என் மலர்
நீங்கள் தேடியது "Duraivaiko"
- 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
- 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி திருச்சி மாவட்டம் சிறுகனூரில் மதிமுக சார்பில் நேற்று (செப். 15) மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலாளரும் எம்.பி.யுமான துரை வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதில் 2025 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு உழைப்பது, தமிழகத்தில் சிறப்பு வாக்காளர் திருத்தப்பணி என்ற பாஜக சதியை முறியடிக்க வேண்டும் உள்ளிட்ட 12 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
மாநாட்டில் பேசிய வைகோ, எந்தத் தடையையும் பொருட்படுத்தாது மதிமுக பயணித்துக்கொண்டே இருக்கும். ஸ்டெர்லைட் ஆலையை போராடி விரட்டியடித்த இயக்கம் மதிமுக. டாக்டர் அம்பேத்கர் படத்தை நாடாளுமன்ற மைய மண்டபத்தில் திறந்துவைக்க காரணமாக இருந்தது மதிமுக.
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை பெரும்பாலும் நிறைவேற்றிவிட்டது. கொடுக்காத வாக்குறுதிகளையும் நிறைவேற்றியுள்ளது. சில வாக்குறுதிகள் நிறைவேற்ற முடியாமல் போனதற்கு மத்திய அரசு இடையில் நிற்பதுதான் காரணம்.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிக்கு மதிமுக உழைக்கும்" என்று பேசினார்.
- என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.
- 7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார்.
ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யாவுக்கும், கட்சியின் முதன்மை செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவுக்கும் இடையே சில காலமாக கருத்து மோதல் நிலவி வந்தது.
இதற்கிடையே விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, தன்னுடன் பல போராட்டங்களில் பங்கேற்ற மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டினார்.
துரோகி என்று கூறிய வைகோவுக்கு எதிராக மக்கள் மன்றத்தில் நீதி கேட்டு மல்லை சத்யா தனது ஆதரவாளர்களுடன் சென்னை சேப்பாக்கம் சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த மாதம் 2-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.
கட்சி கட்டுப்பாட்டை மீறி தலைமைக்கு எதிராக செயல்படுவதாக ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
கட்சியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து மல்லை சத்யா கூறுகையில், என் மீது சுமத்தியிருக்கின்ற குற்றச்சாட்டு அபாண்டமான குற்றச்சாட்டு. எந்தவிதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனநாயகப் பண்பு கொண்ட தலைவர் வைகோவின் இருந்து அந்த வார்த்தை வந்திருக்கக் கூடாது என்பது நாட்டு மக்களின் கருத்தாக உள்ளது. என்மீது எப்போது வைகோ அபாண்டமான பழியை சொன்னாரோ, அப்போதே நான் கட்டியிருந்த சிவப்பு, கருப்பு வேட்டியை அவிழ்த்துவிட்டேன்.
32 ஆண்டுகளில் ஒருநாளும் என் காரில் கொடி இல்லாமல் பயணம் செய்ததில்லை. ஆனால் பழி சொன்ன நாளிலேயே அகற்றிவிட்டேன். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்.. அல்ல அல்ல.. 'மகன் திமுக'வில் இருந்து நாங்கள் விடுதலை பெற்றிருக்கிறோம் என்றுதான் பார்க்கிறேன். இனிமேல் நாங்கள் சுதந்திர மனிதனாக செயல்பட முடியும் என்றார்.
இந்த நிலையில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான இன்று காஞ்சிபுரத்தில் வைத்து மல்லை சத்யா புதிய கட்சியை துவங்கி உள்ளார். கருப்பு-சிவப்பு நிறங்களில், 7 நட்சத்திரங்களுடன் அமைந்துள்ள கட்சிக் கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரை நவம்பர் 20 ஆம் தேதி அறிவிப்பதாக மல்லை சத்யா தெரிவித்தார்.
கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள மதிமுகவில் இருந்து விலகிய 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவில் புலவர் சே.செவிந்தியப்பன், மல்லை சத்யா, செங்குட்டுவன், அழகு சுந்தரம், வல்லம் பசீர், சேலம் ஆனந்தராஜ், இளவழகன் உள்ளிட்டவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடைய அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் விழா மாநாடு மதிமுக சார்பில் இன்று திருச்சியில் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
- துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார் என்று மல்லை சத்யா குற்றச்சாட்டு
மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இருவரிடமும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர்.
இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வைகோ குற்றசசாட்டு தொடர்பாக பேசிய துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, " துரோகி பட்டம் கொடுத்து கட்சியில் இருந்து என்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார்.
வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார வாரிசு அரசியலுக்காகத்தான் என வைகோ சொன்ன வார்த்தையை தாங்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.
- மாநிலங்களவை உறுப்பினராக உள்ள வைகோவுக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை.
- நாடாளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்
பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.
இதையடுத்து புதிய 6 மேல்சபை எம்.பி.க்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் அட்டவணையை வெளியிட்டது. அதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 19-ந்தேதி மேல்சபை எம்.பி. தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2-ந்தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி தி.மு.க., அ.தி.மு.க.வில் மேல்சபை எம்.பி. பதவிக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது.
இந்தநிலையில் தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. வழக்கறிஞர் வில்சன், ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோர் வேட்பாளர்களாக போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் ஒரு ராஜ்யசபா சீட் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு தி.மு.க. சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அக்கட்சி அறிவித்துள்ளது.
இந்நிலையில், தற்போது மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை.
இது தொடர்பாக பேசிய மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ, "2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் தொடர்வோம். பாராளுமன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல, எப்போதும் மக்களின் குரலாக வைகோ ஒலிப்பார்" என்று தெரிவித்தார்.
- ஏராளமான விவசாயிகள் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்றனர்.
- மொத்தம் 19 நாட்கள் நீதி கேட்டு நெடும்பயணம் நடக்கிறது.
கன்னியாகுமரி:
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு சார்பில் டெல்லியில் நடந்த விவசாயிகள் போராட் டத்தின் போது பிரதமர் மோடி அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் வரை நீதி கேட்டு நெடும்பயணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது. அதன்படி இந்த பயணத்தின் தொடக்க விழா கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு இன்று காலை நடந்தது.
இந்நிகழ்ச்சிக்கு விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட தலைவர் செல்லப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வின்ஸ் ஆண்டோ வரவேற்று பேசினார். இந்த நீதி கேட்டு நெடும் பயணத்தை ம.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் துரைவைகோ தொடங்கி வைத்தார்.
முடிவில் மாவட்ட பொருளாளர் பத்மதாஸ் நன்றி கூறினார். இதைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் இருந்து டெல்லி பாராளுமன்றம் நோக்கி விவசாயிகள் நீதி கேட்டு நெடும்பயணம் புறப்பட்டு சென்றனர். இதில் ஏராளமான விவசாயிகள் பச்சைத் துண்டு அணிந்து பங்கேற்றனர். கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு சென்ற இந்த நீதி கேட்டு நெடும்பயணம் தமிழ்நாடு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், ராஜஸ்தான், அரியானா, உள்பட பல்வேறு மாநிலங்கள் வழியாக வருகிற 20-ந்தேதி டெல்லி சென்று அடைகிறது. மொத்தம் 19 நாட்கள் இந்த நீதி கேட்டு நெடும்பயணம் நடக்கிறது.






