என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Swiss Open badminton"

    • திரிஷா- காயத்ரி ஜோடி 21-12, 21-8 என எளிதாக வெற்றி பெற்றது.
    • கிடாம்பி ஸ்ரீகாந்த் 2-வது சுற்றில் சீன வீரரிடம் 15-21, 11-21 எனத் தோல்வியடைந்தார்.

    சுவிட்சர்லாந்து ஓபன் 2025 பேட்மிண்டன் தொடர் பாசெலில் நடைபெற்று வருகிறது. பெண்களுக்கான இரட்டையர் பிரவு போட்டியில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய ஜோடியான திரிஷா ஜோலி- காயத்ரி கோபி சந்த், ஜெர்மனியின் அமெரிலி லீமேன்- செலின் ஹப்ஸ்ச் ஜோடியை எதிர்கொண்டது.

    இதில் இந்திய ஜோடியான திரிஷா- காயத்ரி 21-12, 21-8 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினர்.

    ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் இந்தியாவின் பியான்ஷு ராஜாவத் 15-21, 17-21 என டோமா போபோவிடம் தோல்வியடைந்து ஏமாற்றம் அடைந்தார்.

    கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் ஹெச்.எஸ். பிரனோயை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியிருந்தார். ஆனால் 2-வது சுற்றில் சீனாவின் லி ஷி பெங்கிடம் 15-21, 11-21 தோல்வியடைந்தார். கிடாம்பி ஸ்ரீகாந்தால் 40 நிமிடம் கூட தாக்குப்பிடிப்ப முடியவில்லை.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெலில் நடந்து வருகிறது.
    • ஸ்ரீகாந்த், ராஜாவத் ஆகியோர் 2-வது சுற்றில் தோல்வியடைந்தனர்.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெலில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த 2-ம் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக வீரர் சங்கர் முத்துசாமி- டென்மார்க்கின் ஆண்டர்ஸ் அன்டன்சனுடன் மோதினர்.

    இதில் சங்கர் முத்துசாமி 18-21,21-12,21-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறினார். அவர் கால்இறுதியில் பிரான்சை சேர்ந்த சி.போபோவ்வுடன் மோதுகிறார்.

    மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 15-21, 11-21 என்ற நேர்செட் கணக்கில் சீனாவின் லி ஷிபெங்கிடம் தோல்வி அடைந்தார். அதேபோல் மற்றொரு இந்திய வீரரான பிரியான்ஷு ராஜாவத் 15-21, 17-21 என்ற செட் கணக்கில் பிரான்ஸ் வீரர் டி.போபோவ்விடம் வீழ்ந்தார்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ரஜாவத் முதல் சுற்றில் வென்றார்.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் பிரியான்ஷு ரஜாவத், சுவிட்சர்லாந்து வீரர் டோபியாஸ் கொன்சி உடன் மோதினார்.

    இதில் ரஜாவத் 21-10, 21-11 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    இன்று மாலை நடைபெறும் 2-வது சுற்றில் பிரான்ஸ் வீரர் டோமா ஜூனியர் போபோவ் உடன் மோதுகிறார்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெலில் நடந்து வருகிறது.
    • 31-ம் நிலை வீராங்கனையான ஜூலி டாவல் ஜேக்கப்சனிடம் சிந்து தோல்வியடைந்தார்.

    பாசெல்

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெலில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 49-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான எச்.எஸ். பிரனாயை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

    மற்றொரு ஆட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த சங்கர் முத்துசாமி 21-5, 21-16 என்ற நேர் செட்டில் டென்மார்கின் ஜோகன்சனை பந்தாடி அடுத்த சுற்றை எட்டினார்.

    பெண்கள் பிரிவில் உலக தரவரிசையில் 17-வது இடம் வகிக்கும் இந்திய முன்னணி வீராங்கனை பி.வி. சிந்து 17-21, 19-21 என்ற நேர் செட்டில் 31-ம் நிலை வீராங்கனையான ஜூலி டாவல் ஜேக்கப்சனிடம் (டென்மார்க்) அதிர்ச்சிகரமாக தோல்வியை தழுவினார்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் வென்றார்.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த், சக நாட்டு வீரர் எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார்.

    இதில் ஸ்ரீகாந்த் 23-21, 23-21 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் 2-வது சுற்றில் சீன வீரர் லீ ஷிபெங் உடன் மோதுகிறார்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் இஷாராணி பரூவா முதல் சுற்றில் வென்றார்.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் இஷாராணி பரூவா, சக நாட்டு வீராங்கனை ஆகர்ஷி காஷ்யப் உடன் மோதினார்.

    இதில் இஷாராணி 18-21, 21-17, 22-20 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நடந்து வருகிறது.
    • பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய ஜோடி முதல் சுற்றில் வெற்றி பெற்றது.

    பாசெல்:

    சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. வரும் 23-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    இந்நிலையில், பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி-காயத்ரி கோபிசந்த் ஜோடி, சுவிட்சர்லாந்தின் அலைன் முல்லர்-நெதர்லாந்தின் கெல்லி வான் புய்டன் ஜோடி உடன் மோதியது.

    இதில் இந்திய ஜோடி 21-16, 21-17 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

    • சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது.
    • இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

    பாசெல்:

    மொத்தம் ரூ.2¼ கோடி பரிசுத் தொகைக்கான சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 23-ந் தேதி வரை நடக்கிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்திய வீரர் லக்ஷயா சென், எச்.எஸ்.பிரனாய், ஆயுஷ் ஷெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    இந்நிலையில் முதல் சுற்றில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி- மலேசியா வீரர் சோழன் காயன் உடன் மோதினார். இதில் இந்திய வீரர் ஆயுஷ் ஷெட்டி 21-12, 21-15 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார்.

    ×