என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துரோகி"

    • திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டு நிறைவு பெறுகிறது.
    • இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின்.

    அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப் பயணத்தில் நேற்று 183வது தொகுதியாக அம்பத்தூரில் பரப்புரை மேற்கொண்டார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் முக ஸ்டாலின், மதுரையில் பேசியபோது எடப்பாடி பழனிசாமி துரோகி என்று கூறியுள்ளார். யார் துரோகி? ஸ்டாலின் தான் துரோகி. திமுக ஆட்சி பொறுப்பேற்று 5 ஆண்டு நிறைவு பெறுகிறது.

    மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தது? 5 ஆண்டில் போதை பொருள் விற்பனை அதிகரிப்பு, மிக எளிதில் கிடைக்கும் கஞ்சா என பட்டியல் நீள்கிறது.

    இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கிய துரோகி ஸ்டாலின். நம் பிள்ளைகளை சீரழித்தவர் ஸ்டாலின். போதைப் பொருள் விற்பதே திமுக தான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக, மதுரையில் நடந்த திமுக பாக முகவர்கள் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றியபோது,"மத்திய அரசிடம் கேள்வி கேட்க வேண்டிய இபிஎஸ், கோரிக்கை கூட வைப்பதில்லை. கோரிக்கை வைக்க கூட முடியாத துணிச்சல் இல்லாத துரோகி இபிஎஸ்" என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.
    • துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார் என்று மல்லை சத்யா குற்றச்சாட்டு

    மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிற்கு, துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யாவிற்கும் இடையே கடுமையான கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து இருவரிடமும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து இருவரும் கை குலுக்கிக் கொண்டு சமாதானம் அடைந்தனர்.

    இந்நிலையில், விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்ததை போன்று, மல்லை சத்யா தனக்கு துரோகம் செய்து விட்டதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வைகோ குற்றசசாட்டு தொடர்பாக பேசிய துணைப்பொதுச்செயலாளர் மல்லை சத்யா, " துரோகி பட்டம் கொடுத்து கட்சியில் இருந்து என்னை வெளியேற்ற பார்க்கிறார் வைகோ. குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவிற்காக எனக்கு துரோகி பட்டம் காட்டுகிறார்.

    வைகோவின் உயிரை 3 முறை காப்பாற்றிய என்னை துரோகி என சொல்லும் அளவுக்கு அவர் துணிந்துள்ளார வாரிசு அரசியலுக்காகத்தான் என வைகோ சொன்ன வார்த்தையை தாங்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.

    • அ.தி.மு.க.வை முடக்க நினைத்து கனவு கண்ட துரோகிகளுக்கு பலத்த இடி விழுந்து விட்டது.
    • கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

    மதுரை

    இந்திய தேர்தல் ஆணை–யம் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற் றம் செய்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார் பில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருமங்கலம் தொகுதியில் உள்ள நடுவக்கோட்டை, ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழக அம்மா பேரவை செயலாள–ரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பொது–மக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசியதாவது:-

    புரட்சித்தலைவி அம்மா–வுக்கு பிறகு தாய் இல்லாத பிள்ளைகளாய் நாம் தவித்த போது இந்த இயக்கத்தையும், இயக்கத் தொண்டர்களை காப்பாற்ற கலங்கரை விளக்கமாய் எடப்பாடியார் நமக்கு கிடைத்தார். இந்த இயக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையில் உலக அளவில் ஏழாவது இடத்திற்கும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திற்கும், தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு சென்றார். உலகத்திலே ஏழைகளுக்கான ஒரே மக்கள் இயக்கம் தான் அ.தி.மு.க. உள்ளது.

    இன்றைக்கு இந்திய தேர் தல் ஆணையம் கழக பொதுச் செயலாளராக எடப்பாடியாரையும் அங்கீக–ரித்துள்ளது. அதனைத் தொ–டர்ந்து தலைமை கழக நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும் அங்கீ–கரித்த நல்ல மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.

    இந்த இயக்கம் தான் ஜனநாயகத்தின் முகவரி யாக உள்ளது. தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் வளர்ச்சி, தமிழக மக்கள் எல்லாம் வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமல் இல்லை என்ற நிலை உரு–வாக வேண்டும். அமைதி, வளம், வளர்ச்சி என்று இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் சேவை–யாற்ற வேண்டும் என்ற அம்மாவின் தெய்வ வாக்கை கொண்டு மக்கள் பணியாற் றியவர் எடப்பாடியார்.

    இயக்கத்திற்காக எடப் பாடியார் ஊன், உறக்கம் இல்லாமல் உழைத்து வருகி–றார். ஆனால் தொடர்ந்து சிலர் அவதூறு பழிச்சொல் கூறி வருகிறார்கள். இந்த இயக்கத்தை எப்படியாவது முடக்கிட வேண்டும் என்று எதிரிகளும், துரோகிகளும் இயக்கத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வேண் டும் என நினைத்தனர். அவர்கள் கண்ட கனவில் இடி விழுந்து விட்டது.

    ஒரு கிளைக் கழகச் செயலாளர் நாட்டின் முதல–மைச்சராக ஆகலாம். ஒரு கிளைக் கழகச் செயலாளர் ஒரு இயக்கத்தின் கழகப் பொதுச் செயலாளராக வரலாம் என்று தன் உழைப் பால் இன்று எடப்பா–டியார் நிரூபித்துள்ளார். நிச்சயம் வருகின்ற தேர்தல்களில் எடப்பாடியார் மகத்தான வெற்றி பெற்று, அம்மாவின் புனித ஆட்சி அமைப்பார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த ’இறுதி சுற்று’ படத்தை இயக்கினார்
    • சூர்யாவை நடிப்பில் ’புறநானூறு’ படத்தை இயக்கவுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் சுதா கொங்கரா. ஸ்ரீகாந்த் மற்றும் விஷ்ணு விஷால் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த 'துரோகி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகினார்.

    2016 ஆம் ஆண்டு மாதவன் மற்றும் ரித்திகா சிங் நடிப்பில் வெளிவந்த 'இறுதி சுற்று' படத்தை இயக்கினார் . இப்படம் மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. மாதவனுக்கு ஒரு கம் பேக் ஆக அமைந்த திரைப்படமாகும். ரித்திகா சிங் மிக சிறப்பான நடிப்பில் மக்கள் மனதை கவர்ந்தார். இதுவே ரித்திகா சிங் நடித்த முதல் படமாகும் .

    அதைத்தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளிவந்த சூரரைப் போற்று படத்தை இயக்கினார். மிகப் பெரிய திருப்பு முனையாக சுதா கொங்கராவுக்கு அமைந்தது இத்திரைப்படம். அப்படத்தை இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் ரீமேக் செய்து வருகிறார். அதற்கு 'சர்ஃபிரா' என்ற தலைப்பை வைத்துள்ளனர்.

    அதற்கு அடுத்து சூர்யாவை வைத்து 'புறநானூறு' படத்தை இயக்கவுள்ளார். இந்நிலையில் சுதா கொங்கரா அடுத்தாக துருவ் விக்ரமிற்கு கதையை கூறியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. . இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைக்க வாய்ப்பு அதிகம் என எதிர்பார்க்கப் படுகிறது. துருவ் விக்ரம் மகான் திரைப்படத்திற்கு அடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கபடி வீரராக நடித்துள்ளார். அத்திரைப்படத்தை பா.ரஞ்சித் தயாரிதுள்ளார். அதீகாரப் பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×