என் மலர்
உலகம்
- அவேஞ்சர்ஸ் நடிகர்கள் வீடியோ கால் மூலம் ஒன்று கூடினர்.
- அப்போது அமெரிக்க தேர்தலில் கமலா ஹாரிஸ்க்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்தனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போது துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களம் இறங்கியுள்ளார்.
இருவர்களுக்கும் இடையில் பலத்த போட்டி நிலவி வருகிறது. கருத்துக் கணிப்பில் இழுபறி நீடிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு எலான் மஸ்க் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தார். கமலா ஹாரிஸ்க்கும் அமெரிக்காவைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் மார்வெல்ஸின் அவேஞ்சர்ஸ் பட நடிகர்கள் ராபர்ட் டொனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹான்சன், கிறிஸ் எவன்ஸ், மார்க் ரஃப்ல்லோ உள்ளிட்டோர் கமலா ஹாரிஸ்க்கு ஆதரவு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் விடியோ காலில் இணைந்துள்ளனர். அப்போது அமெரிக்கா அதிபர் தேர்தல் குறித்து விவாதித்தனர். மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், ஜனநாயகத்திற்கான ஒன்று கூடுவோம், எப்போதும் கமலா. நாங்கள் உங்களோடு நிற்கிறோம்" என கமலா ஹாரிஸ் மற்றும் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் டிம் வால்ஸ் ஆகியோரை டேக் செய்து" மார்க் ரஃப்ல்லோ வீடியோ வெளியிட்டுள்ளார்.
தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற்றாலும் முன்னதாகவே வாக்களிக்கும் வசதி உள்ளது. ஜோ பைடன் 40 நிமிடங்கள் காத்திருந்தது தனது வாக்கை செலுத்தினார். பல்வேறு மாகாணங்களில் மக்கள் தங்களது வாக்குகளை செலுத்தியுள்ளனர்.
- உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர்.
- இஸ்ரேல் முதல் உக்ரைன் வரையிலான நமது சொந்த தெற்கு எல்லையை சீரழித்து விட்டனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில தினங்கள்தான் உள்ளன. குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். தனது ஆதரவாளர்கள் இடையிலான பிரசார நிகழ்ச்சியில் ஜனநாயக கட்சி வேட்பாளரான கமலா ஹாரிஸை கடுமையாக தாக்கு பேசி வருகிறார்.
இந்த நிலையில் தனது தீபாவளி மேசேஜ்-ல் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் இந்துக்களை புறக்கணித்துள்ளனர் எனத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள தகவலில் "உலகம் முழுவதும் மற்றும் அமெரிக்காவில் உள்ள இந்துக்களை கமலா ஹாரிஸ் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். அவர்கள் இஸ்ரேல் முதல் உக்ரைன் வரையிலான நமது சொந்த தெற்கு எல்லையை சீரழித்து விட்டனர். இருந்தபோதிலும் நாம் அமெரிக்காவை மீண்டும் வலிமையானதாக ஆக்குவோம். வலிமை மூலம் அமைதியை மீண்டும் கொண்டு வருவோம்.
வங்கதேசத்தில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் மற்ற சிறுபான்மையினருக்கு எதிராக நடைபெற்றுகாட்டுமிராண்டித் தனமாக வன்முறைக்கு எனது கடுமையான கண்டத்தை தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய அதிகாரித்திற்கு கீழ் இப்படி ஒரு நம்பவம் நடைபெற்று இருந்திருக்காது" எனத் தெரிவித்துள்ளார்.
வங்கதேச வன்முறை தொடர்பாக முதன்முறையாக டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
- இது அமெரிக்க டாலரில் 20 டெசில்லியன் எனக் கூறப்படுகிறது.
- உலகளாவிய தடையை யூடியூப் 2022 மார்ச் மாதம் அறிவித்ததில் இருந்து இந்த இந்த சிக்கல் உள்ளது.
