என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Amir Khan"
- நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான் கதாநாயகனாக நடித்துள்ள படம் மகராஜ்.
- இந்த திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
மும்பை:
பாலிவுட் நடிகர் அமீர்கானின் மகன் ஜுனாயத் கான். இவர் கதாநாயகனாக நடித்துள்ள மகராஜ் திரைப்படம் நாளை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
ஜுனாயத் கான் நடித்துள்ள மகராஜ் திரைப்படம் இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்து மத குருக்களை அசிங்கப்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டு இருப்பதாகக் கூறி வடமாநிலங்களில் இந்து அமைப்பினர் அந்தப் படத்துக்கு எதிராக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மகராஜ் திரைப்படம் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்தப் படத்துக்கு தடை கோரி வருகின்றனர்.
இதையடுத்து, #BoycottNetflix, #BanMaharaj என்ற ஹேஷ்டேகுகள் டிரெண்டாகி வருகின்றன.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
- சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
டங்கல் படத்தில் அமீர்கானின் இளைய மகளாக நடித்த சுஹானி பட்நாகர், தனது 19 வயதில் அகால மரணமடைந்துள்ளார்.டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த சுஹானி பட்நாகர், சிகிக்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.
சுஹானி பட்நாகர் பாலிவுட்டின் பிரபலமான குழந்தை நட்சத்திரம். அமீர் கானின் பிளாக்பஸ்டர் படமான 'டங்கல்' படத்தில் அறிமுகமான அவர் ஜூனியர் பபிதா போகத் வேடத்தில் நடித்தார். படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பாராட்டப்பட்டது. மேலும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் அவர் நடித்துள்ளார்.
சுஹானிக்கு டங்கல் படத்திற்கு பிறகு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் சுஹானி படிப்பில் கவனம் செலுத்த விரும்பியதால், சிறிது காலம் சினிமாவில் இருந்து விலகியிருந்தார்.
இந்நிலையில் சில காலத்திற்கு முன்பு சுஹானிக்கு விபத்து ஏற்பட்டுள்ளது, அதன் காரணமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. சுஹானி சிகிச்சைக்காக எடுத்துக்கொண்ட மருந்துகளில் பக்கவிளைவுகள் இருந்ததால், அவரது உடலில் படிப்படியாக தண்ணீர் தேங்கியது.
இதனால் அவர் நீண்ட நாட்களாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்துள்ளார். அவரது மரணத்திற்கு பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
- நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.
- தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
மிச்சாங் புயல் எதிரொலியால், சென்னை மாநகரமே வெள்ளத்தால் சூழ்ந்துள்ளது. சென்னை மடிப்பாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை ஆகிய பகுதிகளின் தான் அதிக கனமழை பெய்துள்ளது. இதனால், வேளச்சேரி, காரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மார்பளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. வீட்டிற்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக அரசின் உத்தரவின்பேரில் பொது மக்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காரப்பாக்கத்தில் வசித்து வரும் நடிகர் விஷ்ணு விஷால் தான் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
இதேபோல், பாலிவுட் நடிகர் அமீர் கானும் வெள்ள பாதிப்பில் சிக்கியுள்ளதாக செய்தி வெளியானதை அடுத்து மீட்பு படையினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதைதொடர்ந்து, நடிகர்கள் அமீர் கான் மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோரை படகு மூலம் தீயணைப்புதுறையினர் மீட்டுள்ளனர்.
இந்நிலையில், தங்களை உடனடியாக மீட்ட தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நடிகர் விஷ்ணு விஷால் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "சிக்கித் தவிக்கும் எங்களைப் போன்ற மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறைக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் தொடங்கியுள்ளன.
ஏற்கனவே 3 படகுகள் இயங்குவதை பார்த்தேன். இதுபோன்ற சோதனையான காலங்களில் தமிழக அரசின் சிறப்பான பணி அயராது உழைக்கும் அனைத்து நிர்வாக மக்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டிருந்தார்.
- பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக நடித்து வருகிறார்.
- இவர் நடிக்கவிருந்த சாம்பியன்ஸ் திரைப்படத்தில் வேறு நடிகரை தேர்வு முடிவு செய்துள்ளார்.
பாலிவுட் திரையுலனின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கான், 35 ஆண்டுகாலமாக பாலிவுட் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தனக்கென முத்திரையை பதித்திருக்கிறார். அமீர் கான் நடிப்பில் சமீபத்தில் வெளியான லால் சிங் சத்தா திரைப்படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கருத்து நிலவிய நிலையில், வசூல் ரீதியாக கடும் இழப்பை சந்தித்தது. இதனால், அடுத்ததாக அமீர் கான் நடிக்கவிருந்த 'சாம்பியன்ஸ்' படத்தில் அவர் நடிக்கமாட்டார் என்று தகவல்கள் பரவி வந்தன.
இந்நிலையில், சாம்பியன்ஸ் படம் குறித்து அறிவிப்பை வெளியிட்டு அமீர் கான் பேசியதாவது, "சாம்பியன்ஸ் படத்தின் கதை அற்புதமான, அழகான கதை. லால் சிங் படத்திற்கு பிறகு இந்த படத்தில் நான் நடிக்க இருந்தேன். ஆனால், தற்போது நான் ஓய்வெடுக்க விரும்புகிறேன். சாம்பியன்ஸ் சிறந்த படம் என்பதால் சோனி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கவுள்ளேன். சாம்பியன்ஸ் படத்தில் நடிக்க வேறு நடிகரை தேர்வு செய்யவுள்ளேன்.
