என் மலர்
தலைப்புச்செய்திகள்
- 22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் பிரிவில் விளையாடினார்.
- இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
சீனாவில் நடைபெற்ற ஸ்பீடு ஸ்கேட்டிங் உலக சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழகத்தை சேர்ந்த இந்திய இளம் வீரர் ஆனந்த்குமார் வேல்குமார் தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்தார்.
22 வயதான ஆனந்த்குமார், சீனியர் ஆண்கள் பிரிவில் 1000 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் 1:24.924 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார்.
இதன் மூலம், ஸ்பீடு ஸ்கேட்டிங் விளையாட்டில் உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
இதற்கு ஒரு நாள் முன்னதாக அவர், இதே சாம்பியன்ஷிப்பில் 500 மீட்டர் ஸ்பிரிண்ட் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
- 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
- 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் நேற்று (செப். 15) மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதில் 2025 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு உழைப்பது, தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி என்ற பாஜக சதியை முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
மாநாட்டில் பேசிய வைகோ, எந்தத் தடையையும் பொருட்படுத்தாது மதிமுக பயணித்துக்கொண்டே இருக்கும். ஸ்டெர்லைட் ஆலையை போராடி விரட்டியடித்த இயக்கம் மதிமுக. டாக்டர் அம்பேத்கர் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்துவைக்க காரணமாக இருந்தது மதிமுக.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டது. கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மத்திய அரசு இடையில் நிற்பதுதான் காரணம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும்" என்று பேசினார்.
- அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
- மறுமுனையில் நிசாகத் கான் சிறப்பாக விளையாடி 36 பந்தில் அரைசதம் விளாசினார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் இலங்கை- ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வன்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி ஹாங்காங் அணியின் ஜீஷன் அலி, அன்ஷி ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜீஷன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ராத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜீஷன் அலி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஹயாத் 4 ரன்னில் வெளியேறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு அன்ஷி ராத் உடன் நிசாகத் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
மறுமுனையில் நிசாகத் கான் சிறப்பாக விளையாடி 36 பந்தில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. இறுதியாக ஹாங்காய் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது.
150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய பதும் நிஷாங்கா அதிரடியாக விளையாடி அரைசதமடித்தார். அவர் 68 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்துதடுத்து களமிறங்கியவர்கள் அணிக்கு தங்களது பங்களிப்பை செய்தனர். இறுதியில் இலங்கை அணி 18.5 ஓவர்களில் இலக்கை கடந்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
- வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறை.
- இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாகவும் வைஷாலி மாறியுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த செஸ் கிராண்ட் மாஸ்டர் வைஷாலி (24) ஃபிடே கிராண்ட் ஸ்விஸ் தொடரை வென்று அசத்தியுள்ளார்.
இறுதிப்போட்டியில் சீன வீராங்கனை டான் ஸோங்கி உடன் மோதிய வைஷாலி 11 சுற்றுகளில், 8 புள்ளிகளைப் பெற்று தொடரை வென்றார். வைஷாலி கிராண்ட் செஸ் தொடரை வெல்வது இது இரண்டாவது முறை.
இதன்மூலம், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு அவர் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளார்.
மேலும் இந்த வெற்றியின் மூலம் கேன்டிடேட்ஸ் செஸ் தொடருக்குத் தேர்வாகியுள்ள மூன்றாவது இந்திய வீராங்கனையாகவும் வைஷாலி மாறியுள்ளார். முன்னதாக இந்திய வீராங்கனைகளான திவ்யா தேஷ்முக், கோனெரு ஹம்பி ஆகியோர் தேர்வாகினர்.
- தமிழ் சினிமாவின் கதாசிரியன் என்று ஒருவர் இருந்தார், அவரை கொன்றது யார்?
- இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள்
வ. கௌதமன் இயக்கி நடித்திருக்கும் படம் 'படையாண்ட மாவீரா' . திரைப்படத்தில் வ. கௌதமன், சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசையமைத்திருக்கிறார்கள்.