உக்ரைன் மீதான ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்கு பதிலளிக்கும் விதமாக ரஷிய அரசு நடத்தும் ஊடக சேனல்களை யூடியூப் பிளாக் செய்தது. இதற்காக யூடியூப் சேனலுக்கு எதிராக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட் நிறுவனத்திற்குச் முன்னெப்போதும் இல்லாத அபராததத்தை ரஷியா விதித்துள்ளது. இந்த அபராத தொகையானது முழு உலகப் பொருளாதாரத்தையும் பல மடங்கு விஞ்சும்.
2 என்ற எண்ணிற்குப் பிறகு 34 இலக்க பூஜ்ஜியத்தை கொண்டுள்ளது. இது அமெரிக்க டாலரில் 20 டெசில்லியன் எனக் கூறப்படுகிறது.
யூடியூப்பில் ரஷிய அரசின் ஆதரவு ஊடகங்களில் இருந்து சேனல்களைத் தடுப்பதன் மூலம் கூகுள் தேசிய ஒளிபரப்பு விதிகளை மீறியதாக ரஷிய நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது. ஒன்பது மாத காலத்திற்குள் இந்த உத்தரவிற்கு இணங்க மறுத்தால் அபராத தொகை ஒவ்வொரு நாளுக்கும் இரட்டிப்பாகும் எனத் தெரிவிக்கப்படடுள்ளது.
RT மற்றும் ஸ்புட்னிக் உட்பட பல ரஷிய அரசால் இயக்கப்படும் சேனல்களுக்கு உலகளாவிய தடையை யூடியூப் 2022 மார்ச் மாதம் அறிவித்ததில் இருந்து இந்த இந்த சிக்கல் உள்ளது.
- இரண்டு குழுக்கள் உளவுப்பணியில் ஈடுபட்டதாக இஸ்ரேல் கண்டுபிடித்தது.
- அதனைத் தொடர்ந்து ஒரு தம்பதி ஈரானுக்கு உளவு வேலை பார்த்துள்ளதாக கைது செய்துள்ளது.
இஸ்ரேல்- காசா இடையிலான போர் காரணமாக ஈரானுக்கும்- இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் போக்கு அதிகரித்துள்ளது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே ஈரான் தலைநகர் தெஹ்ரானில் வைத்து கொள்ளப்பட்டதற்கு பிறகு இந்த மோதல் மேலும் அதிகரித்துள்ளது.
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும விதமாக ஈரான் கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. கடந்த வாரத்தில் இஸ்ரேல் பதிலடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தியது.
இதற்கிடையே இரண்டு தரப்பிலும் இருந்து உளவு பார்க்க ஆட்களை நியமிப்பதில் தீவிரம் காட்டப்படுகிறது. இஸ்ரேலின் மொசாட் உளவுத்துறை ஈரானில் உளவாளிகளை வைத்துதான் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ததாக ஈரான் குற்றம்சாட்டியது.
ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும்போது நேரடியாக தாக்குதல் நடத்த முடியாது. அங்குள்ள ராணுவ நிலைகள், முக்கியமான வளங்கள் எங்கே இருக்கின்றன போன்ற ரகிசிய தகவலை பெற வேண்டும். அதற்காக உளவு சொல்லக் கூடியவர்களை தயார் செய்வார்கள். தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை அங்கு அனுப்பி வைப்பார்கள். இல்லை எனில் பணம் கொடுத்து அந்த நாட்டை சேர்ந்தவர்களையே உளவு பார்க்கும் பணியில் ஈடுபடுத்துவார்கள்.
இந்த உளவுப் பணியில் இஸ்ரேல் மிகவும் பயங்கரமாக செயல்படும். அவர்கள் யாரை உளவு பார்க்க பணியமர்த்தியுள்ளார் என எதிரி நாடுகளால் கண்டுபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு மொசாட் தனது உளவுப்பணிகளை செய்து வருகிறது.
