என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ஆசிய கோப்பையில் அசத்தல் ஆட்டம்: இலங்கைக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஹாங்காங்
    X

    ஆசிய கோப்பையில் அசத்தல் ஆட்டம்: இலங்கைக்கு 150 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ஹாங்காங்

    • நிசாகத் கான் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய 2ஆவது ஆட்டத்தில் இலங்கை- ஹாங்காங் அணிகள் விளையாடி வருகின்றன. டாஸ் வன்ற இலங்கை பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹாங்காங் அணியின் ஜீஷன் அலி, அன்ஷி ராத் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ஜீஷன் அலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, ராத் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஜீஷன் அலி 17 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பாபர் ஹயாத் 4 ரன்னில் வெளியேறினார்.

    3ஆவது விக்கெட்டுக்கு அன்ஷி ராத் உடன் நிசாகத் கான் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. அன்ஷி ராத் 46 பந்தில் 48 ரன்கள் எடுத்து அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.

    மறுமுனையில் நிசாகத் கான் சிறப்பாக விளையாடி 36 பந்தில் அரைசதம் விளாசினார். இந்த ஜோடி 3ஆவது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது. இறுதியாக ஹாங்காய் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் அடித்துள்ளது. நிசாகத் கான் 38 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சருடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இலங்கை அணி சார்பில் துஷ்மந்தா சமீரா 2 விக்கெட் வீழ்த்தினார்.

    Next Story
    ×