நான் எனது அம்மா, குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் நேரம் செலவிட விரும்புகிறேன். இதற்காக படத்தில் நடிப்பதிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்க முடிவு செய்துள்ளேன். நடிப்பில் மட்டுமே கடந்த 35 ஆண்டுகளாக கவனம் செலுத்தினேன். என்னுடன் நெருக்கமாக இருப்பவர்களுக்கு இது நியாயமாகாது என்று கருதுகிறேன். அவர்களுடன் நேரம் ஒதுக்க இதுவே சரியான தருணமாக இருக்கும் என்று நம்புகிறேன். அடுத்த ஆண்டிலிருந்து ஒன்றரை ஆண்டுகள் நடிப்பதிலிருந்து ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளேன். எனது உறவுகளுடன் சந்தோஷமாக நேரத்தை செலவழிக்கும் காலகட்டத்தில் நான் உள்ளேன்" என்று தெரிவித்துள்ளார்.
- அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா.
- இந்த படம் திருட்டுத்தனமாக வெளியிடுவது குறித்த புகாரின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump) திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் 'லால் சிங் சத்தா' திரைப்படம் உருவாகியது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
லால் சிங் சத்தா
நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஆகஸ்ட் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதையடுத்து இந்த படம் திருட்டுத்தனமாக இணையதளங்களில் வெளிவருவது குறித்து பெங்களூரில் உள்ள பனஸ்வாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் போலீஸார் சிலரை கடந்த 12–ந்தேதி கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தனர். விசாரணையின் போது இந்த படத்தை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் உள்ளிட்ட கருவிகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
லால் சிங் சத்தா
மேலும், இதுபோன்ற திரைப்படங்களை திருட்டுத்தனமாக இணையத்தில் பதிவேற்றம் செய்வதற்காக ஒரு குழு அமைத்து அவர்கள் செயல்பட்டு வந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் லால் சிங் சத்தா.
- லால் சிங் சத்தா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன.
அமீர் கான் - கரீனா கபூர் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'லால் சிங் சத்தா'. இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகின்றன. இந்த படம் வெளிவருவதற்கு முன்பு கரீனா கபூர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்பொழுது அவரிடம் 'லால் சிங் சத்தா' படம் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்த அவர் ஒருகட்டத்தில், 'உங்களை யார் படம் பார்க்க சொல்லி கட்டாயப்படுத்தினார்கள்? எங்கள் படங்களை பார்க்க வேண்டாம். நீங்கள் பார்க்காததால் ஒன்றும் மோசமாகி விடப்போவது கிடையாது' என்று கூறினார். அவரின் இந்த கருத்துக்கு திரையுலகினர் கண்டனம் தெரிவித்தனர். ரசிகர்கள் தரப்பிலும் பல விமர்சனங்கள் எழுந்தன.
இதையடுத்து படத்தை புறக்கணிக்க போவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சில கருத்துகளை பதிவிட்டனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளான கரீனா கபூர் ஒரு வீடியோ பதிவு வெளியிட்டார். அதில், 'இந்த படத்தை புறக்கணிக்காதீர்கள். 2.5 வருடமாக இந்த படத்துக்காக 250 பேர் உழைத்து இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த படத்தை பாருங்கள் ஆதரவு தாருங்கள்' என கூறியுள்ளார்.
இதற்கிடையில் கரீனாவின் இந்த இருவேறு கருத்துகளையும் ஒன்றாக இணைத்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகிறார்கள். 'கரீனா கபூர் வாயை கொடுத்து மாட்டிக்கொண்டு விட்டார்' என சக நடிகர்களும் கருத்து தெரிவிக்கிறார்கள். இதனால் கரீனா கபூர் செய்வதறியாது திகைத்திருக்கிறார்.
- விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்கில் சைப் அலி கான், ஹிருத்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.
- சமீபத்தில் அமீர்கான் நடித்திருந்த லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் கிளம்பியது.
அமீர்கான் நடித்து திரைக்கு வந்துள்ள லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற ஹேஷ்டேக் வலைத்தளத்தில் கடந்த சில நாட்களாக டிரெண்டிங் ஆனது. சகிப்பு தன்மை குறைந்து வருவதால் குழந்தைகள் பாதுகாப்பை கருதி நாட்டை விட்டு வெளியேறி விடலாம் என்று எனது மனைவி சொன்னார் என்று அமீர்கான் சில வருடங்களுக்கு முன்பு பேசிய வீடியோக்களை தற்போது வலைத்தளத்தில் பகிர்ந்து அவரது படத்தை புறக்கணிக்கும்படி வற்புறுத்தினர்.
இந்நிலையில் பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் மும்பையில் லால்சிங் சத்தா படத்தை பார்த்து விட்டு படம் சிறப்பாக உள்ளது என்றும் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இதையடுத்து ஹிருத்தி ரோஷன் நடித்து திரைக்கு வர உள்ள விக்ரம் வேதா படத்தை புறக்கணிக்கும்படி இணையத்தில் ஹேஷ்டேக் டிரண்டிங் ஆகி உள்ளது.
அமீர்கான் படத்தை ஆதரித்த விளைவை சந்திக்க தயாராகுங்கள் என்று ஹிருத்திக் ரோஷனை கண்டித்து பலர் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள். இது திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழில் மாதவன், விஜய்சேதுபதி நடிப்பில் வந்த விக்ரம் வேதா படத்தின் இந்தி ரீமேக்காக ஹிருத்திக் ரோஷனின் விக்ரம் வேதா தயாராகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்