என் மலர்
நீங்கள் தேடியது "ஓடிடி உரிமை"
ரெட்ரோ படத்தையடுத்து நடிகர் சூர்யா, ஆர்.ஜே. பாலாஜி இயக்கும் கருப்பு படத்தில் நடித்துள்ளார். இப்படம் சூர்யா நடிக்கும் 45-வது திரைப்படமாகும். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.
கருப்பு படத்தை தொடர்ந்து, சூர்யா 46 படத்தை தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்குகிறார். இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜூ நடிக்கிறார். படத்தின் இசையை ஜி.வி பிரகாஷ் மேற்கொள்கிறார்.
படத்தின் தலைப்பு குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
இந்நிலையில், 'சூர்யா 46' படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் ரூ.85 கோடிக்கு கைப்பற்றியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
- இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் "முகுந்தன்" என்கின்ற கதாபாத்திரத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக சிவகார்த்திகேயன் இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் திரையரங்குகளில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் 'அமரன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் ரூ.55 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் நடித்த படங்களில் இதுவே மிக அதிக தொகைக்கு விற்பனையாகியுள்ளது என சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'மாவீரன்' படத்தின் டிஜிட்டல் உரிமையை விட இரண்டு மடங்கு தொகைக்கு 'அமரன்' விற்பனையாகியுள்ளது என்று சொல்லப்படுகிறது
1992 ஆம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான அமரன் படத்தின் பெயரையே சிவகார்த்திகேயன் படத்திற்கு பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