வட தமிழகத்தில் பெரும்பான்மையாக வாழும் மக்களின் நம்பிக்கை நட்சத்திரமாக வாழ்ந்து மறைந்த 'காடுவெட்டி' குருவின் சுயசரிதையை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வி கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
வரும் 19ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வில் படக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர் வ. கௌதமன், பாடலாசிரியர் கவிப்பேரரசு வைரமுத்து, வசனகர்த்தா பாலமுரளி வர்மா, ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன், நடிகர்கள் இளவரசு, கராத்தே ராஜா, தமிழ் கௌதமன், தயாரிப்பாளர்கள், இணை தயாரிப்பாளர்கள் ஆகிய படக்குழுவினருடன் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளரும் , இயக்குநரும், நடிகருமான தங்கர் பச்சான், நடிகர் ஏகன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
தயாரிப்பாளர் - இயக்குநர் - நடிகர் தங்கர் பச்சான் பேசுகையில், ''வ. கௌதமன் திரைத்துறைக்கு சம்பாதிப்பதற்காக வரவில்லை. கௌதமன் தமிழனாக இருப்பதால்தான் சினிமாவை தேர்வு செய்திருக்கிறார். தமிழர்களுக்கு எதிராக நடக்கிற அரசியலாகட்டும், அடக்கு முறையாகட்டும், வன்முறையாகட்டும், மொழிக்கு எதிராக இந்த மண்ணுக்கு எதிராக எது நடந்தாலும் அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தமிழன் கௌதமன்.
இந்த நாட்டில் ஒடுக்கப்படுகிறவர்கள் தமிழர்கள் தான். அழிக்கப்படுவதும், ஒடுக்கப்படுவதும் தமிழ் மொழிதான். இதற்கு எதிராகவும் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் தமிழகத்தில் அவ்வப்போது தோன்றிய மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் அனைவரும் இலக்கியங்களாகவும், எப்போதாவது ஒருமுறை திரைப்படங்களாகவும் வருகிறார்கள்.
மாவீரன் குருவுடன் நாங்கள் எல்லாம் அரசியல்வாதியாக இல்லாமல் தமிழனாக பழகி இருக்கிறோம். அவர் மிகவும் இளகிய மனம் கொண்டவர்.
ஒரு படைப்பு மக்களிடத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட ஒரு படைப்பாக இந்த படையாண்ட மாவீரா இருக்கும் என்று நம்புகிறேன்,'' என்றார்.
இயக்குநர் வ. கௌதமன் பேசுகையில், '' ஐம்பதாயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த தமிழ் குடிகளில் நான் உயிராக நேசிக்கின்ற அத்தனை தமிழ் சமூகங்களும் தங்களின் சுயநலத்தால் வலியையும், அவமானத்தையும் பரிசாக அளித்தன. அந்த வலியையும், வேதனையும் நான் இன்றும் மனதளவில் சுமந்து கொண்டிருக்கிறேன். ஏனெனில் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் யாரும் உயர்ந்தவர்களும் இல்லை . தாழ்ந்தவர்களும் இல்லை. அனைவரும் ஒரு தாய் மக்கள் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்.
இங்கு ஒரு வரலாறை வரலாற்றில் இருந்து தான் தொடங்க வேண்டும். அதற்காக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று சொல்லவில்லை. வரலாறாக நின்ற ஒருவனின் வரலாறை சொல்லும் போது தான், இந்த மண்ணில் இருள் மண்டி கிடக்கிற குப்பையும், கூளங்களும், அழுக்குகளும் அகற்றப்படும். அப்படிப்பட்ட ஒரு படைப்புதான் 'படையாண்ட மாவீரா'.
இந்தப் படைப்பை வீழ்த்த வேண்டும் என்பதற்காக மறைமுகமாக பலர் செயல்படுகிறார்கள். நான் இதுவரை எந்த சமூகத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த இனத்தையும் காயப்படுத்த வில்லை. எந்த தமிழ் சாதியையும் அசிங்கப்படுத்துவதற்காக நான் உடந்தையாக இருந்ததில்லை. பிறகு ஏன் இந்த அருவருப்பான செயலை தொடர்ந்து செய்கிறீர்கள்.
