ்த்து வந்துள்ளது. நாசாவின் திட்டத்தில் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து அனைவர்க்கும் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    அவர் பேசியுள்ள வாழ்த்து வீடியோவில், வெள்ளை மாளிகையிலும் உலகம் முழுவதிலும் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த வருடம் பூமியில் இருந்து 260 மெயில் தொலைவில் விண்வெளி மையத்தில் இருந்து தீபாவளி கொண்டாடும் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

    எனது தந்தை தீபாவளி உள்ளிட்ட பிற இந்திய பண்டிகைகளைப் பற்றி எடுத்துரைத்து இந்திய கலாச்சாரத்தோடு என்னை நெருக்கத்தில் வைத்திருந்தார். எனவே விண்வெளியில் இருப்பினும் தீபாவளியின் முக்கியத்துவத்தை உணர்வதாகப் பேசியுள்ளார்.

    நாசா திட்டத்தில் கடந்த ஜூன் மாதம் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட சுனிதா வில்லியம்ஸ் தொழில்நுட்ப சிக்கல் காரணமாக பூமிக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. அடுத்த வருடம் பிப்ரவரி மாதமே அவர் பூமிக்கு திரும்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

    • வெள்ளை மாளிகை பெருமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது என்று தெரிவித்தார்.
    • அமெரிக்காவில் உள்ள தெற்கு ஆசிய சமூகம் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு அதிக பங்காற்றியுள்ளது.

    இந்து மதத்தின் பிரதான பண்டிகையாக விளங்கும் தீபாவளி வரும் அக்டோபர் 31 [வியாழக்கிழமை] கொண்டாடப்படுகிறது. எனவே நாடு முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்தியாவைத் தாண்டி சமீப வருடங்களாக உலகம் முழுவதும் தீபாவளி அதிகம் கொண்டாடப்படுகிறது.

    அந்த வகையில் அமெரிக்காவிலும் குறிப்பாக வெள்ளை மாளிகையிலும் நேற்று தீபாவளி கொண்டாட்டங்கள் நடந்துள்ளன. இதில் குத்துவிளக்கேற்றிய ஜோ பைடன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். மேலும் அதிபர் ஜோ பைடன் தனது தீபாவளி வாழ்த்தில், வெள்ளை மாளிகை பெருமையுடன் தீபாவளியைக் கொண்டாடியது குறித்து குறிப்பிட்டு அனைவருக்கும் தீபாவளி தெரிவித்துள்ளார்.

    மேலும் அமெரிக்காவில் உள்ள தெற்கு ஆசிய சமூகம் அமெரிக்காவின் மேம்பாட்டுக்கு அதிக பங்காற்றியுள்ளது. உலகத்திலேயே மிகவும் வேகமாக வளரும் சமூகமாக இது உள்ளது. பன்முகத்தன்மை வாய்ந்த அமெரிக்கா தற்போதுள்ள நிலைமைக்கு எப்படி வந்தது என்பதை ஒருபோதும் மறக்காது என்று தெரிவித்துள்ளார்.

    ×