அப்பேற்பட்ட மொசாட் உள்ள இஸ்ரேல் நாட்டிலேயே ஈரான் உளவு பார்ப்பதற்கான ஆட்களை தாயர் படுத்தியுள்ளது என்ற செய்தி ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இரண்டு குழுக்கள் ஈரானுக்கு உளவு பார்த்ததாக, அதில் உள்ளவர்களை கைது செய்தது இஸ்ரேல் போலீஸ். இந்த நிலையில் தற்போது ஒரு தம்பதி உளவு வேலை பார்த்தாக சந்தேகித்து கைது செய்துள்ளனர்.
இஸ்ரேலியர்களை தொடர்ந்து உளவாளி வேலைகளுக்கு அமர்த்தும் ஈரானின் முயற்சிகள் முறியடிக்கப்படும் என இஸ்ரேல் உள்நாட்டு பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் மத்திய நகரான லாட்டை சேர்ந்த அந்த ஜோடி, தேசிய கட்டமைப்பு, பாதுகாப்பு இடங்கள் போன்றவை தொடர்பாக தகவல் சேகரித்துள்ளனர்.
- ரஷியா-உக்ரைன் போரில் பல சம்பவங்களில் டிரோன்கள் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன.
- டிரோன்கள் மற்றும் ஆபரேட்டருடனான தகவல்தொடர்பை துண்டிக்க ஜாமர்கள் உதவுகின்றன.
உக்ரைன்- ரஷியா இடையிலான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயன்றும் போர் நிற்கவில்லை. உக்ரைன்- ரஷியா போரில் டிரோன் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ரஷிய கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு உக்ரைன் நகரமான ஹார்லிவ்காவில் உள்ள அதிகாரிகள் சில உள்ளூர் பஸ்களில் ஆளில்லா விமானத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க ஜாமர் கருவிகளை நிறுவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷியாவின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் நகருக்கு அருகில் அமைந்துள்ள நகரத்தை சுற்றி செல்லும் ஒரு பஸ் கடந்த மாதம் உக்ரைனின் ஆளில்லா விமானத்தால் தாக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்தனர். இதனால் ஜாமர் கருவிகள் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரஷியா-உக்ரைன் போரில் பல சம்பவங்களில் டிரோன்கள் சேதத்தை ஏற்படுத்தி உள்ளன. டிரோன்கள் மற்றும் ஆபரேட்டருடனான தகவல்தொடர்பை துண்டிக்க ஜாமர்கள் உதவுகின்றன. இது குறைவான ஆபத்தை ஏற்படுத்துகிறது.
இது தொடர்பாக ஹார்லிவ்காவில் உள்ள பஸ் டிப்போவின் உரிமையாளரும் மேலாளருமான விளாடிமிர் மிரோனோவ் கூறுகையில், பஸ் ஓட்டுநர்களையும் பயணிகளையும் எங்களால் பாதுகாக்க முடியாது, எனவே நாங்கள் உதவி கோரினோம், அவர்கள் எங்களுக்கு நான்கு ஜாமர் சாதனங்களை வழங்கினர்.
அவை எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும் என்று எங்களுக்கு தெரியாது, ஆனால் இந்த நேரத்தில் பாதுகாப்புக்காக நாங்கள் செய்யக்கூடிய அதிகபட்சம் இதுதான் என்று கூறினார்.
- அக்டோபர் 1-ந்தேதி லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்த தொடங்கியது.
- அதன்பின் லெபனானில் இருந்து இஸ்ரேல் மக்கள் மீது தாக்கப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இன்று லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரிமாரி ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒரு ஏவுகணை தாக்குதல் மூலம் ஐந்து பேர் உயிரிழந்தனர் என இஸ்ரேல் தெரிவித்திருந்தது. இந்த நிலையில் மற்றொரு ஏவுகணை தாக்கப்பட்டதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
லெபனானில் இருந்து 25-க்கும் மேற்பட்ட ஏவுகணகைள் இஸ்ரேல் எல்லையை தாக்கின. ஆலிவ் அறுவடை செய்து கொண்டிருந்த மக்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு இஸ்ரேலில் உள்ள மெடுலா என்ற இடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 வெளிநாட்டு தொழிலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த 1-ந்தேதி இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. அதன்பின் இஸ்ரேலில் உள்ள மக்கள் மீது நடத்தப்படும் மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
லெபனான் மற்றும் காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வரம் நிலையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த வருடத்தில் இந்து லெபனான் மீது இஸ்ரேல நடத்திய தாக்குதலில 2800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 13 ஆயிரம் காயம் அடைந்துள்ளனர்.
