என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • சென்னை , மும்பை போன்ற அணிகள் எப்போதும் தங்களது பெரிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன.
    • சென்னை, மும்பை அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு சவால் இன்னும் அதிகமாக இருக்கும்.

    சென்னை:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய முதல் வீரர் (சென்னை அணிக்காக) என்ற சாதனைக்கு சொந்தக்காரர் எல்.பாலாஜி. இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான அவர் தற்போது வர்ணனை பணியில் ஈடுபட்டு வருகிறார்.

    அவர் நேற்று காணொலி வாயிலாக அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 4 வெளிநாட்டு வீரர்கள் இடத்துக்கு டிவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா, சாம் கர்ரன், பதிரானா ஆகியோர் இடம் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். மேலும் ஆர்.அஸ்வின், ஜடேஜா என்று இரண்டு பிரதான சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால், ரூ.10 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் நூர் அகமது (ஆப்கானிஸ்தான்) வாய்ப்புக்கு காத்திருக்க வேண்டி இருக்கும்.

    கடந்த சில சீசனில் சென்னை அணியில் நிறைய ஆல்-ரவுண்டர்கள் இருந்ததால் சில சமயம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் இந்த சீசனில் அதிக ஆல்-ரவுண்டர்கள் இல்லை. எனவே சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் சென்னை அணியின் முக்கியமான வீரராக இருப்பார். 'பவர்-பிளே'யிலும், இறுதிகட்டத்திலும் அவரால் சிறப்பாக பந்து வீச முடியும்.

    உள்ளூர் வீரர் என்பதால் சேப்பாக்கம் ஆடுகளம், சூழலை நன்கு அறிந்தவர். இங்கு எப்போதும் ஆடினாலும் அசத்தி இருக்கிறார். இங்கு முன்பு சென்னைக்கு எதிரான ஒரு முக்கியமான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சுக்காக களம் இறங்கிய போது 30 ரன் மற்றும் 2 விக்கெட் (2023-ம் ஆண்டு) எடுத்திருந்தார். எனவே அவரது பங்களிப்பு அணிக்கு மிகவும் முக்கியமாகும். அதனால் இங்குள்ள சூழலில் எதிரணிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருப்பார்.

    18-வது ஐ.பி.எல்.-ல் பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4 அணிகள் எதுவாக இருக்கும் என்று கேட்கிறீர்கள். இந்த ஆண்டு எல்லா அணிகளுமே நன்றாக உள்ளன. பொதுவாக சொல்ல வேண்டும் என்றால் எல்லா அணிகளுமே புதிய அணிகள். ஏனெனில் நிறைய வீரர்கள் வேறு அணிக்கு மாறியிருக்கிறார்கள். ஷ்ரேயாஸ் அய்யர் கொல்கத்தா அணியில் இருந்து பஞ்சாப்புக்கு போய் இருக்கிறார். லோகேஷ் ராகுல் லக்னோவில் இருந்து டெல்லிக்கு மாறியுள்ளார்.

    ரிஷப் பண்ட் டெல்லி அணியில் இருந்து லக்னோ அணிக்கு சென்று இருக்கிறார். இவர்கள் அங்கு முதலில் தங்களை வலுவாக நிலைநிறுத்தி, வெற்றிக்குரிய, நம்பிக்கையான சூழலை உருவாக்க வேண்டும். அணி உரிமையாளர்களுடன் நல்ல அணுகுமுறை இருக்க வேண்டும். வீரர்களின் ஓய்வறை சூழல் சிறப்பாக இருக்க வேண்டும். இப்படி நிறைய விஷயங்களை கவனிக்க வேண்டி இருப்பதால் புதிய அணிகளுக்கு கொஞ்சம் நேரம் எடுக்கும். எனவே முதல் 4-5 ஆட்டங்களுக்கு பிறகே ஒவ்வொரு அணியையும் மதிப்பிட முடியும்.

    இருப்பினும் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் போன்ற அணிகள் எப்போதும் தங்களது பெரிய வீரர்களை தக்க வைத்துக் கொண்டே இருக்கின்றன. அவர்கள் வெற்றிகரமான அணிகளாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். சென்னை, மும்பை அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெறும் பட்சத்தில் மற்ற அணிகளுக்கு சவால் இன்னும் அதிகமாக இருக்கும்.

