என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
    • 'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு குறைவு.

    இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.

    இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.

    இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.

    பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு மக்களிடம் இருந்து நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது.

    இந்தியன் 2 திரைப்படத்தின் முடிவில் இந்தியன் 3 திரைப்படத்திற்கான டிரெய்லர் இடம் பெற்றிருக்கும். இந்த எதிர்மறை கருத்தினால் இந்தியன் 3 திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள், திரையரங்கில் வெளியாக வாய்பில்லை போன்ற செய்திகள் பரவின.

    இந்நிலையில், இந்தியன் 3 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் 'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது.

    மேலும், லைகா நிறுவனம் இப்படத்தில் இருந்து பின்வாங்கியதாகவும், Netflix தங்களது ஒப்பந்தத்தை திரும்பப்பெற்றுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இந்தியன் 3 கைவிடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.

    சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார்.

    ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.

    கருப்பு படத்தை தொடர்ந்து, சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொள்கிறார்.

    படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

    இந்நிலையில், 'சூர்யா 46' படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் ரூ.85 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் 25 சதவீதம் கூடுதல் வரி விதித்துள்ளது அமெரிக்கா.
    • மக்காச் சோளம் இறக்குமதி செய்ய மறுத்தால், அமெரிக்கா சந்தையை அணுகுவது கடினமாகிவிடும்.

    இந்தியா- அமெரிக்கா இடையில் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள டொனால்டு டிரம்ப் முயற்சி மேற்கொண்டு வருகிறது. நவரத்தினம் முதல் விவசாய பொருட்கள் வரை குறைவான வரி விதிப்பு மூலம் ஏற்றுமதி, இறக்குமதி செய்ய வேண்டும் என்பதுதான் அமெரிக்காவின் விருப்பம்.

    தற்போது அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்கப்படுவதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறது. அதேவேளையில் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு அமெரிக்கா குறைந்த அளவிலான வரி மட்டுமே விதிப்பதாக அமெரிக்கா கூறுகிறது.

    விவசாய பொருட்களில் சமரசம் செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்து வருகிறது. ஏனென்றால் இந்தியாவில் சிறுகுறு விவசாயிகள் விவசாயத்தில் ஈடுபடுகிறார். அமெரிக்காவில் பண்ணை விவசாயம். அமெரிக்காவில் இருந்து வரி இல்லாமல் இந்தியாவில் விவசாயிகள் பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டால், இந்திய விவசாயிகளால் தாக்குப்பிடிக்க முடியாது. இதனால் இந்தியா கவனமாக செயல்பட்டு வருகிறது.

    இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத வரி விதித்தது. இருந்த போதிலும் இந்தியா மவுனம் காத்து வந்தது. இதனால் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும். இல்லையெனில் கூடுதலாக 25 சதவீதம் வரி விதிப்போம் என இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்து வந்தது. அப்போதும் இந்தியா அடி பணியவில்லை. இதனால் கூடுதலா 25 சதவீதம் வரி விதித்தது.

    இப்படி இந்தியாவுக்கு நெருக்கொடுத்து வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திவிட வேண்டும் என அமெரிக்கா துடிக்கிறது. ஆனால், இந்தியா அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாமல் உள்ளது.

    இதற்கிடையே சீனா மற்றும் ரஷியா உடன் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது. இதனால் பேச்சுவார்த்தையை தொடங்க ஆவலாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார். நாளை டெல்லியில் பேச்சுவார்ததை நடத்தப்பட இருக்கிறது.

    இந்த நிலையில், தற்போது அமெரிக்காவிடம் இருந்து மக்காச்சோளம் இறக்குமதி செய்ய இந்தியா மறுப்பு தெரிவித்தால் அமெரிக்க சந்தையை இந்தியா அணுகுவதை இழக்க நேரிடும் என அமெரிக்க வர்த்த செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் எச்சரித்துள்ளார்.

    இது தொடர்பாக லுட்னிக் தெரிவித்திருப்பதாவது:-

    இந்தியா 1.4 பில்லியன் மக்களை கொண்டுள்ளதாக பெருமை பேசுகிறது. 1.4 பில்லியன் மக்களும் ஏன் ஒரு புஷல் (25.4 கிலோ) அமெரிக்க சோளத்தை வாங்க முடியாது?. அவங்க எல்லாத்தையும் நமக்கு விக்கிறாங்க. நம்ம சோளத்தை வாங்க மாட்டாங்கன்னு சொல்றது உங்களுக்குப் புரியலயா?. எல்லாத்துக்கும் வரி விதிக்கிறாங்க.