- பிராங்பர்ட், ஹம்பர்க், முனிச் ஆகியவற்றில் உள்ள தூதரகங்களை மூட ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது.
- பெர்லின் நகரில் மட்டும் இயங்கும் என அறிவிப்பு
ஈரான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெர்மனியைச் சேர்ந்த ஜாம்ஸித் ஷர்மாத்திற்கு திங்கிட்கிழமை ஈரான் மரண தண்டனையை நிறைவேற்றியது. இதனால் ஜெர்மனியில் உள்ள மூன்று தூதரகங்களை உடனடியாக மூடுமாறு ஈரானுக்கு ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது.
69 வயதாகும் ஷர்மத் அமெரிக்காவில் வசித்து வந்தார். துபாய்க்கு கடந்த 2020-ம் ஆண்டு சென்றபோது ஈரான் பாதுகாப்புப்படையினரால் கடத்தப்பட்டார்.
2023-ம் ஆண்டில் இருந்து நடைபெற்ற விசாரணையின் ஜெர்மனி அமெரிக்கா, சர்வதேச உரிமைகள் குழுக்களின் வாதங்கள் பொய்யானவை என நீதிமன்றத்தால் புறக்கணிப்பட்டது. அதன் அடிப்படையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்துள்ளது.
பிராங்பர்ட், ஹம்பர்க், முனிச் ஆகியவற்றில் உள்ள தூதரகங்களை மூட ஜெர்மனி உத்தரவிட்டுள்ளது. பெர்லின் நகரில் மட்டும் இயங்கும் எனத் தெரிவித்துள்ளது.
- இஸ்ரேலின் வான் தாக்குதல் மற்றும் தரைவழி தாக்குதலை எங்களால் எதிர்கொள்ள முடியும்.
- இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்த விரும்பினால் நாங்களும் போரை நிறுத்துவோம் எனச் சொல்வோம்.
காசா மீது தாக்குதல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலின் வடக்குப் பகுதி மீது லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பு தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் தங்களுடைய வடக்குப் பகுதிக்கு அச்சுறுத்தல் என நினைத்த இஸ்ரேல், ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
புலனாய்வுத்துறையின் ரகசிய தகவல்படி ஹிஸ்புல்லா நிலைகளை துல்லியமாக தாக்கி அழித்து வருகிறது. அந்த வகையில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் ஹஸ்ரல்லாவை வான்தாக்குதல் மூலம் கொலை செய்தது. மேலும் சில முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்கி கொன்றது.
தற்போது பால்பெக் என்ற கிராமத்தில் உள்ள மக்களை முழுமையாக வெளியேறும்படி இஸ்ரேல் ராணுவம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே ஹிஸ்புல்லா- இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
நவம்பர் 5-ந்தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கு முன்னதாக போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹசன் நஸ்ரல்லா உயிரிழந்த நிலையில், அவருக்குப் பதிலாக நைம் காசிம் ஹிஸ்புல்லா அமைப்பின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.
இவர் இஸ்ரேல் உடனான மோதல் குறித்து கூறுகையில் "லெபனானில் இஸ்ரேலின் பல மாதங்களாக வான் மற்றும் தரைவழி தாக்குதலை ஹிஸ்புல்லாவால் தடுக்க முடியும். இருந்தபோதிலும், இஸ்ரேல் ஆக்கிரமிப்பை நிறுத்த விரும்பினால், நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம் எனச் செல்வோம். அதவும், எங்களுக்கு சாதகமாக மற்றும் வசதியான நிபந்தனைகள் கீழ்த்தான் ஒப்புக்கொள்வோம். ஹிஸ்புல்லா இதுவரை நம்பத்தகுந்த வகையிலான பரிந்துரையை இன்னும் பெறவில்லை" என்றார்.
