அ.தி.மு.க.வை முடக்க நினைத்து கனவு கண்ட துரோகிகளுக்கு பலத்த இடி

அ.தி.மு.க.வை முடக்க நினைத்து கனவு கண்ட துரோகிகளுக்கு பலத்த இடி விழுந்து விட்டது. கூட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இனிப்பு வழங்கிய காட்சி. அருகில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
பொதுமக்களுக்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இனிப்பு வழங்கிய காட்சி. அருகில் ஜெயலலிதா பேரவை மாநில துணைச் செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Published on

மதுரை

இந்திய தேர்தல் ஆணை–யம் அ.தி.மு.க. பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்து இணையதளத்தில் பதிவேற் றம் செய்தது. இதனை தொடர்ந்து அ.தி.மு.க. அம்மா பேரவையின் சார் பில், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருமங்கலம் தொகுதியில் உள்ள நடுவக்கோட்டை, ஆலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கழக அம்மா பேரவை செயலாள–ரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணை தலைவர் ஆர்.பி.உதயகுமார் பொது–மக்களுக்கு இனிப்புகளை வழங்கி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா–வுக்கு பிறகு தாய் இல்லாத பிள்ளைகளாய் நாம் தவித்த போது இந்த இயக்கத்தையும், இயக்கத் தொண்டர்களை காப்பாற்ற கலங்கரை விளக்கமாய் எடப்பாடியார் நமக்கு கிடைத்தார். இந்த இயக்கத்தில் உறுப்பினர்கள் சேர்க்கையில் உலக அளவில் ஏழாவது இடத்திற்கும், இந்திய அளவில் மூன்றாவது இடத்திற்கும், தமிழகத்தில் முதலிடத்திற்கு கொண்டு சென்றார். உலகத்திலே ஏழைகளுக்கான ஒரே மக்கள் இயக்கம் தான் அ.தி.மு.க. உள்ளது.

இன்றைக்கு இந்திய தேர் தல் ஆணையம் கழக பொதுச் செயலாளராக எடப்பாடியாரையும் அங்கீக–ரித்துள்ளது. அதனைத் தொ–டர்ந்து தலைமை கழக நிர்வாகிகளையும், மாவட்ட செயலாளர்களையும் அங்கீ–கரித்த நல்ல மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.

இந்த இயக்கம் தான் ஜனநாயகத்தின் முகவரி யாக உள்ளது. தமிழக மக்களின் உரிமை, தமிழக மக்களின் வளர்ச்சி, தமிழக மக்கள் எல்லாம் வளமும் பெற வேண்டும். இங்கு இல்லாமல் இல்லை என்ற நிலை உரு–வாக வேண்டும். அமைதி, வளம், வளர்ச்சி என்று இந்த இயக்கம் இன்னும் நூறு ஆண்டுகள் மக்கள் சேவை–யாற்ற வேண்டும் என்ற அம்மாவின் தெய்வ வாக்கை கொண்டு மக்கள் பணியாற் றியவர் எடப்பாடியார்.

இயக்கத்திற்காக எடப் பாடியார் ஊன், உறக்கம் இல்லாமல் உழைத்து வருகி–றார். ஆனால் தொடர்ந்து சிலர் அவதூறு பழிச்சொல் கூறி வருகிறார்கள். இந்த இயக்கத்தை எப்படியாவது முடக்கிட வேண்டும் என்று எதிரிகளும், துரோகிகளும் இயக்கத்தின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்க வேண் டும் என நினைத்தனர். அவர்கள் கண்ட கனவில் இடி விழுந்து விட்டது.

ஒரு கிளைக் கழகச் செயலாளர் நாட்டின் முதல–மைச்சராக ஆகலாம். ஒரு கிளைக் கழகச் செயலாளர் ஒரு இயக்கத்தின் கழகப் பொதுச் செயலாளராக வரலாம் என்று தன் உழைப் பால் இன்று எடப்பா–டியார் நிரூபித்துள்ளார். நிச்சயம் வருகின்ற தேர்தல்களில் எடப்பாடியார் மகத்தான வெற்றி பெற்று, அம்மாவின் புனித ஆட்சி அமைப்பார்.

இவ்வாறு அவர் பேசினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com