    உங்கள் வரிகளைக் குறைக்கவும், நாங்கள் உங்களை நடத்தும் விதத்தில் எங்களை நடத்தவும் என டொனால்ட் டிரம்ப் இந்தியாவிடம் கேட்டுக் கொண்டுள்ளார். பல வருடங்களாக செய்த தவறைச் சரி செய்யவும், சரிசெய்யும் வரை வேறு வழியில் செல்லவும் (வரி விதிப்பை அமல்படுத்துவது) டிரம்ப் நிர்வாகம் விரும்புகிறது.

    நீங்கள் அதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது உலகின் மிகப்பெரிய நுகர்வோன அமெரிக்காவுடன் வணிகம் செய்வதில் கடினமான நேரத்தை எதிர்கொள்ள வேண்டும். இதுதான் டிரம்பின் மாடல்.

    இவ்வாறு லுட்னிக் தெரிவித்துள்ளார்.

    • வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவு.
    • தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

    வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் முழு விதிகளையும் தடை செய்ய மறுத்த உச்ச நீதிமன்றம், வக்பு வாரிய சட்ட திருத்தத்தின் சில விதிகளுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

    இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கருத்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    வக்பு சட்டத்திருத்த வழக்கில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதிக்கு கிடைத்த வெற்றி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.

    வக்பு வழக்கில் தவெக சார்பில் மனுத்தாக்கல் செய்த முயற்சி மேற்கொண்ட சட்டக்குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள்.

    உச்சநீதிமன்றத்தின் உத்தரவு நீதி, அரசியலமைப்பு மதிப்புகள், அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதற்கு கிடைத்த மகத்தான வெற்றி.

    நீதி சமத்துவம், மத சுதந்திரத்தை கடுமையாக குறைக்கும் விதிகளை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது.
    • 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல்.

    சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதித்து மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் அறிவித்துள்ளது.

    மாணவர்கள் 75 சதவீதம் வருகைப்பதிவு வைத்திருந்தால் மட்டுமே பொதுத் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர் என்று புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    மேலும், சிபிஎஸ்இ 10ம் வகுப்பில் மாணவர்கள் 5 பாடப்பிரிவுடன் கூடுதலாக 2 பிரிவுகளில் பாடங்களை கற்று தேர்வில் பங்கேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

    இதேபோல், 12ம் வகுப்பில் கூடுதலாக ஒரு பாடப்பிரிவை இணைத்து படிக்க வேண்டும் எனபுதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டது.

    மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 2026-27 கல்வியாண்டிலிருந்து 9-ம் வகுப்பில் புத்தகத்தை பார்த்து தேர்வெழுதும் முறைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த கல்வியாண்டு முதல் இது நடைமுறைக்கு வரும் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி நாளை டெல்லி வருகிறார்.
    • Fast-track வர்த்தக பேச்சுவார்த்தை நாளை டெல்லியில் நடைபெற இருக்கிறது.

    அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்ள இந்தியாவுக்கு டொனால்டு டிரம்ப் காலக்கெடு நிர்ணயித்திருந்தார். ஆனால், அந்த காலகெடுவுக்குள் ஒப்பந்தம் நிறைவேற்றப்படவில்லை. இதனால் இந்திய பொருட்கள் மீது 25 சதவீதம் வரி விதித்தார். ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த மறுப்பு தெரிவித்ததால் மேலும் 25 சதவீதம் வரி விதித்தார். இதனால் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளது. 100 ரூபாய் பொருள் மீது 50 ரூபாய் வரி விதித்துள்ளது.

    இதனால் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. வர்த்தக ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட மறுப்பு தெரிவித்ததால் இந்தியாவை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்திருந்தார். மேலும், வெள்ளை மாளிகைக்கான வர்த்தக ஆலோசகர் பீடடர் நவோராவும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இந்தியாவை வரி மகாராஜா எனக் கூறியிருந்தார்.

    இதற்கிடையே இந்தியா சீனா மற்றும் ரஷியாவுடன் நெருக்கம் காட்டியது. இதனால் இந்தியாவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைக்கு ஆவலுடன் இருக்கிறேன் என டொனால்டு டிரம்ப் தெரிவித்திருந்தார். இருதரப்பிலும் இருந்து பேச்சுவார்த்தைக்கான பணிகளி வளர்ந்து கொண்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்தியா பேச்சுவார்த்தைக்கு வந்து கொண்டிருக்கிறது. இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்கவில்லை என்றால், அது அவர்களுக்கு கடுமையான விளைவுகளை சந்திக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில் நாளை இந்தியா- அமெரிக்கா இடையிலான் Fast-Track பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது. இதை இந்தியாவுக்கான பேச்சுவார்த்தைக்குழுவின் தலைவரும், வர்த்தக அமைச்சகத்தின் சிறப்பு செயலாளருமான ராஜேஷ் அகர்வால் "இந்தியா- அமெரிக்கா fast-track வர்த்த பேச்சுவார்தை நடத்தும்" எனத் தெரிவித்துள்ளார்.