என்னுடைய தந்தையும், அவருடைய (காடுவெட்டி குரு) தந்தையும் ஒன்றாக கல்வி கற்றவர்கள். எனக்கும், அவருக்கும் நல்ல நட்பு மட்டுமல்ல, புரிதல் மட்டுமல்ல, பேரன்பும் இருக்கிறது. அறம் கொண்டவர்களை இந்த மண்ணில் வீழ்த்த முடியாது. வேண்டுமானால் சில காலம் வரை மறைக்கலாம். ஆனால் மீண்டும் எழுந்து வருவார்கள்.
தமிழரசனின் வாழ்க்கை வரலாறை படைப்பாக உருவாக்க வேண்டும். மேதகு பிரபாகரனை வாழ்க்கை வரலாற்றை படைப்பாக உருவாக்க வேண்டும். ஏனெனில் தமிழ் இனத்தின் வரலாறை அனைவருக்கும் உரக்கச் சொல்ல வேண்டும். தமிழினத்தின் எதிரிகளை மண்டியிடச் செய்ய வேண்டும்.
அறம் சுமந்த ஒருவனது வரலாறு என்பது பார்வையாளர்களுக்கு இடைவெளி இல்லாத ஒரு நெருக்கத்தை ஏற்படுத்தும், ஒரு தாக்கத்தை உருவாக்கும் என்பதை உணர்ந்தேன். அந்தத் தருணத்திலேயே இந்த படைப்பிற்கான புனிதத்தை நான் அடையத் தொடங்கி விட்டேன். இந்தப் படைப்பு வெல்லும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது," என்றார்.
- என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.
- 7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே சில காலமாக கருத்து மோதல் நிலவி வந்தது.
இதற்கிடையே விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த மாதம் 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைமைக்கு எதிராக செயல்படுவதாக ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.
32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே அகற்றிவிட்டேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. 'மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.
இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் வைத்து மல்லை சத்யா புதிய கட்சியை துவங்கி உள்ளார். கருப்பு-சிவப்பு நிறங்களில், 7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரை நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்பதாக மல்லை சத்யா தெரிவித்தார்.
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் புலவர் சே.செவிந்தியப்பன், மல்லை சத்யா, செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடைய அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில் இன்று திருச்சியில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
- அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள்.
சென்னை வடபழனியில் பேரறிஞர் அண்ணாவின் 117வது பிறந்தநாளை முன்னிட்பு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
மாநிலத்திற்கு 11 மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் கொண்டு வந்து அதிமுக அரசு சாதனை படைத்துள்ளது.
திமுகவின் 4 ஆண்டுகால ஆட்சியில் ஒரு கல்லூரி கூட தொடங்கப்படவில்லை. அதிமுக ஆட்சியில் 67 கலை அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு சிறந்த உயர்கல்வி வழங்கப்பட்டது.
அதிமுக ஆட்சியில் கல்விக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் தான் உயர்கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் இருந்தது.
சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது, டிஜிபி அலுவலகம் முன் ஒருவர் தாக்கப்படுகிறார். அவர் மீதே வழக்கு தொடரப்படுகிறது.
திமுக ஆட்சியில் காவலர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. அவர்களும் தாக்கப்படுகிறார்கள்.
முன்னாள் டிஜிபி போதைப்பொருள் ஒழிப்பதற்கு 2.0, 3.0 என பெயர் வைத்துவிட்டு கடைசியில் ஓ போட்டு சென்றுவிட்டார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை விவகாரத்தில் யார் அந்த சார் என்பது கண்டுபிடிக்கப்படும்.
திமுக ஆட்சி அமைந்த உடன் முறையாக விசாரித்து டாஸ்மாக் ஊழல் முழுமையாக வெளிக்கொண்டு வரப்படும்.
டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் என செய்திகள் வந்துள்ளது. ஆனால், ரூ.40,000 கோடி வரை ஊழல் நடந்திருக்கிறது.
அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த சிறப்பான திட்டங்களை திமுக அரசு கைவிட்டு விட்டார்கள். தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப், அம்மா உணவு போன்ற திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது.
அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு திமுக அரசு நிறுத்திய திட்டங்கள் அனைத்தும் கண்டிப்பாக அமல்படுத்தப்படும்.