இஸ்ரேல் எரிசக்தி மந்திரி "இஸ்ரேல் பாதுகாப்பு கேபினேட்டில் பாதுகாப்பான போர் நிறுத்தத்திற்கு என்ன வகையிலான நிபந்தனைகள் வழங்கலாம் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது" என்றார்.
"ஆலோசனை நடைபெற்றது. இதற்கு கொஞ்சம் நாட்கள் ஆகலாம்" என இஸ்ரேல் முன்னாள் உளவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் எல்லையில் இருந்து 30 கி.மீட்டர் தொலைவில் உள்ள லிட்டானி ஆற்றின் வடக்குப் பகுதியில் இருந்து ஹிஸ்புல்லா வெளியேறுவது, எல்லையில் லெபனான் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது குறித்து இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- தெருக்களில் மழை வெள்ளம் ஆறு போல் ஓடியது.
- ஆறு அடி உயரத்திற்கு வெள்ளம் சென்றதால் வீடுகளில் இருந்தவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
ஸ்பெயின் நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள வாலென்சியாவில் கடும் மழை வெள்ளத்தில் சிக்கி 63 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மழை வெள்ளத்தில் கார்கள் அடித்து செல்லப்பட்டன. தெருக்கள் ஆறுகளாக மாறின. ரெயில் தண்டவாளங்கள், சாலைகள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்தன. ஸ்பெயின் நாட்டின் மிகக் கொடூரமாக தேசிய பேரிடரில் இதுவும் ஒன்று என ஸ்பெயின் தெரிவித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை (உள்ளூர் நேரப்படி) பெய்த கனமழை காரணமாக மலாகாவில் இருந்து வாலென்சியா வரை எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தன.
சேற்றுடன் மழை வெள்ளம் கார்களை அடித்துச் சென்றன. மரங்கள் வேரோடு சாய்க்கப்பட்டு வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. போலீஸ் மற்றும் மீட்புப்படையினர் ஹெலிகாப்டர் உதவியுடன் வீட்டில் தவித்த மக்களை காப்பாற்றினார்.
வாலென்சியாவில் உள்ள 12-க்கும் மேற்பட்ட நகரங்கள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டதாக ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் தெரிவித்தள்ளார்.
செவ்வாய்க்கிழமை அதிகமான மக்கள் காணாமல் போய் இருந்தனர். புதன்கிழமை காலையில் பார்க்கும் அவர்களில் பெரும்பாலானோர் உயிரிழந்திருந்தனர்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) என வாழ்க்கையில் மிகவும் மோசமான நாள் என வாலென்சியாவில்உள்ள உத்தியெல் நகர் மேயர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் எலிகள் போல் சிக்கிக் கொண்டோம். சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. 3 மீட்டர் அளவிற்கு வெள்ளம் உயர்ந்தது எனத் தெரிவித்தள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் மீட்புப் பணிக்காக குவிக்கப்பட்டுள்ளனர். மீட்புக் குழுவினர் மற்ற பகுதியில் இருந்து அனுப்பப்பட்டுள்ளனர்.
- ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்.
- முதன்முறையாக கிராம மக்களை வெளியேறும்படி எச்சரிக்கை விடுத்துள்ளது
ஹமாஸ் அமைப்பினருக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல் காசா மீது தாக்குதல் நடத்தியது. காசா மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது.
இதனால் இஸ்ரேல் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள இஸ்ரேலியர்கள் அவர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
அவர்களை மீண்டும் அவர்களின் சொந்த இடங்களில் குடியமர்த்துவதுதான் எங்களது போரின் திட்டம் என இஸ்ரேல் கடந்த சில வாரங்களுக்கு முன் தெரிவித்தது. அத்துடன் லெபனான் பகுதிகளில் தாக்குதலை தீவிரப்படுத்தியது. அத்துடன் குறைந்த அளவு தரைவழி தாக்குதலையும் நடத்தியுள்ளது.
