என் மலர்
உலகம்

ஷேக் ஹசீனாவின் அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றம்
- நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
- பங்களா மாணவர்களால் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்காளதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தது நாட்டைவிட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார்.
இதையடுத்து வங்காளதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. ஷேக் ஹசீனா மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஷேக் ஹசீனாவின் உத்தியோகபூர்வ இல்லமான அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்படுவதாக இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ஷேக் ஹசீனாவின் தவறான ஆட்சி மற்றும் மக்கள் அவரை ஆட்சியில் இருந்து அகற்றியபோது ஏற்பட்ட கோபத்தின் நினைவுகள் இந்த அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படும் என்றார்.
போராட்டத்தின்போது ஷேக் ஹசீனாவின் பங்களா மாணவர்களால் சூறையாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.






