என் மலர்tooltip icon

    உலகம்

    மெக்சிகோவில் சோகம்: சுற்றுலா பஸ், லாரி மோதிய  விபத்தில் 24 பேர் பலி
    X

    மெக்சிகோவில் சோகம்: சுற்றுலா பஸ், லாரி மோதிய விபத்தில் 24 பேர் பலி

    • சுற்றுலா சென்ற பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது.
    • இதனால் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது.

    மெக்சிகோ சிட்டி:

    வட அமெரிக்க நாடான மெக்சிகோவின் நயாரிட் மாகாணத்தில் இருந்து சிகுவாகுவா மாகாணத்திற்கு சுற்றுலா பஸ் ஒன்று நேற்று புறப்பட்டுச் சென்றது. அந்த பஸ்சில் 30-க்கும் அதிகமானோர் பயணித்தனர்.

    ஜகாடெகாஸ் மாகாணத்தில் உள்ள பாலத்தில் சென்றபோது அந்த பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் எதிரே வந்த லாரி மீது பஸ் மோதி விபத்துக்கு உள்ளானது.

    இந்த விபத்தில் 24 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சுற்றுலா சென்ற பஸ் விபத்தில் சிக்கி 24 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×