தொடர் தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் மற்றும் அடுத்த தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருந்தவரையும் தாக்குதல் நடத்தி கொன்றது.
இந்த நிலையில் கிழக்கு லெபனானில் உள்ள பால்பெக் நகரை குறிவைத்துள்ளது. இதனால் அந்த நகரில் வசித்து வரும் மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேறும்படி இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காலி செய்ய சொல்லும் இடத்தில் யுனெஸ்கோ பாரம்பரிய பழங்காலத்து ரோமன் டெம்பிள் காம்ப்ளக்ஸ் உள்ளது.
லெபனான் சுகாதாரத்துறை அமைச்சர், கடந்த ஆண்டு அக்டோபர் 8-ந்தேதிக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலால் 2,790 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 12,700 பேர் காயம் அடைந்துள்ளனர்.
பால்பெக் நகர் பெகா பள்ளத்தாக்கிற்கு செல்லும் முக்கிய வழியாகும். இந்த பகுதிகளை ஏற்கனவே இஸ்ரேல் சுற்றி வளைத்துள்ளது.
ஹிஸ்புல்லாவை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், முதன்முறையாக வெளியேறும் எச்சரிக்கை விடுத்துள்ளது இஸ்ரேல்.
- இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.
- 3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.
சீனா, சொந்தமாக விண்வெளி நிலையத்தை அமைத்து உள்ளது. இந்த நிலையில் விண்வெளி நிலையத்துக்கு முதல் பெண் விண்வெளி என்ஜினீயர் உள்பட 3 விண்வெளி வீரர்களை சீனா அனுப்பியது. அவர்கள் இன்று அதிகாலை ஷென்சோ-19 விண்கலத்தில் புறப்பட்டனர்.
இந்த விண்கலம் வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுகணை மையத்தில் இருந்து லாங் மார்ச்-2எப் கேரியர் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ஏவப்பட்ட 10 நிமிடங்களுக்குப் பிறகு, ஷென்சோ-19 விண்கலம் ராக்கெட்டிலிருந்து பிரிந்து நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை வெற்றிகரமாக சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 3 விண்வெளி வீரர்களும் 6 மாதம் தங்கிருந்து ஆராய்ச்சி பணியில் ஈடுபட உள்ளனர்.
- அந்த தவறை செய்தால், கடந்த முறை குறிவைக்கப்படாத இடங்களையும் குறி வைப்போம்.
- நிகழ்வு முடிவடையவில்லை, நாங்கள் இன்னும் அதன் நடுவில் இருக்கிறோம் என்றார்.
இஸ்ரேல் மீது கடந்த 1-ந்தேதி ஈரான் சரமாரியாக ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தது. இதற்கு பதிலடியாக 25 நாட்களுக்கு பிறகு ஈரானின் ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள், குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.
ஈரானின் அணு நிலையங்கள் தாக்கப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் ராணுவ தளங்கள் மீது மட்டும் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவ தளபதி ஹெர்சி ஹலேவி கூறும்போது, இஸ்ரேல் மீது மற்றொரு ஏவுகணைத் தாக்குதலை ஈரான் நடத்தினால் அவர்களை மிகக் கடுமையாக" தாக்குவோம். அந்த தவறை செய்தால், கடந்த முறை குறிவைக்கப்படாத இடங்களையும் குறி வைப்போம். ஈரானை எவ்வாறு வெற்றி அடைவது, நாங்கள் பயன்படுத்தாத திறன்களைக் கூட எப்படி பயன்படுத்துவது என்பதை நாங்கள் அறிவோம். ஈரானில் சில இலக்குகள் எங்களின் பார்வையில் உள்ளது.
இந்த நிகழ்வு முடிவடையவில்லை, நாங்கள் இன்னும் அதன் நடுவில் இருக்கிறோம் என்றார். இதன்மூலம் ஈரான் அணு நிலையங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது.