    தெற்காசியாவுக்கான அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பிரெண்டன் லிஞ்ச் நாளை ஒருநாள் பயணமாக வர்த்தக ஒப்பந்த ஆலோசனைக்காக இந்தியா வருகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

    • தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • கூட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்கட்டும்.

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்தில் போதிய அளவில் கூட்டம் இல்லாததால் அக்கட்சி பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடுகடுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

    கூட்டம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்பது இதுவே முதலும், கடைசியுமாக இருக்கட்டும் என பிரேமலதா விஜயகாந்த் ஆத்திரமடைந்து கூறியதாக கூறப்படுகிறது.

    • குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
    • மைத்திரி மூவி மேக்கர்ஸ் நீதிமன்றத்திற்கு எச்சரிக்கை விடுத்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    குட் பேட் அக்லி படத்தில் இடம்பெற்ற தனது பாடலை நீக்காவிடில் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இசைஞானி இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என மைத்திரி மூவி மேக்கர்ஸ் நீறுவனத்திற்கு எச்சரிக்கை விடுத்து இளையராஜா நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    அதில், குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து தனது பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

    நீதிமன்ற உத்தரவை மீறி குட் பேட் அக்லி படத்தில் தொடர்ந்து பாடல்கள் பயன்படுத்தப்பட்டு வருவதாக இளையராஜா நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் விடுத்துள்ளார்.

    • பீடிக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க பரிந்துரை எனத் தகவல்.
    • பீடி- பீகார் ஆகியவை பி-யில்தான் தொடங்குகிறது என காங்கிரஸ் பதிவு.

    பீகார் மாநிலம் மெல்ல மெல்ல வளர்ச்சியை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கும்போது காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் மாநிலத்தை அவமதிப்பதில் பிசியாக இருப்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சி சமீபத்தில் bidi-Bihar எனக் கருத்து தெரிவித்திருந்தது. இதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்கும் வகையில் கூறியிருப்பதாவது:-

    பீகாரில் ரெயில் என்ஜின்கள் தயாரிக்கப்பட்டு, ஆப்பிரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், இது காங்கிரஸ் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர்களுக்கு பிடிக்கவில்லை. பீகார் மாநிலம் வளர்ச்சி அடையும் போதெல்லாம், இந்த கட்சிகள் மாநிலத்தை அவமதிப்பதில் பிசியாகிவிடுகின்றன. காங்கிரஸ், ஆர்ஜேடி-யுடன் கூட்டு சேர்ந்து, சமூக ஊடகங்களில் பீகாரை கேலி செய்வதிலும், மாநிலத்தை பீடியுடன் ஒப்பிடுவதிலும் மும்முரமாக உள்ளன. இவர்கள் பீகாரை வெறுக்கிறார்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

    பாஜக தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் ஜிஎஸ்டி வரியில் மாற்றம் கொண்டு வர முடிவு செய்தது. இந்த நிலையில், கேரள மாநில காங்கிரஸ் பீடியும், பீகாரும் பி-யில் (Bidi-Bihar) தொடங்குகிறது. இதை ஒரு பாவகமாக கருத முடியாது" எனக் கூறியிருந்தது. பீடி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க முடிவு செய்துள்ளதை இவ்வாறு காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இது கடும் விமர்சனத்தை எழுப்பிய நிலையில், போஸ்ட் நீக்கப்பட்டது.

    • ஆன்லைன் ஆர்டர் தொடர்பாக முகவரி கேட் Code-ஐ பெற்றுள்ளனர்.
    • அதன்பின் போனை ஹேக் செய்து, வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பி பணம் பறித்துள்ளனர்.

    கன்னட நடிகர் உபேந்திர ராவ் மற்றும் அவரது மனைவியின் போன் நம்பர் ஹேக் செய்யப்பட்டுள்ளது. சைபர் மோசடியின் முயற்சியாக மர்ப நபர்கள் போனை ஹேக் செய்துள்ளனர் என புகார் தெரிவித்துள்ளார்.

    இன்று காலை எனது மனைவி போனுக்கு, ஆன்லைன் ஆர்டர் தொடர்பாக தெரியாத நம்பரில் இருந்து போன் வந்துள்ளது. போனை எடுத்த பின்னர்தான், சைபர் மோசடி எனத் தெரிவந்துள்ளது. உடனே போன் ஹேக் செய்யப்பட்டது. அதேபோல் என்னுடைய போனும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. எங்களுடைய போனில் இருந்து, பணம் தொடர்பாக போன் செய்தால், பதில் அளித்து பணம் செலுத்த வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.