    இதே போல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் தரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளன. இந்த 4 அணிகளும் தங்களுக்கே உரிய கிரிக்கெட்டை சிறப்பாக விளையாடி இருக்கின்றன. வரும் சீசனிலும் அவர்கள் நன்றாக ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

    'ஹாட்ரிக்' விக்கெட் குறித்து கேட்கிறீர்கள். 'ஹாட்ரிக்' விக்கெட்டை திட்டமிட்டு எடுக்க முடியாது. அது நடப்பது அரிது. போட்டிக்குரிய நாளில் சூழல் சாதகமாக அமைந்து, அதிர்ஷ்டமும் இருந்தால் 'ஹாட்ரிக்' விக்கெட் சாதனை படைக்க முடியும்.

    இவ்வாறு பாலாஜி கூறினார்.

    • கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அதிகம்.
    • வாழு, வாழவிடு என்ற கொள்கைக்கு ஏற்ப நாமும் வாழ்வோம், சிட்டு குருவிகளையும் வாழ விடுவோம்.

    இன்று சிட்டுக்குருவிகளை பார்ப்பதே தற்போது அரிதாக உள்ளது. முன்பு கிராமப்புறங்களில் பரவலாக காணப்பட்டன. தற்போது அவை படிப்படியாக இருக்கும் இடமே தெரியாத அளவுக்கு அழிந்து கொண்டே வருகிறது. அழியும் இனத்தில் உள்ள சிட்டுக்குருவிகளை பாதுகாக்க வேண்டும். இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம். இந்த தினத்தில் சிட்டுக்குருவிகள் பற்றி மதுரையை சேர்ந்த பறவைகள் நல ஆர்வலரும், ஆசிரியையுமான சா.வனிதா கூறியதாவது:-

    உலகில் வாழும் உயிரினங்களுள் மிக முக்கியமான உயிரினம் சிட்டுக்குருவிகள். அது ஒரு காட்டுயிரி என்றாலும் அவை பெரும்பாலும் மனித குடியிருப்புகளை ஒட்டியே வாழ்பவை. பன்னாட்டு இயற்கை பாதுகாப்பு ஒன்றியம்(ஐ.யூ.சி.என்.) கடந்த 2002-ம் ஆண்டு அழியும் நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சிட்டுக்குருவியை சேர்த்தது. ஆனால் 2018-ம் ஆண்டு அதிக கவனம் தேவைப்படாத உயிர்களின் பட்டியலுக்கு மாற்றியது. செல்போன் கோபுரங்களின் கதிர்வீச்சால் சிட்டுக்குருவி காணாமல் போவதாக பரவலாக ஒரு கூற்று உண்டு. ஆனால் உதகையில் செல்போன் கோபுரங்கள் உள்ள பல இடங்களில் சிட்டுக்குருவிகள் வாழ்வதை காணலாம்.

    நகரமயமாதல் காரணத்தால் நமது குடியிருப்பு முறை மாறிப்போனதுதான் சிட்டுக்குருவிகள் குறைந்து போக முதன்மையான காரணம். ஓட்டு வீடுகளும், குடிசை வீடுகளும் இருந்தவரை அவைகளுக்கு கூடு கட்ட இடம் கிடைத்தன. ஆனால் நாம் கான்கிரீட் வீடுகளுக்கு மாறிய போது சிட்டுக்குருவிகள் இல்லாமல் போனது.



    சிட்டுக்குருவிகள் தானிய உண்ணிகள் என்றாலும் தனது குஞ்சுகளுக்கு முதலில் ஊட்டுவது சிறு புழுக்களையும், பூச்சிகளையும தான். தாவரங்கள் இருந்தால்தான் பூச்சிகள் இருக்கும். ஆனால் ஒரு செடி கூட வளர இயலாமல் சிமெண்டு மயமாக நமது இருப்பிடங்கள் மாறியதால் பூச்சிகளும், புழுக்களும் இல்லாமல் போயின. கொசுக்களை அழிப்பதில் சிட்டுக்குருவிகளின் பங்கு அதிகம். சிட்டுக்குருவிகளின் ஒலியை கேட்பதால் மக்களின் மன அழுத்தம் குறைவதாக உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். எனவே ஆண்டுதோறும் மார்ச் 20-ந்தேதி இன்று(வியாழக்கிழமை) வரை உலக சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடப்படுகிறது. வாழு, வாழவிடு என்ற கொள்கைக்கு ஏற்ப நாமும் வாழ்வோம், சிட்டு குருவிகளையும் வாழ விடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • திருவெள்ளாறை ஸ்ரீ கவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் பவனி.
    • திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு பங்குனி-6 (வியாழக்கிழமை)

    பிறை: தேய்பிறை

    திதி: சஷ்டி நள்ளிரவு 12.02 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம்: அனுஷம் இரவு 9.02 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

    எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

    சூலம்: தெற்கு

    நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருவாரூர் ஸ்ரீ தியாகராஜர் பவனி. திருவெள்ளாறை ஸ்ரீ கவேதாத்திரிநாதர் கருட வாகனத்தில் பவனி. ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் ஸ்ரீ ராகவேந்திரருக்கு குருவார திருமஞ்சன சேவை. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ குருபகவானுக்கு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவலில் ஸ்ரீ ராமர் மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிநாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை. திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-மேன்மை

    ரிஷபம்-கடமை

    மிதுனம்-சிறப்பு

    கடகம்-சுகம்

    சிம்மம்-துணிவு

    கன்னி-ஆர்வம்

    துலாம்- பக்தி

    விருச்சிகம்-தனம்

    தனுசு- முயற்சி

    மகரம்-கண்ணியம்

    கும்பம்-உறுதி

    மீனம்-கவனம்

    • தமிழ்நாடு மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி உள்ளன. மேலும், மீனவர்களின் விசைப்படகுகளை பறிமுதல் செய்வதையும் இலங்கை கடற்படை வழக்கமாக கொண்டுள்ளது. மீனவர் கைது சம்பவங்களை கண்டித்து நேற்று தமிழ்நாட்டில் மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 11 பேரை எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை கைது செய்துள்ள சம்பவம் மீண்டும் அரங்கேறியுள்ளது. மேலும், தமிழ்நாடு மீனவர்களுக்கு சொந்தமான இரண்டு படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

    ஒவ்வொரு முறை தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் போதும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறைபிடிக்கப்படும் மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு கடிதம் எழுதி வருகிறார். 

    • துறைமுகங்கள், கடற்கரை பகுதிகள், படகுகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    • சமீப காலங்களில், ரூ.7,350 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் நமது துறைமுகங்களில் இறங்கியுள்ளன.

    குஜராத் மாநில சட்டசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. அமித் சவ்தா பாரதிய ஜனதா ஆட்சியை கடுமையாக விமர்சித்து பேசினார். குஜராத் போதைப்பொருள் தயாரிப்பு மற்றும் இறங்கும் மையமாகியுள்ளது என்றார்.

    இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

    ரசாயனங்களுடன் சாராயம் விற்கப்படுவதால் இளைஞர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். ஊழல் காரணமாக மாநிலம் முழுவதும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களும் தாராளமாக விற்கப்படுகின்றன. தண்டனை வழங்கப்படுவதில் குறைபாடு மற்றும் சில நேர்மையற்ற காவல்துறை அதிகாரிகளாலும் இது ஏற்படுகிறது.

    குஜராத் போதைப் பொருட்கள் இறங்கும் மையமாகிவிட்டது. துறைமுகங்கள், கடற்கரை பகுதிகள், படகுகளில் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சமீப காலங்களில், ரூ.7,350 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் நமது துறைமுகங்களில் இறங்கியுள்ளன.

    மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் போதைப்பொருள் தயாரித்ததாக பல மருந்து நிறுவனங்களும் பிடிபட்டுள்ளன. குஜராத் போதைப்பொருள் உற்பத்தி மையமாக மாறியுள்ளது என்பதை இது காட்டுகிறது.

    டீக்கடைகள் மற்றும் தெருவோர உணவு கூடங்களில் கூட போதைப்பொருட்கள் எளிதாகக் கிடைக்கின்றன. சமீபத்தில் சூரத்தில் ஒரு பாஜக தலைவர் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்டார்.

    போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும்.

    சமூக விரோத சக்திகள் பட்டியலை தயார் செய்ய குஜராத் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதற்குப்பதிலாக உள்துறை நேர்மையற்ற மற்றும் ஊழல் நிறைந்த அதிகாரிகளின் பட்டியலை தயார் செய்ய வெண்டும் வேண்டும்.

    இவ்வாறு அமித் சவ்தா விமர்சனம் செய்தார்.

    • செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
    • செல்வமணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த 11 ஐயப்ப பக்தர்கள் சபரிமலை சென்றுவிட்டு பழனிக்கு சென்றனர்.

    அப்போது, செல்வமணி என்பவர் தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது திடீரென மூச்சுத்திணறல், நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கினார்.

    பிறகு, செல்வமணியை உடனடியாக மீட்டு பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்நிலையில், செல்வமணி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் நின்றுக் கொண்டிருந்த பக்தர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    • யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆதித்யா இணைந்து பாடியுள்ளனர்.
    • பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.