அதிமுக ஆட்சியில் ரூ.60,000 கோடி முதலீடுகளை ஈர்த்தோம். மு.க.ஸ்டாலின் வெளிநாடுகளுக்கு முதலீடுகளை ஈர்க்க சென்றாரா? அல்லது தொழில் தொடங்க சென்றாரா? என வரும் காலங்களில் தெரியும்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சிலர் கட்சியை கபளீகரம் செய்ய பார்த்தார்கள். அதிமுக ஆட்சியைக் காப்பாற்றியது பாஜகதான்; அந்த நன்றியை மறக்காமல், நன்றியோடு இருக்கிறோம்.
ஆட்சி அதிகாரத்தை விட தன்மானமே முக்கியம். அதிமுகவை இம்மியளவு கூட யாராலும் அழிக்க முடியாது.
கட்சி அலுவலகத்தை உடைத்தவர்கள் மற்றும் அதிமுக ஆட்சியை கவிழ்க்க நினைத்தவர்களை மீண்டும் கட்சியில் எப்படி சேர்க்க முடியும்?
அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் நடு ரோட்டில் தான் நிற்பார்கள். அதிமுகவிற்கு துரோகம் செய்பவர்கள் விலாசம் இல்லாமல் தொலைந்து விடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நிசாகத் கான் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் இலங்கை- ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வன்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹாங்காங் அணியின் ஜீஷன் அலி, அன்ஷி ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜீஷன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ராத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜீஷன் அலி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஹயாத் 4 ரன்னில் வெளியேறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு அன்ஷி ராத் உடன் நிசாகத் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
மறுமுனையில் நிசாகத் கான் சிறப்பாக விளையாடி 36 பந்தில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. இறுதியாக ஹாங்காய் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது. நிசாகத் கான் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
- 'கூலி' திரைப்படத்தை பற்றி அமீர் கான் விமர்சித்து பேசியதாக தகவல்.
- அமீர் கான் தான் செய்யும் அனைத்து வேலைகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர்.
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 'கூலி' திரைப்படத்தை பற்றி அமீர் கான் விமர்சித்து பேசியதாக வெளியாகும் நேர்காணல் முற்றிலும் தவறானது என அமீர் கான் தரப்பு சார்பில் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமீர் கான் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அமீர் கான் கூலி திரைப்படம் குறித்து எந்த நேர்காணலும் வழங்கவில்லை என்பதை திட்டவட்டமாகக் கூற விரும்புகிறது.
சமூக ஊடகங்களில் ஒரு போலி நேர்காணல் வலம் வருகிறது. அதில் அமீர் கான் கூலி திரைப்படத்தை விமர்சித்ததாகக் கூறப்படுகிறது. அது ஒரு போலி நேர்காணல்.

அமீர் கான் தான் செய்யும் அனைத்து வேலைகள் மீதும் மிகுந்த மரியாதையும், மதிப்பும் கொண்டவர். மேலும், அவர் தனது படைப்புகளைப் பற்றி எளிதாகப் பேசுவதில்லை.
உண்மை என்னவென்றால், அமீர் கான் இன்னும் கூலி படத்தைப் பார்க்கவில்லை. அமீர் கான் படத்தைப் பார்க்கும் போது தான் உடன் இருக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ஆசைப்படுகிறார். ஆனால், ஒரு சில காரணங்களால், அது இன்னும் நடக்கவில்லை.
கூலியின் வெற்றி, சம்பந்தப்பட்ட அனைவரின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கடின உழைப்பைப் பற்றி நிறைய பேசுகிறது.
அந்த நேர்காணலும் அத்தகைய செய்திகளும் தவறானவை என்பதை நினைவில் கொள்ளவும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடைசி நேரத்தில் குஜராத் 36-38 என்ற கணக்கில் பின்தங்கிய இருந்தது.
- அதன்பின் 37-40 எனத் தோல்வியடைந்தது.
புரோ கபடி லீக் 2025 சீசனின் 33ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இதில் ஹரியானா ஸ்டீலர்ஸ்- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்டத்தில் ஹரியானா அணி 25-20 என 5 புள்ளிகள் வித்தியாசத்தில் முன்னிலைப் பெற்றது.