    என்னுடைய நண்பர்கள் சிலர் என்னுடைய போனில் இருந்து சென்ற மெசேஜ் காரணமாக, 2 லட்சத்திற்கும் மேல் பணத்தை இழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் கவனமாக இருக்கும்படி கேட்டுள்ளார்.

    இது தொடர்பாக உபேந்திர ராவ் கூறுகையில் "காலையில் யாரோ ஓருவர் எனக்கு போன் செய்து, டெலிவரி நபருக்கு அட்ரஸ் கிடைக்கவில்லை. இதனால் தங்களுக்கு வந்த Code-ஐ அனுப்புங்கள், அந்த நபர் (டெலிவரி நபர்) உடனடியாக உங்களை அழைப்பார் என பேசினார்.

    எனக்கு கொஞ்சம் சந்தேகம் வந்தது. ஆனால், அவசரமாக அவ்வாறு செய்தேன். அவர்கள் என்னுடைய போனை ஹேக் செய்தனர். அதன்பின் என்னுடைய வாட்ஸ்அப்வில் உள்ளவர்களக்கு அவசரம் எனக் கூறி பணம் அனுப்புமாறு மெசேஜ் அனுப்பினார்கள். 2 மணி நேரத்தில் திருப்பி அனுப்புவதாக கூறி 55 ஆயிரம் கேட்டு தகவல் அனுப்பினர்.

    இது தொடர்பான நாங்கள் உடனடியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். சைபர்கிரைன் துறையின் உயர்அதிகாரியிடம் பேசினோம். அவர்கள் மெசேஜ்-யை ஓபன் செய்ய வேண்டாம். பணம் அனுப்ப வேண்டாம் எனக் கூறினர்" என்றார்.

    • மாணவர்கள் கோஷ்டியாக பிரந்து மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.
    • பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை.

    நெல்லை அரசு பள்ளியில் மாணவர்களிடையே கோஷ்டி மோதம் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

    அரசு பள்ளியில் 2 நாட்களுக்கு முன்பு மாணவர்கள் கோஷ்டியாக பிரந்து மோதிக் கொண்டதால் பதற்றம் ஏற்பட்டது.

    இதுதொடர்பாக, பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் சுத்தமல்லி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், போலீசாரின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக, இருதரப்பையும் சேர்ந்த 13 மாணவர்களை கூர்நோக்கு இல்லத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

    • 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன.
    • வரும் நாட்களில், Made in India பொருட்களை தயாரிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும்.

    நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் பெண்கள் அதிகாரமளித்தல் குழுக்களின் இரண்டு நாள் மாநாடு ஆந்திர மாநிலம் திருப்பதியில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற நிறைவு விழாவில் பாராளுமன்ற மக்களவை சபாநாயகர் கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது ஓம் பிர்லா பேசியதாவது:-

    நான் விரைவில் மாநில சட்டசபை சபாநாயர்களுக்கு பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாடு கமிட்டியை அமைக்க வலியுறுத்தி கடிதம் எழுதுவேன். 29 மாநிலங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே பெண்களுக்கு அதிகாரமளித்தல் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மாநிலங்கள், பெண்கள் பிரச்சினைகள் குறித்த பரிந்துரைகளை அந்தந்த சட்டமன்றங்கள் மற்றும் மாநில அரசாங்கங்களுக்கு வழங்க இதுபோன்ற குழுக்களை அமைப்பது அவசியம்.

    லக்னோவில் நடைபெறவிருக்கும் அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் இந்த பிரச்சினை குறித்து விவாதிப்போம். வரும் நாட்களில், Made in India பொருட்களை தயாரிப்பதில் பெண்களின் பங்கேற்பு அதிகரிக்க வேண்டும். சுய உதவிக்குழுக்கள் மூலம் பொருளாதார அதிகாரமளிப்பதில் பெண்கள் ஏற்கனவே முக்கிய பங்கு வகிக்கின்றனர்.

    பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்பது ஒரு ஆப்சன் அல்ல. அது அவசியம். இது பெண்களை பயனாளிகளாக மட்டுமல்லாமல், வளர்ச்சி செயல்முறையின் இயக்கிகள், படைப்பாளிகள் மற்றும் தலைவர்களாகவும் நிலைநிறுத்தும் ஒரு தொலைநோக்குப் பார்வையாகும்.

    இவ்வாறு ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.

    ×