    யுவன் ஷங்கர் ராஜாவின் YSR பிலிம்ஸ் நிறுவனம் ஸ்வீட்ஹார்ட் என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்க ரியோ ராஜ் மற்றும் கோபிகா ரமேஷ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இப்படத்தில் இவர்களுடன் ரெடின் கிங்ஸ்லி, துளசி, அருணாச்சலேஷ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி மற்றூம் ஃபௌசி நடித்துள்ளனர். அருணாச்சலேஷ்வரன் உடன் ரியோ நடித்த காமெடி காட்சிகள் மக்களிடம் மிகவும் நன்றாக வொர்க் அவுட் ஆகியுள்ளது.

    விளையாட்டுத்தனமான காதலன் எதிர்பாராமல் காதலி பிரக்னண்ட் ஆகிறாள் இதனை அவர்கள் எப்படி சமாளிக்கிறார்கள். இதற்கு என்ன ஆனது என்பதே படத்தின் ஒன் லைனாக அமைந்துள்ளது.

    இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ஒருத்தி' என்ற வீடியோ பாடல் வெளியாகி உள்ளது. இந்த பாடலை யுவன் சங்கர் ராஜா மற்றும் ஆதித்யா இணைந்து பாடியுள்ளனர். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியுள்ளார்.

    • மேற்கு வங்க வாக்காளர் அட்டையில் இடம் பிடித்துள்ள எபிக் எண், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர் அட்டையில் இடம் பெற்றுள்ளது.
    • இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள. தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    பாராளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு, போலி வாக்காளர் அடையாள அட்டை எண் விவகாரம் தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும் என திமுக, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இரு அவைகளிலும் விவாதம் நடத்த அவைத் தலைவர்கள் அனுமதிக்கவில்லை. இதனால் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபடுவதுடன், வெளிநடப்பு செய்த வண்ணம் உள்ளனர்.

    இந்த நிலையில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை {EPIC (Electoral Photo Identity Card)} தொடர்பாக குறுகிய கால விவாதத்திற்கு அனுமதிக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இந்த நிலையில் உங்களுடைய பரிந்துரை மிகவும் சிறந்த பரிந்துரை. இது தொடர்பாக நான் பரிசீலனை செய்வேன் என ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சுவேந்து சேகர் ராய் "மாநிலங்களவையில் 267 விதியின் கீழ் வழங்கப்படும் நோட்டீஸ் 176 ஆவது விதியின் கீழ் மாற்றப்படுவதற்கான முன் நிகழ்வுகள் நடந்தள்ளது. இதனால் 267 விதியின் கீழ் உள்ள நோட்டீஸை 176 விதியின் கீழ் உங்களுடைய விருப்ப அதிகாரத்தை பயன்படுத்தி குறுகிய கால விவாத்திற்கு அனுமிக்க வேண்டுகோள் வைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

    அதற்கு ஜெகதீப் தன்கர் "எம்.பி.யின் திறமையை பாராட்டுகிறேன். சிறந்த பரிந்துரையை வழங்கியுள்ளார். இதை பரிசீலனை செய்து முடிவு எடுப்பேன்" என்றார்.

    மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள எபிக் நம்பர், மற்ற மாநிலங்களில் உள்ள வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் இடம் பிடித்துள்ளது என மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார்.

    வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ஒரே மாதிரியான எபிக் எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சனை 25 ஆண்டுகளாக உள்ளது. இதை இன்னும் மூன்று மாதங்களில் சரி செய்வோம். இந்த எண்ணை பொருட்படுத்தாமல் அதில் உள்ள தொகுதி, வார்டு ஆகியவற்றை கொண்டு மக்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.

    இந்த விளக்கம் போதுமானதாக இல்லை. இது தொடர்பாக பாராளுமன்ற இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆம் ஆத்மி அமைச்சர்கள் மீது மதுபான ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது.
    • மற்றொரு அமைச்சரான சத்யேந்திர ஜெயின் மீதும் சில வழக்குகள் உள்ளன.

    புதுடெல்லி:

    தலைநகர் டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியின்போது முதல் மந்திரியாக இருந்த ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதல் மந்திரியாக இருந்த மணீஷ் சிசோடியா ஆகியோர் மீது ஏற்கனவே மதுபான ஊழல் வழக்கு உள்ளது. அதுபோல் அமைச்சராக இருந்த சத்யேந்திர ஜெயின் மீதும் சில வழக்குகள் உள்ளன.

    இதற்கிடையே, ஆம் ஆத்மி ஆட்சியின்போது பள்ளிக் கட்டடங்கள் கட்டுவதில் ரூ.2 ஆயிரம் கோடி மோசடி நடந்தது தொடர்பாக, முன்னாள் துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா, முன்னாள் மந்திரி சத்யேந்திர ஜெயின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்திருந்தார்.