2ஆவது பாதி நேர ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்கள் அபாரமாக விளையாடினர். இதனால் போட்டி பரபரப்பாக சென்றது. இரு அணிகளுக்கும் இடையில் 2 புள்ளிகள் மட்டுமே வித்தியாசம் இருந்தது. கடைசி நேரத்தில் ஹரியானா ரெய்டர்கள் ஷவம் பட்டாரே, ஸ்ரீதர் கடம், வினய் ஆகியோர் தலா ஒரு புள்ளி எடுக்க 40-37 என ஹரியானா வெற்றி பெற்றது. 2ஆவது பாதி நேர ஆட்டத்தில் குஜராத் 17-15 என முன்னிலைப் பெற்றும் பயனில்லை.
- ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடக்க வீரர்கள் இருவரும் அரைசதம் விளாசினர்.
- ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம்- ஓமன் அணிகள் மோதின. முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரகம் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர்களான அலிஷன் ஷரபு- கேப்டன் முகமது வாசீம் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 11 ஓவரில் 88 ரன்கள் குவித்த போது இந்த ஜோடி பிரிந்தது. ஷரஃபு 38 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
வாசீம் 54 பந்தில் 69 ரன்கள் விளாசினார். முகமது சோகைப் 13 பந்தில் 21 ரன்களும், ஹரிஷித் கவுசிக் ஆட்டமிழக்காமல் 8 பந்தில் 19 ரன்களும் விளாசினர். ஓமன் அணியின் ஜித்தன் ராமநந்தி 2 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஓமன் அணி களம் இறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் 10 பந்தில் 20 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அதன்பின் 4 வீரர்கள் தொடர்ந்து ஒற்றையிலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர்.
ஆர்யன் பிஷ்ட் 32 பந்தில் 24 ரன்களும், வினாயக சுக்லா 17 பந்தில் 20 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். இதனைத் தொடர்ந்து ஓமன் 18.4 ஓவரில் 130 ரன்களில் ஆல்அவுட் ஆனது. இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 42 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐக்கிய அரபு அமீரகம் அணி சார்பில் ஜுனைத் சித்திக் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.
ஐக்கிய அரபு அமீரகம் இரண்டு போட்டிகளில் விளையாடி ஒன்றில் வெற்றி பெற்றுள்ளது. ஓமன் இரண்டு போட்டிகளிலும் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்துள்ளது. ஏறக்குறைய ஓமன் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது. இந்தியா 2 போட்டிகளில் இரண்டிலும் வெற்றி பெற்று முதல் இடத்தில் உள்ளது. பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் தலா ஒரு வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான்- ஐக்கிய அரபு அமீரகம் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
- இந்தியன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
- 'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு குறைவு.
இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான "இந்தியன் 2" திரைப்படம் கடந்த ஆண்டு ஜூலை 12-ந்தேதி உலகம் முழுவதும் வெளியானது.
இந்த படம் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான "இந்தியன்" படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. சுமார் 28 வருடங்களுக்கு பிறகு சங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்தார்.
இந்த படத்தில் கமல்ஹாசனுடன் எஸ்.ஜே.சூர்யா, சித்தார்த், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால், ப்ரியா பவானி ஷங்கர், விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா, அயன் ஜெகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரித்தது.
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. திரைப்படம் ஓடிடியில் வெளியான பிறகு மக்களிடம் இருந்து நிறைய எதிர்மறை விமர்சனங்கள் எழுந்தது.
இந்தியன் 2 திரைப்படத்தின் முடிவில் இந்தியன் 3 திரைப்படத்திற்கான டிரெய்லர் இடம் பெற்றிருக்கும். இந்த எதிர்மறை கருத்தினால் இந்தியன் 3 திரைப்படம் வெளியாவதில் சிக்கல்கள், திரையரங்கில் வெளியாக வாய்பில்லை போன்ற செய்திகள் பரவின.
இந்நிலையில், இந்தியன் 3 திரைப்படம் கைவிடப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கமல்ஹாசன் அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருப்பதால் 'இந்தியன் 3' படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் வாய்ப்பு குறைவு என கூறப்பட்டுள்ளது.
மேலும், லைகா நிறுவனம் இப்படத்தில் இருந்து பின்வாங்கியதாகவும், Netflix தங்களது ஒப்பந்தத்தை திரும்பப்பெற்றுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், இந்தியன் 3 கைவிடப்பட்டதாக தகவல்கள் கசிந்துள்ளன.