    இந்நிலையில், டெல்லியில் ரூ.571 கோடி செலவில் சி.சி.டி.வி. கேமராக்களை பொருத்தும் திட்டத்திற்காக லஞ்சம் பெற்றதாக சத்யேந்திர ஜெயின் மீது மற்றொரு ஊழல் வழக்கை டெல்லி அரசின் ஊழல் தடுப்பு போலீசார் பதிவு செய்துள்ளனர்.

    மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் சி.சி.டி.வி. கேமராக்களைப் பொருத்தும் திட்டத்தை டெண்டர் எடுத்த நிறுவனம், உரிய காலத்திற்குள் அந்தப் பணிகளை முடிக்காததால் ரூ.16 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராதத் தொகையை தள்ளுபடி செய்வதற்காக ரூ.7 கோடியை சத்யேந்திர ஜெயின் லஞ்சமாக பெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    கடந்த 2023, மே மாதம் நிலுவையில் உள்ள இந்த வழக்கில் தற்போது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர்.
    • ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவரது மனைவி ஆதிரா திருப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.

    ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில் இன்று மதியம் 12.15 மணிக்கு அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஜான் சென்ற காரை வழிமறித்து நிறுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதுகுறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில் கண்டனத்துடன் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியதாவது:-

    இன்று, ஈரோடு மாவட்டத்தில், பட்டப்பகலில், தேசிய நெடுஞ்சாலையில் வைத்து ஜான் என்பவர் அவரது மனைவி கண்முன்னே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

    நேற்று திருநெல்வேலியில், ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி மறைவதற்குள் அடுத்த படுகொலை.

    திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தினந்தோறும் படுகொலைகள், கொள்ளை, பாலியல் வன்முறைகள். தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்று ஒன்று இருக்கிறதா என்பதே தெரியவில்லை.

    சட்டத்திற்கோ, காவல்துறைக்கோ சமூக விரோதிகள் பயப்படுவதே இல்லை. காவல் நிலையங்கள் செயல்படுகின்றனவா அல்லது திமுகவினர் பூட்டு போட்டு பூட்டிவிட்டார்களா என்பதும் தெரியவில்லை.

    இது போன்ற அவல நிலையைத் தமிழகம் இதுவரை கண்டதில்லை. இந்தச் சூழ்நிலையிலும் அப்பா, தாத்தா என்று சுய விளம்பரம் செய்து கொண்டிருக்க அசிங்கமாக இல்லையா மு.க.ஸ்டாலின் அவர்களே?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வென்றார்.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.

    இதில் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 2-வது சுற்றில் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.

    • மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது.
    • பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர் என தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு தற்போது நடைபெற்று வருகிறது. நேற்று மக்களவையில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மகா கும்பமேளா மூலம் இந்தியாவின் பலத்தை உலகமே கண்டது என்றார்.

    மேலும், மகா கும்பமேளாவை வெற்றிகரமாக ஒருங்கிணைத்து நடத்தி முடித்ததற்காக கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பலரும் மகா கும்பமேளா வெற்றிக்காக தங்கள் பங்களிப்பை தந்துள்ளனர்.

    அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டால் பல்வேறு சாதனைகளை புரியலாம் என ஏற்கனவே தெரிவித்திருந்தேன். தற்போது, ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவின் பிரம்மாண்டத்தை கண்டது என தெரிவித்தார்.

    இந்நிலையில், இன்று பாராளுமன்றத்தின் வெளியே சமாஜ்வாதி கட்சியின் எம்.பி.யான அகிலேஷ் யாதவ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    மகா கும்பமேளாவை ஒருங்கிணைத்து நடத்த மத்திய அரசு எவ்வளவு நிதி வழங்கியது? உத்தரப் பிரதேச முதல் மந்திரியும், மத்திய பிரதேச முதல் மந்திரியும் வாகனங்களை நிறுத்துவதற்கான ஏற்பாடுகளை மட்டுமே செய்தனர். மக்கள் எல்லைக்குள் கூட நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

    1000 இந்துக்கள் காணாமல் போயுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்கு பா.ஜ.க.வும், அதன் தொண்டர்களும் உதவ வேண்டும்.

    காணாமல் போயுள்ள அந்த 1000 இந்துக்கள் குறித்து அவர்களின் குடும்பங்களுக்கு பா.ஜ.க. முறையான பதிலை வழங்கவேண்டும். காணாமல் போன அந்த 1000 இந்துக்களையாவது பா.ஜ.க. கண்டுபிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    ×